மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, ரயில்வே துறை, வருவாய்த் துறை, நகராட்சித் துறை, போக்குவரத்துத் துறை, மின்சார வாரியம், சுகாதாரம், மருத்துவம், உணவு பாதுகாப்புத் துறை ஆகியவற்றுடன் தொலைத்தொடர்பு துறை நிறுவனங்களும் இந்தப் பெருவிழாவுக்காகப் பல மாதங்களாகப் பணியாற்றி வருகிறார்கள். ஒட்டுமொத்தமாக 40,000 பணியாளர்கள் களத்தில் உள்ளனர்.

சுகாதாரப் பணியில்...

ஏறத்தாழ 3000 ஊழியர்கள் பணியாற்றுவார்கள். குப்பைகளை அகற்றுவதற்கு – நகரம் முழுவதும் ஒவ்வொரு 200 மீட்டருக்கும் ஒரு துப்புரவுக் குழு செயல்படும். அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு குப்பைத் தொட்டிகள் வைக்கப்படும். 147 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்படும். சுத்தமான குடிநீர் அளிக்கப்படும்.

அன்னதானத்தில் அளிக்கப்படும் உணவை, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதித்த பின்னரே, விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளும் அதற்கான அதிகாரிகள் நியமனமும் செய்யப் பட்டுள்ளது.

ரயில்வே துறையின் சேவைகள்

சென்னை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் இதர வழித் தடங்களிலிருந்து நாளொன்றுக்கு 70,000 முதல் 80,000 பயணிகளை கையாளக்கூடிய அளவுக்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ரயில்கள் இயக்கப்படுவதால் அதற்கேற்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இவை அனைத்தும் வழக்கத்துக்கு அதிகமான சிறப்பு ஏற்பாடுகளாகவே இருக்கும்.

கும்பகோணம் ரயில் நிலையத்திலும் அதனைச் சுற்றிலும் 5 தகவல் கவுன்ட்டர்களை உள்ளடக்கிய 30 கவுன்ட்டர்கள் [முன்பதிவு, உடனடி டிக்கெட்டுகள்] இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக 30 தற்காலிக கழிப்பறைகளும், ரயில் நிலையத்திலும், அதைச் சார்ந்த பகுதிகளிலும் அமைக்கப்பட உள்ளன. தடையில்லா குடிநீர் வசதியும், ரயில் நிலையத்தில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவ வசதியும், சுகாதாரப் பிரிவு பணியாளர்களும் பணியில் இருப்பார்கள்.

தஞ்சாவூர், மயிலாடுதுறை ரயில் நிலையங்களில் கூடுதலாக 2 கவுன்ட்டர்களும், தாராசுரத்தில் ஒரு கவுன்ட்டரும் அமைக்கப்படும்.

மயிலாடுதுறையிலிருந்து தஞ்சாவூர் மார்க்கத்தில், அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் வசதி கொண்ட பயணிகள் சிறப்பு ரயில்கள் சிறிய இடைவெளிகளில், தேவைக்கு ஏற்ப 24 மணி நேரமும் இயக்கப்படும். சிறப்பு ரயில்களும் இயக்கப்படும். அதுபற்றிய அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படும்.

மக்களின் பாதுகாப்பு, ரயில்கள் மற்றும் ரயில் நிலைய பாதுகாப்புக்காக ஏறத்தாழ 1000 ரயில்வே பாதுகாப்பு படையினரின் சேவை பயன்படுத்தப்படும்.

விழாக்கால சிறப்பு அதிகாரியாக திருச்சி கோட்ட வணிக மேலாளர் பொறுப்பில் இருப்பார். மகாமக காலத்தில் அவசியம் ஏற்பட்டால், அவரைத் தொடர்புகொள்ளலாம்.

காவல் துறை

கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, சட்டம் - ஒழுங்கு, ஒழுங்கமைவு, குற்றவியல், தொழில்நுட்பப் பிரிவு என பல பிரிவுகளாக 24 மணி நேரமும், பல்வேறு நிலையில் உள்ள 30,000 காவல் துறையினர் பணியாற்ற உள்ளனர். 17 திருக்கோயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் மட்டுமல்லாமல், மகாமகக் குளத்தை சுற்றியும், பிரதான சாலைகளிலும் மற்றும் பல்வேறு முக்கியமான இடங்களில்,

130-க்கும் மேலானகண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும். அவற்றைக் கண்காணிக்க சிறப்புக் கட்டுப்பாட்டு அறைக் காவலர்கள் பணியாற்றுவார்கள். 75-க்கும் அதிகமான காவல் உதவி மையங் கள் மட்டுமல்லாமல் ஏறத்தாழ 40 கண்காணிப்புக் கோபுரங்களும் செயல்படும்.

மருத்துவத் துறை

28 அரசு மருத்துவ மனைகள், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஏறக்குறைய 100 தற்காலிக உதவி முகாம்கள், படுக்கையுடன் கூடிய தற்காலிக மருத்துவ முகாம்கள் ஆகியவையும் இயக்கப்படும். இவை அனைத்தும் கூட்ட நெரிசல் மற்றும் விபத்தில் சிக்கியவர்களுக்கான முதலுதவி, சிறு காயங்கள், காய்ச்சல் போன்ற அவசர சிகிச்சைகளை உடனடியாக அளிக்கும் மையங்களாக செயல்படும்.

