Published:Updated:

வெள்ளை மாளிகையின் கறுப்பு கம்பீரம்!

வெள்ளை மாளிகையின் கறுப்பு கம்பீரம்!
பிரீமியம் ஸ்டோரி
வெள்ளை மாளிகையின் கறுப்பு கம்பீரம்!

மகளிர் தின ஸ்பெஷல்

வெள்ளை மாளிகையின் கறுப்பு கம்பீரம்!

மகளிர் தின ஸ்பெஷல்

Published:Updated:
வெள்ளை மாளிகையின் கறுப்பு கம்பீரம்!
பிரீமியம் ஸ்டோரி
வெள்ளை மாளிகையின் கறுப்பு கம்பீரம்!

1989...

மெரிக்க நகரம் சிகாகோவில் ஒரு மார்க்கெட்டிங் நிறுவனத்தில் அந்தப் பெண் பணிபுரிந்து

வெள்ளை மாளிகையின் கறுப்பு கம்பீரம்!

கொண்டிருந்தார். அப்போது, அவர் நிறுவனத்துக்கு கோடைகால இன்டர்ன்ஷிபபுக்காக ஓர் இளைஞர் வந்தார். அவருக்கு அந்தப் பெண்தான் பாஸ். ஒருநாள் அந்த இளைஞர், தன்னுடைய பாஸை டின்னருக்கு அழைத்தார். இருவருக்கும் இடையே சின்ன கெமிஸ்ட்ரி இருந்தாலும், இதனால் அலுவலக வேலை பாதிக்கப்படுமோ என்ற பயம், அந்தப் பெண்ணுக்கு! ஆனால், சில மாதங்களில் எல்லா தடைகளையும் உடைத்து கெமிஸ்ட்ரி வென்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அந்த இளைஞர், இன்றைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அந்தப் பெண், மிஷல் ஒபாமா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெள்ளை மாளிகையின் கறுப்பு கம்பீரம்!

1964-ம் ஆண்டு சிகாகோ நகரில் பிறந்தார் மிஷல். ‘கல்விதான் நமது எதிர்காலம்’ என்று தன் இரண்டு பெண் குழந்தைகளிடமும் சொல்லி வளர்த்தார், மிஷலின் அப்பா ஃப்ரேஸர் ராபின்சன். இன்று மிஷல் ஒபாமா கல்விக்காக எதையும் செய்யலாம் என உலகப் பெண்களை உற்சாகமூட்டும் அக்கறைக்கு, அவரின் தந்தை அவர் மனதில் ஆழ ஊன்றிய அந்த விதைதான் காரணம்.

சோஷியாலஜி பிரிவில் பட்டம் பெற்ற பின், சட்டம் படிக்க ஹார்வர்டு சட்டக் கல்லூரியில் சேர்ந்தார் மிஷல். வழக்கறிஞரான பின்னர், சிட்லி ஆஸ்டின் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு தான் ஒபாமாவைச் சந்தித் தார். காதல், திருமணம் என எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. மிஷலுக்கு சேவை மனப்பான்மை அதிகம். அதனால் நல்ல வேலையை உதறிவிட்டு, சிகாகோ மாநகர மேயருக்கு உதவியாளராகச் சேர்ந்தார். பின், சிகாகோ மாநகர திட்ட மற்றும் மேம்பாட்டு துறையில் உதவி ஆணையராக உயர்ந்தார்.

வெள்ளை மாளிகையின் கறுப்பு கம்பீரம்!

2007-ல் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒபாமா வேட்பாள ராக அறிவிக்கப்பட, தனது வேலையை கணவருக்காக உதறி னார் மிஷல். குழந்தைகளை தன்னுடைய அம்மா மரியானி டம் விட்டுவிட்டு, ஊர் ஊராகப் பிரசாரத்துக்குக் கிளம்பினார். உலகின் அதிகார மையமான வெள்ளை மாளிகையில் கறுப்பினக் குடும்பம் குடியமர்ந்ததை... ஆச்சர்யமும், ஆனந்தமுமாகப் பார்த்தது உலகம். ஒபாமாவின் வெற்றியில், மிஷலின் அயராத உழைப்பும் அடக்கம் என்பதை அவரே பெருமையுடன் பகிர்ந்துகொள்வார்.

மிஷல், சிறந்த மேடைப்பேச்சாளர். அமெரிக்கா முழுவதும் பல மேடைகளில் பேசி இருக்கிறார். 2012-ம் ஆண்டு இரண்டாவது முறையாக ஒபாமா அதிபரானபோது மிஷல் பேசிய பேச்சு மிகவும் பிரபலம். ‘ஒவ்வொரு நாளும் நான் சந்திக்கும் நபர்கள் என்னை இன்ஸ்பையர் செய்கிறார்கள். என்னைப் பெருமைகொள்ளச் செய்கிறார்கள். உலகின் மிகச்சிறந்த நாட்டில் வாழ்கிறோம் என்ற சந்தோஷத்தைத் தருகிறார்கள்’ - இப்படி ஆரம்பித்து, அமெரிக்கா பற்றி ஒபாமாவுக்கு இருக்கும் கனவை அவர் விவரிக்க, மாஸ் அண்ட் கிளாஸ் மிஷலைக் கொண்டாடியது.

வெள்ளை மாளிகையின் கறுப்பு கம்பீரம்!

அமெரிக்காவின் முதல் குடிமகள் ஆனதும் தனக்கு இருக்கும் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட ஆரம்பித்தார் மிஷல். ராணுவ வீரர்களின் குடும்பங்கள் சந்திக்கும் பிரச்னைகளை அலசி, துரித நடவடிக்கைகளை மேற்கொண்டார். பெண்கள் தங்களின் வேலை மற்றும் பெர்சனல் வாழ்க்கையை சமன்செய்துகொள்ள விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகிறார்.  அமெரிக்கப் பள்ளிகளில் ஆரம்பித்து, உலக நாடுகளின் பள்ளிகள்வரை பயணித்து கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசிவருகிறார். குறிப்பாக,பெண்களின் விடுதலைக்கு கல்வி அவசியம் என்ற தனது ஆழமான நம்பிக்கையை உலகமெங்கும் விதைக்கச் செயல்பட்டுவருகிறர்.

வெள்ளை மாளிகையின் கறுப்பு கம்பீரம்!

ஆரோக்கியம் மற்றும் உணவு விஷயங்களில், மிஷல்   ஸ்ட்ரிக்ட் ஆபீஸர். வெள்ளை மாளிகை யின் கிச்சனில் ஆர்கானிக் உணவுகளுக்கு மட்டுமே அனுமதி. ஒபிஸிட்டி பிரச்னை அமெரிக்கக் குழந்தைகளிடம் அதிகரித்து வருவது தெரிந்ததும், ஜங்க் உணவுகள் குறித்த விழிப்பு உணர்வை மாணவர்கள் இடையே தொடங்கி, வெற்றிகரமாக பதியவைத்துள்ளார்.  ஆரோக்கிய வாழ்வை வலியுறுத்தி `American Grown: The Story of the White House Kitchen Garden and Gardens Across America’ என்ற புத்தகத்தை எழுதினார். குழந்தைகளுக்கான புதிய ஃபிட்னஸ் புரோகிராமையும் அறிவித்தார்.

வெள்ளை மாளிகையின் கறுப்பு கம்பீரம்!

ஒபாமாவுக்கும், மிஷலுக்கும் மகள்கள் மலியாவும், சாஷாவும்தான் முதல் உலகம். மகள்களின் படிப்புக்கு உதவுவது,  ஆரோக்கிய உணவு கொடுப்பது, சரியான நேரத்தில் அவர்களை உறங்கவைப்பது என மிஷல் பொறுப்பான அம்மா. அதிபரின் மனைவி என்ற அந்தஸ்து வந்த பின், மிஷலின் குணத்தில் எந்த மாறுதலும் இல்லை என்றாலும், ஃபேஷன் விஷயங்களில் கூடுதல் கவனம் உண்டு. இதனாலேயே அமெரிக்க  ஃபேஷன் ஐகான்எனப் பார்க்கப்படுகிறார் மிஷல்.  ‘வேனிட்டி’, ‘பீப்பிள்’ போன்ற பிரபல பத்திரிகைகள் வெளியிடும் ‘சிறந்த உடைகள் அணிபவர்கள்’ (Best dressed) என்ற பட்டியலில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இடம்பிடித்தார். தன்னுடைய மகள்களின் உடைகளையும் தானேதான் தேர்ந்தெடுப்பார் இந்த ஸ்வீட் மம்மி.

‘உருவாக்கப்பட வேண்டிய வரலாறு இன்னும் நிறைய இருக்கிறது. அதற்கு நான் எப்போதும் தயார்’ - மிஷல் ஒபாமா சொல்லும்   புகழ்பெற்ற வாசகம் இது.

வெள்ளை மாளிகையின் கறுப்பு கம்பீரம்!

இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு பெண் ணின் வாழ்க்கையும் போற்றத்தக்கதுதான். அதை உலகம் போற்றும் வரலாறாக மாற்றுவது நம் கையில்தான் இருக்கிறது!

கார்க்கிபவா

மிஷல் ஸ்பார்க்ஸ்!

வெள்ளை மாளிகையின் கறுப்பு கம்பீரம்!

• ஒரு ஆப்பிரிக்க - அமெரிக்கப் பெண், அமெரிக்காவின் முதல் குடிமகள் ஆன வரலாற்றை எழுதியவர் மிஷல்.

• மேடைப்பேச்சுக்கு பெயர் பெற்ற மிஷலின் பேச்சுகள் அனைத்தையும் எழுதுபவர்... அவரே!

• 2008-ல் ஒபாமா அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, பிரசார பணிகளுக்காக மிஷல் தனது வேலையை ராஜினாமா செய்தபோது அவரின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism