
ஹேர் ஸ்டைல்
மணமகனுக்கான சிகை அலங்காரம் பற்றி விளக்குகிறார், சென்னை ‘பவுன்ஸ் ஸ்டைல் லவுஞ்ச்’ (Bounce Style Lounge) ஷோரூமின் நிர்வாகியான விக்ரம் மோகன். ``மணப்பெண்ணைப் போலவே, மணமகனுக்கும் சிகை அலங்காரம் செய்வது வழக்கமான ஒரு நிகழ்வாகிவிட்டது. நிச்சயதார்தம், தாலி கட்டும் நிகழ்வு, ரிசப்ஷன் உள்ளிட்ட அனைத்து திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கும், மணமகனின் தலை முடியின் அமைப்புக்கு தகுந்த ஹேர் ஸ்டைல் அலங்காரங்களை செய்ய முடியும். பெரும்பாலான மணமகன்கள் தேர்வு செய்யும் நான்கு ஹேர் ஸ்டைல் வகைகளுக்கான தகவல்களையும், ஹேர் க்ரூமிங் டிப்ஸ்களும் தருகிறேன்’’ எனும் விக்ரம் மோகன் அளித்த தகவல்கள் இதோ...
1.க்ரூ ஸ்பைக் (Crew spike)

பயன்படுத்தும் நிகழ்ச்சி: ரிசப்ஷன்
பொருத்தமான ஆடைகள்: கோட் - சூட்
சராசரி ஃபிட்டான உடல் மற்றும் 5.5 உயர எடை உடையவர் களுக்கு பொருத்தமாக இருக்கும்.
தாடியை மீடியமான அளவுக்கு ட்ரிம் செய்ய வேண்டும்.
2. ஸ்பைக் ஆன் மெஸ்ஸி (Spike an messy)

பயன்படுத்தும் நிகழ்ச்சி: ரிஷப்சன்
பொருத்தமான ஆடைகள்: கோட் - சூட், ஷெர்வானி
சராசரி ஃபிட், ஜிம் பாடி மற்றும் நல்ல உயரமுடையவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.
தாடியை சரியாக ட்ரிம் செய்த பிறகு, தாடியை ஷேப் செய்ய வேண்டும் (பென்சிலைக் கொண்டு).
3. செமி ஃபார்மல் (Semi formal)

பயன்படுத்தும் நிகழ்ச்சி: தாலி கட்டும் நிகழ்வு
பொருத்தமான ஆடைகள்: கோட் - சூட், குர்தா
ஃபிட்டாக இருப்பவர்களுக் கும், குண்டாக இருப்பவர்களுக் கும் இந்த ஹேர் ஸ்டைல் பொருந்தும். சாதாரண உயரமுடைய வர்களுக்கும் பொருந்தும்.
இந்த ஹேர் ஸ்டைலுக்கு கிளீன் ஷேவ் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் லைட்டாக மட்டும் தாடி இருக்கலாம்.
4. கிரியேட்டிவிட்டி மோஹாக் (Creativity mohawk)

பயன்படுத்தும் நிகழ்ச்சிகள்: நிச்சயதார்தம், ரிசப்ஷன்
பொருத்தமான ஆடைகள்: கோட் - சூட், ஷெர்வானி
குண்டான முகமுடைய வர்களுக்கு இந்த ஹேர் ஸ்டைல் பொருந்தாது.
சாதாரண உயரம், சராசரி மற்று ஓரளவுக்கு குண்டானவர்களுக்கு பொருந்தும்.
ஹேர் ஸ்டைல் டிப்ஸ்!
ஹேர் ஸ்டைல் செட் செய்தவுடன் ‘ஹேர் ஷைனிங் ஸ்ப்ரே’ (hair shining spray) தெளிப்பதன் மூலம், ஹேர் ஸ்டைல் நல்ல ஷைனிங்காகவும், அழகாகவும் தெரியும்.
செட் செய்த ஹேர் ஸ்டைல் தொடர்ந்து எட்டு மணி நேரம் வரை கலையாமல் இருக்கும்.
தேவைக்கேற்ற ஹேர் ஸ்டைலை செட் செய்து நிகழ்ச்சி முடிந்ததும், சாதாரண ஷாம்புவைக் கொண்டு தலைக்கு குளித்ததும், தலைமுடி பழைய நிலைக்கு மாறிவிடும்.
எத்தகைய முடியாக இருந்தாலும், முடியின் தன்மைக்கேற்ற ஹேர் க்ரூமிங் அலங்காரம் செய்ய முடியும்.
ஹேர் க்ரூமிங் செய்வதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்பே சலூனில் பேசி, உங்களின் முடிக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல் வகையை தெரிந்துகொள்ள வேண்டும்.
தேவைப்பட்டால் ஹேர் க்ரூமிங் செய்வதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பக ஃபேஷியல் செய்துகொள்ளலாம்.
- கு.ஆனந்தராஜ் படங்கள்: ஜெ.தான்யராஜு மாடல்: அரவிந்த்