Published:Updated:

``திருட்டுப் பொருள்களைப் போல நாப்கின்களை வாங்க வேண்டியதில்லை!’’ - பேட் உமன் மாயா

``திருட்டுப் பொருள்களைப் போல நாப்கின்களை வாங்க வேண்டியதில்லை!’’ - பேட் உமன் மாயா

``திருட்டுப் பொருள்களைப் போல நாப்கின்களை வாங்க வேண்டியதில்லை!’’ - பேட் உமன் மாயா

``திருட்டுப் பொருள்களைப் போல நாப்கின்களை வாங்க வேண்டியதில்லை!’’ - பேட் உமன் மாயா

``திருட்டுப் பொருள்களைப் போல நாப்கின்களை வாங்க வேண்டியதில்லை!’’ - பேட் உமன் மாயா

Published:Updated:
``திருட்டுப் பொருள்களைப் போல நாப்கின்களை வாங்க வேண்டியதில்லை!’’ - பேட் உமன் மாயா

இந்தியாவில் 12 சதவிகிதப் பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர். பயன்படுத்தாத 88 சதவிகித பெண்களில், 23 சதவிகிதம் பேரால் அதை வாங்க முடிவதில்லை என்கிறது, கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள். கிராமப்புறப் பள்ளிகளில் படிக்கும் 23 சதவிகிதப் பெண் குழந்தைகள், மாதவிடாய் கால அசெளகரியங்களுக்காகப் பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொள்கிறார்கள். மாதவிடாய் காலத்தில் சரியான சுகாதாரம் இல்லாமல் 70 சதவிகித கர்ப்பப்பை நோய்கள் (புற்றுநோய் உள்பட) ஏற்படுகின்றன. குறைந்தது 10 சதவிகிதம் பெண்கள் `மாதவிடாய்' என்பதை நோயாகக் கருதுகின்றனர். `யூத் கி ஆவாஸ்’ எனும்  தன்னார்வ அமைப்பால் கடந்த ஆண்டின் இறுதியில் தெரிவிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் இவை.

இந்தியப் பெண்களில் 70 சதவிகிதம் பேர், நாப்கினுக்காகச் செலவுசெய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். சுமார் 88 சதவிகிதப் பெண்கள் துணி, சாம்பல், உமி ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழர் `அருணாச்சலம் முருகானந்தத்தின்’ கதையைத் தழுவி எடுக்கப்பட்ட `பேட்மேன்’ திரைப்படமும், அதையொட்டி பிரபலங்கள் நாப்கின்களோடு பதிந்த புகைப்படங்களும் ட்ரெண்டிங் பிரசாரமாக முடிந்துவிடக் கூடாது என்பதே நம் விருப்பம். `நாப்கின் பயன்பாட்டில் இருக்கும் தேக்கத்தை, விழிப்புஉணர்வு குறைவாக மட்டுமே சிலர் புரிந்துகொள்வதாகவும், அதற்கான பொருளாதாரச் சுமையும் வரிவிதிப்பும் மாதவிடாய் காலத்தை மேலும் சுமையாக்குகின்றன’ என்னும் செயல்பாட்டாளர்களின் குரல்களையும் கேட்க முடிகிறது.

பெண்களின் அடிப்படை உரிமையான சானிட்டரி நாப்கின்கள், மிகக் குறைந்த விலையிலும் மாணவிகளுக்கு விலையே இல்லாமலும் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தும் இன்னொரு நேயக்குரல், மத்தியப்பிரதேசத்தின் மாயா விஷ்வகர்மாவுடையது. 26 வயது வரை நாப்கினைத் தொட்டுகூடப் பார்த்திராத மாயாவின் அனுபவங்களையும் செயல்பாடுகளையும் பற்றி அவருடன் ஸ்கைப்பில் உரையாடினோம்...

``நாப்கின்களைப் பயன்படுத்தவேண்டிய அவசியம், அதன் விலையில் இருக்கும் சிக்கல்கள் ஒருபக்கம் இருக்கட்டும். `மாதவிடாய்’ என்னும் இந்த இயற்கையான நிகழ்வு, இந்த நூற்றாண்டிலும் பெண்களை முடக்கி உட்காரவைத்திருக்கும் நடைமுறைதான் விவாதத்துக்கு வரவேண்டும்'' என்கிறார் மாயா. ``மத்தியப்பிரதேச மாநிலம், நர்சிங்பூர் மாவட்டத்தில் தெத்வாரா என்னும் சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் நான். நான் பூப்பெய்தியபோது `துணிகளைப் பயன்படுத்த வேண்டும்' என்று என் அக்கா ஒருவர் கூறினார். அவருக்கும் அப்படித்தான் சொல்லிக்கொடுத்திருப்பார்கள் என எண்ணுகிறேன். ஏதேதோ துணிகளைப் பயன்படுத்தி, பலமுறை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டேன். என் 26-வது வயது வரை நாப்கினைக் கையால் தொட்டதில்லை. என் பெற்றோர் விவசாயக் கூலிகள். நான் நிறைய படிக்கவேண்டும் என்பதில் என்னைவிட அதிக அக்கறைகொண்டிருந்தவர்கள். ஜபல்பூர் பல்கலைக்கழகத்தில் பயோகெமிஸ்ட்ரி முதுநிலைப் படிப்பு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆராய்ச்சிப் படிப்பு, அதைத்தொடர்ந்து கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ரத்தப் புற்றுநோய் ஆராய்ச்சிக்  குழுவில் சில வருடப் பணி” என்றவரிடம், பேட் உமனாக மாறிய கதையைக் கேட்டோம்.

``வெளிநாட்டில் வேலையை உதறிவிட்டு, இந்தியா திரும்பியபோது பெரிய லட்சியங்கள் எதுவுமில்லை” சிரிக்கிறார்.

``மாதவிடாய் சுகாதாரத்தின் முக்கியத்துவம் மற்றும் நோய், தீட்டு, குற்றவுணர்வு, அசுத்தம் என்பதாகக் கற்பிக்கப்பட்டிருக்கும் மூடநம்பிக்கையைப் பற்றிய விழிப்புஉணர்வை  ஏற்படுத்த நினைத்தேன். போகப்போக, விருப்பம் இருந்தாலும் நாப்கினை வாங்கக்கூடிய பொருளாதார வலிமையில்லாத மக்களின் நிலை புரியத் தொடங்கியது. பழங்குடியின கிராமங்களின் மாணவிகளிடமும் பெண்களிடமும் பேசியபோது, புதிய தெளிவு கிடைத்தது. தொடர்ச்சியான தேடலில், நிஜ பேட்மேன் முருகானந்தத்தைச் சந்தித்து, குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை வாங்கினேன். வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த பணத்தையும் நம்பிக்கையையும் வைத்து `சுகர்மா’ நிறுவனத்தைத் தொடங்கினேன். 2 ரூபாய்க்கு ஒரு பேடை அளிக்க முடிகிறது. கலிஃபோர்னியா நண்பர்களின் பண உதவியும் `சுகர்மா'வுக்காக ஆதரவு திரட்டும் செயற்பாட்டாளர்களும்தான் என் முயற்சி தொடர்வதற்கு காரணம்” என்றார் மாயா.

`` `பேட் உமன்', `பேட் தீதி', 'பேட் ஜீஜி' இவை எல்லாம் இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் செல்லப்பெயர்கள். என் செயல்பாடுகள், திடீரென உதித்த ஞானமல்ல; முழுக்க முழுக்க என் வலிகளும் அனுபவங்களும்தான்; விற்பனை குறிக்கோள் அல்ல. 21 மாவட்டங்களில் இருக்கும் 450-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்தவேண்டும். இதை ஓர் இயக்கமாக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்கிறார் மாயா. 

பேட் உமனைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரான மாயாவைப் பற்றிக் கேட்டதும்,

``ஆம் ஆத்மியில் தொடர்ந்து இயங்கும் சாதாரண உறுப்பினர் நான். ஆம் ஆத்மி சார்பில் லோக் சபா தேர்தலில் போட்டியிட்டேன். தோல்வியைச் சந்தித்தாலும், மக்களிடம் சென்று பிரச்னைகளைப் பற்றி அறிந்த அனுபவம் மிகப்பெரியது. தொடர்ந்து இயங்குவதுதான் இலக்கு'' என்றவர், மாணவிகளுக்கும், இளம் பெண்களுக்கும்  ஒரு கோரிக்கை வைத்தார். ``வெட்கமடைந்தோ, பயந்தோ கடைக்குச் சென்று நாப்கின்கள் வாங்காதீர்கள். கறுப்புப் பைகளில் அவற்றை வாங்கவேண்டிய அவசியமில்லை. திருட்டுப் பொருள் வாங்குவதைப்போல நாப்கின்கள் வாங்கப்படுவதை நிறுத்துவதுதான், மாதவிடாய் விழிப்புஉணர்வை நோக்கிய முதல் படி” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism