Published:Updated:

மருத்துவமனை வசதிகோரி தஞ்சாவூர் மக்கள் போராட்டம்..!

கு. ராமகிருஷ்ணன்
மருத்துவமனை வசதிகோரி தஞ்சாவூர் மக்கள் போராட்டம்..!
மருத்துவமனை வசதிகோரி தஞ்சாவூர் மக்கள் போராட்டம்..!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனை பல வகைகளிலும் சீரழிந்து கிடப்பதால் இப்பகுதி மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதனை ஆக்கப்பூர்வமாக இயக்கக்கோரி, இப்பகுதி மக்கள் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டம் குறித்து பேசிய அவர்கள், 'பட்டுக்கோட்டை மற்றும் இதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள் இந்த மருத்துவமனையை தான் நம்பி இருக்கோம். முன்னாடி இந்த மருத்துவமனை நல்ல முறையில்தான் செயல்பட்டுக்கிட்டு இருந்துச்சு. ஐந்து டாக்டர்கள் இங்க வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. மருத்துவப் பணியாளர்களும் நிறைய பேர் வேலைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. ஆனா இப்ப அப்படியில்ல. இரண்டு டாக்டர்கள்தான் இருக்காங்க.

நர்ஸ் உள்ளிட்ட மருத்துவ உதவியாளர்களும் போதுமான எண்ணிக்கையில் இல்லை. விபத்துல பாதிக்கப்பட்டவங்களுக்கு முதலுதவி சிகிச்சைக் கூட இங்க செய்றதில்லை. தஞ்சாவூருக்கு போங்கணு சொல்லிடுறாங்க. இதனால் நிறையபேர் இறந்து போயிட்டாங்க. அவசர சிகிச்சைப் பிரிவு பாழடைஞ்சு கிடக்கு. பிரசவத்துக்கு வரக்கூடிய ஏழ்மையான கர்ப்பிணிகளையும் கூட தனியார் மருத்துவமனைக்கு போகச் சொல்றாங்க. இந்த அவலம் எப்ப நீங்குமோ. தமிழக அரசு உடனடி யாக இதுல கவனம் செலுத்தணும். இல்லைனா இன்னும் தீவிரமான போராட்டங்களை நடத்துவோம்” என்று தெரிவித்தனர்.