Published:Updated:

வலைபாயுதே V 2.0

வலைபாயுதே V 2.0
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே V 2.0

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே V 2.0

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே V 2.0
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே V 2.0

facebook.com/karthikeyan.maddy: எதிர் வீட்டு வாசல்ல பழைய TVS-XL ஒன்று நின்றது. அந்த வீட்டம்மா என்னைக் கூப்பிட்டு, `வண்டி உன்னுதா, ஏன் இங்கே நிறுத்தியிருக்கே?’னு கேட்டாங்க. `என்னுது இல்லீங்க’னேன். ரொம்பக் கோவமா, `எவன் இங்கே நிறுத்தினது? ஆணியை எடுத்து பஞ்சர் ஆக்குறேன் பார்’னு கத்திட்டுப் போவுது. அந்த வீட்டு வாசலை மறைச்சுக்கூட அந்த வண்டி நிக்கலை. அது ஓரமாத்தான் நிக்குது. என்ன மாதிரி மனோபாவம் இது? ரொம்பத் தூரம் பயணம் பண்றவங்க களைப்பாற, வீட்டுவாசல்ல திண்ணைவெச்சு வீடு கட்டினவங்க தானே நாம?

twitter.com/podhigaichelvan:
மாட்டை அவிழ்த்துவிட்டா, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ்காரங்க பிடிச்சிட்டு வந்து தொழுவத்துல கட்டுவாங்க # அடேய்... அதான்டா ஜல்லிக்கட்டு!

twitter.com/teakkadai: விஷாலுக்கு எந்த ஏரியாவுல மார்க்கெட் இருக்கோ இல்லியோ, கே டி.வி-யில் இருக்கு. வாரம் ஒரு படம் போட்டுடுறாய்ங்க!

twitter.com/withkaran: பசங்க யாராவது ஆக்ஸிடென்ட்ல செத்தாலே `குடி போதையா?’னு கேட்கிற அளவுக்கு நாடு போயிருச்சு!

வலைபாயுதே V 2.0

twitter.com/meenammakayal: ஆயிரம் `ஐ லவ் யூ’-க்கள் சொல்லாத அர்த்தத்தை, அழுதுகொண்டே சொல்லும் ஒரே ஒரு `ஐ ஹேட் யூ’ உணர்த்திவிடுகிறது!

twitter.com/deebanece: கரும்பை வாங்கிக்கிட்டு எல்லாரும் ‘ஏவுகணை’ மாதிரி போயிட்டு இருக்கானுங்க. அடேய்... படக்குனு திரும்பாதடா!

twitter.com/venkatesh6mugam: பாரில் இருந்து வரும் ஆணும், பார்லரில் இருந்து வரும் பெண்ணும் ஒரு `மிதப்போடு’தான் வெளியே வருகிறார்கள்!

twitter.com/kaviintamizh:
எந்தப் புராணக் கதையும் இல்லாமல் வாழ்வியலோடு ஒன்றியிருப்பதே பொங்கல் மீதான ஈர்ப்புக்குக் காரணம்!

twitter.com/settaikaaran: தமிழில் பேசத் தடைபோடும் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டு, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக நாம பொங்குறதும் ஒருவகையில் அபத்தம்தான்!

twitter.com/g_for_Guru: பர்த்டே பார்ட்டியில் ரிட்டர்ன் கிஃப்ட் குடுக்கிறப்ப, பிரிக்க முடியாத மாதிரி பேக் பண்ணிக் குடுங்கப்பா, அங்கேயே பிரிச்சு அங்கேயே அடிச்சுக்குதுங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வலைபாயுதே V 2.0

twitter.com/isai_: அதிகாலையில் பேசிக்கொள்ள அவ்வளவு இருக்கிறது ஆலமரப் பறவைகளுக்கு!

twitter.com/ikrthik: வாடகை வீட்டில் இருப்பவர்கள் நிச்சயம் கடந்துவந்திருப்பார்கள், ‘இது நம்ம வீடு இல்லையாப்பா?’ எனும் பிள்ளைகளின் ஏக்கக் குரல்களை!

twitter.com/Oorodi: ஒரு சோம்பேறியின் பயனுள்ள கண்டுபிடிப்புன்னா, அது அலாரம்ல இருக்கும் ஸ்னூஸ் ஆப்ஷன்தான்!

twitter.com/Gnanakuthu: `பூலோகம்’ படத்தை இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாகப் போடும்போது வரும் விளம்பரங்கள், பகடியாக இருக்கும்தானே!

facebook.com/sharasithara:
`ஏன்... மெசேஜ்கூட பண்ண மாட்டியா?’ என்ற ஒரு பிரேக்அப்பும், `ஏன் எப்பப் பார்த்தாலும் மெசேஜ் பண்ணிக்கிட்டே இருக்க?’ என்ற ஒரு பிரேக்அப்பும் என தலா இரு எக்ஸ்ட்ரீம்களையும் நீங்கள் கடந்துவிட்டால், எந்த ரிலேஷன்ஷிப்புக்கும் நீங்கள் தயாராகிட்டீங்கனு அர்த்தம்!

வலைபாயுதே V 2.0

facebook.com/vinayaga.murugan.7: அசைவம் சாப்பிடாவிட்டால் என் போன்ற ஆட்களுக்கு கை, கால் நடுங்கும்; மன உளைச்சல் அதிகரிக்கும். கோழிக்கறி வாங்க கடைக்குச் சென்றால், இன்று திருவள்ளுவர் தினம் என்பதால் கோழி, ஆட்டுக்கறி விற்கும் கடைகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளார்கள். வீட்டுக்கு வரும் வழியில் சப்வே, மெக்டி, கேஎஃப்சி, ஸ்டார் ஹோட்டல் பார்கள் எல்லாம் திறந்திருப்பதைப் பார்த்தேன். இப்படி எல்லாம் நடந்துக்கச் சொல்லி யாரு உங்களுக்குச் சொன்னாங்க? அவர் ஏதோ பத்து குறள்களில் மீன், மது சாப்பிடாதீங்கனு சொல்லிட்டுப் போயிட்டார். ஆனா, நூற்றுக்கும் மேலான குறள்களில் அரசு எப்படி நடக்க வேண்டும், ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் சொல்லியுள்ளார். இதை எல்லாம் சொன்னால், என் மேலே அவதூறு வழக்கு போடுவாங்க!

வலைபாயுதே V 2.0

facebook.com/pichaikaaran: லைக்ஸ், கமென்ட்ஸ் பற்றி கவலையின்றி, பெண்கள் அவரவர் வாசல்களில் ஓவியம்போல கோலமிட்ட சிரத்தை வியப்பை அளித்தது. தோழிகள், சகோதரிகள், அம்மா, மகள்கள் என டீம் ஸ்பிரிட்டில் வீட்டு வாசல்கள் அழகாகிக் கொண்டிருந்தன.

ஒரு வீட்டு வாசலில் மிகப் பெரிய அழகுக் கோலம் இட்டு அதைச் சுற்றி பெரிய வட்டமாகக் கோலத்திலேயே வரைந்திருந்தார்கள். காம்பஸ் (கவராயம்) போன்ற எந்தக் கருவியும் இல்லாமல் எப்படி இதை வரைகிறார்களோ?

எப்போது வேண்டுமானாலும் அழியலாம் எனத் தெரிந்தும்கூட இவ்வளவு உழைப்பைக் கொட்டும் அன்னைகளுக்கும் சகோதரிகளுக்கும் பொங்கல் வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism