மனதிலுள்ள மாசுகளை எல்லாம் அகற்றுவது மகாமகத் திருவிழா. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த விழாவில், இம்முறை சுமார் ஐம்பது லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘மாசில்லா மகாமகம்’ என்ற முழக்கத்துடன் கொண்டாடப்பட இருக்கும் இத்திருவிழாவுக்கு அரசுத் தரப்பில் செய்யப்பட்டு ள்ள ஏற்பாடுகளைப் பற்றி விழாக்குழுத் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் என்.சுப்பையன் சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அவை;

பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக திருக்கோயில் சார்ந்த மண்டபங்களில் குளியலறை, சுத்தமான குடிநீர் முதலான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில் திருக்குளங்களின் நீர் வழிப்பாதைகளும், மகாமகக் குளம் மற்றும் அதில் உள்ள 20 தீர்த்தக் கிணறு களும் தூர்வாரப்பட்டுள்ளன.

நகராட்சி சார்பில் வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டு, அவற்றின் வழியாக வரும் நீரும் சுத்திகரிக்கப்பட உள்ளது.இரவு பகல் பாராமல் குளத்தின் தூய்மைத் தன்மை பரிசோதிக்கப்படும். இதன் மூலம் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கப்படும்.

நகரத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய 7 தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள் ளன. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மக்கள் பயணிக்கும் பாதைகளில் உள்ள கோயில்கள், பக்தர்களுக்கான வசதிகள் பற்றிய அறிவிப்புப் பலகைகள் பல்வேறு மொழிகளில் வைக்கப்படும்.

200-க்கும் அதிகமான மருத்துவர்களைக் கொண்ட மருத்துவ உதவி மையங்கள் அமைய உள்ளன. மேலும், விரைவான மருத்துவ மீட்புப் பணிகளுக்கும் தனி வழித்தடங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆட்சியர் அலுவலகம், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் வசதிக்காக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படவுள்ளன.

https://www.facebook.com/SakthiVikatan/videos/802814723156892/

மொத்தத்தில் பிப்ரவரி மாதம் 13-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை நடைபெற உள்ள இந்த மகாமகப் பெருவிழா தூய்மையும் சுகாதாரமும் கொண்ட விழாவாக மட்டுமல்லாமல், வருகை தரும் பக்தர்களுக்குப் பாதுகாப்பானதாகவும், சுகமான நினைவுகளை அவர்கள் மனதில் சுமந்து செல்லும் விழாவாகவும் நடத்த அரசுத் தரப்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

படங்கள்: க.சதீஷ்குமார்