கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள 60-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் இந்த மகாமக தீர்த்தவாரியில் கலந்து கொண்டாலும், அவற்றில் 12 சிவத்தலங்களையும், 5 வைணவத் தலங்களையும் சிறப்பாகக் கூறுவர்.

புராணத்தின்படி சிவனார் வேடனாக வந்திருந்து கணை தொடுத்து அமிர்தக் கலசத்தை உடைத்தார் எனவும், அதிலிருந்து அமிர்தம் வழிந்தோடி தேங்கிய தீர்த்தங்களே மகாமகக் குளமும், கும்பேஸ்வரர் ஆலயம் என்றும் பார்த்தோம் அல்லவா?

அமிர்தம் வழிந்த இடத்தில் மண்ணைப் பிசைந்து சிவனாரே உருவாக்கி ஸ்தாபித்த லிங்க மூர்த்தம்தான் ஆதி கும்பேஸ்வரர் எனும் திருநாமத்துடன் பிரதானமாக அருள் பாலிக்கிறது.

சமிவனேஸ்வரர் ஆலயம்:  உடைக்கப்படுவதற்கு முன் அந்த அமிர்தக் குடம் பிரளய நீரில் தென் திசை நோக்கி நகர்ந்தது. நெடுந்தூரம் சென்ற பின்னர், கலசத்தின் தர்ப்பையும் மாவிலைகளும் கீழே விழுந்தன. அங்கு வன்னி மரங்களும் லிங்கமும் தோன்றின. அந்த இடத்துக்கு சமிவனம் என்று பெயர் ஏற்பட்டது. அங்கு அருளும் ஸ்வாமிக்கு சமிவனேஸ்வரர் என்று திருநாமம்.

சோமநாதர் ஆலயம்: தொடர்ந்து அமுதக் குடம் வெள்ளத்தில் நகர, ஓரிடத்தில் கலசத்தைக் கட்டியிருந்த உறி(சிக்கம்) கிழக்குத் திசையில் விழுந்தது. அங்கு சோமநாதர் கோயில் உருவானது.

நாரிகேள லிங்கம்: தேங்காய், இன்னும் சிறிது தென் கிழக்கே விழுந்து லிங்கமாக உருவானது. அதுவே நாரிகேள லிங்கம் (அபி முகேசம்) என்று பெயர் பெற்றது.

நாகேஸ்வரர் ஆலயம்: இன்னும் சற்றுத் தள்ளி வில்வம் விழுந்து லிங்கமும் தோன்றியது. இதுவே நாகேஸ்வரர் [சிக்கேஸ்வரர்] கோயிலானது.

கெளதமீசர் ஆலயம்: கலசத்தைச் சுற்றியிருந்த புனித நூல் (பூணூல்) விழுந்து சிதறிய இடத்தில் தோன்றிய லிங்கம் உபவீதேசர் (இப்போதைய கௌதமீசர்) ஆனது.

பாணாதுறை: சிவபெருமான் நின்று, அம்புப் பிரயோகம் செய்த இடம் பாணபுரி (பாணாதுறை) ஆனது; ஈசன் பாணபுரீசர் ஆனார்.

இவற்றை உள்ளடக்கி, அதாவது அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கெளதமேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், மாலதிவனம் - கம்பட்ட விஸ்வநாதர், கோடீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாண புரீஸ்வரர், அமிர்தக்கலசநாதர் திருக்கோயில் ஆகிய 12 முக்கிய திருக்கோயில்கள் மகாமகத்தில் கலந்துகொள்கின்றன.

பெருமாள் திருக்கோயில்கள்

அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், சக்கரபாணி திருக்கோயில், ராமசாமி திருக்கோயில், ராஜ கோபால ஸ்வாமி திருக்கோயில், ஆதி வராகப்பெருமாள் திருக்கோயிலின் உற்ஸவ மூர்த்திகள் மாசி மகம் மற்றும் மகாமகக் காலங்களில் காவிரிக்கரையில் நீராடுவர்.

பஞ்சகுரோச திருத்தலங்கள்
‘கற்றவர் புகழும் கும்பகோணத்தை
கலந்து போற்றும்
பெற்றியரைங் குரோச யாத்திரை
பேணல் வேண்டும்
உற்ஸவத் தலமோரைந்துள்
ஒவ்வொன்றுமொரு நான்மேவிற்
பெற்ற புண்ணியம் பயக்கும்
என்மனார் புலமை சான்றோர்

இது திருக்குடந்தை புராணத்தில் காணப்படும் ஒரு பாடல். திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமி மலை, திருப்பாடலவனம்[கருப்பூர்] ஆகியவற்றை பஞ்சகுரோசத் தலங்கள் என்று அழைக்கின்றனர். கும்பகோணத்துக்குப் புனித யாத்திரை செல்வோர், இந்த தலங்களில் நீராடி ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு, அதன் பிறகே கும்பேஸ்வரரைத் தரிசிக்கச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இந்த ஐந்து தலங்களுமே கும்பகோணத்தின் அங்கமாக விளங்குவதாகத்தான் தல புராணங்கள் கூறுகிறது.

சப்த ஸ்தான திருத்தலங்கள்

கும்பகோண சப்த ஸ்தானங்கள் என்று ஏழு திருத்தலங்களைச் சொல்வார்கள். அவை: கும்பகோணம், திருக்கலய நல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமி மலை, கொட்டையூர், மேலக்காவிரி.

சித்திரை மாதம் நடைபெறும் சப்தஸ்தான விழாவின்போது, அலங்கரிக்கப் பட்ட பல்லக்கில் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர், மங்கள நாயகியுடன் எழுந்தருளி இந்த ஏழு தலங்களுக்கும் உலா சென்று திரும்புவார் என்பது சிறப்பு.