Published:Updated:

தன்னம்பிக்கை உணர்ந்த தருணம்!

தன்னம்பிக்கை   உணர்ந்த தருணம்!
பிரீமியம் ஸ்டோரி
தன்னம்பிக்கை உணர்ந்த தருணம்!

மகளிர் தின ஸ்பெஷல்

தன்னம்பிக்கை உணர்ந்த தருணம்!

மகளிர் தின ஸ்பெஷல்

Published:Updated:
தன்னம்பிக்கை   உணர்ந்த தருணம்!
பிரீமியம் ஸ்டோரி
தன்னம்பிக்கை உணர்ந்த தருணம்!

ரு பெண், தன் தன்னம்பிக்கையை உணரும் தருணம் வலிமையானது. அப்படி தாங்கள் ஒரு தன்னம்பிக்கை மனுஷியாக உணர்ந்த சந்தர்ப்பங்களைச் சொல்கிறார்கள், பல்துறைப் பெண்கள்!

பரமேஸ்வரி, அரசுப்பள்ளி ஆசிரியர், கவிஞர்

தன்னம்பிக்கை   உணர்ந்த தருணம்!

‘‘சில வருடங்களுக்கு முன்பு ஒரு தனியார் பள்ளியில் மாதம் 1,200 ரூபாய் சம்பளத்தில் வேலையில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தன்னம்பிக்கை   உணர்ந்த தருணம்!

சேர்ந்தேன். முதல் மாதச் சம்பளம் வாங்கியபோது, இனி நம் தேவைகளை நாமே நிறைவுசெய்து கொள்ளலாம் என்ற பெரும் நம்பிக்கையை, அந்தச் சிறிய தொகை கொடுத்தது. பின்னர், ஒரு வருடத்தில் அரசுப் பள்ளியில் வேலை கிடைத்தது. என் வருமானத்தில், உறவினர்கள், நண்பர்கள் என என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்ய ஆரம்பித்தபோது, சந்தோஷம் என்ற மனநிலை தன்னம்பிக்கையாக உயர்ந்தது!’’

நவரோஜி புனிதவதி, உதவி இயக்குநர், இந்திய பொருளியல் பணி, குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனம்

தன்னம்பிக்கை   உணர்ந்த தருணம்!

‘‘இரண்டு முறை டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி, இரண்டு முறை யும் தேர்வாகாமல் போனேன். மூன்றாவது முறை முயற்சிக்க விரும்பவில்லை. அதனால் படிக்கவும் இல்லை. தேர்வு நெருங்கிய நேரம் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல்போக, ‘அப்பாவின் ஆசைக்காக அட்டண்ட் பண்ணலாம்’ என்று தேர்வெழுதினேன். அதனால் பதற்றம், பயம் தவிர்த்து இயல்பாக எதிர்கொண்டேன். என்ன ஆச்சர்யம்... பாஸாகிவிட்டேன். அடுத்தது, நேர்காணல். எந்த கமிட்மென்ட்டும் இல்லாமல், அதையும் ரிலாக்ஸ்டாக எதிர்கொண்டேன். தேர்ச்சிப் பட்டியலை நம்பிக்கையே இல்லாமல்தான் பார்த்தேன். அங்கே என் பெயர் முதலிடத்தில் இருந்தது. ‘வாவ்! ஐ’ம் ஃபர்ஸ்ட் இன் த லிஸ்ட்!’ என்று மனதில் உற்சாகம். நிதானித்து யோசித்துப்பார்த்தபோது, பயம், பதற்றத்தைத் துறந்ததே என் வெற்றிக்குக் காரணம் என்ற புரிதல் எனக்குக் கிடைக்க, மிகுந்த தன்னம்பிக்கை பெற்றேன். பின் அந்தப் பணியைவிட சிறப்பான மத்திய அரசுப் பணியும் கிடைக்கப்பெற்றேன்.’’

லட்சுமி, நடிகை

தன்னம்பிக்கை   உணர்ந்த தருணம்!

‘‘நான் எப்போது என்னை ஒரு பெண்ணாக உணர்ந்தேனோ, சிறுமி என்ற பருவத்தில் இருந்து, என் பாலினத்தின் பெருமையும் சிறப்பும் உணர்ந்து, அதற்கு உண்டான பக்குவத்தை என்னுள் ஏற்றேனோ... அப்போதே என் தன்னம்பிக்கையும் என்னுள் ஆழ வேறூன்றி விட்டது. மேலும், என் பெற்றோரின் வளர்ப்பில் தன்னம்பிக்கை என் இயல்பாகிப்போனது. என்னைப் பொறுத்தவரை, மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும். எனில், அதை உணரும் தருணம் தன்னம்பிக்கை பெறும் தருணம்தானே?!’’

மஹதி, பாடகி

தன்னம்பிக்கை   உணர்ந்த தருணம்!

