Published:Updated:

தொந்தரவு செய்யாத தாய் யானை! சிகிச்சைக்குப் பின் மகிழ்ச்சியுடன் சென்ற குட்டியானை

தொந்தரவு செய்யாத தாய் யானை! சிகிச்சைக்குப் பின் மகிழ்ச்சியுடன் சென்ற குட்டியானை
தொந்தரவு செய்யாத தாய் யானை! சிகிச்சைக்குப் பின் மகிழ்ச்சியுடன் சென்ற குட்டியானை

தொந்தரவு செய்யாத தாய் யானை! சிகிச்சைக்குப் பின் மகிழ்ச்சியுடன் சென்ற குட்டியானை

யாருக்கும் தொந்தரவு தராதபடி, தன்னுடைய குட்டியின் சிகிச்சையை வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது தாய் யானை. பல் வலியால் அவதிப்பட்ட 4 வயது குட்டி யானை, சிகிச்சைக்குப் பிறகு பத்திரமாக காட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில், கரளியம் கிராமத்திலிருந்து உகினியம் செல்லும் சாலையில், பிப்ரவரி 12-ம் தேதியன்று, குட்டியானை ஒன்று சோர்வுடன் சுற்றித் திருந்திருக்கிறது. இந்தத் தகவலை சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர், யானையை காட்டுக்குள் விரட்ட முயற்சி செய்தனர். ஆனால், அந்தக் குட்டி யானை தெம்பு இல்லாமல் தட்டுத்தடுமாறி காட்டுக்குள் சென்றிருக்கிறது.

அடுத்த நாள் (13-ம் தேதி) காலை, கரளியம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய வயலுக்குச் செல்ல, அங்கே அந்த குட்டியானை உடல்நிலை சரியில்லாமல் படுத்துக்கிடந்திருக்கிறது. அருகே, தாய் யானையும் சோகத்துடன் நின்றிருக்க, அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் வந்து, தாய் யானையை காட்டுக்குள் விரட்ட முயற்சிசெய்தனர். ஆனால், தாய் யானை தன்னுடைய குட்டியை விட்டுப் பிரிய மனமில்லாமல் அங்கேயே சுற்றிச்சுற்றி வந்துள்ளது. இதனால், குட்டியானைக்கு மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதில் தாமதமானது. பிறகு, சூழ்நிலையை உணர்ந்துகொண்ட தாய் யானை, அருகிலிருந்த வேலி மறைவில் சென்று யாருக்கும் தொந்தரவு தராதபடி தன்னுடைய குட்டியின் சிகிச்சையை வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது. 13-ம் தேதி ஆரம்பித்த சிகிச்சை, இரவு பகலாக நடந்தது. நேற்று (14-ம் தேதி) மாலை வரை நடைபெற்றது. 

ஊசி மற்றும் குளுக்கோஸ் கொடுத்து மருத்துவர்கள் சிகிச்சையளித்த பின்னர், அந்த குட்டியானையின் உடல்நலம் தேறியது. நேற்று மாலை தானாக எழுத்து காட்டுக்குள் சென்றது. 'யானையின் பல்லில் தொற்று ஏற்பட்டதால், அந்த யானை கடந்த ஒரு வாரமாக எதையும் சாப்பிடாமல் இருந்திருக்கிறது. அதனால், உடல்நலம் குன்றியிருந்த யானைக்கு சிகிச்சையளித்து, பின்னர் பத்திரமாக காட்டுக்குள் அனுப்பிவைத்துள்ளோம்' என சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரி ஜான்சன் கூறினார்.

வனத்துறையினர், இரண்டு நாள்களாக இரவு பகலாக குட்டியானைக்கு சிகிச்சையளித்த வேளையில், தாய் யானை தன்னுடைய குட்டியை சுற்றிச்சுற்றி வந்து, தனது துதிக்கையால் தூக்கி காட்டுக்குள் கொண்டுசெல்ல முற்பட்டது. கிராமத்துக்குள் யானை புகுந்துவிட்டது எனப் பதறிய அதே கிராம மக்கள், யானைகளுக்கிடையேயான இந்த பாசத்தைப் பார்த்து நெகிழ்ந்துபோனார்கள்.

அடுத்த கட்டுரைக்கு