‘‘கடைகடையா ஏறி இறங்கினாத்தான் ஷாப்பிங்!’’

திரையில் கதாநாயகியாக கலக்கிய காலத்தில் இருந்து, மாமியார் புரமோஷன் வாங்கிவிட்ட இந்நாள்வரை, காஸ்ட்யூம் செலக்‌ஷனில் தான் கொண்ட காதலை இளமையா கவே வைத்திருக்கிறார் பூர்ணிமா பாக்யராஜ்!

‘‘நடிகையா இருந்த நான், 10 வருடங்களுக்கு முன் காஸ்ட்

யூம் டிசைனராவும் மாறியிருப் பதிலேயே புரிஞ்சுக்கலாம் ஆடைகளில் எனக்கிருக்கும் ஆசையையும் ஆர்வத்தையும்.

செலிப்ரிட்டி செலக்‌ஷன்!  - 2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே, எங்கே போனாலும் மத்தவங்களிடம் இருந்து என்னை

தனிச்சுக் காட்டிக்க விரும்புவேன். அதுக்காக டிரெஸ்ஸிங் குக்கு நிறைய மெனக்கெடுவேன். சினிமாவுக்கு வந்த பிறகு, ஆடைகளில் இன்னும் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். காஸ்ட் யூமில் ஹிந்தி நடிகை ரேகாதான் என் ரோல் மாடல். அவங்க திரைப்படங்களில் உடுத்தும் டிரெஸ் பேட்டர்னில் எனக்குப் பொருந்துவதை, என்னோட திரைப்படங்களுக்கான காஸ்ட் யூமா வடிவமைச்சுக்குவேன்.

பெரும்பாலான பெண்களைப் போல ஜவுளிக்கடைக்குள்ள போனா, நேரம் போறதே தெரியாது எனக்கும். ஒரு டிரெஸ்ஸைப் பார்த்ததும் பிடிச்சிருக்கு என்பதைத் தாண்டி, அது எனக்கு எந்த அளவுக்கு நல்லா இருக்கும், என்னை எப்படி ஹைலைட் செய்துகாட்டும்னு பல பரிசீலனைகளுக்குப் பிறகுதான் வாங்குவேன். சொல்லப்போனா, போட்டுப் பார்த்துதான் வாங்குவேன்.

பொதுவா பல செலிப்ரிட்டிகள் கூட்டம் இல்லாத கடையில், காஸ்ட்லி பிரைஸ் டேக் உள்ள உடைகளை எடுத்துட்டு வந்துடுவாங்கனு சொல்லிக் கேட்டிருக்கேன். ஆனா, நான் கடைகடையா ஏறி இறங்கவும் ரெடிதான். ஏன்னா, வெவ்வேறு இடங்களில் ஷாப் செய்தாதான், நம்ம டிரெஸ்ஸில் ஒரு வேரியேஷன் காட்ட முடியும். அதேபோல, டிசைன், மெட்டீரியலுக்கு மீறின விலையில் ஆடைகள் இருந்தா, பேரம் பேசுவேன். ஆடை விஷயத்தில் மட்டுமில்ல, எதுக்காகவும் காசைத் தண்ணியா செலவழிக்க மாட்டேன்.

டிரெஸ்ஸைப் பொறுத்தவரை என்னோட முக்கியமான ஸ்ட்ரிக்ட் பாலிஸி... எனக்கான டிரெஸ்ஸை நானேதான் நேர்ல போய் வாங்குவேன். அதனாலேயே ஆன்லைனில் எந்த டிரெஸ்ஸும் வாங்கமாட்டேன். பட், இந்த விஷயத் துல ஒரு ஸ்வீட் விதிவிலக்கு என்னன்னா... பாக்யராஜ் எனக்காக வாங்கிக் கொடுக்கிறதை மட்டும் ஆசையா போட்டுப்பேன். அந்தளவுக்கு சாரோட செலக்‌ஷன் அட்டகாசமா இருக்கும். அவர் எந்த ஊருக்குப் போனா லும், அங்க இருந்து எனக்கு ஒரு புடவை வாங்கிட்டு வந்துடுவார். அதுமட்டுமில்ல... வெளியூர்ல எப்போ ஷாப்பிங் போனாலும் அவரும் கூட வரணும் எனக்கு. ரொம்பப் பொறுமையா காத்திருப்பார், அலுத்துக்காம சஜஷன்ஸ் கொடுப்பார். அந்த விஷயத்தில் பாக்யராஜ் பாவமா இருக்கலாம், ஆனா, நான் பாக்யசாலி!

என் பொண்ணு சரண்யா, ‘உனக்கு சுடி அழகா இருக்குமா’னு சொல்லிட்டே இருப்பா. சுடிதார் எனக்கு வசதியா இருந்தாலும், பிடிச்சது புடவைதான். எப்பவும் புடவைக்கு தனி மரியாதையும், அழகும் உண்டு. புடவைக்கான அக்சஸரீஸும் பார்த்துப் பார்த்து வாங்குவேன். புடவையில் டிசைன் கம்மியா இருந்தா அக்சஸரீஸ் கொஞ்சம் கிராண்டா செலக்ட் பண்ணுவேன். முக்கியமான விஷயம்... எந்த இடத்துக்கு என்ன மாதிரி டிரெஸ் போட்டுட்டுப் போகணும் என்பதில் கவனமா இருப்பேன். இதைப் பார்த்து பலரும் வியந்து போய் பேசினதால டிரெஸ்ஸிங் பிஸினஸ் பண்ணணும்னு ஒரு ஐடியா வந்துச்சு. அதை வெற்றிகரமா செயல்படுத்திட்டேன்.

செலிப்ரிட்டி செலக்‌ஷன்!  - 2

முன்னாடி எல்லாம் ஒரு ஃபங்ஷனுக்குப் போகணும்னா, டெய்லர்கிட்ட அந்த டிரெஸ்ஸை ரெடி பண்ணி வாங்குற வரைக்கும் டென்ஷனாவே இருக்கும். ஆனா, இப்போ நானே என் காஸ்ட்யூம்ஸை டிசைன் செய்துக்கிறதால, டென்ஷன் குறைஞ்சதோட ரொம்ப நிறைவாவும், கான்ஃபிடன்ட்டாவும் இருக்கு. என் பொண்ணு சரண்யாவுக்கும், மருமகள் கீர்த்திக் கும் ஒரு டிசைனரா நிறைய யோச னைகள் சொல்வேன். இந்தக் காலத்துப் பெண்களா இருந்தாலும் ரெண்டு பேரும் அதை ‘சூப்பர்!’னு கொண்டாடும்போது, `அப்போ நாம ஃபேஷன்ல அப்டேட்டடாதான் இருக்கோம்'னு என்னை நானே சியர்-அப் செய்துப்பேன்.

இன்னிக்கு சினிமாவில் நடிகை களுக்கு பிரத்யேக காஸ்ட்யூம் டிசைனர்ஸ் இருக்கிறதால, ஸ்க்ரீன்ல அவுட்புட்டும் நல்லா இருக்கு. அந்த வகையில் எனக்கு த்ரிஷா, நயன்தாரா காஸ்ட்யூம்ஸ் ரொம்பப் பிடிக்கும்.

எந்த டிரெஸ் தேர்வு செய்யும் போதும், இது நமக்கு அழகா இருக் கணும் என்பதோட, மத்தவங்க கிட்ட நமக்கான மரியாதையையும் பெற்றுத் தரணும் என்பதையும் மனசில்வெச்சு ஷாப் செய்யுங்க.

அழகழகான ஆடைகள் சேர வாழ்த்துகள்!

பெண்களுக்கு இதைவிடப் பெரிய வாழ்த்து என்ன இருக்க முடியும்?!’’

சு.சூர்யா கோமதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism