Published:Updated:

மகாமகம் செல்வோர் கவனிக்க!

மகாமகம் செல்வோர் கவனிக்க!
பிரீமியம் ஸ்டோரி
மகாமகம் செல்வோர் கவனிக்க!

மகாமகம் செல்வோர் கவனிக்க!

மகாமகம் செல்வோர் கவனிக்க!

மகாமகம் செல்வோர் கவனிக்க!

Published:Updated:
மகாமகம் செல்வோர் கவனிக்க!
பிரீமியம் ஸ்டோரி
மகாமகம் செல்வோர் கவனிக்க!

செய்ய வேண்டியவை!

• தங்களுடன் ஏதேனும் ஓர் அடையாள அட்டையை  கையோடு எடுத்துச் செல்வது அவசியம்.

• முதியோர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• ஓரு செய்தியை உண்மையானதா அல்லது வதந்தியா என உறுதிப் படுத்திக் கொண்டு அதற்கேற்ப நிதானமாகச் செயல்படுவது நல்லது.

• பாதுகாப்பான மற்றும்  நம்பத் தகுந்த இடங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்களையே ஏற்கவும்.

• காவல்துறை வழிகாட்டுதலை தவறாமல் பின்பற்ற வேண்டும். அத்துடன் காவல்துறை/ அரசு உதவி மையங்களின் அறிவிப்புகளை கவனமாகக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.

• காவல்துறை வகுத்துள்ள வழித் தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.

• இயன்றவரையிலும் குழுவாகச் செல்வதே மிகவும் நல்லது.

• தனியாக விடப்பட்ட, அடையாளம் தெரியாத, கண்ணைக் கவரும் பொருட் களைக் கண்டால் அருகில் உள்ள காவல்துறை உதவி மையங்களுக்கு உடனடியாகத்  தெரியப்படுத்தவும்.

• தேவையான சுமையை மட்டும் கொண்டு செல்லவும்.

• காலணிகளை அதற்கென நியமிக்கப்பட்ட இடங்களில் விட்டுச்செல்லவும்.

• அனைத்து இடங்களிலும், பல மொழிகளில் அமைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு - பலகைகளைப் படித்து அதன் விவரங்களைத் தெரிந்து கொண்டு அதன்படி செயல்படவும்.

• முதியோர்களும், நோயாளிகளும், தாங்கள் உட்கொள்ளும் மருந்து - மாத்திரைகள் - சிகிச்சை குறிப்புகளைக்  கண்டிப்பாக கையோடு எடுத்துச் செல்ல வேண்டும்.

• வாகனங்களை, அரசு அனுமதிக்கு உட்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும்.

• குப்பை அல்லது கழிவுப் பொருட்களை குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போடவும்.

• பிராசாதங்கள் / உணவு பொருட்கள் வாங்கும் இடங்களில் வரிசையாகச் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும்.

• முடிந்தவரை நகருக்கு வெளியே  தயாராகி வருவது நலம். தேவையான பணத்தை தன்னகத்தே  பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் ஏ.டி.எம். இயந்திரங்கள் போதுமான அளவுக்குப் பயன்படாமல் போகலாம்.

செய்யக் கூடாதவை!

• தங்களைப் பற்றிய தனிப்பட்ட குறிப்புகளை, விவரங்களை அறிமுகம் இல்லாதவர்களுடனோ அல்லது பொது இடத்திலோ பிறரிடம் பகிர வேண்டாம்.

• வரிசை முறை என்றால் வரிசையில் மட்டுமே செல்ல வேண்டும்.  அடுத்தவரை முந்திச் செல்ல முயற்சிக்காதீர்கள்.

• வதந்திகளை நம்பக்கூடாது  அதுபோல வதந்திகளை பரப்புவதும் குற்றமாகும். 

• அறிமுகம் இல்லாதவர்களிட மிருந்து உணவுப் பொருட்களையோ அல்லது நொறுக்குத் தீனிகளையோ பெற்று உண்ண வேண்டாம்.

• தனிப்பட்டவர்களின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டாம். அது ஆபத்தில் முடியலாம்.

• ஒருவழிப் பாதைகளில் எதிர் திசையில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

• தனியாகப் பயணிக்காமல் இருப்பது மிகவும் நல்லது. பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சங்கடம் விளைவிக்க வேண்டாம்.

• சந்தேகத்திற்குரிய பொருட்களை நீங்களாக அப்புறப்படுத்துவது அல்லது எடுத்துச் செல்வதை கண்டிப் பாகத் தவிர்க்க வேண்டும்.

• தங்களுடைய உடைமைகளை அறிமுகம் இல்லாதவரின் பாதுகாப்பில் விட்டுச் செல்ல வேண்டாம்.

• விரும்பிய இடத்தில் நீங்கள் விட்டுச் செல்லும் காலணிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டிய கழிவாகிவிடக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

• பொதுச் சொத்துக்கள் மக்கள் பயன் பாட்டுக்கு மட்டுமே; அவற்றை சேதப்படுத்த வேண்டாம். வழிகாட்டிப் பலகைகள் மீது அறிவிப்புகள் ஒட்ட வேண்டாம்.

• கடைகளில் மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்து வாங்கி சாப்பிடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்

• போக்குவரத்துக்கோ, மக்கள் செல்லும் பாதைகளுக்கோ இடையூறாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.

• பிளாஸ்டிக் பொருட்கள், கழிவுப் பொருட்கள், பரிகாரப் பொருட்கள் அல்லது பழைய துணிகளை குளத்திலோ அல்லது மற்ற இடங்களிலோ கண்டிப்பாக தூக்கி எறியக் கூடாது.

• தனிப்பட்ட முறையில் பிரசாதங்கள், உணவுப் பொருட்கள் விநியோகிப்பவர்கள் காவல்துறை உதவியுடன் செய்ய வேண்டும். கூட்ட நெரிசலை உண்டாக்கக் கூடாது.

• விலை உயர்ந்த பொருட்கள், தேவைக்கு அதிகமான பணம், அதிகமான நகைகளைக் கொண்டு செல்வதைத் தவிர்க்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism