Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

• பரிணீதி சோப்ரா சமீபத்தில் நடித்த படங்கள் எல்லாம் சொதப்பல். வாய்ப்பு இல்லாமல் தவித்தவர், பப்ளி உடம்பை ஸ்லிம்மாக மாற்றி,  ஒரு ஹாட் போட்டோஷூட் நடத்த... விரைவில் தொடங்கவிருக்கும், `தூம்-4' படத்துக்கு பரிணீதியை டிக் அடித்திருக்கிறார்கள். `கடைசியில், எனக்கான படத்தை நானே கண்டுபிடிச்சுட்டேன்' என ட்விட்டரில் ஸ்மைலி தட்டியிருக்கிறார் பியூட்டி. வெல்கம் பேக்!

இன்பாக்ஸ்

•   தனது 40-வது பிறந்த நாளை, குடும்பத்தினருடன் மாலத்தீவில் கொண்டாடியிருக்கிறார் அபிஷேக் பச்சன். அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், மனைவி ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யா, சகோதரி ஸ்வேதா என, குடும்பத்தினர் அனைவரும் கப்பலில் செல்லும்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஃபேஸ்புக்கில், `கூட்டுக் குடும்பத்தின் கடல் பயணம்' எனப் பகிர்ந்திருக்கிறார் அமிதாப். `வாழ்க்கை ஒரு பயணம். நீங்கள் நேசிக்கும் ஒருவருடன் கைகோக்கையில் அது இன்னும் அழகாகிறது' என்கிறார் அபிஷேக். #தட், `எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' மொமன்ட். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இன்பாக்ஸ்

  `பாகுபலி’யில் சிவகாமியாக மிரட்டல் பார்வையில் வசீகரித்த ரம்யா கிருஷ்ணன், மீண்டும் அதிரடியாக வருகிறார் `ருத்ராக்‌ஷா' எனும் தெலுங்கு படத்தில். இயக்கப்போவது ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ண வம்சி. நான்கு புதுமுக நடிகர்களுடன் சமந்தாவும் நடிக்கும் இந்தப் படத்தில், ரம்யா கிருஷ்ணனுக்கு பேய் வேடமாம். கணவர் இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் நடிக்கும் படம் என்பதால், எதிர்பார்ப்பு கூடுகிறது. #வயசானாலும், உங்க அழகும் ஸ்டைலும் ஆஹா!

•   விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்த `குயின்', இந்தியா முழுக்க செம ஹிட். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக்  ஆகும் இந்தப் படத்தின் தமிழ் வெர்ஷனை  இயக்குவது நடிகை ரேவதி. இரண்டு மொழிகளிலும்  வசனம் எழுதுவது சுஹாசினி. ஹீரோயின் யார் என்ற சஸ்பென்ஸ் மட்டும் தொடர்கிறது.  குயிக்கா சொல்லுங்க... `குயின்' யாருங்க?

•   `இந்தியாவில் நடக்கவிருக்கும் T-20 உலகக்கோப்பை போட்டியில், இந்திய அணி வெல்ல வாய்ப்புகள் அதிகம்' எனச் சொல்லி இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். `அணியில் நெஹ்ரா, ஹர்பஜன், யுவராஜ் என சீனியர்கள் திரும்பியிருப்பது மகிழ்ச்சியான விஷயம். சீனியர்களும் இளம் வீரர்களும் கலந்து இருக்கும் சீரான, வலிமையான அணியாக இருக்கிறது இந்திய அணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடினார்கள். எனவே, நாம் கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது' என்கிறார் சச்சின். இந்தியாவுக்கு ஒரு கோப்பை பா.....ர்சல்.

இன்பாக்ஸ்

•   இன்னும் முதல் படமே வெளிவரவில்லை. அதற்குள் விக்ரம் பிரபுவுடன் ஒரு படம், சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இன்னொரு படம் என இரண்டு படங்களில் புக் ஆகிவிட்டார் மஞ்சிமா மோகன். `அச்சம் என்பது மடமையடா' டீஸருக்குக் கிடைத்த வரவேற்பில் பொண்ணுக்கு மவுசு எகிறிவிட்டது. ஃபேஸ்புக், ட்விட்டரில் பல அக்கவுன்ட்களில் மஞ்சிமாதான் இப்போது டி.பி. அழகு பொண்ணு, வாம்மா கண்ணு!

•   சரப்ஜித் சிங், அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்த விவசாயி. 1990-ம் ஆண்டில் பாகிஸ்தானில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு
22 ஆண்டுகள் சிறையில் இருந்தார். `அவர் குற்றமற்றவர்’ எனக் கருணை மனு அளிக்கப்பட்டும் அது நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையில் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி இறந்தும்போனார். இந்தியாவே பேசிய சரப்ஜித்தின் இந்த வாழ்க்கை, இப்போது பாலிவுட்டில் படமாகிறது. சரப்ஜித் சகோதரியின் பார்வையில் இருந்து சொல்லப்படும் இந்தக் கதையில், சரப்ஜித்தாக ரன்தீப் ஹௌடாவும் அவரது சகோதரியாக ஐஸ்வர்யா ராயும் நடிக்கிறார்கள். படத்துக்காக 28 நாட்களில் 18 கிலோ எடை குறைந்து, மெலிந்துபோன ரன்தீப்பின் புகைப்படத்தை படத்தின் இயக்குநர் ஓமுக் குமார் வெளியிட, அவரது ஈடுபாட்டுக்கு பாலிவுட்டே பாராட்டுக்களைக் குவித்துக்கொண்டிருக்கிறது. ஒரு கைதியின் டைரி!

இன்பாக்ஸ்

•   மலர் டீச்சர் இஸ் பேக்! `பிரேமம்' படத்துக்குப் பிறகு, `இனி நடிக்க மாட்டேன்' என வெளிநாடு சென்ற சாய் பல்லவி, இப்போது மணிரத்னம் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் படத்தின் நாயகி. மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் சாய் பல்லவி நடித்த ‘கலி’ படம் ரிலீஸுக்கு ரெடி.  கடந்த வாரம் ‘கலி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியாக, மறுபடியும் பற்றிக்கொண்டது மலர் டீச்சர் காய்ச்சல்!  மலரே நின்னை காணான் திருநாள்!

•   சென்ற வருடம் கூகுள்.காம் டொமைனையே ஒருவர் விலைக்கு வாங்கியது பரபரப்பானது. கூகுளின் செக்யூரிட்டியை உடைத்து, சான்மே வேத் என்பவர் கூகுள் டொமைனை வெறும் 12 டாலருக்கு வாங்கினார். உடனே சுதாரித்த கூகுள், சில நிமிடங்களில் அந்தப் பரிவர்த்தனையை கேன்சல் செய்து, 12 டாலரைத் திரும்பத் தந்தது. தங்கள் குறையைச் சுட்டிக்காட்டிய சான்மேவுக்கு கூகுள் அப்போது வெளியே சொல்லப்படாத ஒரு பெரும்தொகையை சன்மானமாக வழங்கியது. அது எவ்வளவு என இப்போது அறிவித்திருக் கிறார்கள். கூகுளின் எண் வடிவமான 6006.13 டாலரை முதலில் வழங்கி இருக்கிறார்கள். பின், அதை இரட்டிப்பாக்கினார்களாம். அனைத்தையும் அறக்கட்டளைக்குத் தந்துவிட்டார் சான்மே. கூகுளையே விலைக்கு வாங்கி, அதுக்காக பரிசு வாங்கி, அதை தானம் வழங்கி... செம, செம சான்மே!

இன்பாக்ஸ்

•    ஆஸ்கர் விருது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் குழுவில் இடம்பெற்றிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. பிப்ரவரி 28-ம் தேதி நடக்கவிருக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பிரியங்காவைப் பார்க்கலாம். பொதுவாக உலக அளவில் பிரபலமான முகங்களையே இதற்காகத் தேர்வுசெய்யும் ஆஸ்கர் அமைப்பு, `குவான்டிகோ' சீரியல் மூலம், அமெரிக்க மக்களின் மனதை வென்றதால், முதல்முறையாக இந்தியர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. வெல்டன் பிரியங்கா!