சிறப்புக்கட்டுரைகள்
Published:Updated:

செமையா போட்டுக்கலாம்... செல்ஃப் மேக்கப்!

மேக்கப்

திருமணத்தில் மணப்பெண் மட்டுமல்ல... பெண்ணின் சகோதரிகள், தோழிகள், உறவுப்பெண்கள் என்று அனைவருமே அன்று கொஞ்சம் அட்ராக்டிவ் மேக்கப்தான் விரும்புவார்கள்! அவர்கள் அனைவருக்கும் `செல்ஃப் மேக்’கப்புக்கு கைகொடுக்கும் காஸ்மெடிக் அயிட்டங்களின் அறிமுகம் இங்கே..!

செமையா போட்டுக்கலாம்...  செல்ஃப் மேக்கப்!

ஃபேசஸ் மேக்னெட்ஐஸ் காஜல்

(Faces Magneteyes Kajal)


  

மிருதுவானது, எளிதில் வரையக்கூடியது. கண்களின் அழகைக் கூடுதலாக்கிக் காட்டும்.

   

  இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் மினரல்ஸ், கண்களுக்குப் பாதுகாப்பு தரும்.

   

தண்ணீர் பட்டாலும் அழியாது இந்த வாட்டர் ப்ரூஃப் காஜல்.

    

விலை: ரூ. 175

க்ளினிக் ஸ்மார்ட் கஸ்டம் `எஸ்பிஃஎப் 15’ மாய்ஸ்ச்சரைசர் (clinique smart custom spf15 moisturizer)

    

சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது.

    

கன்னங்களின் சுருக்கத்தைத் தடுத்து, சருமத்தை இளமையாக வைத்திருக்கும்.

   

நாள் முழுக்க முகத்தைப் `பளிச’்சென வைத்திருக்கும்.

    

விலை:ரூ. 2,950

ஃபேசஸ் அல்டிம் ப்ரோ லிப் மேட் (Faces Ultime Pro Lip Matte)

     

அடிக்கடி டச்-அப் செய்துகொள்ள விரும்பாதவர்கள், நேரம் இல்லாதவர்களுக்கு இது நல்ல சாய்ஸ்.

    

4 - 6 மணி நேரம்வரை நீடிக்கும். உணவோ, நீரோ எடுத்துகொண்டாலும் 3 மணி நேரம்வரை நீடிக்கும்.

     

பீச், பிங்க், பளீர் சிவப்பு உட்பட 10 நிறங்களில் கிடைக்கிறது.

     

மேட், ஸ்டாரி என்று இதில் இரண்டு வகைகள் உண்டு.

 

  இரவு பார்ட்டி செல்பவர்களும், ஷைனிங் லுக் வேண்டுபவர்களும் ஸ்டாரி தேர்ந்தெடுக்கலாம். கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் மேட் தேர்ந்தெடுக்கலாம்.

     

விலை: ரூ. 799

செமையா போட்டுக்கலாம்...  செல்ஃப் மேக்கப்!

க்ளினிக் பிளண்டட் ஃபேஸ் பவுடர் அண்ட் பிரஷ்

(Clinique Blended Face Powder and Brush)

     

மேக்கப் செய்ததுபோல் இல்லாமல் இயற்கையான தோற்றம் தருவது தான் இதன் ஸ்பெஷல்.

ஃபவுண்டேஷ னுக்குப் பிறகோ, அல்லது இதை மட்டும் தனித்தோ அப்ளை செய்து கொள்ளலாம்.


     

மூன்று வகையான ஸ்கின் டோன் களுக்கு ஏற்ற ஷேட்களில் கிடைக்கிறது.

     

சிலருக்கு மேக்கப் செய்த பின்பும் முகத்தில் துவாரங்கள் தெரியும். மேக்கப் முடித்தபின் இதை அப்ளை செய்து, அந்த துவாரங்களை மறைக்கலாம்
 
     

விலை: ரூ. 1,900

மேய்பில்லின் வொயிட் சூப்பர் ஃப்ரெஷ் (Maybelline White Super Fresh)

    

`மேய்பில்லின்’னின் புது வரவு. இதில் இருக்கும் யு.வி ஃபில்டர், சூரியஒளியால் சருமத்துக்கு ஏற்படும் கருமை மற்றும் பாதிப்புகளில் இருந்து காக்கும்.

    

இதில் இருக்கும் மினரல், எண்ணெய்ப் பசையையும் வியர்வையையும் உள்ளிழுத்து 12 மணி நேர ஃபேர்னஸ் பொலிவு தரும்.

    

இது... பேர்ல் (Pearl ), ஷெல் (Shell), கோரல் (Coral) என மூன்று ஷேட்களில் கிடைக்கிறது.

    

விலை: ரூ. 150

மேய்பில்லின் ஃபேஷன் புரோ பென்சில் (Maybelline Fashion Brow Pencil)

     

பேனா வடிவில் இருக்கும் இந்த `ஐ புரோ’ பென்சில், புருவங்களை நேச்சுரலாகத் திருத்தும்.

   ஒருமுனையில் பென்சில்போல கூர்மையான பகுதி. மறுமுனையில் ஸ்பாஞ்ச்போல நுனி, பவுடர் நிரம்பிய மூடியால் மூடப்பட்டிருக்கும். பவுடர் தடவிய ஸ்பாஞ்சைக்கொண்டு புருவத்தில் வரைய, அடர்த்தியான புருவம்போல் தோற்றம் அளிக்கும்.

  

பிரவுன் மற்றும் கிரே ஷேட்களில் கிடைக்கிறது.

  

விலை: ரூ. 245

போர்ஜுவா பபுள் கலர் கலெக்‌ஷன் (Bourjois Bubble Color Collection)

     

இங்கிலீஷ் கலர் விரும்புபவர்களுக்கு, இந்த நெயில் பாலிஷ் நிச்சயம் பிடிக்கும்.

     

ஏழு நாட்கள் நீடித்திருக்கும்.

     

நகங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருப்பதால், விலை கொஞ்சம் அதிகம். ஆனால், ஒரு முறை உபயோகித்தவர்கள் இதை விடமாட்டார்கள்.

     

விலை: ரூ. 470

 தி பாடி ஷாப் - கன்சீலர் ஆல் இன் ஒன் (Body Shop Concealer All In One)

     

சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருவளையங்கள் மற்றும் ஆங்காங்கே இருக்கும் கருமைகளை மறைத்து முகத்தைத் தெளிவாகக் காட்டும்.

     

இதில் உள்ள விட்டமின் ஆயில் மற்றும் மருளா ஆயில் கன்சீலராக மட்டும் இல்லாமல், சருமத்தைப் பாதுகாக்கவும் செய்யும்.

     

விலை:ரூ. 295

தி பாடி ஷாப்  பிரஷ் ஆன் பிரான்ஸ் (Body Shop Brush On Bronze)

     

ப்ளஷுக்கு உரிய பிரஷைக்கொண்டு ஒரு ஸ்ட்ரோக் செய்தால் போதும், கன்னங்கள் ஜொலிக்கும்.

     

பார்ட்டி மேக்கப்பில் ரிச் லுக் கொடுக்கும்.

     

விலை:ரூ. 1,295

- சிந்தூரி