Published:Updated:

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 1

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 1
செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 1

புதிய பகுதி

பிரீமியம் ஸ்டோரி

`ஆள் பாதி, ஆடை பாதி' என்பார்கள். பெண்கள் அதை நம்புபவர்கள்... நிரூபிப்பவர்கள்! தங்களுக்கான ஆடைத் தேர்வை, பழகிய பெண்கள் முதல் திரைப்படத்தில் பார்க்கும் பெண்கள்வரை கவனித்து, அதன்படியே தங்களை மெருகேற்றிக்கொள்ளும் பெண்கள் இங்கே அதிகம். ஆடைகளைப் பற்றி அலுக்காமல் பேசுபவர்கள், அதைப் பற்றிய பேச்சுகளை ரசிப்பவர்கள். உங்களுக்கான ஒரு கிரிஸ்பி ஸ்நாக்ஸ்... ஸ்டார் பெண்கள் தங்களின் ஆடைத் தேர்வு பற்றிப் பேசும் புதிய பகுதி... ‘செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்'!

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 1

எவர் கிரீன் பியூட்டி... நதியா. எண்பதுகளில் நதியா கொண்டை, நதியா கம்மல் என்று கலக்கிய ட்ரெண்ட் செட்டர். இப்போதும், அழகோடு தன் ஆடைகளையும் ரசிக்க வைப்பவர். இவர் தன் வார்ட்ரோப் கதைகளைப் பகிர்கிறார்... நம்மிடம்!

‘‘சின்ன வயசில் இருந்தே எனக்கு டிரெஸ்ஸிங்கில் ஆர்வம். அதைத்தான் சினிமாவிலும் வெளிப்படுத்தினேன். இன்னிக்கு பெரும்பாலும் எல்லா நடிகை களுக்கும் ஸ்டைலிஸ்ட் இருக்காங்க. ஆனா, நான் நடிச்ச காலகட்டத்தில் அப்படியெல்லாம் யாரும் எனக்குக் கிடையாது. ‘பூவே பூச்சூடவா’ படத்தில்  நான் போட்டிருந்த ஆடைகள், அக்சஸரீஸ் எல்லாமே எனக்கு நானே டிசைன் செய்துகிட்டது. அது அப்போ பெண்கள்கிட்ட பயங்கர கிரேஸ் ஆக... தொடர்ந்து என்னோட ஹேர் ஸ்டைல், கம்மல், வளையல், ஸ்லிப்பர், ஆடைகள்னு கிட்டத்தட்ட அப்போ தமிழ்நாட்டில் ஃபேன்ஸி ஸ்டோரில் இருந்து ஜவுளிக்கடை வரை பெண்கள் என் பெயரைச் சொல்லிதான் எல்லாமும் வாங்கினாங்க. ‘சினிமாவுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் உங்க டிரெஸ்ஸிங் ஸ்டைலிஷ்ஷா மாறியதா..?’னு சிலர் கேட்பாங்க. உண்மையில், என் ரியல் லைஃப் டிரெஸ்ஸிங் சென்ஸைத்தான் நான் ரீல்ல பிரதிபலிச்சேன்.

இப்பவும் என் டிரெஸ்ஸிங் ஸ்மார்ட்டா இருக்கக் காரணம், அதில் என் ஆர்வம் குறையாமல் இருக்கிறதும், ஃபேஷனை தொடர்ந்து ஃபாலோ செய்றதும்தான். ‘எங்கடி நீ டிரெஸ் வாங்கிற..?’னு என் ஃப்ரெண்ட்ஸ்கூட கேட்பாங்க. இங்கதான் வாங்குவேன்னு எல்லாம் இல்ல. எந்த ஊருக்கெல்லாம் டிராவல் பண்றேனோ அங்கயெல்லாம் ஷாப் செய்வேன். பிராண்ட், ட்ரெண்ட்க்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன். எனக்கு எது பிடிக்குதோ, பொருத்தமா இருக்கோ அதைத்தான் வாங்குவேன். உறுத்தாம பொருந்திப் போற சைஸ், ரொம்ப முக்கியம். அப்போதான் அழகா தெரியலைன்னாலும், கரடுமுரடா தெரியாமல் இருக்கும். சில நேரங்களில், டிசைன், சைஸ், கலர்னு எனக்கு சூட் ஆகாத டிரெஸ்ஸையும் கவனிக்காம பில் செய்துட்டு வந்தா, வீட்டுக் கண்ணாடி ‘நதியா... இது உனக்கு நல்லாயில்ல...’னு சொல்லிடும். அவ்ளோதான்... நோ காம்ப்ரமைஸ். எனக்கு சூட் ஆகாத டிரெஸ்ஸை வீட்டில்கூட போட மாட்டேன். இது என்னோட பாலிசி. நாம போடுற டிரெஸ், முதல்ல நமக்குப் பிடிக்கணும். அப்போதான் கான்ஃபிடன்டா இருக்கும்.

காஸ்ட்லியா டிரெஸ் வாங்கினாதான் அழகா இருக்கும் என்பதை நம்பாதவ நான். சொல்லப்போனா, ரொம்ப காஸ்ட்லியான டிரெஸ் நான் வாங்கினதும் இல்ல. சிம்பிளான விலையில் வாங்கும் டிரெஸ், சூப்பரான லுக் கொடுக்கும். கலர் காம்பினேஷன், கரெக்ட் சைஸ், டிசைன்ஸ்னு இதில் எல்லாம்தான் விஷயம் இருக்கே தவிர, விலையில் இல்ல!

பெண்கள் ஷாப்பிங்குக்கு எடுத்துக்கிற நேரத்தை முன்வைத்து பத்திரிகைகளில் பக்கம் பக்கமா ஜோக் எழுதுவாங்க. ஆனா, நான் ஒரு ஃபாஸ்ட் ஷாப்பர். அதிகபட்சம் 10 நிமிஷத்துக்குள்ள, டிரெஸ்ஸை பில்லிங்க்கு அனுப்பிடுவேன். காரணம், இந்த கலர்தான் வேணும்,

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்! - 1

இந்த டிசைன்தான் வேணும்னு மைண்ட்ல எதுவும் முன்னாடியே ஃபிக்ஸ் செய்துட்டுப் போக மாட்டேன். அங்க பார்க்கிறதில் பிடிச்சதை எடுத்துக்குவேன். முதலில் டிசைன், நெக்ஸ்ட் விலை... அவ்ளோதான் செலக்‌ஷனில் என் ரெஸ்ட்ரிக்‌ஷன். என் கணவர் என்கூட பயப்படாம ஷாப்பிங் வருவார்!

ஹீரோயினா நடிச்சப்போகூட எனக்குக் காஸ்ட் யூம் டிசைனர்ஸ் இருந்ததில்லை. ஆனா, இப்போ ரெண்டு பேர் இருக்காங்க. என்னோட பொண்ணுங்க! அவங்களுக்கு நான் டிரெஸ் எடுத்த காலம் மாறி, இப்போ அவங்க எனக்கு செலக்ட் செய்றாங்க. ‘இந்த டிரெஸ்ஸுக்கு இப்படி ஹேர் டூ செஞ்சுக்கோ’, ‘இந்த ஸ்லிப்பர் போடு’னு `ஆனுவல் டேக்கு குழந்தையைக் கிளப்புற அம்மா மாதிரி, அவங்க என்னைக் கிளப்புற அழகு இருக்கே... லவ் யூ கண்ணம்மாஸ்! ஒவ்வொருத்தருக்கும் நதியாவை ஒவ்வொரு டிரெஸ்ஸில் பிடிக் கும். என் குடும்பத்துக்கு நான் புடவை கட்டினா பிடிக்கும். பட்... நதியாவுக்குப் பிடிச்ச டிரெஸ்னா, அது ஜீன்ஸ் மற்றும் சுடிதார்தான். ஒவ்வொரு முறை ஷாப் செய்யும்போதும் இது ரெண்டையும் நிச்சயமா வாங்கிடுவேன். ஆனா, ஒரு இடத்துக்குப் போகும்போது, எனக்குப் பிடிச்சது என்பதைவிட, அந்தச் சூழலுக்கு எந்த உடை பொருத்தமா இருக்கும்னு யோசிச்சுதான் போட்டுட்டுப் போவேன்.

இன்றைய ஹீரோயின்களில், நயன்தாராவோட டிரெஸ்ஸிங் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சினிமா பெண்கள் மட்டுமில்ல, எல்லா பெண்களுமே உங்க டிரெஸ்ஸிங்கில் கொஞ்சம் கேர் எடுத்துக்கோங்க... நீங்களும் ஹீரோயின்தான். முக்கியமான விஷயம்... அழகும், இளமையும் டிரெஸ்ஸில் பாதியும், மனதில் மீதியும் இருக்கணும். என்னோட பியூட்டி சீக்ரெட் இதுதான்னு நினைக்கிறேன்!’’

- சு.சூர்யா கோமதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு