Published:Updated:

சங்கல்பமும் தானங்களும்...

சங்கல்பமும் தானங்களும்...
பிரீமியம் ஸ்டோரி
சங்கல்பமும் தானங்களும்...

மகா பாக்கியம்படங்கள்: க.சதீஷ்குமார்

சங்கல்பமும் தானங்களும்...

மகா பாக்கியம்படங்கள்: க.சதீஷ்குமார்

Published:Updated:
சங்கல்பமும் தானங்களும்...
பிரீமியம் ஸ்டோரி
சங்கல்பமும் தானங்களும்...

காமகம் தினத்தில் குளத்தில் புனித நீராடுவதற்கு முன்பாக முறைப்படி சங்கல்பம் செய்துகொண்டு நீராடவேண்டும் என்பது நியதி. அதுபற்றி, கும்பகோணம் அருள்மிகு நாகேஸ்வரர் கோயிலில் 40 ஆண்டுகள் பணிபுரிந்தவரும் தன்னுடைய பணிக் காலத்தில் 3 மகாமகங்களைக் கண்டவருமான 74 வயது பெரியவர் சர்வசாதக சிரோமணி சிவஸ்ரீ வி.ராமநாத சிவாசார்யரிடம் பேசினோம்.

மகாமகக் குளத்தில் புனித நீராடுவதற்கென்று ஏதேனும் நியதிகள் உள்ளதா? அதற்கென்று சங்கல்பம் எதுவும் செய்துகொள்ள வேண்டுமா?

மகாமகக் குளத்தில் புனித நீராடுவதற்கு முன்பாக சங்கல்பம் செய்துகொள்ள வேண்டியது அவசியம். நாம் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு, அன்றைய திதி, வார, நக்ஷத்திர, யோக, கரணம்  ஆகியவற்றைக் கொண்டு, அதற்கு உரிய மந்திரங்களை உச்சரித்து எந்த நோக்கத்துக்காக அல்லது பலனுக்காக அந்த பூஜையை செய்கிறோமோ அதற்கு உரிய கோரிக்கையை அந்தந்த கடவுளுக்கு முன் சமர்ப்பணம் செய்து துவங்குவதுதான் சங்கல்பம். பூஜைகள், புண்ணிய நதி அல்லது தீர்த்தங்களில் நீராடல், முன்னேர்களுக்கான திதி, தானம் கொடுத்தல் ஆகிய அனைத்துக்குமே தனித்தனி சங்கல்பங்கள் உண்டு.

மகாமகத்தின்போதும் சங்கல்பம் செய்துகொள்வது அவசியம். மகாமகக் குள  நீராடலுக்கு முன்பு காவிரியில் சங்கல்பம் செய்து கொண்டு  நீராட வேண்டும். அதன் பின்னர்  பஞ்சகவ்யம் உட்கொள்ள வேண்டும். மகாமகக் குளத்தில் உள்ள ஒவ்வொரு தீர்த்தத்திலும் சங்கல்பம் செய்து நீராட வேண்டும். அதன் பின்னர் தானம் செய்வது மிகவும் விசேஷம். ஆனால்,  இன்றைக்கு மகாமகத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கோடியை நெருங்குவதால் அவ்வாறு செய்வது சாத்தியமில்லை.  எனவே, ஒரே சங்கல்பமாக, அனைத்து தீர்த்தங்கள், ஜீவநதிகள், தேவர்கள், சக்திகள்  போன்றவர்களை நாம் செய்யும் சங்கல்பத்தில் அழைத்து, நமது வேண்டுதலுக்கு உரிய பலனைக் கொடுக்குமாறு பிரார்த்தித்துக் கொண்டு புனித நீராடவேண்டும். நீராடலுக்குப் பின்னர் நம்மால் இயன்ற தானங்களைச் செய்ய வேண்டும்.

சங்கல்பமும் தானங்களும்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தானங்கள் கொடுப்பது அவசியமா? என்னென்ன தானங்கள் செய்ய வேண்டும்?

புண்ணிய காலங்களில் தானம் செய்வது அவசியம். முற்காலத்தில் அரசர்கள் முதல், மிராசுகள் மற்றும் செல்வந்தர்கள் எல்லோருமே சமுதாயத்தில் உள்ள எளியவருக்கும், கல்விமான்களுக்கும், வேதம் படித்தவர்களுக்கும்  தானங்கள் அளிப்பதை  வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதேபோன்று புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும்போதும், புனித நதிகளில் நீராடும்போதும் மற்றும் முன்னோர்களை நினைவு கூரும்போதும் தானங்கள் செய்ய வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சங்கல்பமும் தானங்களும்...

அக்காலத்தில்  பசு, பூமி, செல்வம்,  உணவு போன்றவற்றை தானமாகக் கொடுத்தனர். இளநீர் ஓட்டிலோ அல்லது பூசணிக்காயிலோ ஒரு துளை இட்டு அதில் முழுவதும் நவரத்தினங்களை  நிறைத்து வைத்தும் தானம் செய்துள்ளதாகக்  கூட குறிப்புகள் உண்டு.  இன்றைய காலக் கட்டத்தில் அவ்வாறு இயலுமா என்றால் இயலாது.  அவரவர் தகுதிக்கேற்ப, தானம் பெற்றுக் கொள்பவருக்கு பயனுள்ள பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும் என்பதே தர்மம் ஆகும்.

சங்கல்பமும் தானங்களும்...

அன்னதானம்

தானங்களில் சிறந்தது அன்னதானம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். சாதாரண காலங்களில் செய்யப்படும் அன்னதானம் தரும் புண்ணியத்தை விடவும், விசேஷ காலங்களில் செய்யும் அன்னதானம் பல மடங்கு கூடுதல் புண்ணியத்தை நம் வாழ்வில் சேர்க்கும். குறிப்பாக, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகப் பெருந்திருவிழாவின்போது அன்னதானம் செய்வது அளவற்ற புண்ணியத்தைத் தரவல்லது. அந்த வகையில் கும்பகோணத்தில் தொடர்ந்து ஒவ்வொரு மகாமகத்தின்போதும் அன்னதானம் செய்து வருகிறார் சமூகநல ஆர்வலரும் ‘ஸ்மரண் கல்யாண் டிரஸ்ட், நிறுவனருமான வி.ரகுநாதன், அவரிடம் பேசினோம்.

சங்கல்பமும் தானங்களும்...

மகாமகத்தில் அன்னதானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?

 “பல வருடங்களுக்கு முன் ஹரித்வாரில் நடைபெற்ற கும்பமேளாவில் கலந்துகொள்ளச் சென்றேன். அதைப் பார்த்ததும் கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகத்தில் அன்னதானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஊருக்கு வந்ததும் என் அப்பாவிடம் என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தேன். அவருடைய ஆசிகளுடன் 1980-ல் நடைபெற்ற மகாமகத்தின்போது முதல்முறையாக அன்னதானம் செய்யத் தொடங்கினோம். சுமார் ஒரு லட்சம் பேர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 1992, 2004-ம் வருஷங்களில் நடைபெற்ற மகாமகங்களிலும் அன்னதானம் செய்தோம். 4-வது முறையாக இந்த ஆண்டு மகாமகத்தில் சுமார் 2.5 லட்சம் பேர்களுக்கு அன்னதானம் வழங்க திட்டமிட்டு உள்ளோம்.

என்னுடைய இந்த முயற்சிக்கு கும்பகோணம் ரோட்டரி கிளப் மற்றும் என்னுடைய நண்பர்கள் பலரும் உறுதுணையாக இருக்கின்றனர்.”

சங்கல்பமும் தானங்களும்...

எத்தனை இடங்களில் அன்னதானம் செய்வதாக உத்தேசம்?

“நீடாமங்கலம் சாலை, காரைக்கால் சாலை, செட்டி மண்டபம், சென்னை சாலை, ஈஷ்வர் ஸ்கூல், காமாட்சி ஜோசியர் தெரு, பக்தபுரி தெரு, சர்வமங்களா கல்யாண மண்டபம் என எட்டு இடங்களில் அன்னதானம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

அன்னதானத்துக்கு உணவு தயாரிக்கவும், தொண்டர்கள் தங்கவும் எங்களுடைய சர்வமங்களா கல்யாண மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. அதற்காக மகாமகம் நடைபெறும் நாட்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மண்டபத்தை வாடகைக்கு விடுவதில்லை. முன்கூட்டி தெரிவிப்பவர்கள், 19,20,21,22 ஆகிய நான்கு நாட்கள் எங்கள் மண்டபத்தில் இலவசமாகத் தங்கிக் கொள்ளலாம். அன்னதானமும் மண்டபத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.”

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத்தின் போது அன்னதானம் செய்யும் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism