Published:Updated:

டேன்... டேன் ... கோ அவே!

டேன்... டேன் ... கோ அவே!
பிரீமியம் ஸ்டோரி
டேன்... டேன் ... கோ அவே!

- சரும பாதுகாப்பு டிப்ஸ்

டேன்... டேன் ... கோ அவே!

- சரும பாதுகாப்பு டிப்ஸ்

Published:Updated:
டேன்... டேன் ... கோ அவே!
பிரீமியம் ஸ்டோரி
டேன்... டேன் ... கோ அவே!

வெயில்காலம் வந்துருச்சே! இனி ‘வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி, வெயிலோடு மல்லுக்கட்டி’னு பாடணுமே! ஆத்தி... வெயிலில் அலைந்து திரிந்து வருவதற்குள் நம் மேனி கறுத்துடுமே! சருமம் கறுப்பாகி, ‘ஐயோ என்னம்மா இது... இப்படி டேனாகுதே மா’ என கோரஸாக புலம்பும் கேர்ள்ஸ்... வெயில் காலத்தில் ஃபாலோ பண்ண வேண்டிய ஆன்டி-டேனிங் டிப்ஸ் மற்றும் வெயிலில் கறுத்துப்போன சருமம் புத்துணர்ச்சி பெற என்னென்ன செய்ய வேண்டும் என லிஸ்ட் போடுகிறார் விருதாச்சலத்தை சேர்ந்த பியூட்டிஷியன் கவிதா லக்ஷ்மி.

காலை 10.30 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரை முடிந்தவரை வெயில் பக்கம் போகாதீங்க!

வெயிலால் முகத்தில் வியர்வை ஏற்பட்டு படர்ந்திருப்பதை மறைக்க வியர்வையின் மேலேயே பவுடரோ, லோஷனோ தடவாதீர்கள். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது முகத்தைக் கழுவி ஃப்ரெஷ்ஷாக வைத்துக்கொள்ளுங்கள்.

டேன்... டேன் ... கோ அவே!

குடை, குல்லா கேப்ஸ், சன் கிளாஸஸ் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் சூரிய கதிர்கள் சருமத்தில் நேரடியாக படுவதை ஓரளவு தடுக்கலாம்.

வெளியில் செல்லும்போது லூஸான உடைகளை அணிவதோடு  கை, கால்களை முழுமையாக கவர் செய்யும் உடைகளை அணியுங்கள்.

நிறைய தண்ணீர் குடிப்பதுடன் நிறைய பழங்கள் சாப்பிட்டு உங்கள் உடலை எப்போதும் ஜில்லென்று வைத்திருந்தால், சருமம் வறண்டு போகாமலும் பொலிவுடனும் இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டேன்... டேன் ... கோ அவே!

வெயிலால் டேன் ஆகியிருக்கும் சருமத்தின் மீது சோற்றுக் கற்றாழைச் சாற்றை தடவி, ஐந்து நிமிடம் கழித்து கழுவினால் சருமம் ஈரப்பதம் அடையும்.

டேன்... டேன் ... கோ அவே!

வெயிலில் அலைந்துவிட்டு வீட்டுக்கு வந்தபிறகு வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி வெயிலில் கறுத்துப்போன இடங்களின் மேல் 5-10 நிமிடங்கள் வைக்கலாம். குறிப்பாக, கண்களை சுற்றியுள்ள பகுதிகளின் மேல் வைத்துவிட்டு கண்களை மூடி ரிலாக்ஸ் செய்யலாம்.

டேன்... டேன் ... கோ அவே!

ஒரு முழு உருளைக்கிழங்கை அரைத்து சாறாக்கி, அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு விட்டுக் கலந்து சருமம் டேன் ஆன இடத்தில் தடவி, அரை மணி நேரம் காய வைத்து பின் கழுவலாம்.

டேன்... டேன் ... கோ அவே!

முல்தானி மட்டி பவுடரை தேவையான அளவு எடுத்து, அதை சருமத்தில் பூசும் அளவுக்கு பன்னீருடன் கலந்து, `டேன்' ஆன பகுதிகளில் தடவி, ஈரம் இல்லாமல் காயும் வரை பொறுத்திருந்து, பிறகு கழுவினால் முகம் பொலிவடையும்.

டேன்... டேன் ... கோ அவே!

ஒரு முழு உருளைக்கிழங்கை அரைத்து சாறாக்கி, அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு விட்டுக் கலந்து சருமம் டேன் ஆன இடத்தில் தடவி, அரை மணி நேரம் காய வைத்து பின் கழுவலாம்.

டேன்... டேன் ... கோ அவே!

வெள்ளரிக்காயின் சாற்றையும், தர்பூசணிப்பழத்தின் சாற்றையும் சம அளவில் கலந்து முகத்தில் தடவி, ஐந்து நிமிடம் விட்டு பிறகு கழுவினால் முகம் குளிர்ச்சியடைந்து பொலிவு பெறும்.

ஒரு ஸ்பூன் சர்க்கரையில் இரண்டு சொட்டு ஆலிவ் எண்ணெய் விட்டு  அதோடு மூன்று ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து  `டேன்' ஆகியிருக்கும்  எல்லா இடங்களிலும் தடவி, 5-10 நிமிடங்கள் வரை காத்திருந்து கழுவலாம்.

டேன்... டேன் ... கோ அவே!

சிலருக்கு வெயிலில் அதிகம் அலைவதால் ஸ்கின் ரொம்பவும் ஆயிலியாக இருக்கும். இரண்டு ஸ்பூன் வெண்ணெயில் அரை ஸ்பூன் சர்க்கரை கலந்து முகத்திலும், உடலில் டேனாகி இருக்கும் பிற இடங்களிலும் தடவி, பத்து நிமிடம் காத்திருந்து கழுவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

டேன்... டேன் ... கோ அவே!

பப்பாளி பழத்தை நசுக்கி நன்கு கூழ் ஆக்கிக் கொள்ளுங்கள். இதில் அரை கப்புக்கு ஒரு ஸ்பூன் என்ற விகிதத்தில் தேனைக் கலந்து, கறுத்து போன இடங்களில் தடவி பத்து நிமிடங்கள் ஊறவிட்டு கழுவி வந்தால் சருமம் புத்துணர்ச்சி பெற்று இயல்பு நிலைக்கு வரும்.

டேன்... டேன் ... கோ அவே!

அப்புறம் என்ன? இனி ஸ்லீவ்லெஸ் அணிந்து ஜமாய்க்கலாமே!

கோ.இராகவிஜயா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism