Published:Updated:

எல்லாருக்கும் பிறந்த ஊர் கும்பகோணம்!

எல்லாருக்கும் பிறந்த ஊர் கும்பகோணம்!
பிரீமியம் ஸ்டோரி
எல்லாருக்கும் பிறந்த ஊர் கும்பகோணம்!

எல்லாருக்கும் பிறந்த ஊர் கும்பகோணம்!

எல்லாருக்கும் பிறந்த ஊர் கும்பகோணம்!

எல்லாருக்கும் பிறந்த ஊர் கும்பகோணம்!

Published:Updated:
எல்லாருக்கும் பிறந்த ஊர் கும்பகோணம்!
பிரீமியம் ஸ்டோரி
எல்லாருக்கும் பிறந்த ஊர் கும்பகோணம்!

னிதப் பிறவியில் பாவங்கள் விளைவது சுலபம். பாவங்கள் செய்ய நேரிடுவதற்குக் காரணம் அறியாமை. நல்லது-கெட்டதை பகுத்தறிய முடியாதபடி அறியாமை மிகுந்துவிட்டதால், பாவத்துக்கும் தோஷத்துக்கும் ஆளாகிறது மனம். இம்மையும் மறுமையும் சிறக்க இந்த தோஷங்களை முற்றிலுமாகக் களைந்தெறிய வேண்டும்.  என்பதற்காகவே ஜப-தபம் முதலான விஷங்களை மேற்கொண் டார்கள் நம் முன்னோர்கள். ஆனால் அவை எல்லோருக்கும் சாத்தியமானவையா, அவற்றைச் செய்ய இயலாதவர்கள் என்ன செய்வது எனப் போன்ற கேள்விகள் நமக்குள் எழலாம்.

எல்லாருக்கும் பிறந்த ஊர் கும்பகோணம்!

அதற்காகவே, நம் தேசமெங்கும் பற்பல புண்ணிய க்ஷேத்திரங்களும் தீர்த்தங்களும் நிறைந்திருக்கின்றன. நாம் எவ்வழி சென்றாலும் நம்மை எதிர்கொண்டு, நம் பாவங்களைக் களைந்து ஆட்கொள்ளத் தயாராகத் திகழும் அப்படியான புண்ணிய க்ஷேத்திரங்களில் ஒன்றுதான் கும்பகோணம். அது, தன்னகத்தே கொண்டிருக்கும் மகாமக தீர்த்தத்தால், மற்ற தலங்களைக் காட்டிலும் கூடுதல் விசேஷம் பெற்றுத் திகழ்கிறது.

புண்ணியங்கள் நல்குவதில் கும்பகோணத்தின் பெருமை  ‘காசியிலும் வீசம் அதிகம்’ என்பார்கள் பெரியோர்கள். அது எப்படி என்பதை கும்பகோணத்தின் தல மகாத்மியம் மிக அற்புதமாக விவரிக்கிறது.

ஒருமுறை சிவபெருமானைத் தரிசித்த பிரம்மதேவன், “ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒரு பிரளயம் நிகழும்; உலகம் அழியும். மீண்டும் படைப்பைத் தொடர்வதற்குத் தேவையான பீஜங்களும் (மூல வித்துக்களும்) அழியுமே... என்ன செய்வது?’’ என்று கேட்டார். அவரிடம், ‘மாயாமயம்’ ஆகிய மண் குடம் ஒன்றை உருவாக்கி அதில் சிருஷ்டி பீஜங்கள் அனைத்தையும் வைத்து, அவை அழியாமல் இருப்பதற்காக மண் குடத்தை அமிர்தத்தால் நிரப்பி, அத்துடன்  வேதங்கள், உபநிடதங்கள், இதிகாச-புராணங்கள், ஆகம சாஸ்திரங்கள் ஆகியவற்றையும் குடத்தில் இட்டு பிரம்மனிடம் கொடுத்து பஞ்ச பிரம்ம மந்திரங்களால் பூஜிக்கும்படி பணித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்லாருக்கும் பிறந்த ஊர் கும்பகோணம்!

பிரம்மனும் அந்தக் குடத்தை எடுத்துவந்து மங்கல இழை சுற்றி மாவிலை, தர்ப்பை, கூர்ச்சம், தேங்காய் வைத்து, வஸ்திரம் சாற்றி  பஞ்ச பிரம்ம மந்திரங்களால் பூஜித்து வந்தார். வெகு சீக்கிரமே பிரளயம் நிகழ்ந்தது. புனித கும்பம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. பிரம்மன் முதலான தேவர்கள் மீண்டும் சிவனாரைப் பிரார்த்தனை செய்தனர். ‘‘பிரளயத்தின் முடிவில் கும்பம் ஒரு புண்ணிய க்ஷேத்திரத்தில் தங்கும். அப்போது நானே இந்த உலகை மீண்டும் சிருஷ்டிப்பேன்’’ என்று அவர்களுக்கு அருள்பாலித்தது சிவப்பரம்பொருள்.

சிவவாக்குப்படி வெள்ளத்தில் மிதந்து வந்த கும்பம் ஒரு சிறு குன்றின் மீது வந்து தங்கியது. உடனே, வேட்டுவன் வடிவில் பூமிக்கு இறங்கி வந்த சிவபெருமான் தனது வில்லில் இருந்து கணையைச் செலுத்தி அமுதக் கும்பத்தை உடைத்தார். கும்பம் உடைந்து அமிர்தம் பூமியில் வழிந்தோடியது. சிவனாரால் உலக சிருஷ்டியும் நிகழ்ந்தது!

எல்லாருக்கும் பிறந்த ஊர் கும்பகோணம்!

இவ்வாறு அமிர்தக் குடத்தின் மூக்கு விழுந்த இடம் குட மூக்கு  என்ற திருத்தலமாகப் பரிணமித்தது. குடத்தில் இருந்து வழிந்த அமிர்தம் பரவி இரண்டு பள்ளங்களில் தங்கியது. ஒன்று மகாமக திருக்குளம்; மற்றொன்று கும்பேஸ்வரர் கோயிலின் பொற்றாமரைக் குளம். குடமூக்கு எனும் இந்தத் தலத்தின் பெயரே பிற்காலத்தில் கும்பகோணம் என்றானது.

இந்தத் தலத்தின் சிறப்பை,

‘அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே வினஸ்யதி                                                      

புண்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் வாரணாஸ்யாம்  வினஸ்யதி                                                             

வாரணாஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே வினஸ்யதி                                                                   

கும்போகேணே க்ருதம் பாபம் கும்பகோணேவ வினஸ்யதி                                                               

- என்று விவரிக்கிறது  பவிஷ்யோத்திர புராணம்.

அதாவது, ‘ஒருவர் எங்கெங்கெல்லாமோ செய்யும் பாவங்களை ஏதேனும் ஒரு புண்ணிய க்ஷேத்திரத்துக்குச் சென்று போக்கிக் கொள்ளலாம். அப்படியான புண்ணிய தலங்களில் செய்யும் பாவங்களை காசிக்குச் சென்று கரைத்துக்கொள்ளலாம். காசியில் செய்யும் பாவத்தை கும்பகோணத்துக்கு வந்து களையலாம். ஆனால் கும்பகோணத்தில் செய்யப்படும் பாவங்களுக்குப்  விமோசனம் அந்தத் தலத்திலேயே கிடைத்துவிடும். வேறு எங்கும் செல்லத் தேவையில்லை’ என்பது பொருள். அத்தகைய புண்ணியம் பெற்றது  கும்பகோணம். இந்தத் தலத்தின்  மகிமைக்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா என்ன?!

பிரளயத்துக்குப் பிறகு, உலக உயிர்கள் அனைத்தும் தோன்றிய தலம் என்பதால், உயிர்கள் யாவற்றுக்கும் பிறந்த ஊர் எதுவென்றால், அது கும்பகோணம் தவிர வேறில்லை என்பதுவும் இந்தத் தலத்தின் தனிச்சிறப்பாகும்!

எத்தனை திருப்பெயர்கள்?

குடமூக்கு என்பதே கும்பகோணம் எனப்படுகிறது. குடம் என்றால் வடமொழியில் கும்பம் எனப்பொருள்; மூக்கு எனில் கோணம். அமிர்தம் நிரம்பிய கும்பம், அதாவது குடம் வந்து தங்கியதால் இத்தலம் கும்பகோணம் ஆனது. இலக்கியங்களில் குடமூக்கு (கும்பத்தின் மூக்குப் பகுதி - அமுதம் வழிந்த பகுதி) என்று குறிப்பிடப்பட்டாலும், மக்கள் வழக்கில் கும்பகோணம்தான். மேலும், ‘குடம் உடைந்து மேற்பகுதி கோணலாக இருந்ததால் கும்பகோணம் எனப் பெயர் பெற்றது’ எனக் கூறுவாரும் உண்டு.

எல்லாருக்கும் பிறந்த ஊர் கும்பகோணம்!

அருணகிரிநாதர் “மாலைதனில் வந்து கும்பகோண நகர் வந்த பெருமானே” என்று பாடியுள்ளார். அகோரதேவர், ஒப்பிலா மணிப் புலவர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை போன்றோரும் கும்பகோண தல புராணத்தை விவரிக்கும் நூல்களை இயற்றியுள்ளனர். தலத்தை சுற்றியுள்ள கல்வெட்டுகளில் இந்த நகரம் கும்பகோணம், குடந்தை, குடமூக்கு, உய்யக்கொண்டார் வளநாட்டு பிரமதேயம், வடகரை பாம்பூர் தேவதானம் திருக் குட மூக்கு ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறது.

கும்பகோணம்: இந்தப் பெயர், சாரங்கபாணி ஆலயத்தில்,  விஜயநகர மன்னனின் 1385-ம் ஆண்டு  கல்வெட்டில், முதன் முதலாகக் கையளாப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

குடந்தை: ஸ்ரீவைஷ்ணவ திவ்ய பிரபந்தத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில், இந்த நகரம் குடந்தை என அழைக்கப்பட்டுள்ளது. 

குடமூக்கு: ஸ்ரீவைஷ்ண பிரபந்தத்தில்  ஒரே ஓரு இடத்திலும், திருநாவுக்கரசரின் பல தேவாரப்பாடல்களிலும் இந்தப் பெயர் இடம் பெற்றுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism