Published:Updated:

" தேர்தல்ல நிக்கிறேன்... விஷாலை விரட்டுறேன்.!" - ஜே.கே.ரித்தீஷ் ஓப்பன் சேலஞ்ச்

" தேர்தல்ல நிக்கிறேன்... விஷாலை விரட்டுறேன்.!" -  ஜே.கே.ரித்தீஷ் ஓப்பன் சேலஞ்ச்
" தேர்தல்ல நிக்கிறேன்... விஷாலை விரட்டுறேன்.!" - ஜே.கே.ரித்தீஷ் ஓப்பன் சேலஞ்ச்

" தேர்தல்ல நிக்கிறேன்... விஷாலை விரட்டுறேன்.!" - ஜே.கே.ரித்தீஷ் ஓப்பன் சேலஞ்ச்

'சிவா மனசில புஷ்பா' என்ற படத்தை வாராகி இயக்கி, தயாரித்து, நடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டரைப் பார்த்த அனைவருக்கும் ஷாக்கிங். 'சிவா மனசில சக்தி'தானே, அதென்ன புஷ்பா? என்கிற கேள்வி எழ, போஸ்டரின் பேக் ட்ராப்பில் பாராளுமன்றம் இருந்ததைப் பார்த்து, 'ஓ இது அதுல்ல..!' என்ற பாணியில் பலருக்கும் மைண்ட் வாய்ஸ் ஓட ஆரம்பித்தது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.வி.சேகர், சுரேஷ் காமாட்சி, தருண்கோபி போன்ற பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். விழாவின் இறுதியில் 100 நலிவடைந்த கலைஞர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. விழாவை சிறப்பிக்க வந்தவர்கள் ஜே.கே.ரித்தீஷைப் புகழ்வதும், நடிகர் விஷாலை விமர்சிப்பதுமாகவே இருந்தனர். 
 

தயாரிப்பாளருக்குத் தெருக்கோடியில்கூட இடமில்லை :

கையில் ஒரு தினசரி பேப்பரைக் கொண்டுவந்த தயாரிப்பாளர் ராஜன், நாடு உயர்ந்தது என்று பெட்ரோல் விலை, ஜி.எஸ்.டி பற்றிப் பேசினார். "நயன்தாரா ஐஞ்சு கோடி, அனுஷ்கா மூணு கோடி, தமன்னா மூணு கோடி, தயாரிப்பாளரோட நிலைமை என்ன ஆச்சு... தெருக்கோடியில்கூட இடமில்லை. சினிமா இப்போ நல்லாயில்லை. பத்து வருடமா படம் எடுத்தவங்க யாரும் படம் எடுக்கறதில்லை. இயக்குநர்கள் திட்டமிடாம 80 நாள் எடுக்கிற படத்தை 100 நாள்களுக்குள்மேல் இழுத்துட்டுப்போறாங்க. இயக்குநர்கள் திருந்தணும். சம்பளம் குறைங்கனு நடிகர் சங்கத்துலேயும் சொல்லப்போறேன். உழைக்கிற எல்லாரும் நல்லாயிருக்கணும்" என்றார். 

இப்படிச் சொல்ல எந்தத் தயாரிப்பாளருக்கு தைரியம் இருக்கு - எஸ்.ஏ.சி :

" 'சிவா மனசுல சக்தி'தானே இருக்கணும். புஷ்பா எப்படி உள்ள வந்தாங்கனு யோசனை பண்ணிட்டு இருந்தேன். எனக்குப் புரியலை. எஸ்.வி.சேகர்கிட்ட கேட்டதற்கு, 'என்னங்க புரியலைனு சொல்றீங்க. டிரெய்லர்ல புஷ்பா அடிச்ச அடி சிவா கன்னத்துல டப்பு டப்புனு விழுந்துச்சே, நீங்க கவனிக்கலையா?'னு கேட்டார். சினிமா நல்லாயிருக்கு, கெட்டுப்போகலை. கால்ஷீட் கொடுக்கிறாங்கன்னா, இவ்வளவு செலவு ஆகுது. இவ்ளோ வருமானம் வருது. அதனால், உன் சம்பளத்தை இவ்வளவு வெச்சுக்கோங்க'னு சொல்ல எந்தத் தயாரிப்பாளருக்கு தைரியம் இருக்கு? பெரிய ஹீரோ கால்ஷீட் கொடுத்தா போதும்னு நினைக்கிறாங்க. இயக்குநர்கள் ஹீரோக்களை கைக்குள் வெச்சிக்குறாங்க. இப்படி ஒரு செட் போட்டாத்தான் நல்லாயிருக்கும் சொல்றாங்க. தயாரிப்பாளர் போய் ஹீரோகிட்ட இவ்ளோ ருபாய்க்கு செட் போடச் சொல்றாங்க. என்னங்கனு கேட்டா, ஏன், எனக்கு மார்கெட் இல்லையா? நாளையில இருந்து ஷூட்டிங் வரமாட்டேன்னு சொல்லிடுறாங்க. எல்லோரிடமும் தவறு இருக்கு. 
 

மாறவில்லையென்றால் மாற்றப்படுவீர்கள் - சுரேஷ் காமாட்சி :

"ரித்தீஷ் அண்ணனை முதல் முதல்ல பார்க்கும்போது இரண்டு பக்கமும் மூட்டையில பணம் வெச்சிட்டு உட்கார்ந்திருந்தார். ரொம்ப நல்லவர். ஆனா, தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு தப்புப் பண்ணிட்டார். இவரை நம்பிதான் ஓட்டுப்போட்டாங்க. இதை நான் பேசக் கூடாது. ஆனா, விஷால்னு வர்றதுனால நான் பேசுறேன். ஒரு ஸ்ட்ரைக் அறிவிச்சிருக்கார். ஃபெஃப்சி, ஜிஎஸ்டி... இப்போ கியூப். ஆந்திராவில் கியூப்கிட்ட பேச்சுவார்த்தை நடத்தப்போறோம். அது சரிவரவில்லையெனில், ஸ்ட்ரைக்னு சொல்றாங்க. இவர் பேசாமலே ஸ்ட்ரைக் அறிவிக்கிறார். இவரோட படம் 'இரும்புத்திரை' 29-ம் தேதி ரிலீஸ் பண்றார். அதுக்குள்ளே ஸ்ட்ரைக் முடிஞ்சுடும். ஆனா, அந்தச் சமயங்கள்ல வெளிவர இருக்கிற சின்னப் படங்களோட நிலைமை என்ன ஆகுறது? கியூபிற்குப் பதிலா, சுசில் குப்தாங்கிறவர்கிட்ட பேசி இ-சினிமா கொண்டு வர்றாராம். இப்போ, 2K கிளாரிட்டுக்குப் போயிட்டோம். ஆனா, இ-சினிமா என்பது கம்மியான கிளாரிட்டிதான். இது பத்து வருடத்துக்கு முன்னால் இருந்த டெக்னாலாஜி. அப்டீன்னா, பத்து வருடத்துக்கு முன்னாடி வாங்குன சம்பளத்தை வாங்கிக்குவீங்களா? இன்னைக்கு சினிமாவுல பத்து தயாரிப்பாளருக்காக, 90 சதவிகித தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுறாங்க. இதான் உண்மை. டிக்கெட் புக்கிங் பண்றதுக்கு ஒரு தனி இணையதளம் ஆரம்பிச்சா, யாருக்கும் எந்த பிரச்னையும் இருக்காது. அப்படிப் பண்ணா, கலெக்சன் தெரிஞ்சு நடிகர்களோட மார்கெட் பிரச்னை வரும்னு சொல்றாங்க. ஒரு சக்சஸ் மீட்லேயாவது விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் கலந்துக்குறாங்களா, கிடையவே கிடையாது. பல நடிகர்கள் வெளியே தெரியாம எவ்வளவோ உதவிகள் பண்றாங்க. ஆனா, 2000 ரூபாய்க்கு நோட்டுப் புத்தகம் கொடுத்துட்டு ஊர் முழுக்க விளம்பரம் கொடுத்துட்டு வர்றார் விஷால். உங்க ஐடியாதான் என்ன, நடிகரா இருங்க, அரசியல்வாதியா இருங்க. எங்க கவுன்சிலை வாழவிடுங்க. அவருக்கு ஊருக்குள் நாலு ரசிகர்கள் இருக்காங்க. இப்போ பேசுனதுக்குக்கூட ட்விட்டர்ல சண்டைக்கு வருவாங்க. போன் பண்ணிப் பேசுவாங்க. தயவு செஞ்சு மாறுங்க, இல்லைன்னா மாற்றப்படுவீர்கள்."
 

ரித்தீஷின் சேலஞ்ச் : 

"நடிகர் சங்கத்துல இந்த முறை விஷால் நிற்கட்டும். நான் இந்த வாரம் உறுப்பினராயிடுவேன். கோர்ட் இருக்கு. நடிகர் சங்கத்துல எப்படி பதவிக்கு வர்றார்னு பார்ப்போம். விஷாலை எதிர்த்து நிக்கிறவங்ககூட நான் நிப்பேன். விஷால் என்ன சொன்னாலும் அதை ஏத்துக்க யாருமில்லை. செங்கல்லை வெச்சுக் கட்டடம் கட்டினா மட்டும் புண்ணியம் வராது. சங்கத்துல இருக்குற உறுப்பினர்களை மதிக்கத் தெரியணும். இந்தச் சங்கம் எங்களுடையது. ஆகஸ்ட்ல இருந்து நாங்கதான் பதவியில உட்காரப்போறோம். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குள் விஷால் இனி நுழையவே முடியாது. இது நான் பண்ற ஓபன் சேலஞ்ச்" என்றபடி முடித்தார். 

அடுத்த கட்டுரைக்கு