அவள் 16
அறிவிப்புகள்
Published:Updated:

அடுக்களையிலையே அழகாகலாம்!

அடுக்களையிலையே அழகாகலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அடுக்களையிலையே அழகாகலாம்!

புதிய பகுதி

‘இவ கண்ணாடி முன்னாடி நின்னா, கிளம்ப அரை மணி நேரம் ஆகுமே...’ என்று வீட்டில் உள்ளவர்கள் அலுத்துக்கொண்டாலும்... பெண்களுக்கு கண்ணாடியும், அலங்காரமும், அழகும் சலிக்கவே சலிக்காது!

அடுக்களையிலையே அழகாகலாம்!

அழகுக்காக கடைகள் முதல் ஆன் லைன் வரை காஸ்மெடிக் அயிட்டங்கள் வாங்கிக்கொண்டிருக்கும் பெண்களை, `உங்கள் அடுக்களையிலேயே அதற்கான பொருட்கள் இருக்கின்றன’ என்று மெசேஜ்சொல்லி அழைக்கிறார், அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி. ‘பழகிய பொருள், அழகிய முகம்’ தொடர் மூலமாக நம் வாசகிகளுக்குப் பரிச்சயமான ராஜம் முரளி, ‘அடுக்களையிலேயே அழகாகலாம்’ தொடர் மூலம் இனி வரும் இதழ்களில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சருமப் பராமரிப்பு முறைகளைச் சுலபமாகச் செய்துகொள்ளும் வழிகளைப் பகிரவிருக்கிறார்.

‘‘ஃபேஸ்வாஷ், க்ளென்ஸர், டோனர், பிளீச், ஸ்கிரப் என்று அழகுசாதனப்பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள் பெண்கள்.அவை அழகூட்டும்தான். ஆனால், பக்கவிளைவில்லாத அழகாக அது இருக்குமா

அடுக்களையிலையே அழகாகலாம்!

என்பது கேள்விக்குறியே! தொடர்ந்து கெமிக்கல் பொருட்களை சருமத்தில் உள்ளிட்டுக்கொண்டே இருப்பது பரிந்துரைக்கத்தக்கது அல்லதானே?

மேலும், எல்லா பியூட்டி ட்ரீட்மென்ட்களுக்கும் ஹோம் மேடு அழகுத் தயாரிப்புகள் உள்ளன என்பதையும், அதில் இல்லாத சிறப்பம்சங்கள் எதுவும் காஸ்மெட்டிக் பொருட்களில் இல்லை என்பதையும் அறிவீர்களா..? சொல்லப்போனால், பப்பாளிப் பழத்தை பல வேதிப்பொருட்கள், பிரிசர்வேட்டிவ்கள் சேர்த்து டியூபில் அடைத்துக்கொடுக்கும் பப்பாளி ஃபேஸ் வாஷைவிட, வீட்டில் இருக்கும் பப்பாளியை நறுக்கி கூழாக்கி, ஃப்ரெஷ் ஆக முகத்தில் தேய்ப்பது அதிகப் பாதுகாப்பும், அழகும், பொலிவும் தரும்தானே?! நம்புங்கள்... அழகு நிலையம் செல்லாமல், ஆயிரங்கள் செலவில்லாமல், அடுக்களையில் உள்ள பொருட்களில் இருந்தே அழகாகும் ரகசியங்கள் ஆயிரமாயிரம் உள்ளன. பேசலாம், பொலிவு பெறலாம்!’’

- புன்னகையுடன் சொல்கிறார், ராஜம் முரளி.

இயற்கை அழகியாகக் காத்திருங்கள்... அடுத்த இதழ்வரை!

இந்துலேகா.சி