பூமேய வாரணனும் நாரணனும் வாரணனும் பொற்பூ மாலைத்
தேமேய விண்ணவரும் நண்ணவரும் பசுமுதலாம் சிறப்பு நல்கி
மாமேய குடமூக்கின் இடமூக்கின் பார்கருணை வடிவின் மேய
பாமேய புகாதி கும்பேசர் தாமரைத்தாள் பணிந்து வாழ்வாம்

என்று ஆதிகும்பேஸ்வரரைப் போற்றுகிறது திருக்குடந்தைப் புராணம். அப்பரும் சம்பந்தரும்கூட இந்தப் பெருமானைப் பாடிப் பரவியிருக்கிறார்கள்.

கும்பகோணத்தில் பற்பல கோயில்கள் உண்டு. இவற்றுள் தேவாரப்பாடல் பெற்ற திருக்கோயில்கள் மூன்று. அவை: குடமூக்கு (கும்பேஸ்வரர் கோயில்), குடந்தை கீழ்க்கோட்டம் (கும்பகோணம் நாகேஸ்வரம் கோயில்), குடந்தைக் காரோணம் (பலருடைய எண்ணப்படி சோமேஸ்வரர் கோயில்; காசி விசுவநாதர் கோயில் என்றும் கூறுவதுண்டு).

இந்த மூன்றில், குடமூக்குக்கு ஞானசம் பந்தரின் பதிகமும், நாவுக்கரசரின் பதிகமும் உள்ளன. குடந்தை கீழ்க்கோட்டத்துக்கு நாவுக்கரசரின் பதிகம் உள்ளது; குடந்தைக் காரோணத்துக்கு ஞான சம்பந்தரின் பதிகம் உள்ளது.

‘குடமூக்கே குடமூக்கே என்பீராகில்
கொடுவினைகள் தீர்ந்து அரனைக் குறுகலாமே’ எனச் சிறப்பிக்கிறார் அப்பர் பெருமான். அவரது மற்றொரு பாடல்:

‘தொண்ட ராகித் தொழுது பணிமினோ
பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக்;
கொண்ட வன்உறை யுங்குட மூக்கிலே’

அதாவது, ‘முற்பிறவியில் செய்த தீவினையைத் துறக்க வேண்டு மானால், சிவபெருமானுக்குத் தொண்டு செய்து தொழுது வணங்குவீராக! அப்பெருமான் மூன்று புரங்களையும் ஒரு நொடிப் பொழுதில் அழித்த வல்லமையுடையவர். அவர், குடமூக்கில் இருந்து அருள் பாலிக்கிறார்’ என்கிறது இந்தப் பாடல். நாமும் நம் தீவினைகள் யாவும் பொசுங்கிட, குடந்தை நாயகனாம் கும்பேஸ்வரரை அனுதினமும் வழிபட்டு வரம் பெறுவோம்.