சிறப்புக்கட்டுரைகள்
Published:Updated:

ஆளையே மாற்றும் அசத்தல் மேக்கப்!

மேக்கப் ட்ரெண்ட்

வ்வொரு பெண்ணுக்கும் தன் மணக்கோலத்தைப் பற்றிப் பெரிய கற்பனை இருக்கும். ஆனால், திருமண நாள் நெருங்க நெருங்க, மேக்கப் நமக்குச் சரியாகப் பொருந்துமா எனும் படபடப்பு அதிகரிக்கும். அந்தக் கவலையைப் போக்கும்விதமாக, பியூட்டி உலகத்தின் தற்போதைய மணமகள் மேக்கப் ட்ரெண்டுகள் பற்றியும், அவை பொருந்தக்கூடிய முகவெட்டுகள் பற்றியும் பார்க்கலாம்!

கேமஃபிளாஜ் (Camouflage) மேக்கப்

ஆளையே மாற்றும் அசத்தல் மேக்கப்!

முகப்பரு வடுக்கள், பிக்மென்டேஷன் போன்ற பாதிக்கப்பட்ட சருமத்தினருக்கு ஏற்றது கேமஃபிளாஜ் மேக்கப். 

வெயிலினால் பாதிக்கப்பட்ட மற்றும் ஒன்றிரண்டு முகப்பரு வடுக்கள்கொண்ட சருமத்தையுடைய மாடல் ஸ்ருதிக்கு, கேமஃபிளாஜ் மேக்கப்பை தேர்ந்தெடுத் ததற்கான காரணம் அதுதான். இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

ஃபவுண்டேஷன் அப்ளை செய்வதற்கு முன்பு, வடுக்களை மறைக்க உதவும் கன்சீலிங் க்ரீமை அப்ளை செய்வதுதான் இந்த மேக்கப்பில் உள்ள முக்கிய ஸ்டெப். வடுக்கள் நிறைந்த பாதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் இந்த கன்சீலரை அப்ளை செய்கிறார்களா எனக் கவனிக்க வேண்டும்.

ஆளையே மாற்றும் அசத்தல் மேக்கப்!

சரும நிறத்துக்குத் தோதான ஃபவுண் டேஷனை முகம் முழுவதும் அப்ளை செய்து, பின்பு கன்சீலர் மற்றும் ஃபவுண்டேஷன் இரண்டும் தனித்தனியாக, பேட்ச் பேட்ச் ஆகத் தெரியாதவாறு இரண்டையும் பிரஷ்ஷினால் தடவிச் சரிசெய்ய வேண்டும்.

குறிப்பு: இந்த கேமஃபிளாஜ் மேக்கப், கருவளையம் மிகுந்த பெண்களுக்கும் உகந்தது.

ஏர் பிரஷ் மேக்கப்

ஆளையே மாற்றும் அசத்தல் மேக்கப்!

மாசற்ற மிருதுவான சருமத்தினை மேலும் மெருகூட்ட, ஏர் பிரஷ் மேக்கப் சிறந்த சாய்ஸ். பொதுவாக, மேக்கப் அப்ளை செய்யும்போது சருமத்தை அதிகம் தேய்ப்பதால்கூட சிவந்துபோகக்கூடிய சென்சிட்டிவ் சருமத்தினருக்கு இது பரிந்துரைக்கத்தக்கது. இதில் வழக்கமான ஸ்பாஞ்சிலோ, பிரஷ்ஷிலோ மேக்கப் அப்ளை செய்யப்படாது. இந்த மேக்கப்புக்கு என பிரத்யேகமாக உள்ள ஏர் பிரஷ் கன் எனப்படும் மின்சாரத்தினால் இயங்கக்கூடிய உபகரணத்தால் மேக்கப் செய்யப்படும்.

வழவழ சருமம்கொண்ட மாடல் ஸ்ரீநிகாவுக்கு சிறந்த தேர்வு, இந்த ஏர் பிரஷ் மேக்கப்தான். அதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

சாதாரண ஃபவுண்டேஷன் இல்லாமல் மைக்ரோ பிரஷ் ஃபவுண்டேஷன் பயன்படுத்த வேண்டும். சரும நிறத்துக்குத் தோதான நிறத்தில் மற்றும் சரும நிறத்தைவிட ஒரு ஷேட் டார்க் நிறத்திலும் ஃபவுண்டேஷன் தேர்வுசெய்ய வேண்டும்.

மூக்கினை எடுப்பாகக் காட்ட மூக்கின் இரு பக்கங்களுக்கும், அதிக உப்பலான கன்னங்களையோ, அகலமான தாடையையோ குறுக்கிக் காட்டக்கூடிய இடங்களுக்க்கும் டார்க் கலர் ஃபவுண்டேஷனைப் பயன்படுத்த வேண்டும்.

ஆளையே மாற்றும் அசத்தல் மேக்கப்!

கன்னங்கள், நெற்றி, மூக்கின் மேற்பரப்புக்கு லைட் கலர் ஃபவுண்டேஷனை ஏர் பிரஷ் கன் மூலமாக மட்டுமே ஸ்ப்ரே செய்து அப்ளை செய்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும்.

குறிப்பு: மேக்கப் அப்ளை செய்ததே தெரியாமல் நேச்சுரலான தோற்றம் அமைய ஏர் பிரஷ் மேக்கப் சிறந்த தேர்வு.

3D மேக்கப்

ஆளையே மாற்றும் அசத்தல் மேக்கப்!

ஒட்டிய கன்னங்களைப் புஷ்டியாகக் காட்ட, அகன்ற தாடையைக் குறுகியதுபோலக் காட்ட என ஒருவரின் முக அமைப்பையே மாற்றியமைக்க உதவுவது, 3D மேக்கப். உங்களுக்கானது 3D மேக்கப்தான் என உறுதி செய்தபின், பியூட்டி சலூனில் அதன் செய்முறையைக் கவனித்துக்கொள்வது அவசியம்.

அகன்ற முகவெட்டைக்கொண்ட மாடல் ஃபரீனாவுக்கு பெஸ்ட் சாய்ஸ் இந்த 3D  மேக்கப். அதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

சருமநிறத்துக்கு தோதான ஃபவுண்டேஷன் தேர்ந்தெடுத்தபின் அதைவிட ஒரு ஷேட் லைட் மற்றும் ஒரு ஷேட் டார்க் என மேலும் இரண்டு ஃபவுண்டேஷன்களைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
 

ஆளையே மாற்றும் அசத்தல் மேக்கப்!

லைட் கலர் ஃபவுண்டேஷன்: இதை நெற்றி, மூக்கின் நடுப்பகுதி, கன்னங்கள், தாடை என சருமத்தின் ஹைலைட்டான பகுதிகளில் அப்ளை செய்கிறார்களா என நோட் செய்யுங்கள்.

டார்க் கலர் ஃபவுண்டேஷன்: இதை மூக்கினை ஷார்ப்பாக எடுத்துக்காட்ட மூக்கின் இரு பக்கங்கள், கன்ன எலும்புகள், தாடையின் மேடான பகுதிகளில் அப்ளை செய்கிறார்களா என செக் செய்யுங்கள். 

குறிப்பு: இதையே எதிர்ப்பதமாகச் செய்தால் அதுதான் குறுகிய முகவெட்டு உடைய பெண்களுக்கான 3D மேக்கப்.

எந்த மேக்கப் ஆக இருந்தாலும் கவனிக்க வேண்டியவை..!

• மேக்கப் அப்ளை செய்வதற்கு முன்பு கண்டிப்பாக ப்ரைமர் அப்ளை செய்ய வேண்டும். இது சருமத்தின் கண்ணுக்குத் தெரியாத மேடு, பள்ளங்களைச் சரிசெய்யும்.

• கண்கள் மற்றும் உதடுகளுக்கான மேக்கப்பில் அதிக கவனம் செலுத்தினால் மேக்கப் ரிச் லுக்கில் இருக்கும்.

• கன்னங்களுக்கு பிளஷர் அப்ளை செய்வது மொத்த மேக்கப்பையும் கிளாமராகக் காட்டும்.

• மேக்கப் முடிந்ததும் ஃபிக்ஸர் அப்ளை செய்தால் நீண்ட நேரம் மேக்கப் கலையாமல் இருக்கும்.

- இந்துலேகா.சி
மாடல்: ஃபரீனா, ஸ்ரீநிகா, ஸ்ருதி
படங்கள்: ஜெ.தான்யராஜு, கே.ஷக்திவேல்
ஆடைகள் உதவி: போத்தீஸ் பொட்டிக், சென்னை
மேக்கப் உதவி: ஷ்ரீ பிரைடல் க்ரியேஷன்ஸ், சென்னை