கிட்டத்தட்ட 500 மருத்துவர்கள் 36 குழுக்களாக 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். இவர்களைத் தவிர 1000-த்துக்கும் மேற்பட்ட செவிலியர்களும், மருத்துவ உதவியாளர்களும் மருத்துவப் பணியாற்றுவார்கள்.

108 ஆம்புலன்ஸ் வசதிகள் தேவைக்கேற்ப இயக்கப்படும்.

50-க்கும் மேற்பட்ட அவசர ஊர்திகள் தயார் நிலையில் இருக்கும். தேவைக்கேற்ப அதிக அளவிலான மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் இருக்கும்.

வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு வரும் வழியிலேயே மருத்துவ உதவித் தேவைப்பட்டால் ஆங்காங்கே அவை கிடைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எப்போதும், எங்கிருந்தும் 108 - 104 - 1100 ஆகிய எண்களையும் உதவிக்கு அழைக்கலாம்.

போக்குவரத்து வசதிகள்

அரசுத் தரப்பில், குடந்தையைத் தலைமை இடமாகக் கொண்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் சென்னையிலிருந்து இயங்கும் மாநில விரைவு போக்குவரத்துக் கழகம் ஆகியவை சிறப்புப் போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்துள்ளன. இதைத் தவிர தனியார் பேருந்துகளும் இயங்கும். மதுரை, தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம், சிதம்பரம், சென்னை வழித் தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

வழக்கமாக இயங்கும் பேருந்துகள் தவிர, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகமும், மாநில விரைவு போக்குவரத்துக் கழகமும் இணைந்து 3000 பேருந்துகளை சிறப்புப் பேருந்துகளாக இயக்கும் ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

நகரைச் சுற்றியுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து, முதியோர்கள், பெண்கள் குழந்தைகள் ஆகியோருக்கு வசதியாக, மகாமகக் குளத்துக்கு 900 மீட்டர் அருகில் வரை செல்லும்படியாக சிற்றுந்து (மினி பஸ்) வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெரிசல் இல்லாத தருணங்களில், மேற்குறிப்பட்டவர்கள் மட்டுமின்றி அனைவருமே பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும்.

சென்ற மகாமகங்களில் குறைந்தது மூன்று கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டியது இருந்தது. அந்தச் சிரமத்தைக் குறைக்கவே இந்த ஏற்பாடு. இதற்காக பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியோடு (ஸ்பான்சர்) வாகனங்கள் இந்த வசதிக்காகப் பயன்படுத்தப்பட உள்ளன.

தற்காலிகப் பேருந்து நிலையங்கள்

இவை அனைத்துமே, மகாமக பெருவிழாவுக்கான சிறப்பு தற்காலிகப் பேருந்து நிலையங்களாக மட்டுமே இயங்கும்.

1. நாகேஸ்வரன் ஐ.டி.ஐ எதிரில் – தஞ்சாவூர் [வலையப்பேட்டை]

2. உள்ளூர் பேருந்து நிலையம் [தஞ்சாவூர் அருகில் உள்ள ஊர்]

3. வலையப்பேட்டை ப்ரிஸ்ட் பள்ளி அருகில் [தேவைப்பட்டால்]

4. அசூர் பேருந்து நிலையம் – அசூர்

5. கொரனாட்டு கருப்பூர் பேருந்து நிலையம் [கொரனாட்டு கருப்பூர்]

6. செட்டிமண்டபம் பேருந்து நிலையம் [மயிலாடுதுறை] – உள்ளூர்

7. நாட்டார் தலைப்பு பேருந்து நிலையம் – பழவத்தான்கட்டளை.

இந்து அறநிலையத்துறை தொடர்பு மையங்கள்

இணை ஆணையர் - மயிலாடுதுறை : 04364 – 259298

உதவி ஆணையர் - கும்பகோணம் : 0435 - 2430564

ஆதி கும்பேஸ்வரர் ஆலயம்: 0435 – 2420276

மின்னஞ்சல்: mail@mahamaham2016.in

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குழுக்களாகத் தொண்டாற்ற... மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் (04362 - 230102).

தனியார் வாகனங்கள் நிறுத்துமிடம்

1. அசூர் பேருந்து நிலையம் அருகில்

2. கொரனாடுகருப்பர் பேருந்து நிலையம் அருகில்

3. செட்டி மண்டபம் பேருந்து நிறுத்தம் அருகில்

4. எம்.ஆர்.எம் எதிரில்

5. ஸ்ரீ னிவாச நகர் நகராட்சிப் பூங்கா

6. நாட்டார் தலைப்பு பேருந்து நிலையம் அருகில்

7. அல் - அமீன் பள்ளித் திடல்

8.  நகராட்சி - நகரப் பேருந்து நிலையம்

9.  நகராட்சி - வெளியூர் பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்தங்களிலும்!

கும்பகோணத்தில் மருத்துவமனைகள்

அரசு மருத்துவமனை, டாக்டர் மூர்த்தி ரோடு. 0435-242 5104

அன்பு மருத்துவமனை, லட்சுமி விலாஸ் தெரு 0435-24321114, 2432165/166/167

கே.எஸ் மருத்துவமனை, மடத்து தெரு 0435-242 3004

சுகம் மருத்துவமனை, ரயில் நிலையம் ரோடு 0435-240 2345

கௌரி மருத்துவமனை, காந்தியடிகள் சாலை 0435-242 1005