Published:Updated:

"தனி வாட்ஸ்அப் குரூப், ஆச்சர்ய பார்ட்டி, பாவனா கல்யாண சந்தோஷங்கள்!" ரம்யா நம்பீசன் ஷேரிங்ஸ்

"தனி வாட்ஸ்அப் குரூப், ஆச்சர்ய பார்ட்டி, பாவனா கல்யாண சந்தோஷங்கள்!" ரம்யா நம்பீசன் ஷேரிங்ஸ்
"தனி வாட்ஸ்அப் குரூப், ஆச்சர்ய பார்ட்டி, பாவனா கல்யாண சந்தோஷங்கள்!" ரம்யா நம்பீசன் ஷேரிங்ஸ்

"ஹேப்பி... என்ஜாய்மென்ட்... லாட் ஆஃப் மெமரீஸ்... இனி இப்படியொரு தருணம் கிடைக்கிறதே சந்தேகம்தான். என் பெஸ்ட் ஃப்ரெண்ட், பாவனா - நவீன் ஜோடிக்கு ஹேப்பி வெட்டிங் லைஃப் வாழ்த்துகள்" - உற்சாகமாகப் பேசுகிறார், நடிகை ரம்யா நம்பீசன். நடிகை பாவனாவின் திருமண நிகழ்வில் நடந்த மகிழ்வான தருணங்கள் குறித்துப் பகிர்கிறார். 

"நான், பாவனா உள்பட எங்க ஃப்ரெண்ட்ஸ் கேங்ல ஆறு பேர் இருக்கோம். பாவனாவின் கல்யாணம் ஃபிக்ஸ் ஆனதுமே, வாட்ஸ்அப் குரூப் ஒண்ணு ஆரம்பிச்சுட்டோம். யார் எங்கே இருந்தாலும் கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி நிச்சயமா அசெம்பிள் ஆகிடணும்னு உறுதியா இருந்தோம். கல்யாணம் பற்றின அப்டேட்ஸை ஷேர் பண்ணிட்டே இருந்தோம். 'நீங்க எல்லோரும் நிச்சயமா கலந்துக்கணும்'னு பாவனா அன்பு கட்டளை வெச்சுட்டாங்க. கேரளாவில் நிச்சயதார்த்தம் ரொம்ப எளிமையா நடந்துச்சு. அதிலும் நாங்க கலந்துக்கிட்டோம். 

திருமண தேதிக்கு முன்னாடி பலமுறை நாங்க மீட் பண்ணியிருந்தாலும், கல்யாணத்துக்கு முந்தின நாள் சிறப்பானது. ஸ்வீட் மெமரீஸ் நடந்துச்சு. அதில் ஒண்ணுதான், பாவனாவுக்கு நடந்த மெகந்தி ஃபங்ஷன். வெளியூரிலிருந்த ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் அசெம்பிள் ஆகிட்டோம். பாவனாவுக்கு மெகந்தி போட்டுவிடும்போது, பயங்கரமா கலாய்ச்சு, கலகலப்பா பேசி என்ஜாய் பண்ணினோம். பாவனாவின் முகத்தில் பெரும் புன்னகையைப் பார்த்ததில் எங்களுக்கு அளவில்லா சந்தோஷம். அந்த நேரத்தில், எல்லோரும் சேர்ந்து பாவனாவுக்கு சர்ப்ரைஸ் பார்ட்டி ஒண்ணு கொடுத்தோம். மஞ்சள் நிற டிரஸ்ல பாவனா ரொம்பவே அழகா இருந்தாங்க. கேக் வெட்டினாங்க. நாங்க டான்ஸ் ஆடி, வாழ்த்துச் சொன்னோம். இன்ப அதிர்ச்சியில் பூரிச்சுப்போய் தேங்க்ஸ் சொன்னாங்க" எனப் பரவசத்துடன் விவரிக்கிறார் ரம்யா நம்பீசன். 

திருமண நிகழ்வில் என் ஃப்ரெண்டுக்கு பல சர்ப்ரைஸ் கிடைத்தன. நடிகை பிரியங்கா சோப்ராவின் வாழ்த்து அதன் உச்சம் எனலாம். 

"திருச்சூர்ல நடந்த கல்யாணத்தில் எல்லோரின் டிரஸ்ஸூம் ஒரே மாதிரி இருக்க பிளான் பண்ணினோம். ஆனால், அப்படி எடுக்க நேரமில்லை. அதனால், யுனிக்கா இருக்கணும்னு ஆறு பேருக்குமான டிரஸ்ஸை செலக்ட் பண்ணியிருந்தோம். இது எங்க வீட்டு ஃபங்ஷன். ஒவ்வொரு வேலையையும் நாங்க முன்னெடுத்துச் செஞ்சோம். அன்னிக்கு ஈவ்னிங் வரவேற்பு நிகழ்ச்சியும் நல்லபடியா நடந்துச்சு. ரொம்ப நாள் கழிச்சு நிறைய ஃப்ரெண்ட்ஸ், செலிப்பிரிட்டீஸை பார்த்துப் பேசும் வாய்ப்பாக அமைஞ்சுது. பாவனாவுக்கு வாழ்த்துச் சொல்லி நிறைய சாங்க்ஸ் பாடியும் டான்ஸ் ஆடியும் செலிபிரேட் பண்ணினோம். ஸ்பெஷல் கோரியோகிராபியும் இருந்துச்சு. இந்த மெமரீஸ் மறுபடியும் கிடைக்கிறது அபூர்வம். நிறைய போட்டோஸ், செல்ஃபி எடுத்துக்கிட்டோம். 

கல்யாணத்தில் கலந்துகிட்டவங்களின் வாழ்த்தும் கிஃப்டும் பாவனாவுக்கு சர்ப்ரைஸா இருந்துச்சு. நடிகை பிரியங்கா சோப்ராவின் கல்யாண வாழ்த்துச் செய்தியைக் கேட்டதும், பாவனா பயங்கர சந்தோஷப்பட்டாங்க. அதைப் பற்றி எங்ககிட்டச் சொல்லி பூரிச்சுப்போனாங்க. பாவனா - நவீன் மிகச் சிறந்த ஜோடி. பாவனா ரொம்பவே போல்டான பொண்ணு. அவங்க எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கும். சினிமாவிலும் தொடர்ந்து நடிக்கப்போறதா முடிவெடுத்திருக்காங்க. குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமாவில் வெற்றி பெறுவாங்க. அவங்க லைஃப்ல நாங்க எப்பவும் கூடவே இருப்போம். அடுத்து, எங்க ஃப்ரெண்ட்ஸ் குரூப்ல யாருக்குக் கல்யாணம் முடிவானாலும் இதே மாதிரி ஒண்ணுகூடி ஒரு திருவிழாவாக கொண்டாடி மகிழ்வோம்" என்கிற ரம்யா நம்பீசன் குரலில் உற்சாக அலை.