Published:Updated:

25 கைவினைஞர்கள், 30 நாள்கள், 1 பட்டுப்புடவை... நடிகை பாவனாவின் திருமண டிரெஸ்ஸிங்!

25 கைவினைஞர்கள், 30 நாள்கள், 1 பட்டுப்புடவை... நடிகை பாவனாவின் திருமண டிரெஸ்ஸிங்!
25 கைவினைஞர்கள், 30 நாள்கள், 1 பட்டுப்புடவை... நடிகை பாவனாவின் திருமண டிரெஸ்ஸிங்!

25 கைவினைஞர்கள், 30 நாள்கள், 1 பட்டுப்புடவை... நடிகை பாவனாவின் திருமண டிரெஸ்ஸிங்!

`கண்ணன் வரும் வேளை... அந்தி மாலை நான் காத்திருந்தேன்...' என ரீல் கண்ணனுக்காகத் துள்ளி ஆடிய பாவனா, ரியல் கண்ணனோடு சேர்ந்துவிட்டார். `சித்திரம் பேசுதடி', `தீபாவளி', `அசல்', `வெயில்', `ஜெயம்கொண்டான்' என, பல தமிழ்ப் படங்களில் க்யூட் பெண்ணாக வலம்வந்த பாவனா, தன் காதலன் நவீனை ஜனவரி 22 அன்று மணந்தார். கன்னடத் திரையுலகின் தயாரிப்பாளரான நவீனும் பாவனாவும் ஐந்து வருட காதல் ஜோடி. இவர்களின் திருமண நிகழ்வு, எந்தவித ஆடம்பரமின்றி எளிமையான முறையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கேரள மாநிலம் திரிசூரில் நடைபெற்றது.

நிச்சயதார்த்த விழாவில் ஆம்பர் பிரெளன் லெஹெங்கா புடவையில் அழகு தேவதையைப்போல் தோற்றமளித்தார் பாவனா. முத்துகள் சிதறிய வேலைப்பாடுடன் பல அடுக்குகளைக்கொண்ட நெட் லேயர்டு லெஹெங்கா (Net Layered Lehenga), அதன் உட்புறம் கடுமையான வேலைப்பாடுகளாலான `சிக்கன்கரி' எம்ப்ராய்டரி பார்ப்பதற்கு கொள்ளை அழகு. லெஹெங்காவை ஈடுசெய்ய முத்துகள் பதிக்கப்பட்ட ஹய்நெக் பிளவுஸ். மேலும் மெருகேற்றுவதற்கு ஸ்வரோவ்ஸ்கி கற்கள் பதித்த தாவணி. பன் கொண்டையுடன் பூக்கள், காதில் சாண்ட்பாலி காதணி, நெற்றியில் சிறிய பொட்டு. இவைதான் பாவனாவின் அன்றைய அடையாளங்கள். பொன் நிற ஷெர்வானி செட்டில் நவீன் லுக்கும் ரொம்பவே ஸ்மார்ட்.

திருமணத்துக்கு முதல் நாள், மெஹெந்தி நிகழ்வு எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் மஞ்சள் நிற உடை அணிந்து தன் திரையுலகத் தோழிகளுடன் ஆடிப்பாடி உற்சாகமாகக் கொண்டாடினார் பாவனா.

இந்து முறைப்படி திரிசூர் மாவட்டம் திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணா கோயிலில் நிகழ்ந்த பாவனாவின் திருமணத்தில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே நிறைந்திருந்தனர். இதில் தங்க நிற காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்து தங்கச் சிலைபோல் காட்சியளித்தார் பாவனா. LABEL `M பிராண்டின் உரிமையாளர்கள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள் அணு மற்றும் ரேஷ்மாவின் கைவண்ணத்தில் உருவானதுதான் இந்த அழகிய பட்டுப்புடவை. கிருஷ்ணன் - ராதாவின் புராண காதல் கதையை மையமாக வைத்து வடிவமைத்த இந்தப் புடவையின் சிறப்பு, மெட்டல் சீக்வன்ஸ் பொருந்திய கனமான `டபுள் பார்டர்'. ராதாகிருஷ்ணனின் அழகிய உருவத்துக்கு, மின்மினுக்கும் க்ரிஸ்டல்ஸ், பீட்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி மெருகேற்றியுள்ளனர். 25 கைவினைஞர்களைக் கொண்டு 30 நாள்களில் முடிக்கப்பட்டது இந்த அழகிய பட்டுப்புடவை. வளையல், நெக்லஸ், ஒட்டியாணம், காதணி என அனைத்தும் `டெம்பிள் ஜுவல்லரி (Temple Jewellery)' ரகம். வெள்ளை நிற பட்டு வேஷ்டி-சட்டையில் நவீனும் பக்கா தென்னிந்திய மாப்பிள்ளை லுக்.

திருமணமான அதே நாள் மாலை, வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ரெயின்ஸ்டோன், சீக்வன்ஸ் போன்ற வேலைப்பாடுகள் நிறைந்த தங்க நிற லெஹெங்கா சோலி அணிந்து ஜொலித்தார் பாவனா. `Back Trail' அதாவது விளிம்பு நீண்டிருக்கும் லெஹெங்கா, கனமான வேலைப்பாடுகள் பொருத்திய தாவணி, அத்தனையும் பெங்காலிலிருந்து வரவழைக்கப்பட்டன. சோக்கர் நெக்லஸ், டாங்லர் காதணியுடன் நிறைந்திருந்தார் பாவனா. வெள்ளை குர்த்தா பைஜாமா, அதன் மேல் பீச் (Peach) நிற ஜக்கார்டு ஓவர்கோட் என நவீனும் பாவனாவுக்கு ஈடுகொடுத்தார்.

இந்த விழாவில், மம்மூட்டி, ப்ருத்விராஜ், ஜெயராம், ரம்யா நம்பீசன், ஜெயசூரியா, மஞ்சு வாரியார், நஸ்ரியா, ரீமா கல்லிங்கல் உள்பட பல மலையாள நட்சத்திரங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். 

அடுத்த கட்டுரைக்கு