Published:Updated:

“அம்மா எத்தனை பிரஸ்மீட் நடத்தினார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை.!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: பா.காளிமுத்து

“‘காத்திருக்கோம்’னு நான் சொன்ன வார்த்தையை வெச்சு ஆளாளுக்கு ஏதோ மீம்ஸ் பண்றாங்களாமே... நீங்க பார்த்தீங்களா? என்கிட்ட வாட்ஸ்அப் எல்லாம் இல்லப்பா. இன்னமும் நான் அந்த மீம்ஸைப் பார்க்கலை. அதைப் பத்தி உங்க கருத்து என்ன?” என செம ஜாலியாக விசாரிக்கிறார் அ.தி.மு.க-வின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்.

“வணக்கம்... போன வாரம்தான் இந்தப் பகுதியைப் படிச்சு சிரிச்சேன். நல்லது. நீங்க கேள்வியைச் சொன்னீங்கன்னா. அஞ்சு நிமிஷத்துல நானே பதிலோட உங்க லைன்ல வர்றேன். ஓஹோ... அப்படி எல்லாம் சொல்ல மாட்டீங்களா? சரிப்பா... கொஞ்சம் சுலபமான கேள்விகளாக் கேளுங்க” என்கிறார் ‘கல்யாண மாலை’ மோகன்.

“இந்தப் பகுதியில ஒரு நடிகை பதில் சொல்றதுதான் செம ஹைலைட். ‘அய்யோ... எனக்குத் தெரியாதுங்களே... அப்படி ஒரு பார்ட்டி இருக்கா... அவர் அரசியல்வாதியா?’னு எல்லா கேள்விகளுக்கும் உங்ககிட்டயே பதில் கேட்டு ஆச்சர்யப்படுவாங்க. சரி, ஒரு ஐடியாவுக்காகக் கேக்கிறேன். இந்த வாரம் யார் யார் எல்லாம் இந்த கேம்ல கலந்துக்கிறாங்க?” எனக் கேட்கிறார் நடிகர் சதீஷ்.

 “அம்மா எத்தனை பிரஸ்மீட் நடத்தினார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை.!”

“போன வருஷமே ஒரு கேள்விக்குக்கூட பதில் சொல்லலைனு நினைக்கிறேன். மறுபடியும் நானா? கொஞ்சம் ஈஸியா ஆன்ஸர் பண்ற கேள்விகளாக் கேளுங்க, ப்ளீஸ்!’’ - நடிகை லட்சுமி மேனன்.
“விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன், சென்னை பாட்மின்டன் அணியை வாங்கியுள்ளார். அந்த அணியின் பெயர் என்ன?”


விடை: சென்னை ஸ்மாஷர்ஸ்.

நாஞ்சில் சம்பத்: உற்சாகமாகிறார்... “விஜயகாந்தே எந்த அணினு தெரியாம இன்னும் துழாவிட்டு இருக்கார். இதுல அவர் மகன் வாங்கின அணியின் பெயரைப் பத்திக் கேட்டா, என்னத்த சொல்றது?”
‘கல்யாண மாலை’ மோகன்: “பதில் தெரியலை. ஆனா, அரசியலுக்கு வர்றவங்க எல்லாரும் ஏதோ ஒண்ணை வாங்கணும்னு நினைக்கிறாங்க. அது தியேட்டரையோ இல்லை ஏதாவது அணியையோ வாங்குறாங்க. இதுவும் அதைத்தான் காட்டுது.”

சதீஷ்: “ ‘ஆல் இன் ஆல் கேப்டன் டீம்’னு பேரு வெச்சிருப்பாங்களோ?”

லட்சுமி மேனன்: “விஜயகாந்த் சார் மட்டும்தான் தெரியும். சத்தியமா வேற எதுவும் தெரியாதுங்க.’’
 
“பிரதமர் மோடி, ஜனவரி 16-ம் தேதி எந்தத் திட்டத்தைத் தொடங்கிவைக்க உள்ளார்?”

விடை: ‘ஸ்டார்ட்-அப் இந்தியா, ஸ்டேண்ட்-அப் இந்தியா’ என்ற திட்டத்தைத் தொடங்கிவைக்க உள்ளார்.

நாஞ்சில் சம்பத்: “முதலீட்டை அதிகரிக்கத்தான் நாடு நாடாகப் போறார். எந்த முதலீடும் நாட்டுக்கு வந்த மாதிரி தெரியலை. இப்ப மோடிகிட்ட இருக்கும் ஒரே முதலீடு, நாடு நாடாகப் போறதுதான். அதுதான் அவருடைய திட்டம்.”

‘கல்யாண மாலை’ மோகன்: “தெரியலை. ஆனால், எல்லாரும் மோடி நாடு நாடாகப் போறதைத்தான் கிண்டல் பண்றாங்க. அது சம்பந்தமான ஏதாவது திட்டமா இருக்குமோ?”

சதீஷ்: “நான் சூப்பர்ஸ்டாருக்கும் நரேந்திர மோடிக்கும் பெரிய ஃபேன். அவர் கண்டிப்பா நம் நாட்டை வல்லரசு ஆக்குவார் என்ற நம்பிக்கை இருக்குங்க. அது சம்பந்தமான ஏதாவது திட்டமாகத்தான் இருக்கும். பதில் என்னங்க?” கேட்டதும் “அட... ஆமாங்க ரெண்டு நாளைக்கு முன்னாடி விகடன்லகூட ஸ்டார்ட்-அப்னு ஒரு கட்டுரை படிச்சேனே.”

 “அம்மா எத்தனை பிரஸ்மீட் நடத்தினார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை.!”

லட்சுமி மேனன்: “அய்யோ... ஏங்க இப்படி? மோடியை மட்டும்தான் தெரியும். வேற எதுவும் தெரியாது. சினிமாவைப் பத்தி ஏதாவது கேட்டா பதில் சொல்றேன்.”

“அண்மையில் இளைஞர்களுடன் கபடி விளையாடிய முதல்வர் வேட்பாளர் யார்?”

விடை: அன்புமணி ராமதாஸ்.

நாஞ்சில் சம்பத்: உறுதியாக... “வேற யாரு மு.க.ஸ்டாலின்தான். அவருக்கு இனி விளையாடுவதைத் தவிர, வேற வழி கிடையாது. அவர் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நிரந்தரமாக கபடி, ஹாக்கி விளையாடப் போய்விடலாம். ஸ்டாலின் இளைஞர்கள்கூட விளையாடிய பின்னர்தான் அவர் இளைஞர் இல்லை என்பது இளைஞர்களுக்கே தெரிஞ்சுது. பதில் எப்படி?” பதிலைக் கேட்டதும்,
“அன்புமணி ராமதாஸா விளையாடினார்?'’ என சந்தேகமாகிறார்.

‘கல்யாண மாலை’ மோகன்: “ ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் ஊர் ஊராகச் சுற்றுப்பயணம் செய்யும் ஸ்டாலின்தான் விளையாடியிருப்பார்... சரியா?”

சதீஷ்: “நான் சின்ன வயசுல கபடி விளையாடும்போது ஏதாவது காமெடி பண்ணி, வந்தவனை மூச்சுவிடவெச்சு அவுட் ஆக்கிடுவேன். நானும் ஏதாவது காமெடி பண்ணி கோட்டைத் தொட்டுட்டு வந்துடுவேன். சரி, நம்ம கேள்விக்கு வருவோம். பதில் ஸ்டாலின்தானே?'' என யோசித்தவர், “இல்லை ப்ரோ... அன்புமணி ராமதாஸ் சரியா? அவர்தான் முன்னேற்றம்னு சொல்லி முன்னேறி கோட்டைத் தொடுறார். பதில் செமயா சொல்லியிருக்கேன்ல?”

லட்சுமி மேனன்: “விஜய் சார் ‘கில்லி’ படத்துல விளையாடுவாரே அதுதான ‘கபடி’ கேம். செம கேம்ல? ஓ.கே எனக்கு இந்த கொஸ்டீனுக்கு ஆன்ஸர் தெரியும்னு நினைக்கிறீங்களா?” - சீரியஸாகக் கேட்கிறார்.

 “அம்மா எத்தனை பிரஸ்மீட் நடத்தினார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை.!”

“ஜெயலலிதா தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்றதில் இருந்து இதுவரை எத்தனை பிரஸ்மீட்கள் நடத்தியுள்ளார்?”

விடை: 5 ஆண்டுகளில் 5 பிரஸ்மீட்கள் மட்டுமே நடத்தியுள்ளார்.

நாஞ்சில் சம்பத்: திடுக்கிட்டு கேள்வியை மீண்டும் கேட்டவர் உஷாராக, “அம்மா எத்தனை பிரஸ்மீட் நடத்தினார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால், தினமும் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக அவர்தான் இருக்கிறார்; இன்னமும் இருப்பார்; இந்த இடத்தை வேற யாரும் நிரப்பவே முடியாது.”

‘கல்யாண மாலை’ மோகன்: “நீங்க கேட்கிறதைப் பார்த்தா... கண்டிப்பாகக் குறைவாகத்தான் பத்திரிகையாளர்களைச் சந்திச்சு இருப்பாங்க. தமிழ்நாட்டு முதலமைச்சர் தன் கடமைகளைச் சரியாகச் செய்தாலே, அவர் மேல் மரியாதை தானாக அதிகமாகும். இப்ப அவரோட கையையும் காலையும் யாரோ கட்டிப்போட்ட மாதிரியே ஒரு பிரமை மக்களிடம் இருக்கு. மக்களை முதலமைச்சர் அடிக்கடி சந்திக்கணும். அதேபோல குடி இல்லாத ஆட்சி நடத்தணும். இதுதான் மக்களோட விருப்பம்.”

 “அம்மா எத்தனை பிரஸ்மீட் நடத்தினார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை.!”

சதீஷ்: “நான் அடிக்கடி பீச்ல வாக்்கிங் போவேன். அப்ப அம்மா தூரத்துல கார்ல போறதைப் பார்த்திருக்கேன். சரி, அப்படி இப்படினு ஒரு ஏழெட்டு தடவை பிரஸ்மீட் நடத்திருப்பாங்களா?”
லட்சுமி மேனன்: “சும்மா கெஸ்ல ஆன்ஸர் பண்றேன். ஜெயலலிதாம்மா சுமார் 20 பிரஸ்மீட் வெச்சு இருப்பாங்களா... இல்லையா? நான் இப்ப கிட்டத்தட்ட ஜெர்னலிஸம் மாதிரி கோர்ஸ்தான் படிச்சிருக்கேன். சீக்கிரம் இதேபோல ரொம்ப டஃப்பான கொஸ்டீன் பேப்பரை செட் பண்ணி உங்களைக் கேள்வி கேட்கிறேன். பாருங்க” சிரிக்கிறார்.