Published:Updated:

ரஜினி இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டார்

தாதிச்சியின் ஆரூடப் பேச்சு

##~##

ஸ்திரேலியாவைச் சேர்ந்த தாதிச்சி என்கிற ஜோதிடர் ஒருவர் சென்னைக்கு வந்திருக்கிறார் என்றதும், ஆர்வமாகி பார்க்கச் சென்றோம்.

 பளிச் மொட்டைத் தலை, 'ஓம் நம சிவாய’ என சம்ஸ்கிருதத்தில் மின்னும் கை காப்பு, சின்ன சைஸ் துளசி மணி மாலை.  வார்த்தைக்கு வார்த்தை வந்துவிழும்.. 'ஹரி ஓம்’ மந்திரம்...இப்படி ஒரு பக்கம் ஆன்மிகம் என்றால், ப்ளாக் பெர்ரி, ஆப்பிள் ஐ-மேக் என இன்னொரு பக்கம் பார்ட்டி செம ஹைடெக். மில்ஸ் அண்ட் பூன்ஸ் பப்ளிகேஷனின் ராசி பலன் புத்தகம் வெளியிட வந்த தாதிச்சியை அலேக் செய்தோம். ஓவர் டு தாதிச்சி!

ரஜினி இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டார்

''ஓமகுச்சி மாதிரி அதென்ன தாதிச்சி?''

''என் நாடு ஆஸ்திரேலியா. ஆனால், என் பூர்வீ கம் ஹங்கேரி. என் மூதாதையர்கள் அங்கே நாடோடி பழங்குடியினர். அதனால் ஜாதகம், அதிர்ஷ்டம், வான சாஸ்திரம் எல்லாம் என் ரத்தத்தில் ஊறிய விஷயங்கள். 20 வருடங்களுக்கு முன்பே சென்னை வந்து ஜாதகம் பார்ப்பதை முறைப்படி கற்றுக்கொண்டேன். இந்தியப் புரா ணங்களில் 'தாதிச்சி’ என்றால் மாமுனி என்று அர்த்தம். தன் முதுகுத் தண்டுவடத்தால் வஜ்ரா யுதம் செய்து இந்திரனுக்குப் பரிசளித்தவர் மாமுனி. அவரைப் பற்றி நான் சொல்லி உங்களுக் குத் தெரியவேண்டி இருக்கே!'' (எங்களுக்கு  சோனா பத்திதாங்க தெரியும்!)

''அதை விடுங்க.. எங்க ஊர் வி.ஐ.பி-களோட  ஜாதக கத்தைக் கணிச்சிருக்கீங்களா?''

''லாரா தத்தா-மகேஷ் பூபதி. ரெண்டு பேர் ஜாதகத்துலயும் சுக்ரன் ஒரே கட்டத்துல இருக்கான். (ஆஹா... கட்டம் கட்டிட்டாரு!)  லாரா செம்ம எமோஷனல். பூபதி பயங்கர ஜாலி பார்ட்டி. அடுத்த வருஷம் இந்த ஜோடிக்குள்ள பெரிய்ய்ய்ய அளவில் முட்டல் மோதல் இருக்கும். (புது ஜோடிங்க.. விட்ருங்க!)அடுத்ததா உங்க சூப்பர் ஸ்டார் ஜாதகத்தைப் பார்த்தேன். அவருக்கு சமீபத்துல பெரிய அளவுல உடல்நலக் கோளாறு வந்திருக்குமே? நீங்க நினைக்கிற மாதிரி, அவ்வளவு சீக்கிரத்தில் அரசியலுக்கு வர மாட்டார். (ஏற்கெனவே பத்து, பதினைஞ்சு வருஷம் ஓடிருச்சு சாரே) அவர் பேச்சுக்கு ஒரு சக்தி இருக்கு. தேவை இல்லாம அதை அவர் வீணாக்க மாட்டார்!''

''உலகம் எப்போ அழியும் சாமி?''

''2012-ல் உலக அழிஞ்சுடும்ங்கிறது எல்லாம் சுத்த ஹம்பக். சீக்கிரமே மிகப் பெரிய அளவில் மதிப்பு புரட்சி (Value Revolution) ஏற்படும். போஃபா (பேங்க் ஆஃப் அமெரிக்கா) திவாலாகி டாலரின் மதிப்பு அதலபாதாளத்தில் விழும். உலகெங்கும் டிஜிட்டல் கரன்சி வருவதற்கான வேலை கள் ஆரம்பமாகும். 2015-ல் இருந்து 10 வருஷத்துக்குள் இந்தியா, சீனாவை பின்னுக்குத் தள்ளும். (மக்கள் தொகையில்தானே?) மக்கள் எல்லாம் டிஜிட்டல் அடிமைகளாகப்போறோம்!

ரஜினி இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டார்

''எங்க ஊர் சாமியார்களைப் பத்தி தெரியுமா?''

''தன்னுள் கடவுளைக் கண்டவன் அடுத்தவனிடம் அவனைத் தேட மாட்டான். வரப் போவதை முன்னரே கணிப்பதால் நான் கடவுளாகிவிட முடியாது. அதையும் மீறி என்னை நீங்கள் கடவுள் என்று சொன்னால்,  நாம் எல்லாருமே கடவுள்தான். இதை உங்கள் சாமியார்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்! (சாமி என்ன சொல்ல வர்றீங்க?)

''எங்க மௌன சாமியார் மன்மோகன் சிங்பத்தி ஏதாவது தெரியுமா?''

''அவர் இப்போ பிரேக் இல்லாத பஸ்ஸை ரொம்பவே மெதுவா ஓட்டிக்கிட்டு இருக்கார். அது கூடிய சீக்கிரம் விபத்துக்குள்ளாகும். ஆனால், அவர் மீண்டும் பிரதமர் ஆக பிரகாசமான வாய்ப்பு இருக்கு. இதுக்கு மேல நோ பாலிடிக்ஸ். ஹரி ஓம்!''

நீங்க சொன்னா ரைட்டுதான் சாமி!

- மோ.அருண்ரூப பிரசாந்த், படங்கள்: ஜெ.தான்யராஜு

ரஜினி இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டார்