Published:Updated:

“எமோட்டிக்கான்னா பேய் தெருனு அர்த்தம்!”

“எமோட்டிக்கான்னா பேய் தெருனு அர்த்தம்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: நா.விஜயரகுநாதன்

“எமோட்டிக்கான்னா பேய் தெருனு அர்த்தம்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: நா.விஜயரகுநாதன்

Published:Updated:
“எமோட்டிக்கான்னா பேய் தெருனு அர்த்தம்!”

``நல்ல கேள்வியா... சுலபமான கேள்வியா கேளுய்யா. பொது அறிவுத் தேர்வு எல்லாம் எப்பவோ என் சின்ன வயசுல எழுதினது'' - ஆர்வமாகிறார் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா.

``நான் சினிமாவுல நிறையச் சாதிச்சுட்டேன். ஆனா, தனிப்பட்ட வாழ்க்கையில் இன்னமும் சாதிக்கணும். பேட்டியில் இதையும் சேர்த்துக்கோங்க. சரி, இன்டர்வியூவை ஸ்டார்ட் பண்ணலாம்'' - தம்ஸ்அப் காட்டி, தயாராகிறார் டான்ஸ் மாஸ்டர் கலா.

``இந்த வாரம் எந்த எந்தப் பிரபலங்கள் வர்றாங்க? ஏன் கேட்கிறேன்னா, எல்லாம் ஒரு ஜெனரல் நாலெட்ஜுக்குத்தான். (மூன்று பேரின் பெயரைச் சொன்னதும்) ஓ.கே கலக்கிடலாம்'' - இது இயக்குநர் வெங்கட் பிரபு.

 “எமோட்டிக்கான்னா பேய் தெருனு அர்த்தம்!”

``விஜயகாந்த் சார், `சமையல் மந்திரம்' நிகழ்ச்சியைப் பார்த்துட்டு, `ரொம்ப நல்லா நடத்துறீங்க'னு பாராட்டினார். `இப்ப பார்க்க நேரம் கிடைக்கிறது இல்லை; சீக்கிரம் பார்க்கிறேன்'னு சொல்லியிருக்கார். ஓஹோ... பேட்டியில் இது எல்லாம் வேண்டாமா... அப்புறம் எதைப் பற்றி கேட்கப்போறீங்க?'' - சந்தேகமாகக் கேட்கிறார் `சமையல் மந்திரம்' திவ்யா கிருஷ்ணன்.

``நாஞ்சில் சம்பத்தை, அவர் பேட்டியில் சொன்ன எந்த வார்த்தையைவைத்து மீம்ஸ் உருவாக்கி, கிண்டலடித்தார்கள்?''

விடை: `காத்திருக்கோம்.'

சாலமன் பாப்பையா: ``அவர் கொஞ்சம் வேகமா பேசக்கூடியவர்... என்னென்னமோ பேசி இருக்காரே. இதுல நான் என்னத்தச் சொல்ல? நான் பார்த்த பேட்டியில்... `யானை நடந்தால் எறும்புகள் சாகத்தானே செய்யும்'னு சொன்னார். அப்புறம் `அத்தி பூத்த மாதிரி வெளியே வர்றாங்க'னு சொன்னாரு. இதுல எதுக்காக இந்தப் பயலுக... (யோசிக்கிறார்) ஏதோ பேரு சொன்னீங்களே... ஆங்... `மீம்ஸ் பண்றாங்க'னு தெரியலைய்யா. இதை எல்லாம் நாங்க என்னத்த கண்டோம்? அவுக கட்சி விவகாரம்ய்யா. நமக்கு எதுக்கு?''

கலா:
உறுதியாக `` `உடம்பு சரி இல்லை’னு சொல்லியிருந்தார். அதுக்காகத்தான் மீம்ஸ் கிரியேட் பண்ணி கிண்டலடிச்சாங்க. இப்பல்லாம் என்ன சொன்னாலும் உடனே சோஷியல் மீடியாவில் மீம்ஸ் பண்ணிடறாங்க தம்பி'' எனச் சமாளிக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 “எமோட்டிக்கான்னா பேய் தெருனு அர்த்தம்!”

வெங்கட் பிரபு: ``ஹா... ஹா... ரொம்ப ஈஸி. நான் பாலிட்டிக்ஸ்ல கொஞ்சம் வீக்தான். ஆனா, சோஷியல் மீடியாவில் ஆக்டிவா இருப்பதால், இந்தக் கேள்விக்குப் பதில் தெரியும் `காத்திருக்கோம்'னு சொன்னார். நான் தல-தளபதி டேட்ஸுக்காகக் `காத்திருக்கேன்'. கிடைக்கும்னு நம்புறேன்.''

திவ்யா கிருஷ்ணன்:
``அவரைப் பற்றி நிறைய மீம்ஸ் வந்தது. ஆனா, டக்குனு ஞாபகம் வரலை. அ.தி.மு.க-வுல இருந்து சமீபத்தில் நீக்கினாங்கனு தெரியும். பதில் தெரியலைங்க'' என்றவரிடம் பதிலைச் சொன்னதும் ``அட... ஆமா, எனக்காகக்கூட நிறையப் பேர் காத்திருக்கோம்னு சொல்லி அந்தச் சமயத்துல ஸ்டேட்டஸ் தட்டினாங்க. ஆனா, நான் சிம்புக்காகத்தான் காத்திருக்கேன். அவர் வெளியே வந்து பேசணும்.''

``எமோட்டிகான்ஸ் என்றால் என்ன?''

விடை: சமூக வலைதளங்களில் பயன்படுத்தப்படும் விதவிதமான ஸ்மைலிகள்.

சாலமன் பாப்பையா: `என்னா கான்?' எனச் சொல்லிப்பார்த்து யோசித்தவர், ``மோடி சமீபத்துல பாகிஸ்தான் போயிட்டு வந்தாரு. அங்கே ஏதாவது கானை மீட் பண்ணியிருப்பார். உடனே இந்தப் பசங்க மோடியையும் கானையும் சேர்த்து கிண்டல் செய்யுறாங்களோ என்னவோ... விடை சரியாப்பா?'' பதிலைச் சொன்னதும், ``இப்ப எல்லாம் மூஞ்சியை உம்முனு வெச்சுக்கிட்டு போன்ல மட்டும் சிரிக்கிற மாதிரி அனுப்புறாங்கய்யா. அதுக்கு போனை கீழே  போட்டுட்டு நல்லா வாய்விட்டுச் சிரிக்க வேண்டியதுதானே... சிரிக்கிறதுக்கு எல்லாமாய்யா டெக்னாலஜி வந்திருக்கு?''

கலா: இரண்டு முறை கேள்வியைக் கேட்டவர், ``இது சென்னையில இருக்கும் ஒரு பேய் தெருனு சொல்வாங்க. இவ்வளவு பெரிய சிட்டியில் பேய் இருக்குனு சொன்னா நம்ப முடியுதா? ஆனா, `பேய்'னா ரொம்பப் பயப்படுவேன். பேய் தெரு மேலதான் நம்பிக்கை இல்லை. `புகுந்த வீடு'னு ஒரு நல்ல பேய் படம் வந்தது. (என்னா கற்பனை வளம்!) அந்த மாதிரி பேய் படம் எடுக்கணும். ஆனா, சினிமாவுல பேயை நெகட்டிவா காமிக்கிறாங்க. நான் ஒரு படம் எடுத்தா,  கண்டிப்பா நல்ல பேயாத்தான் காட்டுவேன். சரி, மக்களுக்குச் சொல்லிக்கிறேன்... இந்த `எமோட்டிகான் ஸ்ட்ரீட்'டுக்கு எல்லாம் பயப்படாதீங்க.'' (கிழி... கிழி... கிழி!)

வெங்கட் பிரபு
: ``ம்ம்ம்... செம ஈஸி... Emoji Symbols like smile, angry, thumbs up... இது மிகச் சரியான பதில்னு எனக்கே தெரியும். எப்பூடி???''

திவ்யா கிருஷ்ணன்: வெட்கப்பட்டுச் சிரித்தவர், ``அய்யோ... ஏதாவது ஆண்களுக்கான ஜிலுஜிலு தன்னம்பிக்கை மாத்திரையா? எமோஷனைத் தூண்டிவிடுற மாதிரி இருக்கே. கேள்வியை இன்னொரு டைம் கேளுங்க. அட, இது ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப்ல எல்லாம் வரும் ஸ்மைலிகள்தானே? எனக்கு நிறையப் பேர் கிஸ் சிம்பல்தான் அனுப்புறாங்க. என்கிட்ட கேள்வின்னா, ஏதாச்சும் கிளுகிளுப்பாத்தான் கேட்பீங்கனு நினைச்சேன்.''

 “எமோட்டிக்கான்னா பேய் தெருனு அர்த்தம்!”

``தமிழ்நாட்டில் `அம்மா' என்ற பெயரில் எவ்வளவு திட்டங்கள் உள்ளன?''

விடை: அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா விதைகள், அம்மா மருந்தகம், அம்மா சிமென்ட், அம்மா மொபைல்போன், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம், அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம், அம்மா ஹெல்மெட் மற்றும் பல.

சாலமன் பாப்பையா
: சிரிக்கிறார்... ``இதுக்கு என்னய்யா பதில் சொல்றது? இந்தச் சில்லறை அரசியலுக்கு உள்ளே போக விரும்பல தம்பி. ஆனா, `அம்மா'ங்கிற பேருல நிறையத் திட்டம் வெச்சிருக்காங்க. `அவுக சொத்துல இந்தத் திட்டத்தை நடத்துறாங்களா... இல்லை அரசாங்கக் காசுல நடத்துறாங்களா..?'னு எனக்குத் தெரியலை. அவ்வளவுதான்யா.''

கலா: ``ம்ம்ம்... அம்மா தண்ணீர், அம்மா உணவகம், அம்மா பேருந்துனு நிறைய இருக்கு. அடுத்த கேள்விக்கு வாங்க'' என்றவர், ``என்ன தம்பி, ரொம்ப ஈஸியான கேள்விகளாவே கேக்கிறீங்களே'' எனக் கலாய்க்கிறார்.

வெங்கட் பிரபு :
``அம்மா மெஸ், அம்மா வாட்டர் பாட்டில், அம்மா மெடிக்கல் ஷாப், அம்மா பஸ், அம்மா சால்ட்... நிறையத் திட்டம் இருக்குங்க. எனக்கு ஞாபகம் இருந்த வரைக்கும் சொல்லிட்டேன். நான் `சினிமா 100' விழாவில் சினிமா பற்றிய டிராவலை சின்னப் படமா எடுத்திருந்தேன். அம்மா அதைப் பார்த்துட்டு கண்ணுல தண்ணீர் வர வரைக்கும் சிரிச்சாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது. அப்புறம், நான் எம்.ஜி.ஆர் முன்னாடி 1987-ம் ஆண்டு மிருதங்கம் வாசிச்சிருக்கேன். என்னை மடியில் தூக்கிவெச்சு கொஞ்சினார். அதைப் பற்றி ஆனந்த விகடன்ல போட்டோவோடு வந்தது. அந்த பேப்பர் கட்டிங்கூட பத்திரமா வெச்சிருக்கேன். உங்களுக்கு வாட்ஸ்அப்ல அனுப்புறேன். சரி, நான்தான் இந்தப் பகுதியில் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டேன். என்ன பரிசு கொடுப்பீங்க?''

திவ்யா கிருஷ்ணன்:
``அம்மாவை எனக்குப் பிடிக்கும். அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா விவசாயத் திட்டம்னு நிறைய இருக்குங்க. எல்லாமே மக்களுக்குப் பயனுள்ள திட்டங்கள்தானே! அய்யோ... விஜயகாந்த் சேனல்ல வொர்க் பண்ணிட்டு, இப்படிச் சொல்றதால தப்பா எடுத்துக்கப்போறாங்கஜி''

``குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் என்ன பொறுப்பில் இருக்கிறார்?''

விடை: தேசிய செய்தித் தொடர்பாளர்.

சாலமன் பாப்பையா :
``என் தலைமையில் அவங்க ஒரு பட்டிமன்றத்துல பேசியிருக்காங்க. `திரைப்படங்கள், சமூகத்துக்கு நன்மையா... தீமையா?' என்ற தலைப்புல அவங்க `நன்மை'ங்கிற பக்கத்துல இருந்து பேசினாங்க. நானும் `திரைப்படங்கள், சமூகத்துக்கு நன்மை'னுதான் தீர்ப்பு சொன்னேன். ஆனா, அவுக காங்கிரஸ்ல எந்தப் பொறுப்புல இருக்காங்கனு எனக்குத் தெரியாதேய்யா.''

 “எமோட்டிக்கான்னா பேய் தெருனு அர்த்தம்!”

கலா: ``அய்யோ... ஒரு நிமிஷம் இருங்க, எனக்கு அரசியல் நாலெட்ஜ் சுத்தமா கிடையாது. மனசுல இருக்கு, வர மாட்டேங்குது. குஷ்பு கொள்கை பரப்புச் செயலாளரா? ஆனா, அவ செம போல்டு. எப்பவும் மனசுல பட்டதைப் பேசிருவா. மனசுல எதையும் வெச்சுக்க மாட்டா. அவ பேசினதை நிறையக் கேட்டிருக்கேன். `ஏன் இப்படிப் பேசினா?'னு சில சமயம் கேட்கத் தோணும். ஆனா, கேட்க மாட்டேன். நானும் நிறையப் பேருக்கு ஹெல்ப் பண்ணிட்டிருக்கேன். `அரசியலுக்கு வந்து நில்லுங்க'னு சொல்வா. `இப்பவே உங்ககூடதானே நின்னுட்டு இருக்கேன்'னு சொல்லிடுவேன். (பார்ரா...) எதிர்காலத்துல அரசியலுக்கு வருவேனா... இல்லையானு இப்ப சொல்ல மாட்டேன். அது சஸ்பென்ஸ்.'' (ஆஹாங்.)

வெங்கட் பிரபு: ``நேஷனல் ஸ்போக்ஸ் பெர்சன்னு நினைக்கிறேன். இல்லை... இல்லை... கொள்கை பரப்புச் செயலாளர். ரெண்டுல ஏதாவது ஒண்ணுதான் சொல்லணும்னா, ஸ்போக்ஸ்பெர்சனை லாக் பண்ணிக்கோங்க. அட... இதுக்கும் சரியான பதில் சொல்லிட்டேனா? சூப்பர்!''

திவ்யா கிருஷ்ணன்:
``குஷ்பு மேடம் மீடியாகூட பேசுற பொறுப்புலதான் இருக்காங்க. சோனியாவை எல்லாம் பார்த்துட்டு வந்தாங்களே... சரியா?''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism