Published:Updated:

காவிரித்தாய் பெற்ற புண்ணியம்!

காவிரித்தாய் பெற்ற புண்ணியம்!
பிரீமியம் ஸ்டோரி
காவிரித்தாய் பெற்ற புண்ணியம்!

புனித நதி

காவிரித்தாய் பெற்ற புண்ணியம்!

புனித நதி

Published:Updated:
காவிரித்தாய் பெற்ற புண்ணியம்!
பிரீமியம் ஸ்டோரி
காவிரித்தாய் பெற்ற புண்ணியம்!

மாசிமகத்தன்று காவிரியிலும் நீராடிய பிறகே மகாமக தீர்த்தமாடல் பூர்த்தியாகிறது. அன்று காவிரியில் நீராடி பக்தர்கள் புண்ணியம் பெறுகிறார்கள் என்றால், காவிரித் தாய்க்கும் பெரியதொரு புண்ணியம் வாய்க்கிறது. ஆம்! வருடாந்திர மாசி மகத்தன்றும், 12 ஆண்டு களுக்கு ஒருமுறை வரும் மகாமக திருநாளிலும் சார்ங்க பாணி பெருமாள் காவிரியில் தீர்த்தவாரி காண்கிறார்.
இது குறித்த மகத்துவத்தை, பாஞ்சராத்ர ஆகமத்தில் ஸ்ரீப்ரஸ்ன சம்ஹிதை கற்றுத் தேர்ந்தவரும், ஸ்ரீசார்ங்கபாணி, ஸ்ரீசக்ரபாணி மற்றும் ஸ்ரீராமசாமி கோயில்களில் அர்ச்சகராக 20 வருட அனுபவம் கொண்ட எஸ்.சௌந்தரராஜ பட்டாசார்யார் சொல்லக் கேட்டோம்.

சார்ங்கபாணி பெருமாள் ஹேமரிஷியின் பெண்ணாக அவதரித்த கோமளவல்லித் தாயாரை திருக்கல்யாணம் செய்துகொள்ள வைகுண்டத்தில் இருந்து ரதத்தில் எழுந்தருளினார். ‘சிலா ரதம்’ என்ற அந்தக் கல் ரதத்தில்தான் பெருமாள் இந்தக் கோயிலில் எழுந்தருளி உள்ளார்.  இது தவிர உற்சவ காலங்களில்  எழுந்தருள்வது சித்திரைத் திருத்தேர் அல்லது பெரிய தேர் எனும் மரத்தினாலான ‘தாரு ரதம்’; திருமங்கை ஆழ்வார் எழுதிய சார்ங்கபாணி பெருமாளுக்கு மட்டுமே உரித்தான பாசுரங்களைக் கொண்ட ‘திரு எழு கூற்றிருக்கை’ எனும் ‘ஞான ரதம்’ ஆகிய  மூன்று விதமான தேரில் அமர்ந்து பெருமாள் அருள்பாலிக்கிறார். இம்மூன்று ரதங்களையும் வணங்குபவர்களுக்கு அவரவரின் ஆசைகளை பெருமாள் பூர்த்தி செய்து அருள்பாலிக்கிறார் என்பது நம்பிக்கையாகும். சூரியனின் கர்வத்தை மகாவிஷ்ணு தனது சக்ராயுதத்தைக் கொண்டு அடக்குகிறார். ஆகையால் இந்த க்ஷேத்ரத்திற்கு பாஸ்கர[சூரிய] க்ஷேத்ரம் என்றும் பெயர் உண்டு.  இதன் காரணமாக இங்கு பெருமாள் சந்நிதிக்கு நேர்வாசல் கிடையாது. உத்தராயன காலத்துக்கு ஒரு வாசலும், தக்ஷிணாயன காலத்துக்கு ஒரு வாசலும் வகுத்துள்ளனர்.

‘அபரியாப்தம்’ எனும் வடமொழி சொல்லுக்கு ‘திகட்டாத இன்பம்’ அளிப்பது என்று பொருள். ஆகவே ஸ்ரீசார்ங்கபாணியை எத்தனை முறை தரிசித்தாலும் தெவிட்டாத இன்பமும் அருளும் கிட்டும் என்பது உறுதி. 

காவிரித்தாய் பெற்ற புண்ணியம்!

சிவாலயங்களில் இருந்து சிவபெருமான் மகாமக குளத்தில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளும் போது, சார்ங்கபாணி பெருமாள் மட்டும் ஏன் காவிரிக்கரையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்கிறார்?
புராணத்தில் ஒரு நிகழ்ச்சி உண்டு. ஒரு சமயம் நவ நதி கன்னிகைகளும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கந்தர்வனொருவன் அவர்களைக் கடந்து செல்லும் போது அவர்களை வணங்கிச் செல்கிறான். அந்த மரியாதை தனக்குத்தான் என்று ஒவ்வொரு நதி கன்னியும் சொல்ல,  கங்கை அதை ஏற்கவில்லை. தான்தான் மிகவும் சிறந்தவள் என்றும் தனக்கே அந்த மரியாதை என்றும் கூறினாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காவிரித்தாய் பெற்ற புண்ணியம்!

கங்கையின் கருத்தை மற்ற நதி கன்னிகள் ஏற்றாலும் காவிரி மட்டும் ஏற்கவில்லை. அவள், பிரம்மாவிடம் சென்று முறையிட்டாள். பிரம்மாவோ கங்கை கூறியதுதான் சரி என்று சொல்லிவிட்டார். அதை ஏற்காத காவிரி விஷ்ணுவிடம் நியாயம் கேட்கவேண்டி, விஷ்ணுவைக் குறித்து தவம் இயற்றினாள். அவளுடைய தவத்துக்கு இரங்கிய விஷ்ணு, ‘‘காவிரியே, கவலை வேண்டாம். நீதான் மிகவும் புனிதமானவள்’’ என்கிறார்.

காவிரித்தாய் பெற்ற புண்ணியம்!

‘‘எப்படி?’’ என்று கங்கை கேட்டாள்.

‘‘வாமன அவதாரத்தில் நான் எடுத்து வைத்த இரண்டாவது அடியில், கட்டை விரல் பிரம்ம லோகத்தை நோக்கி இருந்தது. பிரம்மா, எனக்கு பாத பூஜை செய்தபோது கீழே விழுந்த நீர்த்திவிலைகள்தான் கங்கை நதியாகும்.

காவிரித்தாய் பெற்ற புண்ணியம்!

ஆனால், தலைக்காவிரி உற்பத்தி யாகும் இடத்தில் இருந்து கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை, மைசூர் அருகில்ஸ்ரீரங்கப்பட்டினம் மற்றும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதராகவும், தஞ்சாவூர் அருகில் கோயிலடியில் ஸ்ரீஅப்பக்குடத் தானாகவும், கும்பகோணத்தில் ஸ்ரீசார்ங்கபாணியாகவும், பூம்புகார் அருகில் திருஇந்தளூரில் பரிமள ரங்கநாதராகவும் எழுந்தருளி உள்ளேன். ஒவ்வொரு தலத்திலும் என் திருவடி இருக்கும் இடத்தில் நீயும், என் திருமுகம் இருக்கும் இடத்தில் உன்னுடைய ஒவ்வொரு கிளை நதியும் எனக்கு மாலையைப் போல் அலங்கரிக்கிறீர்கள். திருவடி இருக்கும் திசையில் பாயும் காவிரியான உன்னிடத்தில்தான் என்னுடைய தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. ஆகவே, கங்கையைவிட நீதான் உயர்ந்தவள், புனிதமானவள்’’ என்று காவிரியைத் தேற்றினார்.

காவிரித்தாய் பெற்ற புண்ணியம்!

இத்தனை சிறப்பு மிக்க காவிரியில் பெருமாள்: வருடாந்திர உற்சவங்கள், மாசி மகம், மகாமகம் காலங்களில் நீராடி, காவிரியே சிறந்தவள் என்பதை உறுதி செய்வதாக ஐதீகம்.  அத்தகைய காவிரியில், சாதாரண தினங்களில் நீராடினாலே புண்ணியம் ஆகும். இந்நிலையில் மாசி மகத்தில் பெருமாளுடன் நீராடினால் மிகவும் சிறப்பாகும். அதுவே மகாமக நீராடல் என்றால் மிக உன்னதமான சகல செளபாக்கியங்களும், செளக்கியங்களும் கிட்டும் என புராணங்கள் கூறுகின்றன.

படங்கள்: க.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism