Published:Updated:

குலசேகரப்பட்டினத்தில் பரமசிவனும் எமதர்மனும்!

குலசேகரப்பட்டினத்தில் பரமசிவனும் எமதர்மனும்!

##~##

சரா திருவிழா - ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம்  மைசூரில் கொண்டாடப்படும். அதே சமயம் தமிழ்நாட்டில் குலசேகரப்பட்டினத்திலும் தசராவை விமர்சையாகக்  கொண்டாடுவார்கள். கரகாட் டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மேளம், தாரை தப்பட்டை முழங்க நடைபெறும் இந்தக் கிராமியக் கலைத் திருவிழாவில், திரும்பிய பக்கம் எல்லாம் வேண்டுதலுக்கு ஏற்ப வேஷம் போட்டு வருவார்கள் பக்தர்கள். பரமசிவனும் எமதர்மனும் ஒரே இடத்தில் நின்று பேசிக்கொண்டு இருப்பதைப்போன்று விதவிதமான காம்பினேஷன்களை குலசேகரப் பட்டினம் எங்கும் பார்க்கலாம்.  

குலசேகரப்பட்டினத்தில் பரமசிவனும் எமதர்மனும்!

தூத்துக்குடி மாதாபட்டினத் தெருவைச் சேர்ந்த முத்தாரம்மன் தசரா குழுத் தலைவர் கண்ணன் கூறுகையில், ''முருகன், பரமசிவன், பார்வதி, இந்திரன், சந்திரன், ராமர், கிருஷ்ணர், ராதை, ஆஞ்சநேயர், அரசன், அரசி, குறவன், குறத்தி, போலீஸ், பிச்சைக்காரன், பைத்தியம், எமதர்மன், மோகினிப் பெண், கரடி, முயல்னு எல்லா வேஷங்களும் போடலாம். புதுசா மாலை போடுற வங்க விதவிதமா சீட்டு எழுதிப் போட்டு, என்ன வேஷம் வருதோ அந்த வேஷம் போடுவாங்க. குறைஞ்சது மூணு வருஷம் வேஷம் போடணும். அதிகபட்சம் 36 வருஷம் வேஷம் கட்டலாம்.  விபத்து, கடன் பிரச்னை, தீராத நோய், பக்கவாதம், கல்யாணம் தள்ளிப்போறது, குழந்தை பாக்கியம் இல்லாததுனு பல குறை களைப் போக்க வேஷம் போடுறாங்க. வேஷம் போடுற எல்லாருமே கண்டிப்பா வீடு, வீடாப் போயி தர்மம் வாங்கணும். அந்தக் காசுல ஒரு பைசாகூடக் குறையாம கோயில் உண்டியலில் சேர்த்திரணும்!'' என்றார் கறாராக.

குலசேகரப்பட்டினத்தில் பரமசிவனும் எமதர்மனும்!

சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை தசரா குழுவைச் சேர்ந்த சுடலைமுத்து, ''நான் 41 வருசமா காளி வேஷம் போடுறேன். 20 வருஷத்துக்கு முன்னால சாப்பாட்டுக்கே ரொம்பக் கஷ்டப்பட்டேன். ஒரு பாட்டிதான். குலசைக்கு மாலை போட்டு வேஷம் கட்டச் சொன்னாங்க. மாலை போட்டு போய்ட்டு வந்தேன். இப்போ சந்தோஷமா இருக்கேன். அதுல இருந்து வருஷம் தவறாம மாலை போடுறதை வழக்கமா வெச்சிருக் கேன்!'' என்றார்.

திருச்செந்தூர் தசரா குழுவைச் சேர்ந்த மாடசாமி, ''ஆரம்பத்துல எனக்கு நம்பிக்கை இல்லை. என் ஃப்ரெண்ட்ஸ் வேஷம்  போட்டாங் கனு நானும் குறவன் வேஷம் போட்டேன். ஜாலியா டூர் மாதிரி போய்ட்டு வந்தேன். அடுத்த வருஷம் பெரிய கஷ்டம் வந்திருச்சு. அடுத்த வருஷம் மனசு குளிர அம்மன் வேஷம் போட்டேன். இப்போ நானே சொந்தமா கோயில் கட்டி இருக்கேன். எங்களுக்கு எந்த நோய், நொடின்னாலும் முத்தாரம்மாதான் டாக்டரம்மா!'' என்று நெகிழ்கிறார்.

- இ.கார்த்திகேயன், ஆ.கோமதிநாயகம், படங்கள்: ஏ.சிதம்பரம்