சிறப்புக்கட்டுரைகள்
Published:Updated:

வரவேற்பு பாதையிலிருந்தே தொடங்கட்டும் அழகு!

வரவேற்பு பாதை

“ஒரு விழாவில் காலடி எடுத்து வைக்கும்போதே, அந்த `ஃபங்ஷன் மூடு’ விருந்தினர்களுக்குக் கடத்தப்பட வேண்டும். அதற்கு, மண்டபங்களின் உள்ளே சுழன்று சுழன்று அலங்காரம் செய்தால் மட்டும் போதாது. சுப நிகழ்ச்சிகளின்போது சந்தோஷக் கலை, வரவேற்பு பாதையில் இருந்தே தொடங்க வேண்டும். அதற்குத்தான் பேசேஜ் அலங்காரம். இது விசேஷத்துக்கு வரும் நண்பர்கள், உறவினர்களை மட்டுமல்லாது... அந்த வழியில் செல்பவர்களையும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைக்கும்!’’

- ஆர்வம் ஏற்பட பேசுகிறார், சென்னை, ஜிஆர்கே டெகரேட்டர் ஸின் உரிமையாளர் ஜி.ஆனந்த குமார். ‘அவ்வை ஷண்முகி’, ‘நான் அவனில்லை’, ‘சிவாஜி’ ஆகிய திரைப்படங்களில் இவர் கான்ட்ராக்ட் முறை செட் வடிவமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரவேற்பு பாதையிலிருந்தே தொடங்கட்டும் அழகு!

‘‘சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, பேசேஜ் டெகரேஷன் முக்கியத்துவம் பெற ஆரம்பித்துவிட்டது. விழா நடப்பது சின்ன இடமோ, பெரிய இடமோ... இரண்டுக்குமே இது அவசியமாகிறது. காரணம், மைதானம் போன்ற பெரிய இடத்தில் பேசேஜ் டெகரேஷன் செய்யாமல்விட்டால், வரும் விருந்தினர்கள் மேடையைச் சென்றடைவதில் அலைச்சலும், அலுப்பும் ஏற்படும். அதுவே பேசேஜ் டெகரேஷன், அவர்கள் நிகழ்ச்சி மேடையை அடையும்வரை பரவசப்படுத்தி அழைத்துச் செல்வதாக அமையும். விழாவுக்கான மூடும் நுழைவு வாயிலில் இருந்தே செட் ஆகிவிடும். ஒருவேளை விழா நடப்பது சிறிய இடமாக இருந்தால், அதைப் பொருட்படுத்தாத வகையில் இந்த பேசேஜ் அலங்காரம் நுழைவுவாயிலிலேயே விருந்தினர்களுக்கு ஒரு பிரமாண்ட உணர்வு தந்துவிடும்.

வரவேற்பு பாதையிலிருந்தே தொடங்கட்டும் அழகு!
வரவேற்பு பாதையிலிருந்தே தொடங்கட்டும் அழகு!

தற்போது `தீம் வெடிங்’கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. அதனால் பேசேஜ் அலங்காரத்தையும் அதற்குப் பொருத்தமாக முடிவெடுக்கலாம். அரேபியன் டென்ட், கிளாத் சீலிங், பில்லர் வொர்க், பாராசூட் கிளாத் ஆர்ச், க்ரீன் பிளான்ட்ஸ், `எல்இடி’ லைட் டெகரேஷன், பலூன் டெகரேஷன், அரண்மனை மாடல் நுழைவாயில் என்று பலவகை பேசேஜ் அலங்காரங்கள் உள்ளன. இதில் ஏதேனும் ஒன்றை தனித்தோ அல்லது இரண்டு வகைகளை இணைத்தோ தீமுக்கு ஏற்ப பேசேஜ் அமைக்கலாம். இன்னும் சிலர் சிற்பங்கள் விரும்புவர். அவர்களுக்காக பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்த சிற்பங்கள் எடுத்து வந்து அலங்காரம் செய்வதும் உண்டு. 

பேசேஜ் அலங்காரத்துக்கு 10,000 ரூபாய் முதல் 10 லட்சம் வரை... இடம், தேர்வு செய்யும் மாடல்களைப்

வரவேற்பு பாதையிலிருந்தே தொடங்கட்டும் அழகு!

பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும்.  பட்ஜெட்டைக் குறைக்கும்போது, பிரமாண்டத்தையும் குறைத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், குறைந்த கட்டணத்தில் அலங்காரத் தூண்கள் செட் செய்யச் சொல்லிக் கேட்டால், குழந்தைகள், பெரியவர்கள் அதில் சாய்ந்தால் கீழே விழுந்து ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்படும். லைட் அலங்காரம் விரும்புபவர்கள், மின்சார கேபிள்கள் இடையூறு இல்லாமல் கவனமாகப் பொருத்தப்படக் கூடிய இட வசதி இருக்கிறதா என்பதை கவனத்தில்கொள்ளவும்.’’ - டிப்ஸ் தந்து நிறைவு செய்தார், ஆனந்தகுமார்.

வரவேற்பு பாதையிலிருந்து வியப்பு  ஆரம்பிக்கட்டும்!

- ச.சந்திரமௌலி