
டோஸ்ட்டர்... ஆரோக்கியத்துக்கு தோஸ்த்!
பிரெட் சாண்ட்விச், சப் பாத்தி போன்றவற்றை கிச்சன் ஃப்ரெண்ட்லியாக நிமிடத்தில் சமைத்துக்கொடுக்கும் டோஸ்ட்ட ரின் வகைகள், பயன்பாடு மற்றும் பராமரிப்பு பற்றிச் சொல்கிறார், சென்னை, ‘வசந்த் அண்ட் கோ’வின் விற்பனை பிரிவைச் சேர்ந்த விஜய்.

‘‘தோசைக்கல்லில் பிரெட், சப்பாத்தி என்று டோஸ்ட் செய்யும் போது, அதன் அருகிலேயே நிற்க வேண்டும்; கருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுவே டோஸ்ட்டர் என்றால், நேரம் செட் செய்துவிடலாம். ஆட்டோ மேட்டிக் மோடு இருப்பதால், கருகும் வாய்ப்பும் இல்லை. மேலும், அது டோஸ்ட் ஆகிக் கொண்டிருக்கும் நேரத்தில் மற்ற வேலைகளைப் பார்க்கலாம். வேலைகள் விரைவாகவும் சுலப மாகவும் முடியும்.
வகைகள்

பாப் அப் டோஸ்ட்டர், சாண்ட்விச் டோஸ்ட்டர், சாண்ட்விச் கிரில் டோஸ்ட்டர், மல்டி கிரில்டோஸ்ட்டர் என நான்கு வகையான டோஸ்ட்டர்கள் கிடைக் கின்றன.பாப் அப் டோஸ்ட்டரில் பிரெட்டை டோஸ்ட் செய்யும் பிளேட் மட்டும் இருக்கும்.
சாண்ட்விச் டோஸ்ட்டரில் பிரெட் உடன் காய்கறிகள் வைத்து டோஸ்ட் செய்யும் பிளேட் இருக்கும்.
சாண்ட்விச் கிரில் டோஸ்ட் டரில், சாண்ட்விச் டோஸ்ட் செய்வதுடன், கட் செய்தும் கொடுக்கும் பிளேட் இருக்கும்.
மல்டி கிரில் டோஸ்ட்டரில் மேலே சொன்ன மூன்று வகை பிளேட்களும் சேர்ந்து இருக்கும். கூடவே, இதில்

சப்பாத்தியும் டோஸ்ட் செய்யலாம்.
விலை
சிறியது, பெரியது என டோஸ்ட்டர் இரண்டு அளவுகளில் கிடைக்கிறது. இரண்டு பிரெட் ஸ்லைஸ் மட்டும் வைக்கக்கூடிய வகையில் இரண்டு பிளேட்கள் கொண்டது சிறிய சைஸ் டோஸ்ட்டர். நான்கு பிரெட் ஸ்லைஸ் வைக்கக்கூடிய வகையில் நான்கு பிளேட்கள் கொண்டது பெரிய சைஸ் டோஸ்ட்டர். சின்ன சைஸ் டோஸ்ட்டரின் ஆரம்ப விலை 1,900 ரூபாய் முதல். பெரிய சைஸ் டோஸ்ட்டர் என்றால் அதைவிட 1,000 ரூபாய் கூடுதலாக இருக்கும்.
பாதுகாக்க...
பாப் அப் டோஸ்ட்டர் மற்றும் சாண்ட்விச் டோஸ்ட்டரில், காயில் மூலம்தான் பிரெட் ஹீட் ஆகும். அதனால் பிரெட் வைக்கும் பிளேட்டில் தண்ணீர்படாமல் பாதுகாக்க வேண்டும். பயன்படுத்திவிட்டு அந்த பிளேட்டை இரண்டு சொட்டு எண்ணெய்விட்டு பஞ்சு அல்லது காட்டன் துணிவைத்துத் துடைத்துச் சுத்தம் செய்யலாம்.
மல்டி கிரில் டோஸ்ட்டரில் மட்டும் பிரெட் வைக்கும் பிளேட்டை வெளியில் எடுக்கும் வசதி இருக்கும். பயன்படுத்திவிட்டு பிளேட் சூடு ஆறியதும் தண்ணீர் வைத்துத் துடைத்து, நன்கு காயவைத்துவிட்டு, மீண்டும் செட் செய்து பயன்படுத்தலாம். பெரும்பாலும் தண்ணீர் தவிர்த்து எண்ணெய் தோய்த்துத் துடைப்பது சிறந்தது.

வாங்கும்போது
கடையில் பில் செய்யும்போதே, டோஸ்ட்டர் ஹீட் ஆகிறதா, இண்டிகேஷன் லைட் சரியாக வேலை செய்கிறதா என்று செக் செய்து வாங்கவும்.
நலம்
தோசைக்கல்லில் டோஸ்ட் செய்யும்போது, எண்ணெய், நெய் சேர்க்க வேண்டியது இருக்கும். ஆனால், டோஸ்ட்டரில் அதற்கு அவசியம் இல்லை என்பதால் டோஸ்ட்டர்... ஆரோக்கியத்துக்குத் தோஸ்த்!’’
கே.அபிநயா படங்கள்:மீ.நிவேதன்