Published:Updated:

ஆள் பாதி... தோல் பாதி!

சருமப் பாதுகாப்பு ரகசியங்கள்

ஆள் பாதி... தோல் பாதி!

கத்தின் அழகு முகத்தில் தெரியும். பொலிவான தோற்றமே நம் உடல்நலம் மற்றும் மனநலம் இரண்டையும் காட்டும் கண்ணாடி. ஆரோக்கியமான தோற்றம் நமக்குத் தரும் தன்னம்பிக்கை அசாதாரணமானது. சருமம் என்பது நம் உடலுக்கு வெறும் போர்வை மட்டும் அல்ல; வெயிலில் இருந்தும், குளிரில் இருந்தும், புறஊதாக் கதிர் போன்றவற்றில் இருந்தும் நம் உடலைக் காக்கும் பிரதான இயற்கை அரணும் இதுவே!   

ஆள் பாதி... தோல் பாதி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பட்டுப் போன்ற பளபளப்பான சருமம் வேண்டும், அழகான தோற்றம் வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையும். இதற்காக, பியூட்டி பார்லருக்குப் போய் செயற்கையான கிரீம்களை, வேதிப்பொருட்களை முகத்தில் பூசி, பக்கவிளைவால் முகத்தைக் கெடுத்துக்கொள்பவர்கள் ஒருபுறம். `இப்ப என் அழகுக்கு என்ன குறை... நான் என்ன நடிக்கவா போறேன்... எதுக்குத் தேவை இல்லாம’ என்ற மனநிலையில், தோற்றத்தைப் பற்றிய கவலை இன்றி இருப்பவர்கள் மறுபுறம். உண்மையில், ஆரோக்கியமான சருமம் என்பது அடைய முடியாத விஷயம் இல்லை. தேவை கொஞ்சம் மெனக்கெடல் மட்டுமே. சிலருக்கு வறண்ட சருமம் இருக்கும்; சிலருக்கு எண்ணெய்ப் பிசுபிசுப்பான சருமம் இருக்கும். நமக்கு என்ன வகையான சருமம் என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்ற அழகு தெரப்பிகளையும், மசாஜ்களையும் செய்துவந்தால், ஆரோக்கியமான சருமம் சாத்தியமே!

ஆள் பாதி... தோல் பாதி!

இயற்கைமுறையில் உடல் அழகைப் பெறுவதைப் பற்றி விளக்குகிறார் `சஞ்சீவனம்’ ஆயுர்வேத தெரப்பி மையத்தின், அழகுக்கலை மற்றும் ஆரோக்கிய நிபுணர் அஞ்சலிதேவி. சருமப் பராமரிப்புகள், சருமத்தில் ஏற்படும் பிரச்னைகள் அதற்கான தீர்வுகளைப் பற்றி விளக்குகிறார், டாக்டர் தலத் சலீம். சருமத்துக்கு ஊட்டச்சத்து தரும் ரெசிப்பிக்களை செய்துகாட்டுகிறார், திருச்சி, ஆப்பிள் மில்லட் உணவகத்தின் செஃப் கணேசன். 

ஆள் பாதி... தோல் பாதி!

கிளென்சிங்

முகத்தைச் சுத்தம்செய்வதுதான் சருமப் பராமரிப்பின் தொடக்கம். அழுக்கு, தூசு, வானிலை மாற்றம், சூரியக் கதிர்கள், புகை, கிரீம், சோப், உணவுப் பழக்கம், நீர்ச்சத்துக்கள் குறைதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சருமத்தைச் சுத்தம்செய்வதுதான் கிளென்சர்.
செயற்கை கிரீம், லோஷன் இல்லாமல் இயற்கையானமுறையில் கிளென்சிங் செய்வது நல்லது.

இயற்கையானமுறையில் கிளென்சிங் செய்ய, பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கலக்க வேண்டும். இந்தப் பாலை, பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் தொட்டுத் துடைக்க வேண்டும்.

கீழிருந்து மேலாக மென்மையாக, மிருதுவாக மசாஜ்செய்து தேய்ப்பதால், இறந்த செல்கள் உதிரும்; அழுக்குகள் நீங்கும்.

ஆள் பாதி... தோல் பாதி!

பலன்கள்: முகம், கழுத்து, காது சுத்தமாகும். அடுத்த சிகிச்சையைச் செய்வதற்கு சருமம் தயார் நிலையில் இருக்கும்.

ஸ்க்ரப்

கண்களுக்குத் தெரியாத, செதில் செதிலான இறந்த செல்களை நீக்க உதவுவது ஸ்க்ரப். சொரசொரப்பான கலவையைத் தயாரித்து, அதை முகம், கழுத்து, கை, கால்களில் பூசி, மென்மையாக மசாஜ்செய்வதே ஸ்க்ரப் என்ற சிகிச்சை.

ஆள் பாதி... தோல் பாதி!

நவரா அரிசி, பாதாமை ஊறவைத்து, பேரீச்சம் பழம் சேர்த்து அரைக்க வேண்டும். கொரகொரப்பான இந்தக் கலவையை முகம், கழுத்தில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக, மூக்கு ஓரங்கள், முன் நெற்றி, இதழ்களின் கீழே அழுத்தித் தேய்க்க, சின்னச்சின்ன குருத்துகள் நீங்கும்.

பலன்கள்: கரும்புள்ளி மற்றும் வெண்புள்ளிகள் நீங்கும். இறந்த செல்கள், பருக்களின் மிச்சங்கள் நீங்கிவிடும். சருமம் மிருதுவாக, ‘பளிச்’ என மாறும்.

கண்களுக்கான பேக்

கண்களை மூடிக்கொண்டு, சுற்றிலும் ஸ்க்ரப் கலவையைப் பூசி, மென்மையாக மசாஜ்செய்து சுத்தம்செய்ய வேண்டும். மீண்டும், தண்ணீரால் துடைக்க வேண்டும். பின்னர், கண்களின் மேல் வைக்கும் அளவுக்குக் கற்றாழையைப் பெரிய துண்டாக நறுக்க வேண்டும். 

நன்றாகக் கழுவிய பின், நடுவில் பிளந்து, இரு துண்டுகளாக்க வேண்டும். இதை, இரு கண்களின் மேல் வைத்து, மெல்லிய துணியால் கண்களைக் கட்டிக்கொள்ளலாம். அரை மணி நேரத்துக்குப் பிறகு, கற்றாழையை எடுத்துவிட்டு, கண்களைச் சுத்தம்செய்ய வேண்டும்.

