Published:Updated:

“நம் குழந்தைகளுக்கு முட்டாள்தனத்தைதான் கற்பிக்கிறார்கள்!” அருந்ததி ராய் ஆவேசம் #KeralaLiteratureFestival

“நம் குழந்தைகளுக்கு முட்டாள்தனத்தைதான் கற்பிக்கிறார்கள்!” அருந்ததி ராய் ஆவேசம் #KeralaLiteratureFestival

“நம் குழந்தைகளுக்கு முட்டாள்தனத்தைதான் கற்பிக்கிறார்கள்!” அருந்ததி ராய் ஆவேசம் #KeralaLiteratureFestival

“நம் குழந்தைகளுக்கு முட்டாள்தனத்தைதான் கற்பிக்கிறார்கள்!” அருந்ததி ராய் ஆவேசம் #KeralaLiteratureFestival

“நம் குழந்தைகளுக்கு முட்டாள்தனத்தைதான் கற்பிக்கிறார்கள்!” அருந்ததி ராய் ஆவேசம் #KeralaLiteratureFestival

Published:Updated:
“நம் குழந்தைகளுக்கு முட்டாள்தனத்தைதான் கற்பிக்கிறார்கள்!” அருந்ததி ராய் ஆவேசம் #KeralaLiteratureFestival

கேரளாவில் நடைபெற்று வரும் இலக்கியத் திருவிழாவில் 08.02.18 அன்று கலந்துகொண்ட அருந்ததி ராய், நாட்டில் நடைபெற்றுவரும் பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேசினார். அதன் தமிழாக்கத்தின் சுருக்கம் இங்கே... 

''இந்த நேரம் வந்துகொண்டிருக்கிறது. நாம் அதில்தான் வாழ்ந்தாக வேண்டும். ஆனால், அது விரைவிலேயே முடிந்துபோகும். நாம் அடிப்படைவாதத்தைத் தாண்டி அதிகம் பயப்படவேண்டியது இதற்குத்தான். பயமுறுத்துதல் ஃபாசிசத்தின் குழந்தை. நம் குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் பள்ளிகளில் முட்டாள்தனமான விஷயங்களைப் புத்தகங்களில் சொல்லிக்கொடுக்கிறார்கள்.

அடிப்படைவாதத்தை எதிர்ப்பவர்கள், சிறுபான்மைக் குழுவாக இருக்கிறார்கள் என்று நினைக்கவில்லை. நாம் சிறுபான்மையினர் என்று ஒருபோதும் சொல்லமாட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் பயமுறுத்தப்படுகிறார்கள். மில்லியன் கணக்கான மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே பயப்படும் காலகட்டத்தில் வாழ்ந்துவருகிறோம். எனவே, மக்களுக்குத் தைரியத்தை எப்படிக் கடத்தமுடியும் என்பதைப் பார்க்க வேண்டும். நம்முடைய நரம்புகளில் மதவாதம் செலுத்தப்பட்டு, ரத்தத்தை விஷமாக்கிவருகிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நர்மதாவில் என்ன நடந்திருக்கிறது என்பதைப் பாருங்கள். அந்த நதியிலிருந்த நீர், மக்களுக்கு அதிகம் பயன்பட்டு வந்தது. தற்போது, நீர்த்தேக்கங்களில் தேக்கிவைக்கப்பட்டு, பணக்கார்களுக்குக் கொடுக்கப்படுகிறது. ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கும் பங்களாக்களுக்கும் கொடுக்கப்படுகிறது. அதுதான் இவர்களின் நீர்க்கொள்கை. நாங்கள் நீரினை எடுத்துக்கொள்வோம்; அது யாருக்கு எப்படிப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பதை நாங்களே முடிவுசெய்வோம். அதேதான் வணிகத்துறையிலும் நடந்தேறிவருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும், ஜிஎஸ்டி வரியாலும், சிறு வணிகங்கள் சந்தையைவிட்டே வெளியேறிவிட்டன. தற்போது, மிகப்பெரிய வணிகர்கள்தாம் ஆள்கிறார்கள். ஊடகங்கள், சுரங்கங்கள், 3ஜி மற்றும் 4ஜி, ஃபோன் நெட்வொர்க், பெட்ரோகெமிக்கல் என்று அவர்கள் எல்லாவற்றையும் தங்கள் கையில் வைத்திருக்கிறார்கள்'' என்கிறார் அருந்ததி ராய். 

ஜந்தர் மந்தர் போன்ற போராட்டம் செய்வதற்கான இடங்களை மூடுவது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, “கட்டாயம் நாம் சில நேரங்களில், எவ்வளவு தைரியமானவர்கள் என்று காட்டவேண்டும். குறிப்பாக, தற்போது மூடப்பட்ட இடங்களைத் திறக்க முயற்சி செய்ய வேண்டும். நாம் இதனைச் செய்யவில்லை என்றால், அவர்கள் இன்னும் பல இடங்களை மூடுவார்கள். தற்போது என்ன நடந்துவருகிறது என்பதைக் கவனித்தால், எல்லாவற்றையும் புரிந்துகொள்வீர்கள். அதாவது, தலைநகரமே சிலருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. நீர், தகவல்கள் என்று எல்லாமே சிலருடைய கைகளில் இருக்கிறது. ஆதார் முழு செயல்பாட்டுக்கு வரும்போது, நாம் அனைவரும் முழுவதும் கண்காணிக்கப்படுவோம். 

போலீஸோ, ஆர்மியோ, புல்லட்டோ, கொலைகள்மூலம் சர்வாதிகாரம் அதன் பிடியை இறுக்கிக்கொண்டே வருகிறது என்பதனை புரிந்துகொள்ள வேண்டும். ஆதாரின் மூலமாகவும்கூட. ஒவ்வொரு நாளும் நிறைவேற்றப்படும் சட்டங்களின் மூலமும், தொழிலாளர்களின் உரிமைகளை எடுப்பதன் மூலமும், நமக்கு இருக்கும் எல்லாவகையான வெளியையும் அகற்றுவதன் மூலமும் இது நடைபெறுகிறது. பெயர்கள் இல்லாமல், வழக்கறிஞர்கள் இல்லாமல், சிறையில் இருக்கிறோம் என்பதுகூடத் தெரியாமல், ஜார்கண்டிலும் சட்டீஸ்கரிலும் ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் இருக்கிறார்கள். நிலமும் பணமும் சிலருடைய கைகளுக்குச் சென்றுவிட்டது. 

ஜந்தர் மந்தர் எப்போதும் போராட்டம் நடத்துவதற்கான இடமாக இருந்தது. அது தற்போது மூடப்பட்டிருக்கிறது. அங்குதான், நர்மதாவுக்கான போராட்டம், போபால் போராட்டம் எல்லாம் நடைபெற்றது. அங்கு நான் அதிக நேரத்தைச் செலவு செய்திருக்கிறேன். அது மூடப்படும்போது, என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. இனி, போராட்டங்களை நடத்த ராம்லீலா மைதானத்தைத்தான் வாடகைக்கு எடுக்கவேண்டும். அங்கே போராட்டம் நடத்துவதற்குக் குறைந்தபட்சம் 15,000 ரூபாய் கட்டவேண்டும்.'' என்கிறார் அருந்ததி ராய்.