Published:Updated:

'லோகோவில் மரகத புறா... இதுக்கு தூக்கு போடலாம்!' - இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்படவிழா சுவாரஸ்யங்கள் #IFFC

மா.பாண்டியராஜன்
'லோகோவில் மரகத புறா... இதுக்கு தூக்கு போடலாம்!' -  இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்படவிழா சுவாரஸ்யங்கள் #IFFC
'லோகோவில் மரகத புறா... இதுக்கு தூக்கு போடலாம்!' - இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்படவிழா சுவாரஸ்யங்கள் #IFFC

சென்னையின் முதல் சுயாதீன திரைப்பட விழா, இந்தியாவின் முதல் க்ரவுட் ஃபண்டிங் திரைப்பட விழாவான சென்னை சுயாதீன திரைப்பட விழா கடந்த 4- ம் தேதி அன்று வெற்றிகரமாக நடந்தேறியிருக்கிறது. இதன் தொடக்கவிழாவில் ஒளிப்பதிவாளர் பி.சி,ஸ்ரீராம், மிஷ்கின், கார்த்திக் சுப்பராஜ், லீனா மணிமேகலை, சனல் குமார் சசிதரண், பிரசன்னா, அனன்யா, கமல் ஸ்வரூப் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். அந்த நிகழ்விலிருந்து...

லீனா மணிமேகலை:

சென்னை சுயாதீன திரைப்பட விழா, மக்கள் நேரடியாக, சினிமாவை நேசிப்பவர்கள் நேரடியாகப் பங்கேற்கும் விழா. குறிப்பா, இந்த விழா வெகுஜன சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகர், நடிகைகள் நடத்துகிற விழா அல்ல. இன்னும் குறிப்பாகச் சொன்னால், இது அரசாங்கத்தின் தணிக்கையோ, அரசியல் வதைகளாலேயோ, அரசாங்க அதிகாரிகளாலேயோ அதிகாரம் செய்யப்படாத, அவர்களின் தலையீடோ, இடையீடோ இல்லாத திரைப்படவிழா. இந்த விழாவில் நீங்கள் கேள்வி கேட்கலாம், விவாதம் செய்யலாம். உங்களை யாரும் பவுன்ஸர்கள் வைத்து அரங்கத்தை விட்டு வெளியே அனுப்பமாட்டார்கள். IFFC, முதல் க்ரவுட் ஃபண்டிங் திரைப்பட விழா. இது சென்னையில் நிகழ்ந்திருப்பது ரொம்ப சந்தோஷம். 

இப்படி ஒரு விழாவை சாத்தியமாக்கி, இந்த விழாவிற்கு அலை, அலையாகப் பார்வையாளர்களை, படைப்பாளர்களைத் திரட்டி, தீர்மானமான பண்பாட்டு இயக்கத்தைத் தொடங்கிவைத்துள்ளது தமிழ் ஸ்டுடியோ. சுயாதீன திரைப்பட விழாக்கள் என்றாலே கேரளாவுக்கும், பிற நாடுகளுக்கும் போகணும்னு இருந்ததை மாற்றி, சென்னையிலேயே ஒரு அசல் சுயாதீன விழாவை நடத்திய அருணுக்கு என் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள். ஒரு படத்தை எடுத்தப்பிறகு அதை வெளியிடவிடாமல் விரட்டியடித்தால், சுயாதீன திரைப்பட விழாக்கள் மட்டுமே அப்படியான படைப்புகளுக்கு ஒரு சுதந்திர வெளியை உருவாக்கக்கூடியதாக இருக்கும். 

மிஷ்கின்:

கார்த்திக் சுப்பராஜ்:

நான் குறும்படங்கள் பண்ணின காலத்திலிருந்து தமிழ் ஸ்டுடியோ எனக்குப் பழக்கம். என்னோட குறும்படத்தை விமர்சனம் செய்ய அருணுக்கு அனுப்பினேன். அதை அவர் ரிஜெக்ட் பன்ணிட்டார். இப்போ தமிழ் ஸ்டுடியோவோட லெவலே வேற இடத்துல இருக்கு. ஒரு சுயாதீன திரைப்படம் எடுக்க எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. ஃபிலிம் மேக்கிங்கோட ஆன்மாவே சுயாதீன திரைப்படங்கள்தாம். கமர்ஷியல் படம் எடுத்தாலும், சுயாதீன படம் எடுத்தாலும் படைப்பாளிகளோட நோக்கம், அது மக்கள்கிட்ட போய்ச் சேரணும் என்பதுதான். அதுக்கு இந்த மாதிரியான திரைப்பட விழாக்கள் உதவியா இருக்கிறது. சென்னையில இந்த மாதிரியான விழாக்கள் அதிகமாகணும். அதுக்கான தொடக்கமான இது இருக்கட்டும். அடுத்தடுத்த வருடங்கள் இதை இன்னும் பெருசா பண்றதுக்கு என் வாழ்த்துகள்.

அருண்:

சென்னை சுயாதீன திரைப்பட விழாவின் லோகோவில் இருக்குறது மரகதப் புறா. உங்களில் பல பேருக்கு அந்தப் பறவை பற்றித் தெரிய வாய்ப்பு இல்லை. தற்போது அழிந்து வரும் பறவை இனத்தில் மரகதப் புறாவும் ஒன்று. அதை உலகிற்குச் சொல்லத்தான் அந்தப் பறவையை லோகோவிலும், அடுத்த ஆண்டு விழாவிலிருந்து மரகதப் புறா பெயரில் விருதும் கொடுக்கவுள்ளோம். இந்த லோகோ டிசைன் பண்ணவே நாலு மாதங்கள் ஆச்சு. அந்தளவுக்கு அதுல வொர்க் பண்ணியிருக்கோம்.

இந்த விழா ஒவ்வொரு வருடமும் அரசாங்கத்தோட, பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளோட உதவி இல்லாம நடக்கும். இப்போ இருக்கிற சூழ்நிலையில் ஒரு படம் எடுக்குறதுக்கு நாம் தூக்குப்போட்டுச் சாகுறதே மேல் என்கிற அளவுக்கு சினிமாவை வெச்சிருக்காங்க. ஒரு படம் எடுக்குறது போர் மாதிரி இருக்கு. இந்தச் சமயத்தில் ஒரு சுயாதீன படம் எடுக்குறது அதை உடைக்கிற மாதிரி இருக்கும்.