ஆள் பாதி... தோல் பாதி!

பலன்கள்: நீண்ட நேரம் மொபைல், கணினி பார்க்கும் கண்களுக்குச் சிறந்த சிகிச்சை. உடலின் வெப்பம் கண்களில் தெரியும். வெப்பத்தை எளிதில் எடுக்கக்கூடிய ஆற்றல் கற்றாழைக்கு உண்டு. கண்களின் சூட்டை கற்றாழை எடுத்துக்கொள்ளும். தொடர்ந்து செய்தால், கண்களைச் சுற்றி உள்ள கருவளையம் மறையும். கண்கள் ஃப்ரெஷ்ஷாக, பிரகாசமாக மாறும்.

மூலிகை ஃபேஸ் பேக்

துளசி, வேப்பிலை, புதினா, கொத்தமல்லியுடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து, மையாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகம் முழுவதும் தடவி, பேக் போட்டுக்கொள்ளலாம். கழுத்திலும் தடவிவர, நல்ல பலன் தெரியும். 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரீல் கழுவ வேண்டும்.

ஆள் பாதி... தோல் பாதி!

பலன்கள்: முகத்தில் இருக்கும் எண்ணெய்ப் பசை நீங்கும். கரும்புள்ளிகள் மறையும். பருக்கள் தொந்தரவால் அவதியுறுவோர் வாரம் இருமுறை செய்துவரலாம். மூன்றே மாதங்களில் பருக்கள் பரவுவது தடுக்கப்படும். பளபளப்பான ஆரோக்கி
யமான தோற்றம் கிடைக்கும்.

ரெட் பேக்

கேரட், பீட்ரூட்டுடன் சிறிது எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து நன்கு அரைக்க வேண்டும். இந்தக் கலவையை கண்களைத் தவிர மற்ற இடங்களில் தடவ வேண்டும். தடிமனாகத் தடவுவது நல்லது.  பஞ்சை நனைத்துக் கண்களில் வைத்துவிட்டு, அதன் மீது இந்த பேக் போட்டுக்கொள்ளலாம்.

ஆள் பாதி... தோல் பாதி!

பலன்கள்: முகத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இயற்கையான ஈரப்பதம் கிடைக்கும். சருமத்தின் நிறம் அதிகரிக்கும். சருமம் பளிச்சிடும். சரும செல்கள் புத்துயிர் பெறும்.

நால்பாமரம் ஃபேஸ் பேக்

ஆல், அரசு, அத்தி, இத்தி ஆகிய நால்பாமரத்தின் நான்கு பட்டைகள், துளசி, கொழுந்து வேப்பிலை, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை, முகம் முழுவதும் பூசி, 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவிக்கொள்ளலாம்.

ஆள் பாதி... தோல் பாதி!

பலன்கள்: பொலிவான சருமம் கிடைக்க உதவும். சருமத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். சருமத் தொல்லைகளில் இருந்து விடுதலை பெறலாம். திருமணத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்து, மணமக்கள் இந்த சிகிச்சையைச் செய்துவர, சருமம் பிரகாசமாக இருக்கும்.

லிக்விட் தெரப்பி

எலுமிச்சைச்சாறு, தேன், முட்டையின் வெள்ளைப்பகுதியை ஒன்று சேர்த்து நன்கு அடித்துக்கொள்ள வேண்டும். இந்த திரவத்தை, கைகளால் முகம் முழுக்கத் தடவ வேண்டும். மூக்கு ஓரங்கள், மேல் உதடு, கீழ் உதட்டைச் சுற்றிலும் தடவலாம். கழுத்து வரை முழுவதும் தடவிய பின், 20 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிட வேண்டும்.

ஆள் பாதி... தோல் பாதி!

பலன்கள்: கறுப்பாக இருப்போருக்குச் செய்யப்படும் ஸ்கின் லைட்னிங் சிகிச்சை இது. கருமை மறைந்து, பொலிவு அதிகரிக்கும். இந்தச் சாறு, சருமத் துவாரங்கள் வழியே உள்சென்று, நல்ல பலனைத் தரும்.  அழகுக்கலை நிபுணரின் ஆலோசனைப்படி, அனைவரும் செய்து கொள்ளலாம்.

கைகளுக்கான பேக்

நால்பாமராதி எண்ணெயில் மஞ்சள் கலந்து, கைகள் முழுவதும் தடவிக்கொள்ள வேண்டும். மென்மையான அழுத்தத்துடன் முன்னும் பின்னும் இதமாகத் தடவ வேண்டும்.

பின்னர், ஊறவைத்த நவரா அரிசியின் விழுதைக்கொண்டு, கைகள் முழுவதையும் ஸ்க்ரப் செய்ய வேண்டும். 10 நிமிடங்களுக்கு ஸ்க்ரப்பைத் தொடர்ந்துசெய்யலாம்.

பின்னர், அதைத் துடைத்துவிட்டு, அரிசி மாவு, பச்சைப் பயறு மாவு, மஞ்சள், புதினா, கற்றாழை, பன்னீர், வேப்பிலை, கடலை மாவு, தயிர் அல்லது பால் அல்லது தேன் கலந்து கைகள் முழுவதும் பேக் போட்டுக்கொள்ளவும்.

ஆள் பாதி... தோல் பாதி!

பலன்கள்: அழகு நிலையங்களில் செய்யப்படும் மெனிக்யூரின் மாற்று இது. கைகள் பளிச்சென அழகாகும். புற ஊதாக் கதிர்வீச்சால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். ஆடைகள் மூடப்பட்ட இடம் சிவப்பாகவும், மற்ற இடங்கள் கறுப்பாகவும் இருக்கும் பிரச்னை நீங்கிவிடும். கறுப்புப் புள்ளிகள் மறைந்துவிடும். 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த சிகிச்சையைச்செய்யலாம்.

கால்களுக்கான பேக்

நால்பாமராதி எண்ணெய், மஞ்சளைக் கலந்து, கால்கள் முழுவதும் தடவிக்கொள்ள வேண்டும். மென்மையான அழுத்தத்துடன் முன்னும் பின்னும் இதமாகத் தடவ வேண்டும். பாதத்திலும் தடவலாம்.

பின்னர், ஊறவைத்த நவரா அரிசியின் விழுதைக்கொண்டு, கால்கள் முழுவதையும் ஸ்க்ரப் செய்யலாம். 10 நிமிடங்களுக்கு ஸ்க்ரப்பைத் தொடர்ந்துசெய்யலாம். மசாஜ் செய்யும்போது பலன் இரட்டிப்பாகும்.

ஸ்கரப் பேக்கின் மேலே மூலிகை பேக்கை போட்டுவிட வேண்டும். அதாவது, துளசி, வேப்பிலை, புதினா, கொத்தமல்லி சேர்த்த மூலிகை பேக்கை கால் முழுவதும் பூசிவிடலாம். அரை மணி நேரம் கழித்துக் கழுவிவிட வேண்டும்.

ஆள் பாதி... தோல் பாதி!

பலன்கள்: கால்களில் உள்ள கருமை மறையும். தோல் வறட்சி நீங்கி, கால்கள் பிரகாசமாகும். அரை மணி நேர சிகிச்சையால் கால்களுக்குப் பொலிவு அதிகரிக்கும். இறந்த செல்கள் உதிர்ந்து, ‘பளிச்’ கால்களாக மாறும்.

ஸ்கின் க்ளோ தெரப்பி

ஆள் பாதி... தோல் பாதி!

உடல் முழுதும் செய்யக்கூடிய சிகிச்சை இது. திருமணத்துக்குத் தயாராவோர் செய்து கொள்ளலாம்.  பால், குங்குமப்பூ, பாதாம், முந்திரி, ஓட்ஸ் பவுடர், தேன், எலுமிச்சைச் சாறு ஆகியவை கலக்கப்பட்டு, கிளென்சிங், ஸ்க்ரப், மசாஜ், பேக் எனப் படிப்படியாகச் செய்யப்படும் சிகிச்சை. முதலில், பால் மற்றும் குங்குமப்பூவைக்கொண்டு உடல் முழுதும் கிளென்சிங் செய்யப்படும்.

அடுத்து தேன், எலுமிச்சைச் சாற்றால் மசாஜ் செய்யப்படும். பிறகு, பாதாம், முந்திரி விழுதைக்கொண்டு, உடல் முழுதும் ஸக்ரப் செய்யப்படும். நால்பாமரம் எண்ணெயால் மீண்டும் ஒரு முறை மசாஜ் செய்யப்படும். சுமார், இரண்டரை மணி நேரம் ஆகும். மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செய்துகொள்ளலாம்.

ஆள் பாதி... தோல் பாதி!
ஆள் பாதி... தோல் பாதி!

பலன்கள்: முழு உடலும் பளிச்சிட உதவும். வலிகள், பிடிப்புகள் நீங்கும். உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக நடைபெறும். சரும செல்கள் புத்துயிர் பெறும். தூக்கமின்மை, வலி, மன உளைச்சல் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு.

ஸ்ட்ரெஸ் ரிலீஃப் தெரப்பி

இன்று வேலைக்குச் செல்பவர்கள், வீட்டில் இருப்பவர்கள் என அனைத்துத் தரப்பினரும் மனஅழுத்தத்தால் அவதிப்படுகின்றனர். இவர்களுக்கான சிறந்த தெரப்பி இது.

18 வகையான அரோமா எண்ணெய், பால், மூலிகை எண்ணெய்கள்கொண்டு, மூன்று மணி நேரத்துக்கு உடல் முழுவதும் மசாஜ் செய்யப்படும்.

ஆள் பாதி... தோல் பாதி!

பலன்கள்: அரோமா எண்ணெயின் வாசம் மூக்கில் நுழைந்து, மூளையின் அதீதச் செயல்பாட்டைக் குறைக்கும். எண்ண ஓட்டங்களைக் குறைத்து, மன அமைதி அடையச் செய்யும். மென்மையான அழுத்தங்களும், வாசமும் தூக்கத்தை வரவழைத்து, உடலை ஓய்வுபெறச்செய்யும். இதனுடன், முகத்தில் அரோமா ஃபேஷியலும் செய்யப்பட்டு, முகம் பிரகாசமாகும். மனம் தொடர்பான பிரச்னைகளை விரட்டி அடிக்கும். இந்த தெரப்பியை மாதம் ஒரு முறை செய்யலாம்.

மூலிகை எண்ணெய்களும், தைலங்களும் பூசி ரிலாக்ஸ் தெரப்பி செய்வதன் மூலம், கால் வலி, பாத வலி, எரிச்சல், கணுக்கால் பிடிப்பு போன்ற பிரச்னைகள் சரியாகும். பாதத்தை அழுத்தி, சில மென்மையான புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுத்தாலே, பாதிப் பிரச்னை குறைந்துவிடும்.  அனைவரும், மாதம் ஒரு முறை இந்த தெரப்பியை செய்துகொள்வது நல்லது.

ஆள் பாதி... தோல் பாதி!

சிகிச்சைக்கு முன்பு கவனிக்க வேண்டியவை!

சிகிச்சைக்குப் பின் உடனே முழுப் பலன்களும் தெரியாது. தொடர்ந்து செய்துவந்தால், நல்ல பலன்கள் கிட்டும்.

ஆள் பாதி... தோல் பாதி!

ஒவ்வொருவரும் அவரவர்க்கு ஏற்ற சரும சிகிச்சைகளை செய்துகொள்ள வேண்டும். அனைவருமே உடல்நலம், மனநலம் மற்றும் தோற்றத்தைச் சீராகப் பராமரித்துக்கொள்வது முக்கியம். ஆண், பெண் இருவருமே தங்களைப் புதுப்பித்துக்கொள்வதன் மூலம், உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும். பிரச்னைகளுக்கு தெரப்பி எடுத்தால் மட்டும் போதாது. மருத்துவரின் ஆலோசனைப்படி, உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல்முறைகளை மாற்றி அமைப்பதன் மூலம்தான், விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய முடியும்.

ஒவ்வொருவரின் உடல்வாகு மற்றும் பிரச்னைகளைப் பொறுத்து, சிகிச்சைகள் மாறுபடும். அவரவர்களுக்கான சிகிச்சைக் காலமும், மூலிகைகளும் வேறுபடும். மசாஜ் மற்றும் தெரப்பிகளுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் இயற்கை மூலிகைகளாக இருக்க வேண்டும். மூலிகை, எண்ணெய், கிரீம் போன்றவற்றை முறையான பக்குவத்துடன் தயாரித்துப் பயன்படுத்த வேண்டும்.

ஆள் பாதி... தோல் பாதி!

சிகிச்சைக்குப் பின் செய்ய வேண்டியவை!

சிகிச்சைக்குப் பிறகு செய்ய வேண்டியவற்றை முறையாகக் கடைப்பிடித்தால், சிகிச்சையின் பலன்கள் நீடித்து இருக்கும்.

ஆள் பாதி... தோல் பாதி!

சிகிச்சைக்குப் பின் சோப்பு போட்டு, வெந்நீரில் குளிப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.வெயிலில் அலைவதைத் தவிர்க்கவும். வெளியில் செல்லும்போது ஸ்கார்ஃப், குடை போன்றவற்றைக் கையில் எடுத்துச் செல்லலாம்.

குறைந்தது, எட்டு மணி நேரம் தூங்குவது நல்லது. அதுவும் முன் தூங்கி முன் எழும் பழக்கமும் இருந்தால், சருமத் தொல்லைகளுக்கு வாய்ப்பே இருக்காது. எண்ணெய் உணவுகள், அதிக மசாலா சேர்த்த உணவுகளைத் தவிர்க்கவும். இவை, உடல்நலத்தையும் அழகையும் கெடுக்கும்.

அக்குள் பகுதியில் கருமை நீங்க!

சிலருக்கு அக்குள் கருமையாக இருக்கும். கை தூக்குவதற்குக்கூடத் தயங்குவார்கள். ரேசர் பயன்டுத்தி அதிக அளவில் ஷேவ் செய்வது, மரபியல் காரணங்கள், அதிகப்படியான வியர்வை, டியோடரன்ட், அதிக கெமிக்கல் நிறைந்த பர்ஃப்யூம் பயன்படுத்துவது போன்றவை கருமை நிறத்தைத் தரலாம்.

ஆள் பாதி... தோல் பாதி!

கருமை நீங்க: ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து அக்குள் பகுதியில் பூசலாம்.

கடலை மாவு - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், புளித்த தயிர் - 2 டீஸ்பூன் எடுத்து, ஒன்றாகக் கலந்து பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிடலாம். வாரத்தில் நான்கு முறை இதைச்செய்ய கருமை நீங்கிவிடும். மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவர, இந்தப் பிரச்னை முற்றிலுமாக நீங்கிவிடும்.

மூட்டுகளில் கருமை நீங்க...

சிலருக்கு, கை, கால் மற்றும் கணுக்கால் மூட்டுக்கள் கருமையாக இருக்கும். நாற்காலியின் கைப்பிடியில் கை மூட்டுகள் படுமாறு அமர்வது, அந்த இடத்தைச் சரியாகப் பராமரிக்கத் தவறுவது, மரபியல் காரணங்களால் இந்தப் பிரச்னை இருக்கும்.

ஆள் பாதி... தோல் பாதி!

2 டீஸ்பூன் புளித்த தயிருடன், 2 டீஸ்பூன் வினிகர் கலந்து, மூட்டுகளில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து மிதமான நீரீல் கழுவிவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

டார்க் லிப்ஸ்

வெள்ளரிச் சாறு, தேன், பன்னீர் தலா ஒரு டீஸ்பூன் கலந்து, இதில் பஞ்சை நனைத்து உதட்டின் மேல் அந்தப் பஞ்சை வைத்துக்கொள்ளவும். 20 நிமிடங்கள் கழித்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி ஒரு மாதம் செய்துவந்தால் கருமை நீங்கி, உதடு இயற்கையாகவே சிவப்பாகும்.

ஸ்ட்ரெச் மார்க்

பிரசவத்துக்குப் பிறகு ஸ்ட்ரெச் மார்க் விழுந்திருக்கும். பராமரிப்பைப் பொறுத்து, தழும்புகளின் நிறம் அடையாளமாகத் தெரியும். ஆப்ரிகாட்டை வெட்டி, அதன் கொட்டையை நீக்கிவிட்டு, அதில் சிறிது பால்விட்டு மையாக அரைக்க வேண்டும். இந்தக் கலவையை ஸ்ட்ரெச் மார்க் மீது பூசி, 20 நிமிடங்கள் கழித்து மிதமான வெந்நீரில் கழுவவும். பிறகு, குளிர்ந்த நீரில் இன்னொரு முறை கழுவ வேண்டும். இப்படி மூன்று மாதங்கள் செய்ய, ஸ்ட்ரெச் மார்க் நீங்கும்.

முகத்தில் கருமை நீங்கிட...

ஆள் பாதி... தோல் பாதி!

எட்டு பாதாம்களை முந்தைய நாள் இரவில் ஊறவைத்துவிட வேண்டும்.  மறுநாள் இவற்றுடன் சிறிது பால் கலந்து அரைத்துக்கொள்ள வேண்டும். முகத்தை நன்கு கழுவி, இந்தக் கலவையைப் பூசி, அரை மணி நேரம் கழித்துக் கழுவ வேண்டும்.

சரும நிறம் அதிகரிக்க உதவும். இளமையான தோற்றம் கிடைக்கும். ஸ்ட்ரெச் மார்க், தழும்புகள், வடுக்கள் உள்ள இடங்களில் தடவிவர கருமை நீங்கும்.

எண்ணெய்ப் பசை சருமத்தினரும், அதிகமாகப் பருக்கள் இருப்பவர்களும் இந்த சிகிச்சையைத் தவிர்க்கலாம்.

முகப்பொலிவுக்கு...

ஆள் பாதி... தோல் பாதி!

மஞ்சள் - அரை டீஸ்பூன், கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன் கலந்து முகம், கழுத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும்.

வறட்சி, எண்ணெய், சென்சிட்டிவ், நார்மல் போன்ற சருமத்தினர் வாரம் ஒரு முறை செய்துவரலாம்.

அனைத்துச் சருமத்தினரும் செய்ய வேண்டிய மூலிகை மாஸ்க் இது. இதை, வீட்டிலேயே செய்யலாம்.

எண்ணெய்ப் பசை சருமத்துக்கு...

ஆள் பாதி... தோல் பாதி!

முகத்தை இரு முறை கழுவினாலும் சிலருக்கு எண்ணெய் வடியும். முகத்தில், எண்ணெய் சுரப்பு அதிகமாக இருப்பதனாலும் பருக்கள் வரலாம். இவர்கள், இரண்டு டீஸ்பூன் தக்காளிச் சாற்றை எடுத்து முகத்தில் பூசி வர, எண்ணெய்ப் பசை நீங்கும். சருமத்தில் எண்ணெய் சுரப்பு ஓரளவுக்குக் கட்டுக்குள்வரும்.

