ஸ்ட் மிஸ் ஆனாலும் வருங்கால சூப்பர் ஸ்டார்ஸை அடையாளம் காட்டியிருக்கிறது ஜூனியர் உலகக் கோப்பை. வங்க தேசத்தில் நடந்து முடிந்திருக்கும் ஜூனியர் உலகக் கோப்பையில், இந்திய அணி தோற்றது ஒரே ஒரு போட்டியில்தான். அதுவும் இறுதிப் போட்டி. இந்திய ஜூனியர் அணிக்குப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்ற பின்னர் இந்தியா தோல்வி அடைந்திருக்கும் முதல் போட்டியும் இதுதான். இன்னும் சில மாதங்களில் இந்திய சீனியர் அணிக்குள் இடம்பிடிக்க இருக்கும் திறமைமிகு இளைஞர்களின் மினி டேட்டா இங்கே...

சர்ஃபரஸ் கான்

மும்பையைச் சேர்ந்த சர்ஃபரஸ் நெளஷத் கான்தான் ஜூனியர் உலகக் கோப்பையின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன். இந்தியா விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் அரை சதம். ஒரு போட்டியில் நாட் அவுட் பேட்ஸ்மேன் என அதிரவைத்தார் சர்ஃபரஸ் கான். இந்தியா உலகக் கோப்பையை வென்றிருந்தால், இவர்தான் தொடர்நாயகன். 18 வயதான சர்ஃபரஸ் கான், மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே மும்பையில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் 438 ரன்கள் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இந்தியா முழுக்கப் பிரபலமானவர். `மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகக் களம் இறங்கும் இவர், இந்திய சீனியர் அணியில் யுவராஜ் சிங்கின் இடத்தைப் பிடிப்பார்' என்கிறார்கள்.

ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்!

ரிஷப் பண்ட்

`தோனிக்குப் பிறகு இந்தியாவின் விக்கெட் கீப்பர் யார்?' என்ற கேள்விக்கு, `சொல்லுங்க நான் என்ன பண்ணணும்?' என முன்னால் வந்து நின்றிருக்கிறார் ரிஷப் பண்ட். ஜூனியர் உலகக் கோப்பையில், ஒரு சதம்... இரண்டு அரைசதங்கள் என கெத்து காட்டிய ரிஷப் பண்ட்டின் ஸ்ட்ரைக் ரேட் 100-க்கும் மேலே. ஸ்டம்ப்பிங் செய்வதிலும், பறந்து பறந்து கேட்ச் பிடிப்பதிலும் கில்லி. `இந்தியா இதுவரை இப்படி ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனைப் பார்த்தது இல்லை' என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.

அவேஷ் கான்

இந்திய அணிக்கு உடனடித் தேவை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள். காலியாக இருக்கும் ஸ்ட்ரைக் பெளலர் ஸ்லாட்டுக்கு அற்புதமாகப் பொருந்துவார் அவேஷ் கான். அதிரடி வேகத்திலும் அக்யூரஸியிலும் எதிர் அணி பேஸ்ட்மேன்களைக் கலங்கடித்தார் அவேஷ்.  உலகக் கோப்பையில் ஆறு போட்டிகளில் 12 விக்கெட்டுகளை அள்ளிய அவேஷ் கானின் எக்கனாமி ரேட், வெறும் 3.5 ரன்கள்தான். `பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமான வங்கதேச பிட்ச்சிலேயே அதிரடியாக விளையாடியவர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மைதானங்களில் நிச்சயம் கலக்குவார்' என்கிறார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்!

மயாங் டகார்

இறுதிப் போட்டியில் 50 ஓவர்களில் வெறும் 145 ரன்கள் மட்டுமே அடித்திருந்தாலும், வெற்றிக்காக மேற்கு இந்திய தீவுகள் அணியை 50-வது ஓவர் வரை போராடவைத்தது மயாங் டகாரின் சுழற்பந்துவீச்சு. 10 ஓவர்கள் வீசி, 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் டகார். உண்மையைச் சொல்லப்போனால், டகாருக்கு இன்னும் ஒரு ஓவர் இருந்திருந்தால் இந்திய அணிக்கு வெற்றியே கிடைத்திருக்கும். இந்த உலகக் கோப்பையின் மோஸ்ட் எக்கனாமிக்கல் பந்துவீச்சாளர் இவர்தான். விரைவில் ரவிச்சந்திரன் அஷ்வினுடன் இந்திய அணியில் இவர் கைகோப்பார்.

வாஷிங்டன் சுந்தர்

16 வயதான வாஷிங்டன் சுந்தர், வளரும் நம்பிக்கை நட்சத்திரம். ஆல் ரவுண்டரான வாஷிங்டன், பக்கா சென்னைப் பையன். ஒரு அரை சதமும், ஐந்து விக்கெட்டுகளும் இவரது உலகக் கோப்பை சாதனைகள். வாஷிங்டனின் அப்பா, முன்னாள் கிரிக்கெட் வீரர். இவரது தங்கையும் தற்போது தமிழ்நாடு பெண்கள் அணிக்காக கிரிக்கெட் விளையாடிவருகிறார்.

கிரிக்கெட் ஜீனியஸ் ராகுல் டிராவிட்டின் பயிற்சியால் உருவெடுக்கும் இந்த ஜூனியர் ஸ்டார்ஸில், பலரும் 2019-ம் ஆண்டு சீனியர் உலகக் கோப்பையில் இடம்பிடிப்பார்கள் என்பதே எதிர்பார்ப்பு... கமான் பாய்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு