Published:Updated:

ஆர்கானிக் ஸ்விம்மிங் பாட்டி வைத்தியம்

ஆர்கானிக் ஸ்விம்மிங் பாட்டி வைத்தியம்

கீர்த்தி சுரேஷ் பியூட்டி சீக்ரெட்

ஆர்கானிக் ஸ்விம்மிங் பாட்டி வைத்தியம்

கீர்த்தி சுரேஷ் பியூட்டி சீக்ரெட்

Published:Updated:
ஆர்கானிக் ஸ்விம்மிங் பாட்டி வைத்தியம்

‘ரஜினிமுருகன்’ ஹிட் அடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார், கீர்த்தி சுரேஷ். இன்று, ஏ,பி,சி என ஆல் சென்டர் ஆடியன் ஸின் வைரல் தேவதை. தன் க்யூட்டான எக்ஸ்ப்ரஷன்களால் தமிழ் இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்திருக்கும் இந்த ஹோம்லி லுக் ஏஞ்சலின்  ஃபிட்னெஸ், பியூட்டி சீக்ரெட்ஸ் என்னென்ன..?

டயட்

“ஃபிட்னெஸுக்காக நான் அதிகம் மெனக்கெடுவது இல்லை. தினமும் காலையில் எழுந்ததும் வெந்நீர் ஒரு கிளாஸ் குடிப்பேன். பிறகு, கிரீன் டீ. என்ன பிஸியா இருந்தாலும் பிரேக்ஃபாஸ்ட்டைத் தவிர்ப்பதே இல்லை. காலை டிஃபனில், ஓட்ஸ், பருப்புகள், நட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ் என எல்லாம் கலந்து இருக்கும். ஒரே நேரத்தில் ஹெவியா எடுத்துக்க மாட்டேன். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கொஞ்சம்கொஞ்சமாக சாப்பிடுவேன். பிரேக்ஃபாஸ்ட் முடிந்த ஒரு மணி நேரத்தில், ஏதாவது ஒரு காய்கறி ஜூஸ். அடுத்த ஒரு மணி நேரம் கழித்து ஃப்ரெஷ் ஃப்ரூட் ஜூஸ் எடுத்துக்குவேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் இளநீர் அல்லது  மோர். இது எல்லாமே அளவோடுதான். நான் வெஜிட்டேரியன்கிறதால எனர்ஜி கிடைக்க இப்படி ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஏதாவது காய்கறி, பழ ஜூஸ் எடுத்துக்கிறது ஹெல்ப்ஃபுல்லா இருக்கு. நிறைய நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கிறதால, ஸ்கின் குளோ கிடைக்கும். நம்ம சருமம் ஃப்ரெஷ்ஷாவும் இருக்கும். மதியம், ஓட்ஸ்ல சாதம் மாதிரி செய்து கொஞ்சமா எடுத்துக்குவேன். ஒரு கப் நிறைய வேகவைத்த காய்கறிகள் சாப்பிடுவேன். அப்புறம், மாலை 4 மணிக்கு பாதாம், முந்திரி, திராட்சை, பிஸ்தா, கிஸ்மிஸ்னு கொஞ்சமா நட்ஸ் - டிரை ஃப்ரூட்ஸ் எடுத்துக்குவேன். இரவு, கோதுமை தோசை, சூப்னு ரொம்ப லைட்டா சாப்பிடுவேன்.

ஆர்கானிக் ஸ்விம்மிங் பாட்டி வைத்தியம்

டைம் மேனேஜ்மென்ட்

எல்லாத்துக்கும் மேல,  நேரத்துக்குச் சாப்பிடுவேன். பிரேக்ஃபாஸ்ட்டை காலை ஒன்பது மணிக்குள்ளயும், லஞ்ச்சை மதியம் ஒன்றரை மணிக்குள்ளும், டின்னரை  இரவு எட்டு மணிக்குள்ளும் சாப்பிட்டுடுவேன். ஆரோக்கியமான உணவை, சீரான இடைவெளியில்  எடுத்துக்கிட்டாலே ஹெல்த்தியாக இருக்கலாம்.

தினமும் நீச்சல்

என் அம்மாவும் சிஸ்டரும் தினமும் காலையில் எழுந்ததும் யோகா செய்வாங்க. டைம் இருக்கும்போது அவங்களோடு சேர்ந்து நானும் யோகா செய்வேன். ஜிம் வொர்க் அவுட்ஸ் ரொம்ப செய்றது இல்லை. ஷூட்டிங் இல்லாத நேரத்தில்  கொஞ்சம் வொர்க்அவுட்ஸ் செய்வேன் அவ்வளவுதான். நான் டென்னிஸ் ப்ளேயர். எனக்கு அதை ரொம்பப் பிடிக்கும். ஆனா எப்போதாவதுதான் டென்னிஸ் விளையாடுவேன். நீச்சலும் எனக்குப் பிடிக்கும். தினமும் நேரம் கிடைக்கும்போது எல்லாம் நீச்சல் பயிற்சி செய்வேன். எல்லா பயிற்சிகளையும்விட ஃபிட்டா இருக்க, நீச்சல்தான் பெஸ்ட் எக்சர்சைஸ். ஸ்கூல் படிக்கும்போது ஃப்ரீ ஸ்டைல் ஸ்விம்மிங்ல வெள்ளிப் பதக்கமும், பேக்ஸ்ட்ரோக்ல வெண்கலப் பதக்கமும் வாங்கியிருக்கேன்.

எல்லாம் ஆர்கானிக்

நம்முடைய ஆரோக்கியத்துக்கு உணவு, உடற்பயிற்சி எந்த அளவுக்கு முக்கியமோ,  அதுபோலத்தான் தூக்கமும். கண்டிப்பா ஏழு மணி நேரமாவது தூங்கணும். அப்போதுதான் அடுத்த நாள் ஃப்ரெஷ்ஷா ஃபீல் செய்வோம். நான் எந்த ஒரு காஸ்மெட்டிக்ஸையும் யூஸ் பண்ண மாட்டேன். ஸ்கின் டாக்டரை கன்சல்ட் செய்து, அவர் ரெக்கமெண்ட் செய்வதைத்தான் பயன்படுத்துறேன். சருமத்துக்கு ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. மூலிகை, ஆர்கானிக் பொருட்களைப் பயன்படுத்துவதுதான் நல்லது. மாதத்துக்கு இரண்டு முறை பியூட்டிபார்லர் போவேன். தவிர, கேரளாவில் எனக்கு ஸ்கின்னுக்கு ஆயில், கூந்தலுக்கு ஆயில் தயார்செய்து தருவாங்க. வீட்டில் இருக்கும்போது மட்டும் அதைப் பயன்படுத்துவேன். முடிக்கு தேங்காய் எண்ணெய் உபயோகிப்பேன். அதை, வீட்டிலேயே எங்க பாட்டி தயார் செய்வாங்க.

கேரளாவுல கேந்திரிய வித்யாலயா ஸ்கூல்லதான் நான் படிச்சேன். பிறகு, ‘பியர்ல் அகா டமி’யில், ஃபேஷன் டிசைன் படிச்சேன். படிப்புல ஆவரேஜ்தான். ஆனா, டிராயிங், கர்னாடிக், லைட், ஹிந்துஸ்தானின்னு எல்லா இசை வகுப்பும் போயிருக்கேன். நல்லா டான்ஸ் ஆடுவேன். தவிர, அபாகஸ், கீபோர்டு, வயலின் கத்துக்கிட்டேன். இதுஎல்லாம் நம்மை ரிலாக்ஸா, ஃபப்ரெஷ்ஷா வைத்திருக்க உதவக்கூடியது” எனப் புன்னகைக்கிறார் கீர்த்தி. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- பி.கமலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism