Published:Updated:

ஷாப்பிங் போகலாமா..?

ஷாப்பிங் போகலாமா..?

ஷாப்பிங் போகலாமா..?

ஷாப்பிங் போகலாமா..?

Published:Updated:

எலெக்ட்ரிக் குக்கர்... ரகம் இரண்டு!

லெக்ட்ரிக் குக்கரில் மார்க்கெட்டில் கிடைக்கும் ரகங்கள், அந்த குக்கரைப் பயன்படுத்தும் வழிமுறைகள் மற்றும் பராமரிப்பு வழிகளைச் சொல்கிறார், சென்னை, ‘ப்ரீமியர் ஹோம் அப்ளையன்ஸ்’ஸின் நிர்வாக இயக்குநர் எஸ்.சிவநேசன்.

ஷாப்பிங் போகலாமா..?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எலெக்ட்ரிக் குக்கரில் இரண்டு ரகங்கள் உள்ளன. வாமர் உள்ள எலெக்ட்ரிக் குக்கர் (with warmer) மற்றும் வாமர் இல்லாத எலெக்ட்ரிக் குக்கர் (without warmer).

வாமர் எதற்கு?

வாமர் உள்ள குக்கர், சமைத்ததில் இருந்து பரிமாறும் நேரம்வரை அந்த உணவை சூடாகவே வைத்திருக்கும். வாமர் இல்லாத குக்கரில் சமைத்து முடித்தவுடன் நேரமாக ஆக சூடு குறைய ஆரம்பிக்கும்.

ஷாப்பிங் போகலாமா..?

எனவே, சாப்பாட்டு வேளைக்கு வெகுமுன்பாகவே சமையலை முடித்துவிடுபவர்கள், வாமர் உள்ள குக்கரைத் தேர்ந்தெடுக்கலாம். சாப்பிடும் நேரத்துக்கு சற்று முன் சமைத்து, சூடாகப் பரிமாறுபவர்களுக்கு வாமர் இல்லாத குக்கரே போதும்.

கொள்ளளவுகள்!

எலெக்ட்ரிக் குக்கர் 1, 1.8, 2, 4.5 லிட்டர் என நான்கு அளவுகளில் கிடைக்கிறது. வீட்டுக்குத் தேவையான அளவைத் தேர்ந்தெடுக்கலாம். இரண்டு பேர் உள்ள குடும்பத்துக்கு 1 லிட்டர் குக்கர் போதுமானது. பெரிய குடும்பம் அல்லது விருந்து போன்ற சமையல் தேவைகளுக்கு 4.5 லிட்டர் குக்கரைத் தேர்வு செய்யலாம். இந்த குக்கர்கள் சின்ன அளவிலும், குறைந்த எடையிலும் இருப்பதால், பயணங்களுக்கும் எடுத்துச்செல்லலாம். தரமான குக்கர் 1,700 முதல் 4,000 ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கும். அளவுக்கு ஏற்ப விலைமாறுபடும். ஒரு வருடம் வாரன்டி உண்டு.

எல்லாமே சமைக்கலாம்... எலெக்ட்ரிக் குக்கரில்!

ஷாப்பிங் போகலாமா..?

எலெக்ட்ரிக் குக்கரில் சாதம் மட்டு மல்ல, சூப், பிரியாணியில் இருந்து கேசரி, இட்லி வரை எல்லாமே சமைக்கலாம். குக்கரில் இட்லி வேகவைக்க தட்டு, பருப்பு வேகவைக்க பாத் திரம்  என  இரண்டு அட்டாச்மென்ட்டு கள் கிடைக்கின்றன. இவை குக்கருடன் சேர்த்து வராது. தேவைப்படுபவர்கள் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

பராமரிப்பு

பொதுவாக எல்லா வகையான எலெக்ட்ரிக் குக்கருக் குள்ளும் சமைப்பதற்கான அலுமினியப் பாத்திரமும்

ஷாப்பிங் போகலாமா..?

இருக்கும். அது, தேவைப்படும் போது வெளியில் எடுக்கும் விதத்தில் இருக்கும். இந்த பாத்திரத்தை கீறல் விழாமல்  பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில், கீறல் விழுந்தால் சாதமானது சீக்கிரம் அடிபிடித்து, தீய்ந்து போவதற்கான வாய்ப்பு இருக்கிறது. சில்வர் அல்லது மரக்கரண்டி இரண்டையுமே இதில் பயன்படுத்தலாம். மரக் கரண்டி பயன்படுத்துவது நல்லது.

எலெக்ட்ரிக் குக்கருக்குள் இருக்கும் பாத்திரத்தை பொது வாக ஸ்டீல் ஸ்கிரப்பர் கொண்டு தேய்க்காமல், சாதாரண ஸ்கிரப்பர் உபயோகித்து சுத்தப்படுத்தலாம். எலெக்ட்ரிக் குக்கரைக் கழுவத் தேவையில்லை... பிளக்கிலிருந்து வயரை எடுத்துவிட்டு, ஈரத்துணியில் துடைத்தாலே போதுமானது.

பருப்பு மேக்கர், இட்லித்தட்டு போன்றவற்றை வைக்கும்போது, அதில் கறை, துரு போன்றவை இல்லாமல், சுத்தமாக கழுவி பயன்படுத்தவும்.

மொத்தத்தில் எலெக்ட்ரிக் குக்கரைப் பொறுத்தவரை பயன்படுத்துவதும், பராமரிப்பதும் வெகு சுலபம்!’’

பில் செய்துவிடலாமா?!

கே.அபிநயா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism