Published:Updated:

"அவ்வ்வ்... ஐ 'அம்' பாவம்!"

"அவ்வ்வ்... ஐ 'அம்' பாவம்!"
News
"அவ்வ்வ்... ஐ 'அம்' பாவம்!"

நா.சிபிச்சக்கரவர்த்தி

“ `லவ் பண்ணுறேன்’னு என் பையன் சொன்னார். `நாங்களே கல்யாணம் பண்ணிவைக்கிறோம்'னு சொல்லி விசாரிச்சோம். நல்ல பொண்ணு. இன்னைக்குத்தான் மும்பையில நிச்சயதார்த்தம் நடந்தது. பெத்தவங்களா எங்க கடமையைச் செஞ்சதுல ரொம்பத் திருப்தி” என உற்சாகமாகிறார் பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனி.

"அவ்வ்வ்... ஐ 'அம்' பாவம்!"

“ ‘இறைவி’ படத்துல கொஞ்சம் பிஸி சார். இப்பதான் ஃப்ரீ ஆனேன். என்ன வேணும்னாலும் கேளுங்க” - தயாராகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

“ ‘தாரை தப்பட்டை’ படத்துல, இன்டர்வல் பிளாக்ல நான் கஞ்சா அடிக்கிற மாதிரி சீன் வரும். அந்த ஒரு சீனுக்காக, கிட்டத்தட்ட ஒரு மாசம் பயிற்சி எடுத்தேன். படம் பார்த்துட்டு நிறையப் பேர் பாராட்டுறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு” - மகிழ்ச்சியாகப் பேசுகிறார் நடிகர் ஆர்.கே.சுரேஷ்.

“நீங்க ஈஸியா நச்னு நாலு கேள்வி கேட்பீங்களாம்; நான் டக்கு டக்குன்னு பதில் சொல்லி, நிறைய மார்க் வாங்குவேனாம். என்ன டீல் ஓ.கே-வா? வாங்க!” - நடிகை மதுமிதா.

“முதலமைச்சர் ஜெயலலிதாவால் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘அம்மா அழைப்பு மையத்தின் (Amma Call Centre)’ டோல் ஃப்ரீ எண் என்ன?”

விடை: 1100.

ஐ.லியோனி
: “அந்த எண் `1100’. அவங்க    110-ல் அறிக்கை வாசிச்சு எதுவுமே செய்யலை. அந்த நம்பர்ல ஒரு 0 சேர்த்து 1100 ஆக மாத்தியிருக்காங்க. அதனால 110-ம் நிறைவேறாது; 1100-ம் நிறைவேறாது. ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டு கால ஆட்சிக்கு நான் தரும் மார்க், 110-க்கு 10தான். அவங்க ஃபெயில்.”

கார்த்திக் சுப்புராஜ்: “நான் ஷூட்டிங்ல பிஸியா இருந்தாலும், அப்பப்ப நியூஸ் அப்டேட் பண்ணிப்பேன். இந்த கால் சென்டரோட எண் ‘1100’.  எனக்கு கால் சென்டர்னா பெங்களூர்தான் ஞாபகத்துக்கு வரும். அங்கே கால் சென்டர்ல வொர்க் பண்ற ஃப்ரெண்ட்ஸ் நிறையப் பேர் இருந்தாங்க. அது எல்லாம் ஸ்வீட் மெமரீஸ்.”

ஆர்.கே.சுரேஷ்: “அய்யோ... மறந்துட்டேங்க. இந்தச் செய்தியை நான் படிச்சேனே! 911... இல்லை... இல்லை. இது அமெரிக்காவுல இருக்கும் அவசர உதவி எண்னு நினைக்கிறேன். தமிழ்நாடு எண், ஆங்... `1100’. சரியா?” என சந்தேகமாகக் கேட்டவரிடம் ‘சரி’ என்றதும் இந்த நம்பரை எங்கேயோ பார்த்த மாதிரியே ஞாபகம். சும்மா அடிச்சுவிட்டேன்” - சிரிக்கிறார்.

மதுமிதா: “ஆமா... ` `முதல்வன்' படத்துல வர மாதிரி'னு யாரோ சொன்னாங்களே! அம்மா எது பண்ணாலும் நம்ம நல்லதுக்குத்தான். ஆனா, நம்பர்தான் என்னன்னு தெரியலை!”

"அவ்வ்வ்... ஐ 'அம்' பாவம்!"

“பொங்கல் பண்டிகையின்போது, டாஸ்மாக் கடைகளில் எத்தனை கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனது?”

விடை: 365 கோடி ரூபாய்.

ஐ.லியோனி:
“எப்படியும் 500 கோடியைத் தாண்டும். எங்க ஊர் விற்பனை மட்டும் ஒன்றரை கோடிக்கு மேல்னு படிச்சேன். `கடல்லயே ஜாமீன் இல்லாத மாதிரி, சட்டமன்றத்துலயே தமிழ்நாட்டுக்கு மதுவிலக்கு கிடையாது'னு சொல்றாங்க.

கார்த்திக் சுப்புராஜ்:
“நூறு கோடிக்கு மேல் விற்பனை நடந்திருக்கும்” என்றவர் சிறிய இடைவெளிவிட்டு “படம் டைரக்ட் பண்றதுக்கு முன்னாடியும் பின்னாடியும் ஃப்ரெண்ட்ஸ்கூட ஜாலியா டாஸ்மாக் போயிட்டு வருவோம். இப்ப போறதுக்கு டைம் இல்லை.”

ஆர்.கே.சுரேஷ்: “தமிழ்நாடு முழுவதும் மூணு நாள் லீவு. அப்ப இந்தப் பசங்களைவெச்சு கூட்டிக் கழிச்சுப் பார்த்தா,  100 கோடிக்கு மேல் வியாபாரம் நடந்திருக்கும்.”

மதுமிதா: “டாஸ்மாக் விற்பனையால், மாட்டுப் பொங்கல் அன்னிக்கு மாடுகளுக்குத் தள்ளாட்டம். இதைப் பார்த்த கவர்மென்ட்டுக்குக் கொண்டாட்டம். இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டா, எனக்குத்தான் திண்டாட்டம். அவ்வ்வ்... ஐ'அம் பாவம்!”

“அண்மையில் திருமணம் நடந்த நடிகை அசினின் கணவர் பெயர் என்ன?”

விடை: ராகுல் ஷர்மா.

"அவ்வ்வ்... ஐ 'அம்' பாவம்!"

ஐ.லியோனி: “இப்பதான் பேப்பர்ல போட்டோ பார்த்தேன். `அவர் பெயரை எதுக்குப் படிச்சிக்கிட்டு?'னு படிக்காம விட்டுட்டேன். ஏதோ ஒரு பாட்டு ஆரம்பத்துல இருந்து முடியும் வரை சூர்யாவும் அசினும் தலையையும் உடம்பையும் மட்டும் ஆட்டிட்டே இருப்பாங்க. என்ன பாட்டுனு மறந்துருச்சு. சினிமாவுல ரெண்டு நடிகைகளோட கணவர் பெயர் தெரியும். ஜோதிகாவின் கணவர் பெயர் சூர்யா; சினேகாவின் கணவர் பெயர் பிரசன்னா. அவ்வளவுதான். ச்சே... இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமப்போச்சே!”

கார்த்திக் சுப்புராஜ்: “ராகுல் ஷர்மா. வாழ்த்துகள் அசின் மேடம்.”

ஆர்.கே.சுரேஷ்: “அசின் கணவர் பெயர்... ஷர்மானு வரும்” என யோசித்தவர், ஷர்மா கொண்ட பெயர்களை எல்லாம் சொல்லிப் பார்க்கிறார். “ரோஹித் ஷர்மா... ராகேஷ் ஷர்மா... இல்லை... ‘ரா’ தொடங்குமே, ஆங்... பிடிச்சுட்டேன் ராகுல் ஷர்மா. இவர்தான் ரிலையன்ஸ் கம்பெனிகூட நெருக்கமாக இருப்பவர். மைக்ரோமேக்ஸ் கம்பெனியில் பெரிய பதவியில் இருக்கார். சரியா?” - அதே டெரர் சிரிப்பு.

மதுமிதா: “அசினுக்குப் பிசினாக இருக்கும் அவங்க ஹஸ்பெண்ட் பெயர் என்னன்னு சத்தியமாகத் தெரியலைங்க. இந்த கொஸ்டீன் பேப்பர் செட் பண்ணவர் ரொம்பக் கறார் பார்ட்டினு நினைக்கிறேன்.”

“ஜெயலலிதா போட்ட அவதூறு வழக்கில் நீதிமன்றம் சென்ற கட்சித் தலைவர் யார்?”

விடை: மு.கருணாநிதி.

"அவ்வ்வ்... ஐ 'அம்' பாவம்!"

ஐ.லியோனி: “எங்க தலைவர் கலைஞர்

மு.கருணாநிதிதான். இதுல என்னன்னா, என் மேலயும் நாலு அவதூறு வழக்கு போட்டிருக்காங்க. ஏன் போட்டாங்கனு சொன்னா சிரிக்கக் கூடாது. ஒரு கூட்டத்துல `எம்.ஜி.ஆர்., குழந்தைகளுக்கு எல்லாம் பேருவெச்சார். ‘அம்மா’ வண்டலூர் மிருகக் காட்சி சாலைக்குப் போய், புலிக்குட்டிகளுக்குப் பேரு வைக்கிறார்'னு சொன்னேன். இதுக்கு ‘அம்மா புலிக்குட்டிகளுக்குப் பேரு வைக்கிறதை எல்லாம் பப்ளிக்கா சொல்லிக்காட்டக் கூடாது’னு வழக்கு போட்டுட்டாங்க. ஒருமுறை `அம்மா, அம்மா’னு தொடர்ந்து அஞ்சு முறை சொன்னேன்னு ஒரு வழக்கு  போட்டுட்டாங்க. என் வாழ்க்கையில் இவ்வளவு கேவலமான அவதூறு வழக்குகளை நான் சந்திச்சதே இல்லை.”

கார்த்திக் சுப்புராஜ்:
“கலைஞரா? இந்தக் கேள்விக்கு வேற எதுவும் துணைக் கேள்வி கேட்டுறாதீங்க சார்” - சிரிக்கிறார்.

ஆர்.கே.சுரேஷ்:
“ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நிறையப் பேசுவார். அவரா... இல்லையா? அப்ப ஸ்டாலின்... அவரும் இல்லையா? அப்ப வைகோ, திருமாவளவன், அன்புமணி, தா.பாண்டியன்... யாருமே இல்லையா? அதுவும் இவ்வளவு பேரு சொல்லி கள்ளாட்டம் ஆடக் கூடாதா? சரி அப்பு, அப்ப நீங்களே பதிலைச் சொல்லிடுங்க.”

மதுமிதா: “அய்யோ... இந்தக் கேள்விக்கு நான் சைலன்ட் மோடு போட்டு, எஸ்கேப் ஆகிடுறேன்!”