Published:Updated:

ஸ்கின் டோன்... வீட்டிலேயே சரிசெய்து பிரகாசிக்கலாம்! #BeautyTips

ஸ்கின் டோன்... வீட்டிலேயே சரிசெய்து பிரகாசிக்கலாம்! #BeautyTips
ஸ்கின் டோன்... வீட்டிலேயே சரிசெய்து பிரகாசிக்கலாம்! #BeautyTips

ஸ்கின் டோன்... வீட்டிலேயே சரிசெய்து பிரகாசிக்கலாம்! #BeautyTips

           குளிர்காலம் முடிந்து, காலை எட்டு மணிக்கே 'சுளீர்' என ஹலோ சொல்ல ஆரம்பித்துள்ளது சூரியன். 'அச்சச்சோ... ஸ்கின் டேனாயிடும்' என வீட்டுப் படியிலேயே முகத்தை முழுக்க ஸ்கார்ப்பால் மறைக்க ஆரம்பித்துள்ளார்கள் பெண்கள். இன்னும் சிலர், கைகளுக்கு ரைடிங் கிளவுஸ், பாதங்களுக்கு சாக்ஸ் என்றுதான் வெளியே வருவார்கள். எல்லாம் ஓகேதான். ஆனால், காலை மற்றும் மாலை வெயில் நம் ஆரோக்கியத்துக்கும் சருமத்துக்கும் நல்லது. அந்த வெயிலையும் விட்டமின் 'டி'யையும் என்ஜாய் பண்ணுங்கள். சன் டேன் வராமல் தடுப்பதற்கும், வந்துவிட்டால் பார்லருக்குப் போகாமலேயே சரிசெய்வதற்கும் சில டிப்ஸ் சொல்கிறார் பியூட்டிஷியன் மோனிஷா பிரசாந்த்.

சன் டேன் வராமல் தடுக்க... 

1. சன் ஸ்கிரீன் இருக்கும் ஃபவுண்டேஷனை தினமும் பயன்படுத்தினால், சன் பர்ன், பிக்மென்டேஷன் என இரண்டு பிரச்னைகளும் வராது. 

2. ஃபவுண்டேஷன் க்ரீம் பிடிக்காதவர்கள், சன் ஸ்கிரீன் கலந்த ஃபேஸ் க்ரீம்களைப் பயன்படுத்தலாம். இதுவும், சூரியனால் சருமத்தில் உண்டாகும் கருப்புத் திட்டுக்களை தடுக்கும். 

3. மேலே சொன்ன இரண்டையுமே யூஸ் பண்ணமாட்டேன் என்பவர்கள், சன் புரொடக்‌ஷன் கலந்த பவுடர்களைப் பயன்படுத்தினாலும் அதே பயனைப் பெறலாம். 

4. சன் ஸ்கிரீன் இருக்கும் ஃபவுண்டேஷன், சன் ஸ்கிரீன் கலந்த ஃபேஸ்க்ரீம், சன் புரொடக்‌ஷன் கலந்த பவுடர் மூன்றுமே எல்லா வகை சருமத்துக்கும் பொருந்தும். உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ, அதைப் பயன்படுத்துங்கள். எந்தவித பாதுகாப்பு பூச்சும் இல்லாமல் சருமத்தை அப்படியே மட்டும் விடாதீர்கள். 

சன் டேன் வந்துவிட்டால் சரிசெய்ய... 

1. கல்லூரியிலிருந்தோ, அலுவலகத்திலிருந்தோ வீட்டுக்கு வந்ததும், முகத்தைக் கழுவிவிட்டு, வெள்ளரி சாற்றில் நனைத்த காட்டன் துணியை முகத்தில் போட்டு, அரை மணி நேரம் கழித்து எடுங்கள். வெயிலினால் கறுத்த சருமம், உங்கள் பழைய நிறத்துக்கு வந்துவிடும். 

2. சந்தனக் கட்டையை இழைத்தோ, அல்லது சந்தனப் பொடியைப் பன்னீரில் குழைத்தோ முகத்தில் தடவுங்கள். வெயிலினால் கறுத்த சருமம், காலையில் கிளம்பியபோது இருந்ததுபோலவே பளிச்சென மாறும். 

3. எண்ணெய் வடியும் சருமம் உடையவர்கள், சன் டேனை சரிசெய்ய, தக்காளிச் சாற்றுடன் சிறிதளவு தயிர் கலந்து, முகத்தில் அரை மணி நேரம் அப்ளை செய்யலாம். ஆனால், தயிர் சேர்க்காமல் தக்காளிச் சாற்றை மட்டும் முகத்தில் தடவினால் அரிக்க ஆரம்பித்துவிடும் கவனம். 

4. வறண்ட சருமம் உடையவர்கள், பப்பாளி பழக்கூழுடன் சிறிதளவு பால் மற்றும் தேன் சேர்த்து முகத்தில் தடவி வந்தால், வெயிலினால் திட்டுத்திட்டாக கறுத்துப்போன சருமத்தை 'ஈவன் ஸ்கின் டோனாக' மாற்றிவிடலாம். 

5. வெயிலினால் முகம் மிகவும் கறுத்துப் போய்விட்டால், ஒரு டீஸ்பூன் வினிகருடன், ஒரு டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து முகத்தில் கால் மணி நேரம் மட்டும் அப்ளை செய்யுங்கள். உங்களுடைய உண்மையான சரும நிறம் தெரிய ஆரம்பிக்கும். வினிகர் வேண்டாமே என நினைப்பவர்கள் எலுமிச்சைச்சாறுடன் சம அளவு பாலேடு கலந்து பயன்படுத்தலாம். 

6. 'இந்த டிப்ஸ் எதையுமே ஃபாலோ பண்ண எனக்கு நேரம் கிடையாது' என்கிற பெண்கள், டீ டிகாஷனுடன் முல்தானிமிட்டியைக் கலந்து, முகம், கழுத்து, கை, கால்கள் என வெயில்படுகிற இடங்களில் எல்லாம் தடவுங்கள். அரை மணி நேரம் ஊறவைத்து, வாஷ் பண்ணிவிடுங்கள். சருமம், சன் பர்ன் எல்லாம் நீங்கி, பளிச் என ஆகிவிடும். ஆனால், இதைத் தினமும் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.

வாரத்தின் 7 நாள்கள் வெயிலில் கறுத்த சருமத்தை, ஒரே நாளில் சரிசெய்ய முடியாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு