Published:Updated:

“ நயன்தாராவுக்கு 38 வயசு!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: எல்.ராஜேந்திரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

“நான் வாரா வாரம் புத்தகத்துல படிக்கும்போது அஞ்சு கேள்விகள்ல, ரெண்டுக்காச்சும் பதில் தெரிஞ்சிடும். இப்ப எத்தனை பதில் தெரியுதுனு பார்த்துரலாம். கேளுங்க” என ஆர்வமாகிறார் சுப.வீரபாண்டியன்.

“ஹிஸ்டரி, ஜியாகிரஃபி, பயாலஜினு எந்த சப்ஜெக்ட்ல வேணும்னாலும் கேளுங்க. நான் நல்லா படிக்கிற  பொண்ணு” என கெத்து காட்டுகிறார் பாடகி சக்திஸ்ரீ கோபாலன்.

“குற்றாலத்துல இருக்கேன். கொஞ்சம் குளிரா இருக்கு. சென்னையில வெயில் தொடங்கிருச்சா?” என அன்பாக விசாரிக்கிறார் கவிஞர் கலாப்ரியா.

“ஜாலி கொஸ்டீன்ஸா?  அய்யய்யோ... ஓகே.  இப்ப என்கிட்ட நாலு கேள்விகள் கேட்கப்போறீங்க... சூப்பர்” என உற்சாகமாகிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பாவனா.

“ நயன்தாராவுக்கு 38 வயசு!”

“அமெரிக்க அதிபரின் சுற்றுப்பயணத்துக்காகப் பயன்படுத்தப்படும் பிரத்யேக விமானம் எது?”

விடை: ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம்.

சுப.வீரபாண்டியன்: “ ‘வெள்ளை மாளிகையில் கறுப்பு நிலா’ என அண்ணா எழுதிய வரிகள்தான் ஒபாமாவைப் பற்றிச் சொல்லும்போது ஞாபகத் துக்கு வருகின்றன. ஒபாமாவின் காலத்தில்தான் அண்ணா சொன்னது உண்மையாகியிருக்கிறது. ஆனால், அவர் பயன்படுத்தும் விமானத்தின் பெயர் சத்தியமா எனக்குத் தெரியாதே தம்பி.”

சக்திஸ்ரீ கோபாலன்: வேகமாகப் பதில் வருகிறது... “ஏர் ஃபோர்ஸ் ஒன். இப்படி ஈஸியாவே கேட்டீங்கன்னா, நான் நிச்சயம் குட் மார்க்ஸ் வாங்கிடுவேன்.”

கலாப்ரியா: “ஏர் ஃபோர்ஸ் ஒன். இந்தப் பேருல ஹாலிவுட்ல ஒரு படம்கூட வந்திருக்கு.”

பாவனா:
“அய்யோ... செம ஈஸி. ‘இண்டிபெண்டன்ஸ் டே’னு ஒரு ஹாலிவுட் படம். அந்தப் படத்தை இதுவரை 40 தடவைக்கு மேல பார்த்திருப்பேன். ரொம்பப் பயங்கரமான சூழல்ல அமெரிக்க அதிபர் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ ஃப்ளைட்ல பறப்பார். அதனால எனக்குப் பதில் தெரியும். சூப்பர்ல!”

“ நயன்தாராவுக்கு 38 வயசு!”

“ `இறுதிச்சுற்று' படத்தில் நடித்த பாக்ஸர் நாயகியின் பெயர் என்ன?”

விடை: ரித்திகா சிங்.


சுப.வீரபாண்டியன்:
“ `இறுதிச்சுற்று' படமும் `விசாரணை'யும் ரொம்ப நல்ல படங்கள்’னு சொன்னாங்க. இன்னும் பார்க்க நேரம் அமையலை. கடைசியா ‘ரஜினிமுருகன்’, ‘தாரை தப்பட்டை’, ‘கதகளி’ படங்கள் பார்த்தேன்.   சரி, உங்கள் மனதில் எழும் கேள்வியைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த நாயகியின் பெயர் எனக்குத் தெரியாது. போகிறபோக்கைப் பார்த்தால் ஐந்து கேள்விகளுக்குமே விடை தெரியாமல் போய்விடும் என நினைக்கிறேன்'' என சிரிக்கிறார்.

சக்திஸ்ரீ கோபாலன்:
“எங்க அம்மா படம் பார்த்துட்டு வந்து, `ரொம்ப நல்ல படம். மிஸ் பண்ணிடாதே'னு சொல்லி ஹீரோயினைப் பத்தி பேசிட்டே இருந்தாங்க. அவங்க பேரு மனசுக்குள்ளயே இருக்குங்க. ‘சிங்’னு முடியும். ஆனா, இந்தப் படத்துல வந்த ‘ஏ சண்டைக்காரா...’ பாட்டை ரிப்பீட் மோடில் இப்ப கேட்டுட்டே இருக்கேன்.”

கலாப்ரியா:
“இந்தக் கேள்வியை நான் எதிர்பார்த்தேன். ஆனால், இயக்குநர் பேருதான் கேப்பீங்கனு நினைச்சேன். நடிகை பேரு கேட்டுட்டீங்க. போன வாரம்தான் இந்தப் படத்தோட நடிகை ‘சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டாங்க. அந்தப் பொண்ணு பேரு ரித்திகா சிங்” என உற்சாகமாகச் சிரிக்கிறார்.

பாவனா: “ரித்திகா சிங்... செம போல்டு. பசங்க எல்லாம் கொஞ்சம் தள்ளி நின்னுதான் ‘அக்கா, உங்ககூட செல்ஃபி எடுத்துக்கலாமா?’னு கேட்கிறாங்க. பொண்ணு ஒரு குத்து விட்டா அவ்ளோதான், ஆள் காலி” என்றவர் “நானும் பாக்ஸிங் கத்துக்கப்போறேன். சொல்லி அடிக்கப்போறேன் ஆமா!” எனப் பாட்டாகப் பாடுகிறார். (ஓ... பாட்டாவே பாடிட்டீங்களா?)

“ நயன்தாராவுக்கு 38 வயசு!”

“ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் என்னதான் பிரச்னை?”

விடை: சத்தியமா பதில் தெரியாதுங்க.

சுப.வீரபாண்டியன்: இரண்டு நொடிகள் கழித்து பதில் வருகிறது... “என் பாணியிலேயே பதிலைச் சொல்லிடு றேனே... ஸ்டாலின், கட்சிக்காக ஒவ்வொரு நாளும் உழைக்கிறார். அவர் இல்லையெனில், இன்று கட்சி ரொம்பக் கடுமையான நிலைக்குச் சென்றிருக்கும். தலைவர் கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதிலேயே மீதி பதிலும் அடங்கியிருக்கே.”

சக்திஸ்ரீ கோபாலன்: ஷாக் ஆகிறார் “ஏங்க... ஹிஸ்டரி, ஜியாகிரஃபி பத்தி கேட்கச் சொன்னா,  பாலிட்டிக்ஸ் பத்தி கேட்கிறீங்களே... ஸ்டாலினும் அழகிரியும் கலைஞரோட சன்ஸ்னு தெரியும். ஆனா, என்ன ப்ராப்ளம்னு தெரியலையே. பிரதர்ஸுக்குள்ள ஆயிரம் சண்டை போட்டுப்பாங்க; அப்புறம் சேர்ந்துப்பாங்க. நமக்கு எதுக்கு அதெல்லாம்?”

கலாப்ரியா:
“வேற என்ன, ரெண்டு பேருக்கும் ஆட்சித் தொட்டில் பிரச்னைதான்... ஸாரிங்க. ஆட்சிக் கட்டில் பிரச்னைதான். சரியா?”

பாவனா: பதறுகிறார்... “அய்யோ, நியாயமாரே... ஏன் இப்படி எல்லாம் கேட்கிறீங்க? பாலிட்டிக்ஸ்ல எனக்கு ஏ, பி, சி, டி-கூடத் தெரியாது. இந்த கொஸ்டீனை நான் பாஸ் செய்றேன் பாஸ்.”

“சமீபத்தில் உடைக்கப்பட்ட பழ.கருப்பையாவின் ‘கார்’ என்ன கார்?”

விடை: இன்னோவா.

சுப.வீரபாண்டியன்:
“பழ.கருப்பையாவை நல்லா தெரியும். அவர் கார் என்னன்னு தெரியலையே. அவர் கார் எல்லாம் அடிச்சு உடைச்சதுக்கு அப்புறம் அவர் வீட்டுக்குப் போய்ப் பேசிட்டு வந்தேன். அப்பக்கூட அந்த கார் என்னன்னு கவனிக்கலையே. நேற்றுகூட ஒரு கூட்டத்தில் ‘மேசை தட்டினால்தான் அந்தக் கட்சியில் பொறுப்பய்யா... இல்லேன்னா நீங்க இன்னொரு பழ.கருப்பையா’னு பேசினேன். எல்லாரும் ரசிச்சு சிரிச்சாங்க. சரி, நம்ம பதிலுக்கு வருவோம். பழ.கருப்பையா பழைமை மாறாதவர். அதனால் அம்பாஸிடர் வைத்திருந்தாலும் ஆச்சர்யப்படு வதற்கு இல்லை. கூடவே இன்னோவாகூட வைத்திருக்கலாம்.”

சக்திஸ்ரீ கோபாலன்:
சந்தேகமாக “சோஷியல் மீடியாவில் அடிக்கடி இன்னோவா காரைவெச்சு மீம்ஸ் பார்த்த மாதிரி ஒரு ஞாபகம். மே பி, அவரோட கார் இன்னோவாவா இருக்கலாம். சரியா?” ‘சரி’ என்றதும் குஷியாகிறார் “பார்த்தீங்களா... நம்ம கெஸ்ஸிங் எப்படி?”

கலாப்ரியா: “அடடா... `நாஞ்சில் சம்பத்தோட கார் என்ன?’னு கேட்டால் டக்குனு ‘இன்னோவா’னு சொல்லியிருப்பேன். `பழ.கருப்பையாவின் கார் என்ன?’னு கேட்கிறீங்களே. சரி, அவருக்கும் இன்னோவானு வெச்சுக்கோங்க.” பதிலைக் கேட்டவர் “அ.தி.மு.க-காரங்க எல்லாருமே இன்னோவாதான் வெச்சிருப்பாங்கபோல” சிரிக்கிறார்.

பாவனா: “அரசியல்வாதிகள் பெரும்பாலும் மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி காரைத்தான் பயன்படுத்துவாங்க. இதுல ரெண்டுல ஏதாவது ஒரு காராகத்தான் இருக்கணும். சரியாஜி?” பதிலைக் கேட்டதும் “இன்னோவா பயன் படுத்துறாரா? ரொம்ப நேர்மையான பொலிடீஷியனோ... நமக்கு எதுக்குஜி இது எல்லாம்? நெக்ஸ்ட் கொஸ்டீன் ப்ளீஸ்.”

“ நயன்தாராவுக்கு 38 வயசு!”

``நயன்தாரா மற்றும் த்ரிஷாவின் வயது என்ன?''

விடை: நயன்தாரா 31 வயது, த்ரிஷா - 32 வயது.

சுப.வீரபாண்டியன்: “ஹா... ஹா... ரெண்டு பேரோட வயதையும் சொல் லணுமா? அவங்க நடிக்க வந்த காலங்களில் இருந்து பார்க்கும்போது நிச்சயமாக அவங் களுக்கு 18, 20 எல்லாம் இருக்காது. த்ரிஷாவுக்கு 32, நயன்தாராவுக்கு 33 வயது இருக்கலாம்னு கருதுறேன். கொஞ்சம் கூடச் சொன்னால், அவங்க  கோபப்படப் போறாங்க” என்று சிரித்தவர், “என் மனைவி உள்ளே இருந்து பார்க்கிறாங்க, `என்ன இவரு திடீர்னு த்ரிஷா, நயன்தாரானு பேசுறார்'னு. அலைபேசியை வெச்சதும் அவங்ககிட்ட நீங்க கேட்ட கேள்விகளை எல்லாம் கேட்கப்போறேன்.”

சக்திஸ்ரீ கோபாலன்:
“ரெண்டு பேருக்கும் ஒரே வயசாதான் இருக்கும். 31 வயசு. ரெண்டு பேரும் செம அழகு; நல்லாவும் நடிப்பாங்க. அதனாலதான் இத்தனை வருஷமா சினிமாவுல இருந்து சாதிக்கிறாங்க.”

கலாப்ரியா:
“ `சந்திரமுகி’ படத்துலதான் முதன்முதலில் நயன்தாராவைப் பார்த்தேன். அந்தப் படம் வந்து 15 வருஷங்களுக்கு மேல இருக்கும். அப்படிப் பார்த்தா,  நயன்தாராவுக்கு 38 வயசு இருக்கும். த்ரிஷாவுக்கும் அதேதான். சரியா?” என்றவரிடம் பதிலைச் சொன்னால் “ஏங்க, அவங்களுக்கு இந்த வயசுதான்னு எதைவெச்சு முடிவு பண்ணீங்க? அவங்க உண்மையான வயதை வெளியே சொல்ல மாட்டாங்கங்க” எனச் சிரிக்கிறார்.

பாவனா: “குட் கொஸ்டீன்... நம்ம ஜி.வி.பிரகாஷ் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துல தன்னைவிட வயசு கம்மியான பொண்ணுங்களை லவ் பண்ணுவார். இப்ப ஜி.வி-க்கு 25 வயசு இருக்கும். அப்போ அவரைவிட கம்மியாதான் த்ரிஷாவுக்கும் நயன்தாராவுக்கும் இருக்கும். சரியா ப்ரோ... எப்படி எங்க லாஜிக்?” (பிரமாதம்போங்க!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு