பிரீமியம் ஸ்டோரி

`பாஸ்டன் குளோப்' என்கிற அமெரிக்கப் பத்திரிகையின் `ஸ்பாட்லைட்' குழுவில் இருப்பவர்கள் 2002-ம் ஆண்டு வெளியிட்ட ஒரு செய்தி, உலகமெங்கும் இருக்கும் தேவாலயங்களை உலுக்கியது.தேவாலயங்களில் குழந்தைகள் மீது ஏவப்படும் பாலியல் கொடுமைகளைப் பட்டியலிட்டது அந்தச் செய்தி. அமெரிக்காவில் மட்டும் முதலில் சிறியதாக வெடித்த இந்தச் சர்ச்சை, சில நாட்களில் உலகின் பிற மூலைகளில் இருந்தும் மக்கள் புகார் சொல்ல, உலகளாவிய பிரச்னை ஆனது. ஒரு செய்தி பத்திரிகையில் வெளிவந்தபின் காட்டும் அதிர் வலைகளைவிட, அந்தச் செய்தி உருவாகும்போதும், அதற்காக உழைக்கும்போதும் நடக்கும் பிரச்னைகளே அதிகம். 2002-ம் ஆண்டு இந்தச் செய்தியை கொண்டு வருவதற்கு ஸ்பாட்லைட் குழு நடத்திய போராட்டமே `ஸ்பாட்லைட்' படம்.

2001-ம் ஆண்டு `பாஸ்டன் குளோப்' பத்திரிகையின் புதிய எடிட்டராகத் தேர்வாகும் மார்ட்டி பரான், தேவாலயங்களில் நடக்கும் தில்லுமுல்லுகளைப் பற்றி எழுத ஸ்பாட்லைட் குழுவுக்கு அறிவுறுத்துகிறார். ராபின்சன் தலைமையிலான ஸ்பாட்லைட் குழு, ஆரம்பத்தில் இது ஒரே ஒரு மதகுரு தொடர்புடையது என நம்ப, கிடைக்கும் ஆதாரங்களோ அவர்களை அதிர்ச்சியூட்டு கின்றன. 1, 13, 90 என மதகுருக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, விஷயம் பூதாகரமாகிறது. ஆனால், அவர்களின் குற்றங்களை நிரூபிக்கும் ஆதாரங்களையோ, சாட்சிகளையோ கண்டுபிடிப்பது அத்தனை எளிதாக இல்லை. மதமும் அரசு நிர்வாகமும் இணைந்துகொள்கின்றன. இந்தச் செய்தி வெளியில் கசிந்துவிடாமல் இருக்க பல தடைகள் உருவாக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் கடந்து இறுதியில் ஸ்பாட்லைட் குழுவின் உழைப்பு, செய்தியாக வெளியாகவேண்டிய நேரத்தில், செப்டம்பர் 11-இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடக்கிறது.

இடம் மாறும் ’ஸ்பாட்லைட்’!

எப்போதும் ஒரு மீடியா, லைம்லைட்டில் இருக்கும் செய்திக்கே முன்னுரிமை தரும். இதனால் ஸ்பாட்லைட் குழுவினர், இரட்டைக் கோபுரத் தாக்குதல் செய்திக்குத் திருப்பிவிடப்படுகின்றனர். அதுவரை உழைத்த மதகுரு சம்பந்தமான செய்தி பின்னுக்குத் தள்ளப்படுகிறது. அதாவது ஸ்பாட்லைட் இப்போது வேறு இடத்தில் விழுகிறது.

இடம் மாறும் ’ஸ்பாட்லைட்’!

`பேர்டுமேன்' படத்தில் கலக்கிய மைக்கேல் கீட்டன், ராபின்சன்னாக அசத்தி யிருக்கிறார். ஆனால், படத்தின் உண்மையான ஹீரோ `அவெஞ்சர்ஸ்' படங்களில் ஹல்க்காக நடித்துவரும் மார்க் ரஃபாலோதான். ஒரு புலனாய்வு பத்திரிகையின் ரிப்போர்ட்டரை கண்முன் நிறுத்துகிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு