Published:Updated:

செல்ஃபி, மெஹந்தி, கம கம பிரியாணி... இது எத்திராஜ் கல்லூரியின் தொழில்முனைவோர் பஜார்!

செல்ஃபி, மெஹந்தி, கம கம பிரியாணி... இது எத்திராஜ் கல்லூரியின் தொழில்முனைவோர் பஜார்!

செல்ஃபி, மெஹந்தி, கம கம பிரியாணி... இது எத்திராஜ் கல்லூரியின் தொழில்முனைவோர் பஜார்!

செல்ஃபி, மெஹந்தி, கம கம பிரியாணி... இது எத்திராஜ் கல்லூரியின் தொழில்முனைவோர் பஜார்!

செல்ஃபி, மெஹந்தி, கம கம பிரியாணி... இது எத்திராஜ் கல்லூரியின் தொழில்முனைவோர் பஜார்!

Published:Updated:
செல்ஃபி, மெஹந்தி, கம கம பிரியாணி... இது எத்திராஜ் கல்லூரியின் தொழில்முனைவோர் பஜார்!

ந்தக் கல்லூரி வளாகமே அப்படியோர் உற்சாகத்தில் திளைத்திருந்தது. நூற்றுக்கணக்கான மாணவிகள் அங்கும் இங்கும் பரபரப்போடு சுற்றிக்கொண்டிருந்தார்கள். 

“ஹேய் மச்சான், என்னடி இன்னைக்கு ரொம்பவே க்யூட்டா வந்திருக்கே. வா வா நாம ரெண்டு பேரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துப்போம்” என ஒரு மாணவி சொல்ல, “மச்சீஸ்... என்னங்கடி இங்கே ச்சும்மா செல்ஃபிக்கு போஸ் கொடுத்துட்டிருக்கீங்க. ஃபுட் ஸ்டால்ல செமையா பிரியாணி ரெடி பண்ணிருக்காங்களாம். நிவேதா, குரூப்ல ஷேர் பண்ணியிருக்கா. வாங்க போலாம்” என்று இன்னொரு மாணவி சொன்னதும், “நமக்கு பிரியாணிதான் ஃபர்ஸ்ட். செல்ஃபி நெக்ஸ்ட்” என ஓடுகிறார்கள். 

“ஏ ஸ்வேதா, உன்னை எங்கெல்லாம் தேடுறது. ஒரு 300 கொடுடி. பி.காம் பொண்ணுங்க வளையல், ரிங்ஸ் என ஹேண்ட் மேட்லயே ரெடி பண்ணியிருக்காங்க. பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. ரெண்டு செட் வாங்கணும்”. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இந்தா மச்சி, என்கிட்ட 200 ரூபாய்தான் இருக்கு. இப்போதான் திவ்யா வந்து ஆர்கானிக் சோப் வாங்கணும்னு 200 வாங்கிட்டுப்போனா.” 

“மீனுமா, அங்கே என்ன பண்ணிட்டிருக்கே. இங்கே வந்து புவனா கையப் பாரு...” 

“வாவ் செம மச்சான். இவ்ளோ அழகா மெஹந்தி போட்டுவிட்டுருக்காங்களே. நகரு, நகரு நானும் போட்டுக்கிறேன்” என அடித்துப் பிடித்து, மெஹந்திக்காக கையை நீட்டுகிறார் மீனா. 

இப்படி கலாட்டாவும் ரகளையுமாகவே போய்க்கொண்டிருக்க, நாம் இருப்பது சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரியில்தானா? அல்லது ஏதாவது ஊர்த் திருவிழாவிலா என்ற குழப்பம் ஏற்பட்டது. 

“ஹாய் அண்ணா, வெல்கம். என் பேரு ஜாஸ்மின். இங்கேதான் பி.காம் பண்றேன். இந்த கீசெயின்ஸ், கப் ஹோல்டர்ஸ், பென் ஸ்டாண்டு, பில்லோ எல்லாமே நானே என் கையால் பண்ணினது. விலை ஒரு ரூபாயிலிருந்து ஸ்டார்ட் ஆகுது. போன வருஷம் நடந்த ஈ.டி பஜாரில் இருந்ததையெல்லாம் மாடலாவெச்சு, புதுசா ட்ரை பண்ணியிருக்கேன். இதுதான் என்னோட ஃபர்ஸ்ட் ஸ்டால். இதைப் பார்த்து எல்லாருமே பாராட்டினாங்க. ரொம்ப ஹேப்பியா இருக்கேன்” என்றார் அந்தப் பெண். 

“நான் காயிதே மில்லத் காலேஜிலிருந்து வரேன். பி.காம் பைனல் இயர். எனக்கு ஹேண்ட் மேட்ல ஜீவல்லரி பண்றதில் ரொம்பவே விருப்பம். அதை, லோ ப்ரைஸ்ல எல்லாராலும் வாங்குற மாதிரி எளிமையாகவும் அழகாகவும் ரெண்டு வருஷமா செய்துட்டிருக்கேன். ஆரம்பத்தில் 150 ரூபாய் முதலீட்டில் ஆரம்பிச்சது. இப்போ 10,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்குது. இந்த ஈ.டி பஜார் மூலமா இன்னும் நிறைய ஐடியாஸ் கிடைச்சிருக்கு. என் ஜீவல்ஸை விரும்பி வாங்கிட்டுப் போறாங்க” - மகிழ்ச்சியோடு சொல்கிறார் தஸ்லிம் பானு. 

''என் பேரு சுப்புலெட்சுமி. கற்றாழையில் சோப், லிப் பாம் எல்லாம் தயார் பண்றேன். ஆன்லைன்ல பார்த்துக் கத்துக்கிட்டேன். தோழிகளுக்குக் கொடுத்து டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன். நல்ல ரிசல்ட். இந்த முயற்சிக்கு என் அப்பாதான் ஊக்கம் கொடுத்தாங்க. அவங்க கொடுத்த 15,000 ரூபாய் முதலீட்டில் ஆரம்பிச்சது, மாசத்துக்கு 10,000 ரூபாய் சம்பாதிக்கிறேன்'' என கெத்தாகச் சொல்கிறார், இந்த பிசினஸ் எக்னாமிக்ஸ் மாணவி. 

படிச்சுட்டு இருக்கும்போதே உங்களாலும் தொழிலதிபர்களா ஆகமுடிம் என்ற நம்பிக்கையைக் கொடுப்பது இந்த ஈ.டி பஜார். இதன்மூலம், எங்க தோழிகளிடம் இவ்வளவு திறமை இருக்கான்னு ஆச்சர்யமா பார்க்கிறோம். இது எனக்கு ரெண்டாவது வருஷம். நான் என் ஃப்ரெண்ட்ஸ் என எல்லாரும் செமயா என்ஜாய் பண்ணிட்டிருக்கோம். இங்கே பிரியாணி ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். அதுக்காகத்தான் வந்திருக்கோம்னுகூட சொல்லலாம்” என்ற நிவேதாவிடம், “உங்க படைப்புகளைக் கொண்டுவந்து பார்வைக்கு வைக்கலையா” எனக் கேட்டோம். 

“ஹலோ ப்ரோ, நாங்கள்லாம் ஒன்லி ஆடியன்ஸ். வந்தோமா, சுற்றிப் பார்த்தோமா, பிரியாணி சாப்பிட்டோமான்னு போய்ட்டே இருப்போம்ல” என்கிறார். 

தங்கள் படைப்புகளோடு வந்திருந்தவர்கள், பார்வையாளர்கள் என எல்லோரும் ஜாலியாகச் சுற்றிக்கொண்டிருக்க, ஒருவர் மட்டும் சீரியஸாக கையில் ஃபைலுடன் ஒவ்வொரு ஸ்டாலையும் சென்று பார்வையிடுகிறார். அவர்தான் ஜட்ஜாக இருக்கும் என நினைத்தவாறு அருகில் சென்றோம். 

“என் பேரு ரித்திபோரா. நான் இந்த காலேஜின் ஓல்டு ஸ்டூடன்ட். 2015-ம் வருஷம் ஸ்டூடன்ட்டா இங்கே கலந்துக்கிட்டேன். அப்போவெல்லாம் ஃபுட் ஸ்டாலுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க. இந்த வருஷம், ஹேண்ட் மேட் படைப்புகளுக்கு முக்கித்துவம் கொடுத்திருக்காங்க. இப்போ ஜட்ஜா வந்திருக்கேன். அதான் கொஞ்சம் சீரியஸா சுத்திட்டிருக்கேன். இது ரொம்ப பெருமையா இருக்கு” எனப் பூரிக்கிறார் ரித்திபோரா. 

“ஒவ்வொரு முறையும் இந்த சுயதொழில் முனைவோர் சந்தை அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிட்டே இருக்கு. போன வருஷத்தைவிட, இந்த வருஷம் படைப்புகள் அதிகமா வந்திருக்கு. அடுத்தமுறை இன்னும் பிரமாதமா இந்த நிகழ்வை நடத்துவோம். ஈ.டி பஜார் முதன் முதலா ஆரம்பிக்கும்போது மாணவியாக இருந்த ஷானுதான் இப்போது சிறப்பு விருந்தினராக வந்திருக்காங்க. எங்கள் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவியே இந்த நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினரா வர்றதுல எங்களுக்கு ரொம்பப் பெருமையா இருக்கு” என்கிறார், எத்திராஜ் கல்லூரி சேர்மன் மனைவியான, கல்பனா முரளிதரன். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism