Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

• `டைட்டானிக்' ஜேக்கையும் ரோஸையும் மறக்க முடியுமா? புகழ்பெற்ற அந்த லியோனார்டோ டிகாப்ரியோ - கேட் வின்ஸ்லெட் ஜோடி கோல்டன் குளோப் விருது விழா மேடையில் எமோஷனாகி, கட்டிப்பிடித்ததுதான் சென்ற வார ஹாட் ஹிட் வைரல். 73-வது கோல்டன் குளோப் விருது விழாவில், டிகாப்ரியோ ‘ரெவனன்ட்’ படத்துக்காக சிறந்த நடிகர் விருதையும், கேட் வின்ஸ்லெட் ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’ படத்துக்கான சிறந்த துணை நடிகைக்கான விருதையும் வென்றிருக்கிறார்கள். டிகாப்ரியோவுக்கு இந்த முறையாவது ஆஸ்கர் கிடைக்குமா?!

இன்பாக்ஸ்

• சினிமாவுக்கு இப்போது நம்பர் 1 மார்க்கெட் சீனா. கடந்த மாதம் சீனாவில் ரிலீஸான `ஸ்டார் வார்ஸ்' படம் முதல் மூன்று நாட்களிலேயே 53 மில்லியன் டாலர் அள்ளியிருக்கிறது. `பாகுபலி' சீனாவில் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறது. ரஜினியின் `2.0' படமும் சீன மார்க்கெட்டை மனதில்வைத்தே பிரமாண்டமாகத் தயாரிக்கப்படுகிறது. பின்றோம் ப்ரோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• இந்தியாவின் நம்பர் 1 நடிகையாக 2016-ம் ஆண்டிலும் தொடர்கிறார் தீபிகா படுகோன். `பாஜிராவ் மஸ்தானி', பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனில் எகிறி அடிக்க, தீபிகாவின் சம்பளமும் எகிறிவிட்டது. 15 கோடி ரூபாய் சம்பளமாம். அடுத்த இடத்தில்,  கங்கனா ரனாவத். இவரது சம்பளம் ஒன்பது கோடி ரூபாய். குரோர் லேடீஸ்!

இன்பாக்ஸ்

• `காக்கா முட்டை', `நானும் ரெளடிதான்' என தயாரிப்பாளராகவும் ஹிட் அடித்துவிட்ட தனுஷ், `அம்மா கணக்கு' என்ற பெயரில் புதிய படம் தயாரிக்கிறார். சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளிவரும் `நில் பாதே சனாதா' என்ற இந்தி படத்தின் ரீமேக் இது. இன்னும் திரைக்கு வராத இந்தப் படத்தை இந்தியில் இயக்கிய பெண் இயக்குநர் அஷ்வினி ஐயர்தான் தமிழிலும் இயக்குகிறார். அம்மா-மகள் உறவு பற்றிய இந்தப் படத்தில், ரேவதி அம்மாவாகவும், அமலா பால் மகளாகவும் நடிக்கிறார்கள்.  விருது கணக்கு!

• `கோல்டன் ராஸ்பெரி விருது’ என்பது, ஹாலிவுட்டில் வந்த சொதப்பலான படங்களுக்காகத் தரப்படும் உயரிய(?) விருது. 2015-ம் ஆண்டில் இந்த விருதுக்காகப் பல படங்கள் போட்டிபோட, ரேஸில் முன்னணியில் இருப்பவை `ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே' மற்றும் `பிக்ஸல்ஸ்'. சக்கைப்போடு போட்ட ரொமான்ஸ் கில்மா நாவல்தான் `ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே'. அது படமாகும்போது தெறிக்கவிடும் என எதிர்பார்க்க, படம் பப்படம் ஆனது. `2015-ம் ஆண்டின் சொதப்பல் படம்' என நெட்டிசன்ஸும் பொங்கியது, படத்துக்கு எக்ஸ்ட்ரா அட்வான்டேஜ். கோலிவுட்டுக்கும் ஒண்ணு கொடுங்கப்பா!

•   இயக்குநர் பாலாவின் அடுத்த  படம் `குற்றப் பரம்பரை'. விஷால், ஆர்யா, ராணா, அதர்வா, அர்விந்த் சுவாமி... என மல்ட்டி ஸ்டார் காஸ்ட் பிடித்திருக்கிறார் பாலா. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மனிஷா கொய்ராலா. செஞ்சிருங்க!

இன்பாக்ஸ்

•   த்ரிஷாவின் முதுகில் புதிதாக ஒரு டாட்டூ சேர்ந்திருக்கிறது. இதற்கு முன்னர் நீமோ ஃபிஷ் மற்றும் அவரது ராசியான ரிஷப டாட்டூவை வரைந்திருந்தவர், இப்போது கேமராவுடன்கூடிய கிளாப் போர்டு டாட்டூவைத் தவழவிட்டிருக்கிறார். `மனதில் என்ன இருக்கிறதோ அதுதான் என் உடம்பிலும் இருக்கிறது' என டாட்டூவுக்குக் காரணமும் சொல்லியிருக்கிறார் த்ரிஷா. டாட்டூ பொண்ணு!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

• கரீனா கபூர், அர்ஜுன் கபூர் நடிக்கும் `கி அண்ட் கா' படத்தை இயக்கிவருகிறார் பால்கி. படத்தில் கரீனா வேலைக்குச் செல்லும் பெண்ணாகவும், அர்ஜுன் கபூர் வீட்டு வேலைகளைக் கவனிக்கும் கணவராகவும் நடிக்கிறார்கள். சற்று வித்தியாசமான காதல் கதையை கையில் எடுத்திருக்கும் பால்கி, `மோஷன்’ போஸ்ட்டரில் கரீனா, அர்ஜுனுக்குத் தாலி கட்டுவதுபோல வெளியிட, எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. படம் ஏப்ரல் 1-ம் தேதி ரிலீஸ். உண்மையான வீட்டுக்காரர்!

இன்பாக்ஸ்

• சினிமா ஆசையால் போலீஸிடம் சிக்கியிருக்கிறான் மெக்ஸிகோ நாட்டு போதை மன்னன் எல் சாப்போ. சில  மாதங்களுக்கு முன்னர் சிறையில் இருந்த எல் சாப்போவை, அவனது ஆட்கள் 300 கோடி ரூபாய் செலவுசெய்து பாதாள சுரங்கம் அமைத்துத் தப்பிக்கவைத்தார்கள். இப்போது எல் சாப்போவை மீண்டும் பிடித்துவிட்டது மெக்ஸிகோ அரசு. வாழ்க்கை போரடிக்க, சிறையில் இருந்து தப்பித்த எஸ்கேப்பிஸ சாகசங்களை வைத்து ஹாலிவுட் படம் எடுக்க ஆசைப்பட்டான் எல் சாப்போ. அதற்காக, தயாரிப்பாளர்கள், நடிகைகள் என பலரையும் அணுகியவன், பிரபல நடிகர் ஷான் பென்னைச் சந்திக்க, அந்த நெட்வொர்க்கை வைத்தே வளைத்திருக்கிறது மெக்ஸிகோ போலீஸ். சொந்த செலவில் சூனியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism