Published:Updated:

அச்சுறுத்தும் அரசு ஊழியர்கள்!

அச்சுறுத்தும் அரசு ஊழியர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
அச்சுறுத்தும் அரசு ஊழியர்கள்!

அச்சுறுத்தும் அரசு ஊழியர்கள்!

அச்சுறுத்தும் அரசு ஊழியர்கள்!

அச்சுறுத்தும் அரசு ஊழியர்கள்!

Published:Updated:
அச்சுறுத்தும் அரசு ஊழியர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
அச்சுறுத்தும் அரசு ஊழியர்கள்!
அச்சுறுத்தும் அரசு ஊழியர்கள்!

துரை, திருமங்கலம் அருகே கூத்தியார்கூண்டு என்னும் இடத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் மின்கம்பத்தில் ஏறி, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சியில் உறையவைத்திருக்கிறது. அகதிகள் முகாமுக்கு ஆய்வுக்காக வந்த அரசு அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அதனால் மனம் உடைந்த ரவீந்திரன் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படும் நிலையில், பொதுமக்களுடன் அரசு அதிகாரிகள் கொண்டுள்ள உறவு எத்தகையதாக இருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் இன்னும் ஒரு கொடும் சாட்சி. 

அகதி முகாம்களில் உள்ளோரை, அரசு அதிகாரிகள் மிக மோசமாகக் கையாள்வது இது முதல் முறை அல்ல. அகதிகள் என்ற சொல்லின் பொருள் ‘வேறு கதியற்றவர்கள்’ என்பது. ஆனால், அரசு அதிகாரிகளைப் பொறுத்தவரை அகதிகள் என்போர் குற்றவாளிகள். அவர்கள் தமிழர்கள் என்பதும், ஈழத்தின் போர்ச்சூழலால் இங்கு தஞ்சம் அடைந்தவர்கள் என்பதும் அதிகாரிகளின் இரக்கத்தைப் பெறுவதற்குப் போதுமான தகுதிகளாக இல்லை. ‘இரக்கம் காட்டக்கூட வேண்டாம்... சட்டப்படி உரிய விதிகளைப் பின்பற்றி அவர்களை மனிதர்களாகவேனும் நடத்துங்கள்’ என ஆண்டாண்டு காலமாகக் குமுறுகிறார்கள். கேட்பதற்குத்தான் செவிகள் இல்லை.

ஒரு மனிதர், அவமானம் தாங்காமல் தன் உயிரையே போக்கிக்கொள்ளும் முடிவை எடுக்கிறார் என்றால், அவர் அடைந்த மனஉளைச்சல் புரியும். மேலும் அந்த முடிவு, அன்றைய ஒரு நாள் சம்பவத்தின் விளைவும் அல்ல. தொடர் மனஉளைச்சலே அவரை அத்தகைய முடிவை நோக்கித் தள்ளியிருக்கிறது. அகதிகள் என்பதால் தங்களுக்கு நேரும் எல்லா அவமானங்களையும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என அரசு அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். அதனால்தான் அவர்களை இரண்டாம்பட்சமாகக் கையாள்கின்றனர்.

ஆனால், இந்தச் சிக்கல் அகதிகள் முகாமுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. அரசு அதிகாரிகள், மக்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் இதன் மையம். அரசு என்பதை தங்களின் சொந்த சொத்துபோலவும், அதற்கு தாங்களே முதலாளி போலவும், மக்களை அங்கு பணிபுரியும் அடிமைகள்போலவும் கருதும் மனோபாவம் பெரும்பாலான அரசு அதிகாரிகளிடம் நிரம்பியிருக்கிறது. அரசு என்ற பிரமாண்டமான அமைப்புமுறையின் தலைமை நிர்வாகியாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் இவர்கள், பொதுமக்கள் தங்களுக்குக் கீழ்ப்படியக் கடமைப்பட்டவர்கள் என்றே நினைக்கின்றனர். தாங்கள் மக்களுக்குப் பணிபுரியக் கடமைப்பட்டவர்கள் என்பதும், மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் ஊதியம் பெறுகிறோம் என்பதும், அவர்களுக்கு மறந்தேவிடுகிறது. 

கலெக்டர் அலுவலகமோ, காவல் நிலையமோ, வருவாய்த் துறை அலுவலகமோ... எந்த ஓர் அரசு அலுவலகமாக இருந்தாலும், அதற்குள் நுழைவதற்கு பொதுமக்கள் தயங்கி, ஒதுங்குவது ஏன்? ஏனெனில், அரசு அலுவலகங்கள், மக்களை அந்த அளவுக்கு அச்சுறுத்துகின்றன. மேல் அதிகாரிகளுக்குக் கும்பிடுபோட்டு, போலிப் பணிவு காட்டி, ஊழலில் கொழுத்துத் திரியும் தங்களின் ஒழுங்கீனத்தை அரசு அதிகாரிகள் மக்களிடமும் எதிர்பார்க்கின்றனர். அதற்குப் பணிய மறுக்கும்போது அலைக்கழிக்கின்றனர்.

ஜனநாயகம் என்னும் சுழல் நாற்காலியில் எல்லோரும் மாறக்கூடியவர்களே...அதிகாரிகள் உள்பட. மைய அச்சாக மாறாமல் இருப்பது மக்கள் சக்தி மட்டுமே.

அரசு அதிகாரிகள் இந்த உண்மையை மறந்துவிட வேண்டாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!