புதினா இலைகள், எலுமிச்சைச் சாறு, இரண்டு டீஸ்பூன், ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவிவர, முகத்தில் எண்ணெய்ப் பசை படிப்படியாக நீங்கிவிடும்.

பருக்கள் நிறைந்த சருமத்துக்கு...

சிலருக்கு, பருக்கள் முகம் முழுதும் பரவி, முக அழகைக் கெடுத்து, பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்திவிடும். எண்ணெய் சுரப்பு, ஹார்மோன் போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் தீர்வு காண்பது சிறிது கஷ்டம்தான்.

கொழுந்து வேப்பிலை இலைகளைப் பறித்து, சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து, கண்கள் மற்றும் உதடுகளைத் தவிர்த்து, முகம் முழுக்க ஃபேஸ் பேக்காகப் போடவும். 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.

சருமத்தில் இருக்கும் நச்சுக்களை அகற்றும் சக்தி புதினா இலைகளுக்கு உண்டு. புதினா இலைகளைச் சிறிது நீர்விட்டு அரைத்து, பருக்கள் உள்ள இடங்களில் முழுமையாக, திக்காகப் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவிவர, பருக்கள் குறையும். தொடர்ந்து, இதைச் செய்துவந்தால், பருக்கள் உருவாவது தடுக்கப்படும்.

ஆள் பாதி... தோல் பாதி!

இறந்த செல்கள் நீங்க...

பச்சைப் பயறு மாவு, அரிசி மாவு, தேன், தயிர் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் அரை டீஸ்பூன் கலந்து, முகத்தில் ஃபேஸ் பேக்காகப் போட்டு, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிட, இறந்த செல்கள் முற்றிலுமாக உதிர்ந்துவிடும்.

முதலில், மிதமான நீரில் கழுவிய பின், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். செல்கள் புத்துயிர் பெறும். முகமும் பிரகாசமாகும். வாரம் இரு முறை செய்திட, முகம் அழகாக ‘பளிச்’ என இருக்கும். கரும்புள்ளிகள் மறையும்.

கரும்புள்ளிகள் நீங்க...

ஒரு சிறிய கிளாஸில் பால், அரை கிளாஸ் தண்ணீர், ஒரு டீஸ்பூன் அதிமதுரப் பொடி ஆகிய வற்றைக் கலந்து கொதிக்கவைக்க வேண்டும். அரை கிளாஸாக சுண்டிய பின் அந்தப் பாலில் பஞ்சை நனைத்து, முகம் முழுவதும் தடவி, அரை மணி நேரம் கழித்துக் கழுவலாம்.

கரும்புள்ளிகள் மறைந்து சருமம் சீராகும். அழகான தோற்றம் கிடைக்கும். கறுப்பான சருமம் இருப்பவர்களுக்கு நல்ல ஸ்கின் லைட்னிங் சிகிச்சை இது.

ஆள் பாதி... தோல் பாதி!

சன் டேன் நீங்க...

இரண்டு டேபிள் ஸ்பூன் கற்றாழையின் சதைப்பகுதி, பன்னீர் மற்றும் எலுமிச்சைச் சாறு தலா இரண்டு டீஸ்பூன் கலந்து, சூரியக் கதிர்களால் பாதிக்கப்பட்ட இடங்களில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவிவர, சன் டேன் சரியாகிவிடும். ஐஸ் க்யூப்களால் ஐந்து நிமிடங்களுக்கு முகம் முழுவதும் மசாஜ் செய்யலாம். இதனால், திறந்த சருமத் துளைகள் மூடிக்கொள்ளும். அழுக்கு, தூசு போன்றவை  உள்ளே நுழையாது. கோடை காலத்தில் சருமத்தைப் பராமரிக்க எளிய வழி இது.

வெயிலில் அலைந்து பின், மாலையில் அல்லது இரவில் இந்த சிகிச்சையைச்செய்ய வேண்டும். காலையில் செய்வதைத் தவிர்க்கலாம். 

சருமத்தை அழகாக்கும் எளிய சிகிச்சைகள்...

ஓட்ஸ் மீல் சால்ட் ஸ்க்ரப் இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர், இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய், அரை டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து, முகத்தை நன்றாகக் கழுவிய பின் பூச வேண்டும்.

பிறகு, முகம் முழுதும் மென்மையாக ஸ்க்ரப்செய்ய வேண்டும்.

10 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் முகம் கழுவ வேண்டும்.

பிரகாசமான சருமத்துக்கு...

வைட்டமின் ஏ, சி சத்துக்கள் நிறைந்த கேரட் ஜூஸ் குடிக்க, சரும செல்களுக்குப் புத்துணர்வு கிடைக்கும். புதிய செல்கள் உருவாக உதவும்.

மது, சிகரெட், காபி, டீ தவிர்த்துவிட்டு, மூலிகை டீ குடித்துப் பழகலாம்.

பாலூட்டும் தாய்மார்கள் ப்ரிம்ரோஸ் ஆயில் (Primrose oil) மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்படி சாப்பிடலாம். இழந்த சருமப்பொலிவு மீண்டும் கிடைக்கும்.

எண்ணெய் உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

வெள்ளைச் சர்க்கரையை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, இனிப்புத் தேவைக்கு தேனும், நாட்டுச்சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம்.

வாரத்தில் மூன்று முறை மீன், முட்டை சாப்பிட்டுவரலாம்.

ஆள் பாதி... தோல் பாதி!

பிரகாசமான சருமத்துக்கு...

வைட்டமின் ஏ, சி சத்துக்கள் நிறைந்த கேரட் ஜூஸ் குடிக்க, சரும செல்களுக்குப் புத்துணர்வு கிடைக்கும். புதிய செல்கள் உருவாக உதவும்.

மது, சிகரெட், காபி, டீ தவிர்த்துவிட்டு, மூலிகை டீ குடித்துப் பழகலாம்.

பாலூட்டும் தாய்மார்கள் ப்ரிம்ரோஸ் ஆயில் (Primrose oil) மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்படி சாப்பிடலாம். இழந்த சருமப்பொலிவு மீண்டும் கிடைக்கும்.

எண்ணெய் உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

வெள்ளைச் சர்க்கரையை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, இனிப்புத் தேவைக்கு தேனும், நாட்டுச்சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம்.

வாரத்தில் மூன்று முறை மீன், முட்டை சாப்பிட்டுவரலாம்.

ஸ்டீமிங்

ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர், 5 துளிகள் லாவெண்டர் ஆயில், 5 புதினா ஆகியவற்றை வெந்நீரில் போட்டு 5-10 நிமிடங்கள் வரை ஆவி பிடித்த பின், முகத்தைத் துடைக்கலாம். சருமத்தில் உள்ள அழுக்கு, எண்ணெய்ப் பசையை வெளியேற்ற முகத்தில் ஆவி பிடிக்கலாம். கிளென்சிங், மட் பேக் போடும் முன் ஸ்டீமிங் செய்வது நல்லது.

முட்டையின் வெள்ளைக்கரு ஃபேஸ் பேக்

முட்டையின் வெள்ளைக்கரு - 1, ஆப்பிள் சிடர் - 1 வினிகர்-பாதாம் எண்ணெய் - அரை டீஸ்பூன், சோள மாவு - 2 டீஸ்பூன் ஆகியவற்றை பேஸ்ட்டாகக் கலந்து, முகம் முழுவதும் பூசி, 30 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் முகம் கழுவ வேண்டும்.

ஓட்ஸ் ஃபேஸ் பேக்

ஓட்ஸ் பவுடர் - 2 டீஸ்பூன், வினிகர் - 1 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன், லாவெண்டர் எண்ணெய் - 3 துளிகள் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் பூசி, 30 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.

ஃப்ரூட் பேக்

ஆள் பாதி... தோல் பாதி!

பப்பாளி - இரண்டு துண்டுகள், யோகர்ட் - 1 டீஸ்பூன், வினிகர் - 1 டீஸ்பூன் ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கூழாக்கி, முகத்தில் பூசிய 20 நிமிடங்களுக்குப் பிறகு, மிதமான நீரால் கழுவவும்.

வீட்டில் செய்யக்கூடிய சருமப் பராமரிப்புகள்...


சர்க்கரை, தேன் மற்றும் எலுமிச்சைச் சாற்றைத் தண்ணீரில் கரைத்து, கை, கால்களில் ஸ்க்ரப் செய்தால், கை, கால்கள் சுத்தமாகும்.

ரசாயனங்கள் கலந்த கிரீம்கள், எண்ணெய், ஷாம்பு போன்றவற்றைத் தவிர்த்து, எலுமிச்சைச் சாறு கலந்த நீரில் முகம் கழுவுவது, மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது, காய்கறிகளைச் சாப்பிடுவது போன்றவற்றால் உடல் அழகுபெறும்.

தக்காளி, எலுமிச்சைச் சாறு, தயிர், தேன், கேரட் போன்றவற்றால் ஃபேஷியல் செய்துகொள்ளலாம்.

சூரியக் கதிர்கள் பாதித்த சருமத்தில் (சன் டேன்), புளித்த தயிரைத் தடவினால், கருமை நீங்கிவிடும்.

ஆள் பாதி... தோல் பாதி!

கை, கால்களைச் சுத்தப்படுத்த, இளஞ்சூடான நீரில், எலுமிச்சைச் சாறு மற்றும் கல் உப்பைப் போட்டு, அதில் கை, கால்களை சிறிது நேரம் வைத்திருந்தால் சருமம் பொலிவுபெறும்.

இளஞ்சூடான நீரில் முகம் கழுவினால், சருமத் துளைகள் திறந்துகொள்ளும். அதற்குப் பின், சாதாரண நீரில் முகம் கழுவ, மீண்டும் மூடிக்கொள்ளும்.

உலர் சருமம், தோல் உரிதல் போன்ற எந்த சருமப் பிரச்னையாக இருந்தாலும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும்  இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை நீர் அருந்துவது நல்லது.

எலுமிச்சைச் சாறை வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டுவந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

தினமும் நமது சமையலில், மூன்று ஏலக்காய் விதைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சருமம் சீராகும்.

அலர்ஜி இல்லாதவர்கள், குங்குமாதித் தைலத்தைக் குளிக்கும் முன் முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம்.

மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை சாதாரண நீரால் முகத்தைக் கழுவிக்கொள்வது நல்லது. இதனால், தூசு, அழுக்கு, புகை, சூரியக் கதிர்களின் தாக்கம் போன்றவை குறையும்.

அக்ரூட், உலர் திராட்சை, பேரீச்சை தலா இரண்டு, பாதாம் நான்கு எடுத்து, இரவில் சிறிது தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவும். அடுத்த நாள், இவற்றைச் சாப்பிடலாம். உடலில் ரத்த உற்பத்தி சீராக இருக்கும். சருமம் பளபளப்பாகும். முடி உதிர்தல் பிரச்னை சரியாகும். உடல் ஆரோக்கியமாகும்.

ஏலாதித் தேங்காய் எண்ணெய், நால்பாமராதி எண்ணெய் போன்ற எந்த எண்ணெய் நம் சருமத்துக்குப் பொருந்துகிறதோ, அதை மருத்துவரின் ஆலோசனையுடன் முகம், சருமம் முழுவதும் பூசிக் கழுவலாம். குளிக்கும் முன், எண்ணெய் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், சருமம் புத்துயிர்பெற்று ஆரோக்கியமாக இருக்கும்.

ஆள் பாதி... தோல் பாதி!

கூந்தல் ஆரோக்கியமாக இருக்க, புரத உணவுகளைச் சாப்பிடுவது முக்கியம். முட்டை, முளைகட்டியப் பயறு வகைகள், பாதாம், வால்நட், பருப்பு, பால், மோர் ஆகியவற்றைச் சாப்பிட்டால், கூந்தல் உதிர்தல் பிரச்னை நிற்கும். மாலத்யாதி, செம்பருத்தியாதி போன்ற எண்ணெய்களை மருத்துவரின் ஆலோசனையுடன் தடவிவந்தால், கூந்தல் வளர்ச்சி அதிகமாகும்.

சீரற்ற ஹார்மோன் செயல்பாடுகள், மெனோபாஸ், மன அழுத்தம், பொடுகு, ஊட்டச்சத்துக் குறைபாடு, மாசற்ற சூழல், ஏ.சி-க்குக் கீழ் உட்காருதல் போன்றவையால் முடி உதிரும். இதில், எந்தக் காரணத்தால் பிரச்னை எனக் கண்டறிந்து, மருத்துவரின் ஆலோசனையுடன் மருந்துகள், உணவு, எண்ணெய் போன்றவற்றைப் பின்பற்றிவந்தால், பிரச்னை சரியாகும்.

கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, மருதாணி, கீழாநெல்லி போன்றவற்றைச் சம அளவில் எடுத்து, கூந்தலில் ஹேர் பேக்போட்டு, ஒரு மணி நேரம் கழித்து அலசினால், இளநரை கறுப்பாகும்; கூந்தலின் வளர்ச்சி சீராகவும் கருகருவெனவும் இருக்கும்.

காலையில் ஃப்ரெஷ்ஷான காற்றில் 15 நிமிடங்கள் பிராணயாமம் செய்வதால், ஆக்சிஜன் சீராக உடலில் பாய்ந்து, ஒவ்வொரு செல்லுக்கும் சென்று, செல்களைத் தூண்டிவிடும். இறந்த செல்களையும் நீக்கிவிடும். தினமும் தவறாமல் நாடிசுத்தி, பிராணயாமம் செய்பவர்களின் முகம் பொலிவுடன் காணப்படும்.

ஆரோக்கியமான சருமத்துக்கு...

சருமத்தை ஆரோக்கியமாக்கும் புரதம்

அழகான சருமம், கூந்தல், நகத்துக்கு அவசியமான சத்தாக இருப்பது புரதம். பால் பொருட்கள், சோயா, அரிசி, யோகர்ட், முட்டை, மீன், சிக்கன், மட்டனில் புரதம் அதிகமாக இருக்கிறது. பாதாம், எள், பூசணி விதை, வெள்ளரி விதையிலும் புரதச்சத்து நிறைந்துள்ளது.

ஆள் பாதி... தோல் பாதி!

நல்ல பாக்டீரியா உருவாக உதவும் கால்சியம்

தினமும் ஒரு கப் யோகர்ட் சாப்பிட்டால், அதில் உள்ள அசிடோஃபிலஸ் (Acidophilus) எனும் நல்ல பாக்டீரியா செரிமானத்துக்கு உதவும். பாதாம், கேழ்வரகு மற்றும் எள்ளில் கால்சியம் சத்துக்கள் அதிகமாகக் கிடைக்கும்.

பளபளப்புக்கு நீர்ச்சத்துக்கள்...

உடலில் தேவையான நீர்ச்சத்துக்கள் இருப்பின், அது சருமத்தைப் பளபளப்பாக மாற்றும். உடலில் உள்ள கழிவுகள், நச்சுக்கள் ஆகியவற்றை வெளியேற்ற, நீர்ச்சத்துக்கள் உதவும். காலையில் குடிக்கும் எலுமிச்சைச் சாறு, வெள்ளரிச் சாறு கல்லீரலைச் சுத்தப்படுத்தும். இதன் விளைவாக, சருமம் பொலிவாக மாறும்.

சரும நிறத்துக்கு வைட்டமின் சிவைட்டமின் சி சத்துக்கள், அஸ்கார்பிக் அமிலத்தை கொண்டுள்ளன. இந்தச் சத்துக்கள் உடலுக்கு அவசியம் தேவை. கொலஜனை உற்பத்திசெய்ய, வைட்டமின் சி உதவுகிறது. சருமம் மிருதுவாக, பளபளப்பாக, ஆரோக்கியத்துடன் இருக்க உதவுவது வைட்டமின் சி சத்து.

ஆள் பாதி... தோல் பாதி!

சீரான செரிமானமே சருமத்தின் ஆரோக்கியம் எந்த உணவைச் சாப்பிட்டாலும், உட்கார்ந்து, மெதுவாக மென்று சுவைத்துச் சாப்பிடுவது நல்லது. இதனால், செரிமானம் சீராகும். செரிமான சக்தி சீராக இல்லை என்றால், செரிமானத்துக்காகச் சுரக்கும் அமிலம் உணவில் உள்ள புரதத்தை உடைத்துவிடும். இதனால், புரதச்சத்து உடலில் சேராத நிலை ஏற்படும்.  ஆரோக்கியமற்ற சருமம், முடி உதிர்தல், நகம் அடிக்கடி உடைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

கிரீம்களைவிட உணவே பெஸ்ட்!

காஸ்ட்லியான கிரீம்களைப் பூசுவதைவிட, ஒரு ஆரஞ்சோ, கேரட்டோ சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் அதிகம். பல நாட்கள் கிரீம் தடவி சருமத்தைப் பராமரிப்பதைவிட தினம் ஒரு பழம் சாப்பிட்டு, பலன்களை இரட்டிப்பாக்க முடியும்.

ஆள் பாதி... தோல் பாதி!

சரும அழகைத் தரும் ரெசிப்பிக்கள்...

சருமத்துக்கு எனச் சில ரெசிப்பிகள் உண்டு. அதாவது, இந்த ரெசிப்பிகளில் சேர்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் சருமத்தின் நண்பன். சருமத்துக்கு உகந்த பொருட்கள் ஒன்றாகச் சேர்ந்து வினைபுரியும் போது பலன்கள் இரட்டிப்பாகும்.

ஆள் பாதி... தோல் பாதி!

பொதுவாக, காய்கறிகள், பழங்களின் கூட்டு, சருமத்துக்கு அற்புதமான தோற்றத்தைத் தரும். நமது அன்றாட உணவுப் பட்டியலில் இவற்றைச் சேர்த்துக்கொண்டால், சருமப் பராமரிப்பின் வேலையும் மிச்சமாகும். இவை அழகைத் தருவது மட்டும் அல்லாமல் ஆரோக்கியத்தையும் தரக்கூடிய ரெசிப்பிக்கள்.

ஆள் பாதி... தோல் பாதி!

கேரட் பாதாம் கூலர்

தேவையானவை

நறுக்கிய கேரட் - 3

பாதாம் - 10

நறுக்கிய பேரீச்சம் பழம் - 10

பால் அல்லது சோயா பால் - 1 கப்.

ஆள் பாதி... தோல் பாதி!

செய்முறை: கேரட், பாதாம், பேரீச்சை ஆகியவற்றை ஒரு கப் பால் ஊற்றி வேகவிட வேண்டும். இவற்றை மிக்ஸியில் அரைத்து, ஸ்மூத்தியாக்க வேண்டும். இவை குளிர்ந்த பிறகு, மீதம் இருக்கும் பாலைக் கலந்து, ஃபிரிட்ஜில் வைத்துச் சில்லென்ற டிரிங்க் பருகலாம்.

பலன்கள்: புரதம், நல்ல கொழுப்பு, ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்துள்ளன. கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ, பேரீச்சையில் உள்ள இரும்புச்சத்து, பாலில் உள்ள கால்சியம் சேர்ந்து கிடைக்கும் ஃப்ரெஷ் டிரிங்க் இது. சருமம், கூந்தல் ஆரோக்கியமாகும். உடலுக்கும் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி


தேவையானவை

ஸ்ட்ராபெர்ரி பழங்கள் - 2 கப்

வாழைப்பழம் - 2 (சிறியது)

பொடியாக நறுக்கிய புதினா - 2 டீஸ்பூன்

ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்

யோகர்ட் - 1 கப்

வென்னிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்.

ஆள் பாதி... தோல் பாதி!

செய்முறை:  எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். நீர் சேர்க்காமல் இருந்தால், திக் ஸ்மூத்தியாகக் கிடைக்கும்.

பலன்கள்:
ஸ்ட்ராபெர்ரியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், எலாஜிக் ஆசிட் சருமத்துக்கான மினுமினுப்பைத் தரும். இளமையை நீட்டிக்கவைக்கும் உணவாகக் கருதப்படுவது யோகர்ட், இதனுடன் வைட்டமின் சி சத்துக்களும் சேர்வதால், ஸ்கின் ஃப்ரெண்ட்லி ஸ்மூத்தி இது.

கீரை சூப்

தேவையானவை

சுத்தம் செய்த கீரைகள் - 2 கட்டு

தேங்காய்ப் பால் - 1 கப்

தண்ணீர் - 1 கப்

சிவப்பு மிளகாய் ஃப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்

உப்பு, மிளகு - சுவைக்கு ஏற்ப.

ஆள் பாதி... தோல் பாதி!

செய்முறை: கீரையில் உப்பு போட்டு வேகவைக்க வேண்டும். இதனுடன், தேங்காய்ப் பால், தண்ணீருடன் கலந்து, கீரைகளை மிதமாகக் கொதிக்கவிட வேண்டும். உப்பு, மிளகு, மிளகாய் ஃப்ளேக்ஸ் சேர்த்துக் கலந்து கொதிக்கவிட்டு, இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்க வேண்டும்.

பலன்கள்: ஃபோலிக் அமிலம், வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், சருமத்துக்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சருமம் ஆரோக்கியமாகவும், ‘பளிச்’ என்றும் மாறவும் உதவும்.

கலர்ஃபுல் சூப்

தேவையானவை

நறுக்கிய பரங்கிக்காய் - 1 கப்

நறுக்கிய கேரட் - 1 கப்

தக்காளி - 2 (பெரிய சைஸ்)

ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்

ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்

தண்ணீர் - 3 கப்

உப்பு, மிளகு, மிளகாய் ஃப்ளேக்ஸ் - சுவைக்கு ஏற்ப.

ஆள் பாதி... தோல் பாதி!

செய்முறை: பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு காய்கறிகளை வதக்க வேண்டும்.தண்ணீர், உப்பு, மிளகாய் ஃப்ளேக்ஸ், மிளகு ஆகியவற்றைக் கலந்து கொதிக்கவிட வேண்டும். காய்கள் வெந்த பிறகு, இறக்கி அரைக்க வேண்டும். அரைத்த கலவையை மீண்டும் அடுப்பில்வைத்து, ஆரஞ்சு ஜூஸ் கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்க வேண்டும்.

பலன்கள்: வைட்டமின் ஏ, சி, ஆன்டிஆக்ஸிடன்ட், பீட்டாகரோட்டின், லைகோபீன் சத்துக்கள் கிடைக்கின்றன. ஒமேகா 3 சத்துக்கள், இரும்புச்சத்து ஆகியவை கிடைக்கும். சத்துக்களை உடல் எளிதில் கிரகிக்க, ஆரஞ்சு ஜூஸ் உதவும்.

கலர்ஃபுல் சாலட்

தேவையானவை: வெங்காயம் - 1, குடமிளகாய் - 1, கேரட் - 1, தக்காளி - 1, எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன், உப்பு, மிளகு - சுவைக்கு ஏற்ப.

செய்முறை: காய்கறிகளை வட்ட வடிவில் மெலிதாக அரிந்துகொள்ள வேண்டும். வெந்நீரில் போட்டு ஒரு நிமிடத்தில் எடுத்துவிட்ட பின்னர், உப்பு, மிளகு, எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிடலாம்.

ஆள் பாதி... தோல் பாதி!

பலன்கள்: சருமத்துக்கான சிறந்த கிளென்சராக இந்த சாலட் இருக்கும். உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் கிடைக்கும். இதை மாலை வேளையில் அனைவரும் சாப்பிட்டுவர, சருமப் பொலிவு கிடைப்பது உறுதி.

பவர் பேக்டு சாலட்

தேவையானவை: முட்டைகோஸ், கேரட், குடமிளகாய், முளைவிட்ட தானியங்கள், தக்காளி, ஸ்பிரிங் ஆனியன் (நறுக்கியது) - 1 கப், கரம் மசாலா - 1 சிட்டிகை, உப்பு, மிளகு - சுவைக்கு ஏற்ப, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்.

செய்முறை: வெந்நீரில் தானியங்கள், காய்கறிகளைப் போட்டு, இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு, நீரை வடிகட்டிவிட்டு, அதில் கரம் மசாலா, உப்பு, மிளகு, எலுமிச்சைச் சாறு கலந்து சாலட்டாகச் சாப்பிடலாம்.

ஆள் பாதி... தோல் பாதி!

பலன்கள்: வைட்டமின் ஏ, சி, தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் கிடைக்கின்றன. உடலை கிளென்ஸ் செய்யும் சாலட்டாக இது அமையும். காலை அல்லது மாலையில் சாப்பிட ஏற்றது. சருமத்துக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும்.

சருமம் அழகாக என்ன சாப்பிடலாம்?

ஆள் பாதி... தோல் பாதி!

கேரட், மீன், தக்காளி, திராட்சை, வெள்ளரி, கொத்தமல்லி, புதினா, கீரைகள் போன்றவற்றைச் சாப்பிட்டால், சீரான சருமம் கிடைக்கும்.

வைட்டமின் ஏ, சி நிறைந்த உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டால், சருமம் பிரகாசிக்கும்.

பப்பாளி, எலுமிச்சை, கிவி, கேரட், கீரைகள், முட்டை, ஆரஞ்சு, சிவப்புக் கொய்யா, தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, காலிஃபிளவர், அன்னாசி, மாம்பழம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடலாம்.

- ப்ரீத்தி

படங்கள்: எம்.உசேன்,
 
தி.கௌதீஸ்,

மாடல்: திவ்யா