மயங்க வைக்கும் மல்டிகலர் கம்மல்!

"கிராமத்துப் பெண் நான். கல்யாணமாகி சென்னைக்கு வந்தப்போ, எந்த விவரமும் தெரியாம இருந்தேன். வீட்டில் போர் அடிச்சதால, கிராஃப்ட் கிளாஸ் போனேன். ஆர்வமா கத்துக்கிட்டு, வீட்டில் நிறைய அயிட்ட ங் கள் செய்தேன். அடுத்ததா பயிற்சி வகுப்புகள் எடுத்துட்டே, மொத்த ஆர்டர்கள் பிடிச்சு குறைஞ்ச விலையில் கிராஃப்ட் பொருட்கள் செய்துகொடுக்க ஆரம் பிச்சேன். ஆர்டர்கள் குவிய, ஆன்லைனிலும் அப்லோடு செய்தேன். மற்ற இடங்களைவிட கம்மியான விலையில் கொடுத்ததால, காலேஜ் கேர்ள்ஸ்கிட்ட எனக்கு நல்ல வரவேற்பு. இப்போ என்னை மாசம் 30,000 ரூபாய்க்கும் மேல சம்பாதிக்க வைப்பது... கிராஃப்ட்தான்!’’

க்வில்லிங் கிளாஸ்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- லயமாகப் பேசும், சென்னை ‘லட்சா ஃபேஷன்’ உரிமையாளர் லட்சுமி சதீஷ், மல்டிகலர் க்வில்லிங் கம்மல் செய்யக் கற்றுத்தருகிறார்...

தேவையானவை:

க்வில்லிங் கிளாஸ்..!

3 mm க்வில்லிங் பேப்பர்...  டார்க் கிரீன் - 10, லைட் கிரீன் - 2, மஞ்சள் - 9 (இவை ஒருபக்க கம்மல் செய்ய. இதேபோல் இன்னொரு செட் எடுத்துவைக்கவும்), இயர் ஹூக்  - 2, வளையம் - 2, க்வில்லிங் ஊசி, ஃபெவிக்கால், கட்டர், பிளேயர்.

செய்முறை:

படம் 1: மல்டிகலர் கம்மல் செய்வதால், மூன்று கலர் க்வில்லிங் பேப்பர்களையும் எடுக்கவும். மொத்தம் 21 இருக்கும்.

படம் 2: முறையே டார்க் கிரீன், லைட் கிரீன், மஞ்சள் க்வில்லிங் பேப்பர்களை ஒன்றோடு ஒன்று ஒட்டி, டைட் காயில் ஒன்று சுற்றவும்.          

படம் 3: காயிலின் முனையில் ஃபெவிக்கால் தடவி சிறிது நேரம் காயவிடவும்.

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 4: காயில் காய்ந்ததும் அதன் ஒருபுறத்தைப் பிடித்துக்கொண்டு மற்றொருபுறம் கட்டைவிரலால் மெதுவாக அழுத்திவிடவும்.            

படம் 5: காயிலின் ஒருபுறம் மேலே எழும்பியதுபோல இருக்கும். இப்போது மற்றொருபுறத்தையும்

க்வில்லிங் கிளாஸ்..!

அதேபோல அழுத்திவிடவும். இதுதான் கம்மல் பேஸ். இதேபோன்று மற்றொரு கம்மல் பேஸ் செய்யவும்.        

படம் 6:
செய்த கம்மல் பேஸ் உருவிவிடாதவாறு அதன் எல்லாப் புறங்களிலும் ஃபெவிக்கால் தடவி காயவிடவும்.

படம் 7: ஃபெவிக்கால் காய்ந்ததும், விரும்பியவர்கள் வார்னிஷ் அடித்துக் கொள்ளலாம்.

படம் 8: விரும்பும் வண்ணத்தில் ஒரு க்வில்லிங் பேப்பர் எடுத்து, சரிபாதியாகக் கத்தரித்து இரண்டு ஜாயின்ட்டர்கள் செய்யவும்.             

படம் 9: ஜாயின்ட்டரையும் கம்மல் பேஸையும் படத்தில் காட்டியுள்ளபடி ஒட்டவும். 

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 10: ஜாயின்ட்டரில் வளையத்தைக் கோக்கவும்.

படம் 11: வளையத்தில் இயர் ஹூக்கை கோத்து கட்டரால் டைட் செய்யவும். இதேபோல இன்னொரு பக்கக் கம்மலையும் செய்யவும்.

படம் 12: மார்டர்ன் லுக்கில் மல்டிகலர் க்வில்லிங் கம்மல் ரெடி.

``இந்தக் கம்மலைக் குறைந்தது 200 ரூபாய்க்கு விற்கலாம். கலர், டிசைன்களை கற்பனைக்கு ஏற்ப மாற்றி கம்மலை அழகுகூட்டலாம். பக்கத்து ஃபேன்ஸி கடையில் முதல் வாய்ப்பைக் கேளுங்க. சின்சியரா தொடர்ந்து செய்தால், ஃபாரின் வரை மார்க்கெட்டிங் பண்ணலாம். ஆன்லைன்ல அப்லோடு செய்தா ஆர்டர்கள் குவியும்!’’


- நல்ல ஆரம்பத்துக்கு நம்பிக்கை கொடுத்தார், லட்சுமி சதீஷ்.

- க்வில்லிங் கிளாஸ் தொடரும்....

சு.சூர்யா கோமதி, படங்கள்:க.பாலாஜி

அடிப்படை உருவம் செய்வோம்...

காயில்

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 1: க்வில்லிங் பேப்பர்களை ஒன்றோடு ஒன்று ஒட்டி அதன் நீளத்தை அதிகரிக்கவும்.

படம் 2:
க்வில்லிங் ஊசியில் இருக்கும் துளையில் க்வில்லிங் பேப்பரை நுழைத்து, டைட் காயில் போல சுற்றவும்.

படம் 3: சுற்றிய பேப்பர் உருவிவிடாதவாறு காயிலின் மையத்தில் பிடித்துக்கொண்டு ஊசியில் இருந்து மெது வாகக் கழற்றி, அதன் ஒரு முனையில் ஃபெவிக்கால் தடவி காயிலுடன் ஒட்டிக் காயவிடவும். காயில்ரெடி.

ஜாயின்ட்டர்

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 1: க்வில்லிங் ஊசியில் இருக்கும் துளையில் க்வில்லிங் பேப்பரை நுழைத்து படத்தில் உள்ளதுபோல சற்று இடைவெளிவிட்டு பக்கவாட்டில் சுற்றவும்.

படம் 2: சுற்றிய ஜாயின்ட்டரை ஊசியில் இருந்து கழற்றி ஃபெவிக்கால் தடவிக் காயவிடவும்.

குழந்தைகளுக்குப் பரிசு!

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 1: படத்தில் உள்ளதுபோல வெவ்வேறு வடிவங்கள் செய்யவும். 

படம் 2:
அவற்றை கிளி, வாத்து என்று விரும்பும் வடிவங்களில் ஒட்டவும்.

படம் 3, 4: பென்சிலின் எழுதாத முனையில் அந்த வடிவங்களை ஒட்டி குட்டீஸிடம் கொடுக்க, மிகவும் மகிழ்ச்சி அடை வார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism