Published:Updated:

வலைபாயுதே V 2.0

வலைபாயுதே V 2.0
News
வலைபாயுதே V 2.0

சைபர் ஸ்பைடர்

facebook.com/writermugil: காசி தியேட்டரில் `விசாரணை’ படம் பார்த்துக்கொண்டி ருந்தேன். ‘விசிலடித்துக் கொண்டாடும் ரசிகன்கூட’ படம் ஓடத் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் உலுக்கும் காட்சிகளில் கரைந்துவிட்டான். இடை வேளை வரை அநாவசிய மான எந்தச் சத்தமும் இல்லை. அப்படி ஓர் அழுத்த மான அமைதி, ஒவ்வொரு ரசிகனையும் வாயடைக்கச் செய்திருந்தது. இடை வேளைவிட்ட அடுத்த நொடியில், தமிழ்நாடு அரசின் செய்தித் துறை வழங்கும் விளம்பரப் படம் திரையில் ஒளிபரப்பானது.இன்றைய முதலமைச்சர் பேசினார்... ‘இந்த அரசு, ஏழை எளிய மக்களுக்காகப் பாடுபடும் அரசு...’ தியேட் டரே சிரிப்பொலியில் அதிர்ந்தது!

வலைபாயுதே V 2.0

facebook.com/venkateshmadurai: இங்கே நமக்கு தனுஷ் மாதிரி ஒரு தம்பி கிடைக்கணும்னு ஆசையா இருக்கு. ஆனா, பிரேம்ஜி மாதிரி தம்பிங்கதான் கிடைக்கிறாங்க!

facebook.com/yuvathamizh: `பெங்களூர் நாட்கள்' பிரமாதம். புரட்சித் தலைவியின் ஆட்சியில் ஒரு படத்துக்கு இப்படியொரு தலைப்பு வைக்க செம தில்லு இருக்கணும்.

facebook.com/venkateshmadurai: சிக்கன நடவடிக்கையாக இருந்த மிஸ்டு கால்கள்தான் இன்று பெரும் செலவுகளுக்கு காரணமாயிருக்கின்றன. #டெலிஷாப்பிங்

facebook.com/saravanan.chandran.77: இரண்டு பேர் நிற்கும்போது யாராவது பிச்சை கேட்டு வந்தால், அதில் ஒருத்தர்தான் பிச்சை போட வேண்டும் எனச் சட்டம் எதுவும் இயற்றவில்லை!

twitter.com/KarthikaSharav1: மனுஷனா பிறந்தா, வாழ்க்கையில ஏதாவது பெருசா சாதிக்கணும். நல்லவேளை, நான் குழந்தையாத்தான் பிறந்தேன்!

twitter.com/skclusive: வாழ்ந்தால் போதுமானது; யாருக்கும் காட்டவேண்டியது இல்லை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வலைபாயுதே V 2.0

twitter.com/VivekChandran07: பெண்கள், ஸ்கூட்டியை வீட்டில் இருந்து வாசலுக்குக் கொண்டுவரும் அழகு இருக்கே... அட அட அட... குடிகாரன் தோத்துருவான்!

twitter.com/Arun_pangali: டாஸ்மாக் வாசலில் மல்லாந்து விழுந்துகிடப்பவனை `எந்திரி’ என்போம்; அம்மா காலடியில் குப்புற விழுந்துகிடப்பவனை `மந்திரி’ என்போம்!

twitter.com/sowmya_16: அஞ்சு நிமிஷம் யூஸ் பண்ற ஏடிஎம் மெஷின்ல Select Language-ல English-னு செலெக்ட் பண்ற நாமதான், `எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்’னு சண்டை போடுறோம்!

twitter.com/virumandi_5: ஒருத்தன் வந்து `அண்ணே... சிம்பு-நயன்தாரா வீடியோ வந்திருக்காமே. அதை எனக்கு அனுப்புண்ணே’னு கேட்கிறான்.  அடேய்... அது படத்தோட டீஸர்டா!

twitter.com/vandavaalam: தடிமாடு வயசாகுது... இன்னமும் பர்த்டேக்கு கேக்கை மூஞ்சில பூசிக்கிட்டுத் திரியுதுக!

வலைபாயுதே V 2.0

twitter.com/i_Soruba: சாமி கும்பிடும்போது முகத்தை சீரியஸா வெச்சிக்க ட்ரை பண்ணுதுங்களே... அப்ப குழந்தைகள் அழகோ அழகு :-)

twitter.com/KartikThoughts:
ராத்திரி முழுக்க புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது. ஆனா, காலையில எந்த பொசிஷன்ல படுத்தாலும் தூக்கம் வருது!

twitter.com/afroos_talk:  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் இந்த ஆண்டு காதலர் தினம் எவ்வளவு சிறப்பானது என்று! ஏன்னா ஞாயிற்றுக்கிழமை வருதுல.

twitter.com/PrakashMahadev: 
  பொண்டாட்டி அழறதைப் பார்த்தா புருஷனுக்குக் கோபம் வருது; புருஷன் சிரிக்கிறதைப் பார்த்தா பொண்டாட்டிக்குக் கோபம் வருது... #என்ன வாழ்க்கைடா!

வலைபாயுதே V 2.0

facebook.com/rajsivalingam: ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் சிறையில் இருந்து ஒரு கைதி தப்பிச்செல்வது என்பது, தண்டனைக்குரிய குற்றம் கிடையாது. 1880-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மனித உரிமை சம்பந்தப்பட்ட சட்டம், `அடைக்கப்பட்ட ஓர் இடத்தில் இருந்து வெளியே செல்ல முயற்சிப்பது, ஓர் உயிரினத்தின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கான தன்மை. அதை யாரும் குற்றமாக எடுத்துக்கொள்ள முடியாது’ எனச் சொல்கிறது. இதன்படி, சிறையில் இருந்து ஒருவன் தன் சொந்த முயற்சியில் தப்பினால், அவனுக்கு எந்தவிதமான மேலதிகத் தண்டனைகளும் கிடையாது. ஆனால், ஒருவன் தப்புவதற்கு யாராவது உதவிபுரிந்தாலோ அல்லது அதற்கான திட்டத்தை வகுத்துக்கொடுத்தாலோ, அவருக்கு ஐந்து வருடங்களுக்கு மேல் சிறைத் தண்டனை வழங்கப்படலாம். சிறையில் இருந்து யாரும் தப்ப முடியாமல், பாதுகாப்பாக அதை அமைத்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை!