பிரீமியம் ஸ்டோரி

தீபிகா படுகோன், வின் டீசலுடன் நடித்துவந்த `ட்ரிபிள் எக்ஸ்-3' முடிந்துவிட்டது. அடுத்த மாதம் பாலிவுட் வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்து பிராட் பிட் ஜோடியாக  நடிக்கப்போகிறார் என ஹாலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கிறது. ஏற்கெனவே கதை சொல்லி ஓ.கே வாங்கி கால்ஷீட் கொடுத்தாகிவிட்டதாம்.  பாலிவுட்டை மறந்துடாத தீபிம்மா!

இன்பாக்ஸ்

•   கேரளாவின் நன்னம்பரா கிராமப் பஞ்சாயத்து, சர்வதேச அளவில் பிரபலம். ஊருக்குள் நுழைந்து எந்தப் பக்கம் திரும்பினாலும், `எல்லாருமே ரெண்டு ரெண்டு பேராத் தெரியுறாங்களே?' என சந்தேகப்படும் அளவுக்கு கிராமம் முழுக்க இரட்டையர்கள். 20 ஆயிரம் பேர் மக்கள்தொகை கொண்ட இந்தக் கிராமத்தில் மொத்தம் 548 இரட்டையர்கள். இந்த ஆச்சர்யச் செய்தி மீடியாவை ஈர்க்க, வெவ்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து எல்லாம் ஆளாளுக்கு கேமராவோடு கிளம்பிவர... ஒருகட்டத்தில் உள்ளூர் பஞ்சாயத்துக்கு ஓவர் டென்ஷன் ஆகிவிட்டது. இதனால் `இனி மீடியா எதுவும் உள்ளே வரக் கூடாது' என ஸ்ட்ரிக்டாய்ட்டு பறஞ்சிருக்கிறார்கள் சேட்டன்மார்கள்... டபுள் ட்ரபிள்!

  `ஜஸ்ட் மூன்று நாட்களில் செவ்வாய்க்கிரகத்தை அடைந்துவிடலாம்' என அறிவித்துள்ளது நாசா. `இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு, நமக்கு அருகில் இருக்கும் நட்சத்திரங்களைக்கூட எளிதில் அடைய முடியாது. ஆனால், லேசர் உதவியுடன், `போட்டோனிக் புரொபல்ஷன்' எனும் புதிய தொழில்நுட்பத்தில் விண்கலன்களை உந்துவதன் மூலம் நொடிக்கு 1,000 கி.மீ வேகத்தில் செலுத்த முடியும். இதனால் நம்மால் அடைய முடியாத கோள்களையும் எட்ட முடியும். இதை மேம்படுத்தி 2030-ம் ஆண்டில் செவ்வாய்க்கிரகத்தை நோக்கிச் செயல்படுத்துவோம்' என்கிறது நாசா. ஜன்னல் ஓரமா ஒரு ஸீட் போடுண்ணே!

  ஷாரூக் கானின் ‘ஃபேன்’ படத்துக்காக, ஃபேன் ஆந்தம் ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். தமிழ், பஞ்சாபி, போஜ்புரி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி மொழிகளிலும் அந்த ஊரின் பிரபலங்களை வைத்து, பாடல் ரெடியாகியிருக்கிறது. மராத்திக்கு சச்சினை ஐஸ் வைத்த ஷாரூக், தமிழுக்கு ரஜினியைப் புகழ்ந்திருக்கிறார். `ரஜினி சார்... நான் நடிகன் எல்லாம் இல்லை. எண்ண முடியாத அளவில் இருக்கும் உங்கள் ரசிகர்களில் நானும் ஒருவன்தான் தலைவா’ என ட்விட்டரில் தட்டிவிட, எதிர்பார்த்தபடி ஏகப்பட்ட ரீட்வீட்ஸ். பேரை போட்டாலே சும்மா அதிரும்ல!

  700 க்ளப்பில் சேர்ந்துவிட்டார் நோவாக் ஜோகோவிக். டென்னிஸின் ஒற்றையர் போட்டிகளில் 700-க்கும் அதிகமான ஆட்டங்களில் வெற்றிபெற்றவர்கள் இதுவரை 11 பேர்தான். அந்த லெஜண்டுகள் பட்டியலில் துபாய் ஓப்பனில் வெற்றிபெற்றதன் மூலம் இணைந்திருக்கிறார் ஜோகோவிக். `ரோஜர் பெடரரின் 1,067 வெற்றிகள் சாதனைதான் அடுத்த இலக்கு' என்கிறார் ஜோகோவிக். 28 வயசுதானே... அசால்ட்டா பண்ணிரலாம்!

  ஸ்மிரிதி இரானியின் பார்லிமென்ட் ஸ்பீச்தான் சென்ற வாரத்தின் வைரல் வெடி. எங்கு பார்த்தாலும் `பெண் அமிதாப்', `லேடி சூப்பர்ஸ்டார்', `சாட்டையடி தோழி' என ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டிருந்தது வடநாட்டு வட்டாரம். பாலிவுட்டின் ஜூசன் அகமது என்கிற ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், ஸ்மிரிதிக்கு ஃபேஸ்புக்கில் எழுதிய கடிதம் மொத்தக் கவனத்தையும் அவர் பக்கம் திருப்பியது. அந்தக் கடிதத்தில், ஸ்மிரிதி இரானியின் பேச்சு, உடல்மொழி முதலானவற்றில் இருந்த நடிப்பாற்றலையும், அந்தப் பேச்சில் இருந்த சினிமா ஸ்டைல் வசனங்களையும் பாராட்டுவதைப்போல செம வாரு வாரியிருந்தார். `சினிமாவைவிட நடிப்புக்கு அரசியல்தான் சரியான களம். அங்குதான் நீங்கள் அதிகம் ஸ்கோர் பண்ண முடியும். ஆனால், இன்னும் பயிற்சி தேவை' என அவர் சொன்னது எல்லாம் உள்குத்து பஞ்சர்.  அவ்வ்வ்வ்!

இன்பாக்ஸ்

•   சுரேஷ் தம்பனூர், கடந்த மாதம் வரை திருவனந்தபுரம் அரிஸ்டோ ஜங்ஷனில் கூலித் தொழிலாளி; இன்று மல்லுவுட்டின் மோஸ்ட் வான்டட் நடிகர். நிவின் பாலி நடித்த மலையாளப் படமான `ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ'வில் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார் சுரேஷ். `முத்தே பொன்னே பின்னங் கல்லே' என அவர் எழுதி, பாடி, மேஜையில் தாளமிட்டு நடித்த பாட்டு வைரல் ஹிட் அடிக்க, மலையாளக் கரையோரம் ஏகப்பட்ட ஃபேன்ஸ். சுமை தூக்கும் தொழிலாளியான சுரேஷ், ஒருகாலத்தில் சினிமா பார்க்கக் காசு இல்லாமல் செருப்புகளைத் திருடி விற்று படம் பார்த்தவர். நன்னாயிட்டு வரணும் சேட்டா!

இன்பாக்ஸ்

•   ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன், நடிப்புக்கு ஒரு வருடம் இடைவெளி விட்டிருக்கிறார்.  `இப்போது ஐ.நா-வின் நல்லெண்ணத் தூதர் நான். அதற்காக என்னை நிறைய மேம்படுத்தவேண்டியிருக்கிறது. பெண்ணியம், பெண் உரிமைகள் தொடர்பாக நிறையப் படிக்கவேண்டியிருக் கிறது. அதுக்குத்தான்!' என்கிறார் எம்மா. நல்லா படிம்மா!

இன்பாக்ஸ்

•   ஐஸ்வர்யா ராய் இப்போது `சரப்ஜித்’ படத்துக்காக பஞ்சாப் பார்டரில் ரொம்ப பிஸி. விஷயத்தைக் கேள்விப் பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், ஐஸ்வர்யா ராயைச் சந்திக்க ஆர்வம் கொள்ள, `இதோ வந்துட் டேன்...' என அடுத்த நாளே ஆஜராகி, ரசிக வீரர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்தார் ஐஸ். எல்லோருடனும் செல்ஃபி எடுத்துக்கொண்டவருக்கு ஒரு மிலிட்டரி தொப்பியை கிஃப்ட் கொடுத்தார்கள். நைஸ்ல!

இன்பாக்ஸ்

   ஒபாமாவின் பதவிக்காலம் முடியப் போவதை, செய்தியில் பார்த்த ஒரு சிறுமி `என்னால் இதை நம்பவே முடிய வில்லை. எனக்கு புதிய அதிபர் எல்லாம் வேண்டாம். எப்போதும் ஒபாமாதான்’ என தனது பாட்டியிடம் அழுது அடம்பிடிக்க, அதை வீடியோ எடுத்து இணையத்தில் வைரலாக்கிவிட்டார் பாட்டிம்மா. இதை அறிந்த ஒபாமா, `பாட்டிம்மா... அந்தச் சிறுமியின் அழுகையை நிறுத்துங்கள். நான் அமெரிக் காவைவிட்டு எங்கேயும் போகப்போவது இல்லை. பதவிக்காலம் முடிந்ததும், அவளைப்போல நானும் ஓர் அமெரிக்கக் குடிமகன்தான். எங்கள் இருவருக்கும் ஒரே நாளில்தான் பிறந்தநாள் என்பதால், எப்போதும் அதை நாங்கள் ஒன்றாகத்தான் கொண்டாடுவோம்’ என ரிப்ளை தட்ட, பேத்தி - பாட்டி  ரெண்டு பேரும் செம ஹேப்பி. அம்மா குரூப்ஸ், ப்ளீஸ் நோட்!

  மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி, தண்டனை பெற்ற சஞ்சய் தத் விடுதலை ஆகிவிட்டார். விடுதலை ஆன அடுத்த நாளே, `அடுத்த படம் என்ன... எப்போது?’ என மீடியா கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டன. ஆனால், அவருடைய வாழ்க்கை படம் ஆகப்போகிறது. சீக்கிரமே அறிவிப்பு வருமாம். படத்தில் சஞ்சய் வேடத்தில் நடிக்கப்போவது ரன்பீர் கபூர். இயக்கப்போவது ராஜ்குமார் ஹிரானி. கல்நாயக்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

  `விக்டோரியா சீக்ரெட்’டின் புதிய தேவதை, ஜோஸபின் ஸ்க்ரிவர். உள்ளாடை மாடலிங்கில் அது ஆஸ்கருக்குச் சமம். 2008-ம் ஆண்டுக்குப் பிறகு பிஸியான இந்த டென்மார்க் மாடல், அமெரிக்க விளம்பரங்களில் டாப் உயரம் எட்டியிருப்பது ஆச்சர்யம். ஓரினச் சேர்க்கையாளர்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துவரும் ஜோஸபின், ஓரினச் சேர்க்கையாளர்களால் வளர்க்கப்பட்ட குழந்தை. செம!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு