Published:Updated:

2015-ல் இவர்கள் இப்படிச் சொன்னார்கள்! - ஹைலைட்ஸ்!

2015-ல் இவர்கள் இப்படிச் சொன்னார்கள்! - ஹைலைட்ஸ்!

2015-ல் இவர்கள் இப்படிச் சொன்னார்கள்! - ஹைலைட்ஸ்!

‘‘ ‘க்களின் முதல்வர்’ எனச் சொல்லிக்கொண்டு கையை அசைத்தபடி வீட்டுக்குள் சென்றவர், இதுவரை வெளியே வந்து மக்களை சந்திக்கவே இல்லை!’’

- விஜயகாந்த்

“பொய் சொல்லி தி.மு.க-வை அழிக்க முடியும் என்றால், எங்களாலும் பொய் சொல்ல முடியும். நாங்களும் மகாசமத்தாகப் பொய் சொல்லுவோம்!’’

- மு.கருணாநிதி

“தமிழக அரசு, டாஸ்மாக் மீது காட்டும் அக்கறையை ரேஷன் கடைகள் மீதும் காட்ட வேண்டும். குடும்பத்துக்குத் தேவையானது, போதை அல்ல; உணவுதான்!”

- ஜி.கே.வாசன்

“ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புதான், தமிழக அரசியலின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைத் தீர்மானிக்கும்!’’

- சோ

‘‘லயோலா கல்லூரியில் ஸ்ட்ரைக் என்பதை அறிமுகம் செய்துவைத்த சாதனையைத் தவிர, நான் ஒன்றும் சாதிக்க வில்லை!”

- சரத்குமார்

2015-ல் இவர்கள் இப்படிச் சொன்னார்கள்! - ஹைலைட்ஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“ஒரு பெண்ணுக்கு உண்டான எந்த அத்தியாவசியத் தேவையையும் இந்தச் சமூகமும் குடும்பமும் நிறைவேற்றுவதே இல்லை!”

- ஐஸ்வர்யா ராய்

“இது என் மீது போடப்பட்ட வழக்கின் தீர்ப்பு காரணமாக ஏற்படுத்தப்பட்ட இடைத் தேர்தல்; சதியும் விதியும் இணைந்து செய்த சதிராட்டத்தால் விளைந்திட்ட இடைத் தேர்தல்!”

- ஜெயலலிதா

“ஜெயலலிதாவுக்குக் கிடைத்த தண்டனை... விதியோ, சதியோ அல்ல; அவரே தன்னிச்சையாகத் தேடிக்கொண்டதே தவிர வேறு அல்ல!”

- மு.கருணாநிதி

“கருணாநிதிக்கு அவரது கட்சிக்குள்ளேயே என்ன மதிப்பும் மரியாதையும் உள்ளது என்பதை தமிழகமே நன்கு அறியும்!”

- ஓ.பன்னீர்செல்வம்

“திராவிடக் கட்சிகளைப் போல தேர்தல் கலையில் இடதுசாரிக் கட்சிகளும் தேர்ச்சிபெற வேண்டும்!”

- தா.பாண்டியன்

2015-ல் இவர்கள் இப்படிச் சொன்னார்கள்! - ஹைலைட்ஸ்!

‘‘நான் குடிப்பதாகச் சித்திரிக்கிறார்கள். ஆனால், மக்கள் மன்றத்தில் எனது கல்லீரலைப் பரிசோதிக்க நான் ரெடி... நீங்கள் ரெடியா?’’

- விஜயகாந்த்

“தமிழகத்தில் ‘கோடி’ என்ற சொல்லுக்கு மரியாதை இல்லாமல் போகக் காரணமே, வயதான பெருந்தகை ஒருவரும், வீட்டினுள்ளேயே முடங்கிக் கிடக்கும் அம்மையாரும்தான்!”

-ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

‘‘லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. சிவகங்கை மட்டுமல்ல, நாடு முழுவதும் முடிவுகள் இப்படித் தான் இருக்கும் என எனக்குத் தெரியும்!’’

- ப.சிதம்பரம்

“வரும் ஜூலை மாதத்தில், எனது குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களையும் கைதுசெய்து சிறையில் அடைக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது!’’

- ராஜபக்‌ஷே

“இந்தியா மிகப் பெரிய நாடு என்பதால், அதைத் தூய்மைப் படுத்துவதற்குக் கூடுதல் நாட்களாகும்!”

- நரேந்திர மோடி

“இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, அவர்களுக்குக் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.”

- சிவசேனா

2015-ல் இவர்கள் இப்படிச் சொன்னார்கள்! - ஹைலைட்ஸ்!

“காதலர்களுக்கு நாங்கள் வில்லன்கள் அல்ல. நானும் மருத்துவர் அய்யாவும், பல காதலர்களைச் சேர்த்துவைத்திருக் கிறோம். நானும் காதல் செய்திருக்கிறேன்!”

- அன்புமணி ராமதாஸ்

“முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்களே சுட்டுக் கொன்றனர். எனவே, எனது பாதுகாப்புக்கு உள்ள போலீஸாரை நினைத்தால் பயமாக உள்ளது!”

-  யசோதா பென், மோடியின் மனைவி

“அதிகமாக உழைக்கிறேன் என்பதற்காக விமர்சிக்கப் படுகிறேன் என்பது என்னுடைய துரதிர்ஷ்டம்!”

- நரேந்திர மோடி

“சினிமாவில் கோரஸ் பாடுவதுபோல அமைச்சர்கள் மொத்தமாகப் பதவியேற்றுக் கொண்டு, அந்தப் பதவியேற்பு விழாவையே கேலிக்கூத்தாக்கி யுள்ளனர்!”

- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

“நான் நடிக்கும் படங்களைப் பற்றி பேச எல்லோருக்கும் உரிமை உண்டு. என் சொந்த வாழ்க்கையைப் பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை!”

- நயன்தாரா

“என் உடல் ஒடுங்கிவிட்டி ருக்கலாம்... உள்ளம் ஒடுங்க வில்லை. மறுக்கப்படும் உரிமை களைப் பெற்றுத் தரும்படி மக்கள் தினம்தோறும் என்னைத் தேடிவருகிறார்கள். அவர் களுக்காக நான் போராடுகிறேன்!”

- டிராஃபிக் ராமசாமி

2015-ல் இவர்கள் இப்படிச் சொன்னார்கள்! - ஹைலைட்ஸ்!

“மோடி, என்னைவிடத் திறமையான சேல்ஸ்மேன்!”

- மன்மோகன் சிங்

“நான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதால் இந்திய அணிக்கு நன்மை ஏற்படும் என்றால், அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்!”

- மகேந்திர சிங் தோனி

“எந்த ஓர் அம்மாவும் தன் பிள்ளைகள் குடிப்பதை விரும்ப மாட்டார். ஆனால், தமிழ் நாட்டில் ஓர் ‘அம்மா’, ‘இன்னும் குடிங்க... இன்னும் குடிங்க...’ என டாஸ்மாக் கடைகளைத் திறந்துகொண்டே இருக்கிறார்!”

-  அன்புமணி ராமதாஸ்

“முக்கியப் பிரச்னைகளில் நான் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக யாராவது நிரூபித் தால், நான் ஒரு பக்கம் மீசையை எடுத்துக்கொள்கிறேன்!”

- தொல்.திருமாவளவன்

‘‘முதலமைச்சர் ஜெயலலிதா, தன் உடல்நலத்தைப் பாது காத்துக்கொள்ள தயவுசெய்து ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். முதலமைச்சரின் உடல்நலம் குறித்த ரகசியத்தை மறைக்கக் கூடாது. பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டும்!”

-  மு.கருணாநிதி

“இந்திய தேசியக் கொடியைச் சாட்சியாக வைத்துச் சொல்கிறேன், கடந்த ஓர் ஆண்டில் ஒரு சிறிய அளவிலான ஊழல்கூட நடைபெறவில்லை!”

-  நரேந்திர மோடி

2015-ல் இவர்கள் இப்படிச் சொன்னார்கள்! - ஹைலைட்ஸ்!

“தமிழ்நாட்டில் ஒரு கட்சி ஆட்சிமுறை நிறைவுபெற்று, கூட்டணி ஆட்சிமுறை ஏற்பட வேண்டும்!”

- தொல்.திருமாவளவன்

“கடந்த நான்கு ஆண்டுகளில் ஏறத்தாழ 150 அவதூறு வழக்கு களைத் தொடர்ந்ததன் மூலம் புதிய சாதனையையே நிகழ்த்தி இருக்கிறது அ.தி.மு.க அரசு!”

- மு.க.ஸ்டாலின்

“அரசியல் கட்சிகள், விஜயகாந்த் என்ன செய்கிறான் எனக் குழம்பியுள்ளன. குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் விஜயகாந்த்!”

- விஜயகாந்த்

‘‘50 வயசுக்கு மேல இருக்கிறவங்க எல்லாரும் தினசரி எக்சர்சைஸ் செய்து டாக்டரிடம் போகாம உடம்பைக் காப்பாத்திக்கங்க. நான் ஆஸ்பத்திரியில பட்டபாடு எனக்குத்தான் தெரியும்!’’

- ரஜினிகாந்த்

2015-ல் இவர்கள் இப்படிச் சொன்னார்கள்! - ஹைலைட்ஸ்!

“ ‘தமிழ்நாட்டில், மின் தட்டுப்பாடு இல்லை; தடை யில்லா மின்சாரம் கிடைக்கிறது. உங்களுக்குச் சந்தேகம் இருந் தால், கரன்ட் பாக்ஸுக்குள் கையைவிட்டுப் பாருங்கள்’ என தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் சொல்கிறார். ‘என்ன லந்தா... யாரைப் பார்த்து கரன்ட் பாக்ஸுக்குள்ள கைய விடுனு சொல்ற? என் மக்களைப் பார்த்து நீ என்னய்யா கரன்ட் பாக்ஸுக்குள்ள கையை விடச் சொல்றது... இதைச் சொல்றதுக்கு நீ ஒரு அமைச்சரா?”

- விஜயகாந்த்

“எங்களது கடந்தகால ஆட்சியில், தெரிந்தோ தெரியா மலோ சில தவறுகள் நடந்திருக் கலாம். அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் விரும்பும் மாற்றத்துக்கு தி.மு.க துணை நிற்கும்!”

- மு.க.ஸ்டாலின்

“இந்தியாவில் நடைபெறும் அத்தனை போராட்டங்களிலும் 25 சதவிகிதம் தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ்கின்றன என்றால், அவ்வளவு தாராள மனதோடு ஜனநாயக நெறிமுறைகளைக் காக்க வேண்டும் என்ற உணர்வோடு இந்த அரசும் காவல் துறையும் அத்தனை போராட்டங்களுக்கும் அனுமதி வழங்குகின்றன என்றுதான் பொருள்!”

- ஜெயலலிதா

“ஸ்டாலினின் ‘நமக்கு நாமே திட்டம்’ மக்களுக்காக அல்ல. இன்று தெருத்தெருவாகப் போய் மக்களைச் சந்திக்கிற நீங்கள், துணை முதலமைச்சராக, மேயராக இருந்தபோது, ஒரு முறையாவது இப்படி தெருவுக்கு இறங்கி வந்தது உண்டா?’’

- பிரேமலதா விஜயகாந்த்

“நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை மற்ற வர்கள் தீர்மானிக்க முடியாது!”

- கமல்ஹாசன்

“எனக்கு என்று தனிப்பட்ட வாழ்வு இல்லை. எனக்கு என்று தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. நான் வாழ்வதே, இந்த இயக்கத்துக்காகத்தான்; தமிழ்நாட்டு மக்களுக்காகத் தான்!”

- ஜெயலலிதா

2015-ல் இவர்கள் இப்படிச் சொன்னார்கள்! - ஹைலைட்ஸ்!

“காங்கிரஸ் கட்சி யாரை நம்பியும் இல்லை. கார்த்தி சிதம்பரம்தான் காங்கிரஸ் தயவை நம்பி இருக்கிறார். யாருடைய துணையும் இல்லாமல், காங்கிரஸ் கட்சி வலுவுடன் விளங்கும்!”

- குஷ்பு

“‘நாம் தமிழர்’ ஆட்சி அமைந்தால், ஆடு, மாடு மேய்ப்பது அரசு வேலை; தமிழ் படித்தால், உள்ளூரில் வேலை; ஆங்கிலம் மற்றும் பிறமொழி படித்தால், வெளிநாட்டில்தான் வேலை. கல்வி, மருத்துவம் இலவசம்!”

-  சீமான்

“ஆறு மாத மழை ஒரே நாளில் பெய்தால்கூட, அது மக்களைப் பாதிக்காத அளவுக்கு நிர்வாகம் செய்ய அரசுக்குத் தெரிந்திருக்க வேண்டும்!”

- தமிழிசை சௌந்தரராஜன்

‘‘ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர் என்பதை மறந்துவிட்டு, அவரது தொகுதியை மட்டும் தேர்தல் பிரசாரத்துக்கு வருவதுபோல மழைநீர் காலில் படாமல், வெள்ளப் பாதிப்பைப் பார்வையிட்டுச் சென்ற ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா தான்!’’

- விஜயகாந்த்

“நாங்களா உங்க கையைப் பிடிச்சு குடிக்கச் சொல்றோம்? அதான் பாட்டில் மேலேயே எழுதியிருக்குல்ல... திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப்போலத்தான் மதுவும்!’’

- பழனியப்பன், உயர் கல்வித் துறை அமைச்சர்