Published:Updated:

ஏற்றுக் கொள்ளமுடியாததை மாற்று, மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்'- இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் #LetsRelieveStress

ஏற்றுக் கொள்ளமுடியாததை மாற்று, மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்'- இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் #LetsRelieveStress
ஏற்றுக் கொள்ளமுடியாததை மாற்று, மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்'- இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் #LetsRelieveStress

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் ஜனநாதன். மார்க்சிய சித்தாந்தத்தில் அளவுகடந்த ஈடுபாடுள்ளவர். எடிட்டர் பி.லெனினிடம் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். `இயற்கை’, `ஈ’, `பேராண்மை’, `புறம்போக்கு’... என வித்தியாசமான படங்களைத் தந்தவர். கதைகளுக்கான களங்களைத் தேடித் தேடிக் கண்டுபிடிப்பது அவருக்கே உரித்தான தனித்தன்மை. ஜன சமுத்திரத்தில் தன்னை ஒரு தீவாக ஆக்கிக்கொள்ளாமல், சாதாரண நடுத்தர வர்க்கம் வசிக்கும் குடியிருப்பில்தான் வசித்து வருகிறார். அவருக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படுத்திய  தருணங்கள், அவற்றிலிருந்து அவர் மீண்ட விதம் குறித்துக் கேட்டோம்.

ஏற்றுக் கொள்ளமுடியாததை மாற்று, மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்'- இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் #LetsRelieveStress

''என்னுடைய முதல் படம்     இயற்கை.’ உதவி இயக்குநரா, எடிட்டிங் உதவியாளரா பல வருஷங்கள் வேலை பார்த்திருந்தாலும், முதல் படம் பண்ணும்போது யாருக்குமே ஒரு சவால் இருக்கும். அது எனக்கும் இருந்துச்சு. அந்தச் சவாலுடன்தான் 'இயற்கை' படத்தின் வேலைகளில் இறங்கினேன். 

படத்தின் ஓப்பனிங் சீன்... கடலுக்குள்ள சாய்ந்த நிலைமையில் ஒரு கலங்கரை விளக்கம் இருக்கும். 'என்றாவது ஒருநாள் தன் காதலன் திரும்பி வருவான்' என வழக்கம்போல் காதலி காத்திருக்கிறாள். கப்பலிலிருந்து காதலன் இறங்குகிறான். இதுதான் காட்சி. 
இந்தக் காட்சிக்காக அலைகளற்ற ஒரு கடல் பகுதியில் ஒரு கலங்கரை விளக்கம் தேவைப்பட்டுச்சு. பல இடங்கள்ல தேடியும் எங்களுக்கு கிடைக்கலை. பிறகு, அந்தமானில் அப்படி ஓர் இடம் அமைஞ்சுது. சென்னையிலிருந்தே கார்பென்டர், மேஸ்திரியையெல்லாம் கூட்டிக்கிட்டுப் போய் கலங்கரை விளக்கு செட் ஒன்றைப் போட்டோம்.

ஏற்றுக் கொள்ளமுடியாததை மாற்று, மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்'- இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் #LetsRelieveStress

சென்னை துறைமுகத்துலருந்து 'அம்பிகா'ங்கிற கப்பல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்தமானுக்குப் போகும். ஞாயிற்றுக்கிழமை அங்கே போனதும் அங்கேயே நாலு நாள் நிற்கும். அதுக்குப் பிறகு திரும்ப வெள்ளிக்கிழமை புறப்பட்டு சென்னைக்கு வரும். அந்தக் கப்பல் அங்கே இருக்குற நாலு நாள்களில், காதலன் இறங்கி வரும் காட்சியைப் படமாக்கலாம்னு ப்ளான் பண்ணியிருந்தேன்.

கப்பல் கேப்டன்கிட்ட பேசி அனுமதியெல்லாம் வாங்கிட்டேன். ஆனா, பல லட்ச ரூபாய் செலவு செஞ்சு செட் போட்டு, ஷூட்டிங் யூனிட்டும் அந்தமான் போன பிறகுதான் ஒரு விஷயம் தெரிஞ்சுது... `அந்தக் கப்பல் இப்போ கிடையாது. கேன்சல் ஆயிடுச்சு’னுட்டாங்க.  என்ன பண்றதுனு புரியலை. `முதல் படம்... மொத மொதல்ல ஷூட்டிங்குக்குப் போறோம். இப்படி ஆயிடுச்சே’னு ரொம்ப டென்ஷனாகிட்டேன். 

'நெருக்கடியான நேரங்களில்தான் நிதானமாகச் செயல்பட வேண்டும்'னு புத்தகங்கள்ல வாசிச்சிருக்கேன். அந்தக் கற்றல் அறிவை, அனுபவ அறிவாக மாத்தினேன். 

ஏற்றுக் கொள்ளமுடியாததை மாற்று, மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்'- இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் #LetsRelieveStress

லைட் ஹவுஸிலிருந்து கதாநாயகி பார்க்கிற காட்சிகளையெல்லாம் படமாக்கினேன். காட்சிகளும் சிறப்பா வந்திருந்துச்சு. அதுக்குப் பிறகு அந்தக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில், கிட்டத்தட்ட ஒரு டன் எடை இருக்கும்  மேல்பகுதியை மட்டும்  தனியாகக் கழற்றி எடுத்து அங்கிருந்து தூத்துக்குடிக்குப் போன ஒரு கப்பல் மூலமாகக் கொண்டு போகச் சொன்னேன். 

நாங்க சென்னைக்கு வந்து, இங்கிருந்து தூத்துக்குடிக்குக் கிளம்பிப் போனோம். அங்கே போய் பந்தல்காரங்களைவெச்சு, மிக உயரமான பந்தலைப் போட்டு, அதுல கதாநாயகியின் கவுன்ட்டர் ஷாட்ல ஹீரோ ஷாம் இறங்கி வர்றது மாதிரி காட்சியை எடுத்து முடிச்சேன். 
சினிமாத் துறையைப் பொறுத்தவரைக்கும் வருத்தப்படுற மாதிரி நிகழ்ச்சிகள் நிறைய நடக்கும். ஏற்கெனவே நிறைய பேர்களின் வாழ்க்கையிலும் நடந்திருக்கு.  

இங்கே யாரும் ஒருத்தரைப் பத்தி இன்னொருத்தர்  மனம் திறந்து பாராட்டுறதே கிடையாது. உதாரணமா, நாம ஒரு முயற்சி பண்றோம்... ஒரு தயாரிப்பாளர்கிட்டே கதை சொல்லி ஓ.கே வாங்கி வெச்சிருப்போம். நம்ம நண்பராகத்தான் இருப்பார். அவர் தயாரிப்பாளர்கிட்ட போய், 'ஜனாதானே நல்ல மனுஷன். சக மனுஷனை நல்லா மதிப்பான். போஸ்ட் புரொடக்‌ஷன் வரைக்கும் அவனுக்குத் தெரியும்'னு நம்மைப் பத்தி நல்லவிதமாகவே சொல்வார். கடைசியில, 'என்ன ஒண்ணு... இப்போ சொல்லிட்டு போறாருல்ல. திரும்ப எப்போ வருவார்னு தெரியாது'னு நம்மைப் பத்தி சம்பந்தா சம்பந்தமில்லாம எதையாவது போட்டுக் கொடுத்துட்டுப் போயிடுவார். 

இந்த மாதிரி இருக்கிறவங்க இந்த ஃபீல்டுல இருக்கிறது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும். இது அடிக்கடி நடக்கும். 
அந்த மாதிரி நேரங்கள்ல பல பெரிய மனிதர்கள் வாழ்க்கையிலும் இப்படி நடந்து இருக்குங்கிறதை நினைச்சுப் பார்த்து மனசைத் தேத்திக்குவேன். உதாரணமா, சிவாஜி சார் மொதமொதல்ல `பராசக்தி’ படத்துல நடிக்க வந்தப்போ மூக்கு நீளமா இருக்குனு சொல்லி வேண்டாம்னாங்க. அதையெல்லாம் தாண்டித்தான் அவர் நடிகர் திலகமா ஆனார். 

ஏற்றுக் கொள்ளமுடியாததை மாற்று, மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்'- இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் #LetsRelieveStress

'மந்திரிகுமாரி' படத்துல நடிச்சப்போ எம்.ஜி.ஆரோட தாடையில இருந்த வெட்டு அவர் தோற்றத்தைப் பாதிக்குதுனு சொன்னாங்க. பிற்காலத்துல தாடையில வெட்டு இருந்தா அதிர்ஷ்டம்னு சொல்ற அளவுக்கு அதுவே பிரபலமாச்சு'' என்றவரிடம், 'மனம் மகிழ்ச்சியா இருக்கிறதுக்கு என்ன செய்வீங்க?' என்று கேட்டோம்.

''பயணங்கள்தான் எனக்கு மகிழ்ச்சியைத் தருது. 'நான் யார்'ங்கிறது மத்தவங்களுக்கு அதிகம் தெரியாது. அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்படித் தெரியாம இருக்கிறதாலயே எங்க வேணும்னாலும் சிரமமே இல்லாம பயணம் போக முடியுது. டீக்கடையில போய் ஜாலியா டீ குடிச்சிட்டு அங்கே இருக்கிறவங்ககிட்ட பேசிக்கிட்டிருப்பேன். கடைசியா கிளம்புறப்போ, 'இந்தப் படம் பார்த்தீங்களா? அதோட டைரக்டர் நான்தான்'னு சொல்லுவேன். அப்போ அவங்க முகத்தில ஆச்சர்யம் கலந்த உணர்ச்சி ஏற்படும். அதைப் பார்க்கிறப்போ சந்தோஷமா இருக்கும்’' என்றவரிடம் `ஏன் நீங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை’ எனக் கேட்டோம்.

ஏற்றுக் கொள்ளமுடியாததை மாற்று, மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்'- இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் #LetsRelieveStress

 ''பெருசா எந்தக் காரணமும் கிடையாது. குடும்பச் சூழ்நிலை காரணமாத்தான் நான் திருமணம் செஞ்சுக்கலை. சின்ன வயசுலேயே அப்பாவை இழந்துட்டேன் . அம்மா, பார்வதிஅம்மாள்தான் எங்களை வளர்த்தாங்க. நாங்க அண்ணன் தம்பி அஞ்சு பேர். அக்கா ரெண்டு பேர். நான்தான் கடைக்குட்டி.  

எல்லாருக்கும் கல்யாணம் முடிஞ்சு, என்னோட ரவுண்டு வர லேட்டாகிடுச்சு. அவ்வளவுதான். மத்தபடி கல்யாணமே பண்ணிக்கக் கூடாதுங்கிற மாதிரி வெறுப்பெல்லாம் எதுவும் கிடையாது. கல்யாணம் செஞ்சுக்கலாம்னு  நான் நினைச்சப்போ, வயசு கடந்து போயிருந்துச்சு. அதனால அப்படியே விட்டுட்டேன்.

எதுவாக இருந்தாலும், ஆத்மார்த்தமாகப் பேசுற நல்ல நண்பர்கள் எனக்கு எப்போதும் உதவியா இருக்காங்க. அவங்கள்ல என் உதவியாளர்களாகவும் இருக்காங்க. அதனால எப்பேர்ப்பட்ட மன அழுத்தம் மிகுந்த சூழ்நிலையையும் கடந்துடுவேன். சில நேரங்கள்ல, அவங்களும் பேசி முடிச்சிட்டுக் கிளம்பின பிறகு, ஒரு தனிமைச்சூழல் இருக்கும். ஒரு வெறுமை தோன்றும். அது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. அதுக்கும் நான் பழகிட்டேன்.

ஒரே சித்தாந்தம்தான்... அதை எப்பவும் நினைச்சிக்குவேன் 'ஏற்றுக் கொள்ளமுடியாததை மாற்று. மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்' என கண்சிமிட்டி விடை கொடுத்தார் 'இயற்கை' இயக்குநர் ஜனநாதன்.