‘‘ஆறு வருடங்களுக்கு முன்வரை என் அம்மா தான், கால்ஷீட்டில் இருந்து வெளியூர் பயணங்களில் தங்கு மிடம் வரை, என் இசைக்  கச்சேரிகளுக்கான வேலைகள் அனைத்தையும் கவனித்துக் கொள்வார். பாடுவதைத் தவிர வேறெதுவும் தெரியாது எனக்கு. ஆனால், ஒரு கட்டத்தில், என் குழந்தைக்காக அம்மாவை வீட்டில் இருக்கவைத்துவிட்டு, என் கச்சேரிகள் சம்பந்தமான எல்லா வேலைகளையும் நானே பார்த்துக்கொள்ள ஆரம்பித்தேன். ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டேன். ஒரு கட்டத்தில், மேடையில் பாடுவதோடு நிர்வாக வேலைகளையும் நானே திறம்படக் கையாள ஆரம்பித்தபோது, என்னை ஒரு தன்னம்பிக்கை மனுஷியாக உணர்ந்தேன். என் வேலைகள் முதல் வெளியூர் பயணங்கள் வரை, எனக்கு எந்தத் துணையும் தேவையில்லை என்ற விஷயமே, எனக்குப் பெரிய தன்னம்பிக்கையாக இருக்கிறது!’’

ரேகா குமார், சின்னத்திரை நடிகை

தன்னம்பிக்கை   உணர்ந்த தருணம்!

‘‘சிறந்த ஆர்ட்டிஸ்ட் எனப் பெயர் வாங்கினாலும், நல்ல அம்மாவாகவும் இருக்க வேண்டும் என்ற தவிப்பு எப்போதும் எனக்குள் இருக்கும். எந்த ஷூட்டிங் கில் இருந்தாலும் என் மகள் சாப்பிடும், குளிக்கும், விளையாடும் நேரத்துக்கு சரியாக அலாரம் வைத்ததுபோல வீட்டுக்கு போன் செய்து, அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலைகளை முடித்துவிட்டாளா என்று கேட்டுக்கொள்வேன். என் மாமியார் ஒருமுறை, ‘என் மருமக ஒரு மதர் இந்தியா. ஷூட்டிங்ல எவ்ளோ பிஸியா இருந்தாலும், எப்பவும் தன்னோட அம்மா ரோலை சரியா செஞ்சிடுவா’ என்று பாராட்டியபோது, மிகவும் நிறைவாகவும், தன்னம்பிக்கையாகவும் உணர்ந்தேன். அதிலிருந்து என் மாமியார் என்னை ‘மதர் இந்தியா’ என்று பெட்நேமில் அழைக்கும்போதெல்லாம், தன்னம்பிக்கை டானிக்காக இருக்கும்!’’

ப்ரியா ரவிச்சந்திரன், துணை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை

தன்னம்பிக்கை   உணர்ந்த தருணம்!

‘‘தீ விபத்துகளில் சிக்கிய வர்களை மீட்கும்போது ஒரே நேரத்தில் பலதரப்பட்ட யோசனைகளோடு, அதே சமயம் வேலையை நிமிட நேரம் கூட வீணாக்காமல் விரைவிலும் விரைவாகச் செய்ய வேண்டியிருக்கும். விபத்தில் சிக்கியவர்கள், அவர்களுடைய உடை மைகள், எங்கள் துறை பணியாளர்களின் பாதுகாப்பு என்று அனைத்தையும் கருத்தில்கொண்டு, காற்றின் வேகத்தில் செயலாற்ற வேண்டும். அப்படி ஒவ்வொரு விபத்துச் சூழலையும் நான் எதிர்கொண்டு திறம்பட முடித்தபின்னும், சிறப்பான தன்னம்பிக்கையை உணர்வேன்.’’

சுதா, வழக்கறிஞர்

தன்னம்பிக்கை   உணர்ந்த தருணம்!

‘‘2009-ம் வருடம். உயர் நீதி மன்றத்தில் காவல்துறைக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் வெடித்து கலவரமாக மாறிய போது அங்கிருந்த பலரும் தெறித்து ஓடினார்கள். அப்போது ஒரு நீதிபதி பாதுகாப்பற்று நிற்க, நான் தனியொரு பெண்ணாக நின்று, அவரை பத்திரமாக மீட்டேன். அந்தத் தருணம், என் மேல் எனக்கு நம்பிக்கையும், மரியாதையும் கொடுத்தது. எந்த ஒரு அநீதிக்கும் முன்னால் என்னால் வாளாகவும், கேடயமாகவும் செயல்பட முடியும் என்று என்னை உணரவைத்த வலிமையான தருணம் அது. எல்லா பெண்களுமே தன்னம்பிக்கை நிறைந்தவர்கள்தான். சந்தர்ப்பம் வரும்போது, அது தானாக வெளிப்படும்!’’

வே.கிருஷ்ணவேணி  எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism