Published:Updated:

வீட்டிலேயே மகாமகம்!

வீட்டிலேயே மகாமகம்!
பிரீமியம் ஸ்டோரி
வீட்டிலேயே மகாமகம்!

மதி மகம்

வீட்டிலேயே மகாமகம்!

மதி மகம்

Published:Updated:
வீட்டிலேயே மகாமகம்!
பிரீமியம் ஸ்டோரி
வீட்டிலேயே மகாமகம்!

ன்றைய நவீன உலகில் செல்போனில் பிசினஸ், ஸ்கைப்பில் திருமணம் என சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளப் பழகியிருக்கிறது இளைய தலைமுறை.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாமாங்க தரிசனத்தில் கலந்துகொண்டு பேறு பெறுவது சிறப்பு வாய்ந்தது என்றால், அங்கு செல்ல இயலாதவர்களும் வீட்டிலிருந்தபடியே மாமாங்க தரிசனப் புண்ணியத்தைப் பெற ‘நூதன மாமாங்க தரிசனம்’ ஒன்று உள்ளது.

பெங்களூருவில் வசிக்கும் சக்திவிகடன் வாசகர் பா.சுப்பிரமணிய ராவ் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த மாமாங்கத்தின்போது, தன்னுடைய வீட்டிலேயே 15 நபர்களை ஒன்றிணைத்து நூதன மாமாங்கத்தை செயல்படுத்தி, மாமாங்க புண்ணியத்தைப் பெற்றி ருக்கிறார். வீட்டிலேயே மாமாங்கம் கொண்டாடுவது பற்றி நம் வாசகர்களுக்கு அவர் கூறியதாவது:

வீட்டிலேயே மகாமகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“முதலில் வீட்டுத் தரையை பசுஞ்சாணத்தால் மெழுகி, அரிசி மாவினால், மாமாங்கக் குளத்தின் வடிவத்தை படத்தில் காட்டியுள்ளபடி வரைந்து, சுற்றிலும் கோலம்போட்டு, செம்மண் பூசி, குளத்திலுள்ள 20 தீர்த்தங்களை குறிக்கும் வகையில், பித்தளை கிண்ணங்களில் தூய நீரை நிரப்பி வைத்து, கன்னியா தீர்த்தத்துக்கு சற்று முன்பாக ஒரு பித்தளைக் குடம் (கும்பம்) வைக்க வேண்டும்.

கும்பம் அமைக்கும் முறை:

கும்பம் அமைக்கும்போது, பித்தளைக் குடத்துக்கு மூன்று இழை பருத்தி நூலால் நன்கு சுற்றி, தூய நீரை நிரப்பி, கும்ப ரத்தினமிட்டு வெட்டிவேர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய்ப் பொடி, ஜவ்வாதுப் பொடி போன்ற வாசனைத் திரவியங் களைப் போட்டுப் பன்னீர் ஊற்றி, மாவிலை செருகி, கூர்ச்சத்தை தெற்கு முகமாக வைத்து, தேங்காய் வைத்து, பருத்தி வேட்டி, துண்டு, மலர் மாலைகள், பூணூல் சாற்றி, நன்கு அலங்கரித்து வாழை இலைமேல் நெல் பரப்பி, ஆசன தர்ப்பையின் மீது கும்பம் வைக்க வேண்டும்.

உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ சுப வேளையில் குத்து விளக்கேற்றி, மாமாங்க பூஜையைத் தொடங்கலாம். மாமாங்க நீராடலின் முக்கிய அங்கமாக, கும்பத்தில் மங்களாம்பிகா சமேத ஆதி கும்பேஸ்வர சுவாமியை எழுந்தருளச் செய்ய வேண்டி, அனுக்ஞை செய்துகொண்டு, மஹா கணபதி பூஜை, பீட பூஜை, ஆத்ம பூஜை முறையே நிகழ்த்தி கும்பத்திலும் 20 பித்தளைக் கிண்ணங்களிலும் வருண பகவானை ஆவாஹனம் செய்து ஒவ்வொரு தீர்த்தத்தின் பெயரைச் சொல்லி தியானித்து பூஜிக்கவும். பின்பு நமகம், சமகம், வருண சூக்தம் பாராயணமும், அருள்மிகு மங்களாம்பிகா சமேத ஆதி கும்பேஸ்வர சுவாமியை தியானித்து, ஆவாஹனம் செய்த வில்வ தளத்தால் திரிசதீ அர்ச்சனை செய்து, ஷோடச உபசார பூஜைகள், மங்கள தீபாராதனையையும் சேர்த்து நிகழ்த்தவும். சற்று நேரம் பூசூக்தம், பாக்ய சூக்தம், ருக்வேதீய தேவி சூக்தம், புருஷ சூக்தம், துர்க்கா சூக்தம் ஆகிய வேதங்களை பாராயணம் செய்யவும்.

வீட்டிலேயே மகாமகம்!

பின்பு இஷ்ட  தெய்வத்தின் திருக்கரத்திலிருந்து தீர்த்தம் பெற்று, மாமாங்க  குளத்தில் தீர்த்தவாரி நடத்தி, கும்பத்தில் எழுந்தருளியுள்ள  மங்களாம்பிகா சமேத கும்பேஸ்வர சுவாமியை மீண்டும் தியானித்து, நமஸ்கரித்து, யதாஸ்தானத் துக்கு எழுந்தருளச் செய்து, 20 பித்தளைக் கிண்ணங் களிலுள்ள புனித தீர்த்தங்களை முறையே கும்பத்தில் சேர்க்க வேண்டும். அறுபத்தாறு கோடியே இருபது தீர்த்தங்கள் அடங்கிய புனிதக் குடத்தை, வேத கோஷத்துடன் ஸ்நான கட்டத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

வீட்டிலேயே மகாமகம்!

பாக்கு, வாழை, தென்னை, வில்வம், நெல்லி மரச் சோலைகளின் நடுவே திறந்தவெளியில் எல்லோரும் நின்றுகொண்டு குடந்தையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மங்களாம்பிகா சமேத கும்பேஸ்வர சுவாமியை மனதில் நினைத்து, ஸ்நான ஸங்கல்பத்துடன் அனைத்து தீர்த்தங்களையும் ஒன்றிணைத்து, அனைவரும் தீர்த்தத்தை பகிர்ந்துகொண்டு, அதை அவரவர் வீட்டுக்குக் கொண்டுசென்று நீராடுகையில் பயன்படுத்தி, தீர்த்தவாரி மகிமையைப் பெறலாம்.

வீட்டிலேயே மகாமகம்!

இவ்வாறு மேல் சொல்லப்பட்ட நூதன மாமாங்கத்திலும் நீராட முடியாத அன்பர்கள், மாமாங்க ஆண்டிலேயே  நீராட ஏற்ற நாட்களான அமாவாசை, பெளர்ணமி மாதப் பிறப்பு, தணாயனம், உத்தராயனம், வெள்ளிக்கிழமை, கார்த்திகை நட்சத்திரம், சிவராத்திரி, மாசி மாத மக நட்சத்திரம் ஆகிய ஏதோவொரு நன்னாளில் கும்பகோணம் சென்று, அங்குள்ள பன்னிரண்டு சிவத் தலங்களையும், 5 வைணவ தலங்களையும் நன்கு தரிசித்துவிட்டு, காவிரிக்கரை சென்று சங்கல்பம் செய்து நீராட வேண்டும்.

வீட்டிலேயே மகாமகம்!

பின்பு மாமாங்க குளமடைந்து, ஒரு சுற்றுச் சுற்றி வந்து, மீண்டும் சங்கல்பம் செய்து, முடிந்த அளவு வேத விற்பன்னர்களுக்குத் தானம் செய்து நீராட வேண்டும். இதனை நூதன மாமாங்கம் செய்த அனைவரும் செய்யலாம். மற்ற நாட்களில் சென்று நீராடுவதை விட, மேலே குறிப்பிட்ட நாட்களில் சென்று நீராடுவது சாந்நித்யம் வாய்ந்ததாகும்.

- ம.மாரிமுத்து

புண்ணிய தீர்த்தங்களின் பெயர்கள்:

வீட்டிலேயே மகாமகம்!

1. வாயு தீர்த்தம்
2. கங்கை தீர்த்தம்
3. பிரம்ம தீர்த்தம்
4. யமுனை தீர்த்தம்
5. குபேர தீர்த்தம்
6. கோதாவரி தீர்த்தம்
7. ஈசான்ய தீர்த்தம்
8. நர்மதை தீர்த்தம்
9. இந்திர தீர்த்தம்
10. சரஸ்வதி தீர்த்தம்
11. அக்னி தீர்த்தம்
12. காவிரி தீர்த்தம்
13. யம தீர்த்தம்
14. குமரி தீர்த்தம்
15. நிருதி தீர்த்தம்
16. பயோஷினி தீர்த்தம்(பாலாறு)
17. தேவ தீர்த்தம்
18. வருண தீர்த்தம்
19. சரயு தீர்த்தம்
20. கன்னியா தீர்த்தம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism